திவர்
அன்பிற்கினிய எம் தமிழுறவுகளே ! தோழர்களே
!! வணக்கம்.
கடந்த (அக்டோபர்) 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை
நகரமே கலை கட்டியது. ஆம் ! வலைப்பதிவர்கள் சந்திப்பு 2015, நான்காம் ஆண்டு திருவிழாவில்
புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் கலந்துகொண்ட
ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகவே, அமெரிக்காவிலிருந்து வந்த எனக்கும், வந்திருந்த தோழர்களுக்கும் மிக்சிறந்த
மரியாதை செய்து, அற்புதமான முறையில் விழாவினை ஏற்பாடு
செய்திருந்த விழாக்குழுவினருக்கு வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் வலைப்பதிவு
தோழர்களின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு எதிர்வரும்
அடுத்த பதிவர் விழாவுக்காகக் காத்திருக்கிறேன்.
காலையில் விழாவிற்கு வந்த நான் மாலையும்
திரும்ப வந்துவிட்டேன். இடையில் சில மணி
நேரங்கள் அரங்கில் இருக்க இயலாமைக்கு வருந்துகிறேன். தோழர்கள் என்னை மன்னிக்கவும்.
காரணம், என் நெருங்கிய தோழர் இல்லத்தில் ஓர்
எதிர்பாரா சம்பவம் நிகழ்ந்தமையால் நான் அங்கு விரைந்து செல்லவேண்டிய சூழல்
ஏற்பட்டுவிட்டது. எனவே,
சில
தோழர்களின் அற்புதமான சொற்பொழிவைக் கேட்க இயலவில்லையே என்ற வருத்தத்தை
விழாக்குழுவினரின் அற்புதமான மிக நீண்ட காணொளி நிவர்த்தி செய்தது.
காலை முதல் விழா முடியும்வரை
விழாக்குழுவினரின் சுறுசுறுப்பும், உபசரிப்பும் என்னைத் திக்குமுக்காடச் செய்தது.
விழாவில் கலந்து கொள்ள இயலாத தோழர்கள்
தயவுசெய்து கீழ் காணும் சுட்டிகளின் மூலம் விழாவினை முழுவதுமாக கண்டு களிக்குமாறு
கேட்டுக்கொள்வதோடு,
தயவு
செய்து கீழுள்ள வலைப்பதிவின் வாயிலாக அங்குள்ள
கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் இன்னொரு தருணத்தில் நாமனைவரும்
சந்திப்போம் என்று கூறி விழாக்குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகளை இங்கே
சமர்ப்பிக்கிறேன். நன்றி,
வணக்கம்.
புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில் “எந்தக் குறையும் இல்லை” என்று, வந்து சென்ற நம் பதிவர்கள் பதிவுகளைப் போட்டு வாழ்த்துகிறீர்கள். மற்றவர் பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களிட்டுப் பாராட்டுகிறீர்கள்! அந்த அன்பிற்கு எங்கள் இதய நன்றி!
வலைப்பதிவர்களின் சந்திப்பு நிகழ்வுளுக்கான வலைப்பதிவு முகவரிக்கு அழுத்தவும்
தொடர்ந்து
வாசிக்க :
http://manuneedhi.blogspot.in/2015/10/blog-post_16.html
வாழ்த்துகளுடன்
நவின் சீதாராமன்
(அமெரிக்கா)
------------------------
நன்றி - திருமிகு சீதா ராமன் அவர்கள்
ஐயா
பதிலளிநீக்குகொஞ்சம் சிரமம் பாராது
புதுகைப் பதிவர் சந்திப்பு குறித்து வரும்
பதிவுகளையும் புதுகைப் பதிவைச் சந்திப்புத்
தொடர்பான பக்கங்களில் தொடர்ந்து
"சந்திப்புக் குறித்தப் பின்னூட்டப் பதிவுகள் "
எனப் பதிவு செய்தால் நன்றாக இருக்குமெ
புதுகைப் பதிவர் சந்திப்பு குறித்த ஒரு முழுமையான
ஆவணமாக அது இருக்குமே
நல்ல யோசனைதான். இதனைச் செயற்படுத்த நண்பர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் உதவியை நாடுகிறேன். “பதிவர் பார்வையில் பதிவர் திருவிழா” என்று ஒரு தனி லேபிள் திறக்கவும் வேண்டுகிறேன்.
நீக்குதிரு நவீன் சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்...
பதிலளிநீக்குமேற்காணும் வேண்டுகோளைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறோம் வலைச்சித்தரே! செய்து தர வேண்டுகிறேன் (நாங்க விழாக்குழு, மழைமுடிஞ்சும் தூவானம் விடாத மாதிரி, விழா முடிஞ்சும் கணக்கு, பற்றுச்சீட்டு வாங்குவது னு திரியும்போது உங்களை மட்டும் சும்மா விட்டுடுவமா? நன்றி மதுரை ரமணி அய்யாவுக்கு..எப்புடீ?)
நீக்குரமணி ஐயா சொன்ன யோசனை நன்று. ஒரு தொகுப்பாக இருந்தால் படிக்க வசதி.
பதிலளிநீக்குவிழா முடிந்தும் வேலை குறையாது போலிருக்கே......!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஅந்த மேடையில் நவீன் சீதாராமன் ஆச்சி மனோரமா இறந்த நிகழ்வை தனது உரையினூடே குறிப்பிட்டார். வலைப்பதிவர் அனைவரும் ஓரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த புதுகை வரவேற்புக்குழு வேண்டுகோள் விட்டது . அதன் படி மறைந்த அந்த மாபெரும் கலைஞருக்கு மரியாதை செலுத்த அரங்கத்திலிருந்த அனைத்து பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டதுவும் கூட ஒரு முக்கிய நிகழ்வுதான் வலைப்பதிவர் சந்திப்பு 2015 புதுகையில்...
பதிலளிநீக்கு