நன்கொடை போதும்! கையேடு விற்பனைக்கு கையோடு உதவுங்கள்!

 பற்றாக்குறை என்றதும் ஏதோ லட்சக்கணக்கில் நட்டக்கணக்கு என்பதாகப் பலரும் நினைத்துவிட்டார்கள் போல.. அனுதாபங்கள் குவிகின்றன! அந்த அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி மாளவில்லை!
பற்றாக்குறை இப்போதும் பணத்தில் அல்ல... பணத்தில் எந்த அளவாயினும் ஈடுகட்டக்கூடிய அளவிற்கு நம் விழாக்குழு நண்பர்களே பெரிய மனதோடும் போதுமான வசதியோடும் இருக்கிறார்கள்.. எனவே...
 
பதிவர் அறிமுகம் -நகைச்சுவை கலந்து கலக்கும் மூத்த பதிவர்
முனைவர் பழனி கந்தசாமி அவர்கள்(அடுத்தடுத்த பதிவுகளில்
பதிவர் அறிமுகப் படங்கள் மட்டும் தொடரும்)
------------------------------------------------------------------------------------- 

நண்பர்கள் யாரும் இனி
நன்கொடை அனுப்ப வேண்டாம்,
கையேடு விற்பனைக்கு
உதவினால் வரவேற்போம்!

எனவே, “பரிசுத்தொகையை முழுவதுமாகத் தருகிறோம், ஒருபாதியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் நீண்ட அன்புக்கரங்களை அதே அன்புடன் மறுத்துக்கொண்டிருக்கிறோம்! தங்களின் அன்பு போதும் தொகை வேண்டாம்!

வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-


NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320


இந்தக் கணக்கின் வழி தொகை செலுத்துவோர், அவர்தம் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை 
கையேடு அனுப்பவேண்டிய முகவரிகள் 
முதலான விவரங்களை
 +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கு (குறுஞ்செய்தி) எத்தனை நூல்கள் தேவை எனத் தகவல் தெரிவித்திடவும் 
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

விழா நன்றாக நடத்தினோம் என்று வந்தவர்கள் உணர்ந்தால் அவர்கள் இதுவரை நன்கொடைப் பட்டியலில் சேராதவர்கள் என்றால் தரட்டும். உரிமை கலந்த அன்புடன் பெற்றுக்கொள்கிறோம்.


          கவிதை ஓவியங்களைப் பார்வையிடும் கவிதை ஓவியங்கள்

ஏற்கெனவே தந்தவர்கள், விழாவுக்கே வராதவர்கள் அன்புகூர்ந்து இனி நன்கொடை அனுப்ப வேண்டாம் என்று மிகுந்த அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
விழாவுக்கு வந்திருந்த அனைவரையும்
வாய்குளிர-மனம்குளிர-வயிறு நிறையச் செய்த
உணவுக்குழுத் தலைவர்
சகோதரி இரா.ஜெயலட்சுமி இவர்தான்
-------------------------------------------------------------------------

வலைப்பதிவர் கையேட்டிற்கு விவரங்கள் தந்தோர் அவர்களுக்கோ அவர்களின் நண்பர்களுக்கோ... 

கையேடு அனுப்பச் சொல்லி பணம் அனுப்பும்போது, கையோடு முகவரிகளையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவேண்டாமா நண்பர்களே?! (பணம் அனுப்பும் போதே பெயரைக் குறிப்பிடாமல், அனாமத்தாக வைத்துக் கணக்கிடும்போது எவ்வளவு சிக்கல்...!)

நன்றி சொல்லியும் கலையாத
வலைநட்பால் வந்த உறவுகள்

----------------------------------------------------- 
மீண்டும் 
ஒரு வாரத்திற்குள்,
இதே தளத்தில் 
யார்யார் எவ்வளவு தந்தார்கள் 
என்னும் விவரத்தோடும்
எந்தெந்த வகையில் என்னென்ன செலவாயிற்று என்னும் கணக்கோடும் 
உங்களைச் சந்திப்போம் 


           உழைத்த களைப்பின் நிறைவில்
            வாடிய முகத்தோடும் வாடாத மனத்தோடும்
        எங்கள் நிதிப்பொறுப்பாளர் சகோதரி மு.கீதாவின் நன்றியுரை.
------------------------------------------------------

நன்றி. வணக்கம்.


7 கருத்துகள்:

 1. உணர வேண்டியவர்கள் "உரிமை கலந்த அன்புடன்" உணர்ந்தால் சரி...

  விழாவிற்கே வர இயலாத நட்புகள் வழங்கிய நன்கொடைக்கு ஈடுயினை எதுவும் கிடையாது... அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல...

  பதிலளிநீக்கு
 2. இதை..இதை நான் எதிர்பார்த்தேன்...இந்த வேகமும்...வீரமும் மட்டுமே நம்மை முன்னிறுத்தும்...அருமையான பதிவு....ஒரு விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி....விழாவின் வெற்றிகளை அசை போடும் நேரமிது....சந்திப்பு முடிந்தபின் நாம் முன்னெடுக்க வேண்டிய பணிகள் இன்னும் இருக்கிறது..மீண்டும் ஒருமுறை நாம் கூடினால்...எல்லாம் முடியும்..நன்றி...நன்றி...

  பதிலளிநீக்கு
 3. புகைப்படங்கள் அருமை. விழாவிற்கு வர இயலாமல் நெருங்கிய உறவினருடன் மருத்துவமனையில் இருக்க நேர்ந்தது. புதுக்கோட்டை வலைப்பதிவர் குழுமம் மன்னிக்க வேண்டுகிறேன்.

  வலைப்பதிவர் கையேடு வேண்டுமென்றால் பணம் எப்படி அனுப்ப வேண்டும். எங்கள் முகவரியை ஈ மெயிலில் யாருக்கு அனுப்ப வேண்டும் எனக் கூற வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அனைத்து வலை நண்பர்களும் உணர்வார்கள் என்று நம்புவோம் மனம் தளர வேண்டாம்

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் நண்பர்களே
  கையேடு வாங்காத நண்பர்கள் முன்வந்து பெற்றுக் கொண்டாலே போதுமானது என்பதே எங்களின் வேண்டுகோளும். விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கு உரித்தான எங்களின் நன்றிகள் கையேடு பெற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கும் உரித்தானது. ஆகவே விரைந்து பெற்றுக் கொள்ளுங்கள். பற்றாக்குறை என்றதும் உதவ முன் வந்த அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. ஆஹா அழகான படங்கள்...விடுபட்ட வை காணக் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு