பதிவர் திருவிழா நிகழ்ச்சிகள் காணொளியில்...

பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் 
காணொளியில்... காண வருக
4மணிநேரம், 2மணிநேரம் ஓடக்கூடிய 
இரண்டு தொகுப்பைக் காணொளியில் கண்டுமகிழ அன்புடன் அழைக்கிறேன்.. 


இணைப்பில் செல்ல - 
http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_12.html


இப்போது முக்கியமான சில படங்கள் மட்டும்





வலைப்பதிவர் கையேடு வெளியீடு
வெளியிடுபவர் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா அவர்கள்,
பெற்றுக்கொள்பவர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
நடுவில் த.இ.க.உதவி இயக்குநர் முனைவர் தமிழ்ப்பரிதி,
அருகில் விக்கிமீடியா இந்தியஇயக்குநர் 
திரு இரவி அவர்கள் , திண்டுக்கல் தனபாலன்
மற்றும் கவிஞர் தங்கம் மூர்த்தி உள்ளிட்ட விழாக்குழுவினர் கவிஞர் வைகறை,  நா.முத்துநிலவன், பொன்.கருப்பையா, பின்னணியில் கவிஞர்செல்வா.




தொடக்கவுரை 
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்












--------------------------------------------------------------- 
முன்னோடிப் பதிவர்களுக்குப் பாராட்டு
சென்னை புலவர்குரல் அய்யா இராமாநுசம்,
மதுரை சீனா (எ) சிதம்பரம் அய்யா
முறையே 2012,13 மற்றும் 2014 இரண்டு பதிவர் விழாக்களை நண்பர்கள் குழுவை இணைத்து 
நடத்திய பெருமைக்குரிய 
மூத்த பதிவர்கள்
பின்னணியில் கவிஞர் மு.கீதா 
மற்றும் விழாக்குழுவினர்
மகா.சுந்தர், அ.பாண்டியன், பொன்.க.



நூல்வெளியீடு (1) 
கரந்தை ஜெயக்குமார் எழுதிய “வித்தகர்கள்”
வெளியிடுபவர் எழுத்தாளர் உறரணி அவர்கள்,
பெற்றுக்கொள்பவர் கரந்தை சரவணன் அவர்கள்
முன்னிலை- கரந்தையாரின் துணைவியார்,  கர்னல் கணேசன், முனைவர் பா.ஜம்புலிங்கம் முதலானோர்.
 -------------------------------------------------
நூல் வெளியீடு (2) 
மலேசியா தவரூபன் எழுதிய “ஜன்னல் ஓரத்து நிலா”
வெளியிடுபவர் - “நந்தவனம்” சந்திரசேகரன்அவர்கள்
பெற்றுக்கொள்பவர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
முன்னிலை- எழுத்தாளர் மதுரை ரமணி அவர்கள்
--------------------------------------------------------------- 
நிறைவான நிறைவுரை
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்
மேடையில்  இடமிருந்து..
நா.முத்துநிலவன்,  முனைவர் நா.அருள்முருகன், முனைவர் தமிழ்ப்பரிதி, தங்கம் மூர்த்தி, கணித்தமிழ் ஆய்வர் “நீச்சல்காரன்” ராஜாராமன்



















அழைக்கப்பட்டிருந்த 
சிறப்பு விருந்தினர் அனைவரும் 
வந்து கலந்துகொண்டதால் 
சிறப்பாக நடந்த நம் விழாப் படங்கள் 
மற்றும் செய்தித் தொகுப்புடன் 
விரைவில் சந்திக்கிறேன்

(பத்திரிகைகளுக்குச் செய்தி தந்துவிட்டு உங்களைச் சந்திக்க வருகிறேன். இது ஒரு முன்னோட்டம் மட்டுமே

அங்கேயே உட்கார்ந்து, நேரலையில் ஏற்றி உலகம் முழுவதும் உள்ள நம் தமிழ்ப்பதிவர்களைக் காணச்செய்த புதுக்கோட்டை UK Infotech தம்பிகள் UKகார்த்தி, முகுந்தனுடன் நமது விழாக்குழு “மது” கஸ்தூரிரெங்கன், ஸ்ரீமலையப்பன்,-மற்றும் நம் நண்பர்களின் பெருமுயற்சி யினால்தான் இது சாத்தியமாயிற்று 
அவர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் இதய நன்றி.

இந்தக் காணொளி வடிவை 
நமது விழாக்குழு நண்பர்களும், 
அனைத்துத் தமிழ்ப்பதிவர்களும் 
தமது தளத்திலும் 
முகநூல் சுட்டுரை போலும் மற்ற தளங்களிலும் 
எடுத்துப் போட்டு, 
உலகத் தமிழ்இணைய நண்பர்கள் 
அனைவர் பார்வைக்கும் கொண்டுசெல்ல 
 அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர் - பதிவர் திருவிழா-2015
மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம்
புதுக்கோட்டை

------------------------------------------- 
முக்கியமான பி.கு.
நேரில் வந்து பார்த்த நம் நண்பர்கள் எடுத்த படங்களை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பினால், அவற்றில் தேவையான வித்தியாசமான படங்கள் இருந்தால், நமது விழாத்தளத்தில் வெளியிடுவோம் 
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் - 
           bloggersmeet2015@gmail.com  
           muthunilavanpdk@gmail.com  
 ------------------------------------------------ 

12 கருத்துகள்:

 1. பதிவர் திருவிழாவினை நேரலையில் கண்டுகளித்தேன். விழா சிறக்க உழைத்த அணைத்து விழா குழுவினர்களுக்கு என் நன்றி.

  பதிலளிநீக்கு
 2. சாதனைக்கு வாழ்த்துகள் ஐயா!
  இனி சிறிது ஓய்வெடுக்கலாம்!

  பதிலளிநீக்கு
 3. விழாவை வெற்றிகரமாக நடத்தியமைக்கு வாழ்த்துகள் கவிஞரே...
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 4. நன்றி அய்யா! உங்களை தனியே பாராட்ட வேண்டும். எப்படி என்றுதான் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் குழுவைப் பாராட்டினால் அதில் நான் இருப்பேன்.
   என்னைப் பாராட்டும்போது, என்னோடு போட்டிபோட்டு உழைத்த எங்கள் குழுவினர் இருக்க மாட்டார்களே அய்யா! அது முறையற்றது என்பதால்தான் அந்தப் பெரிய மாலை போடடதை நான் விரும்பவில்லை, எல்லாராலும் எடுக்கப்பட்ட அந்தப்படத்தை நானும் வெளியிடவில்லை.
   “நான் என்று சொன்னால் உதடு ஒட்டாது, நாம் என்பதில்தான் உதடுகள் கூட ஒட்டும்“ என்பது உங்களுக்கு(ம்) பிடித்த வாசகம் தானே என் இனிய நண்பரே!?

   நீக்கு
 5. மிக்க நன்றி ஐயா, நினைவு முழுதும் அங்கேதான் இருந்தது! வர இயலாமைக்கு வருந்துகின்றேன்!

  பதிலளிநீக்கு
 6. மிகவும் அருமையாக , நிகழ்வுகளை ஒருங்கிணைப்பாக கொண்டு சென்றதில் உங்கள் குழுவினர் அனைவரின் இடையறா உழைப்பு தெரிந்தது. விழாக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்... இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. பிரமாதமாக நடத்திவிட்டீர்கள் அண்ணா. என்ன உழைப்பு! என்ன திட்டம்!
  விழாக்குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். படங்கள் நன்றாக வந்துள்ளது, பகிர்விற்கு நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா
  நிகழ்வை நேரலையில் பார்த்து மகிழ்ந்தேன்.. பாரிய பொறுப்பை மிக நேர்த்தியாக செய்து முடித்த தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா.வெகு சிறப்பு.... வாழ்த்துக்கள் ஐயா. தமிழால் அன்பால் இணைந்திருப்போம் த.ம 6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. படங்கள் பார்த்து பரவசமடைந்தேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆர்வம் தான். வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் கலந்து கொள்கிறேன். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 10. விழாக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு