நமக்கான 'லோகோ' நல்லா இருக்கா?


என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்களில் இன்றைய நாள் இடம் பிடித்துக் கொண்டது! மறக்க முடியாத நாள்களில் இதுவும் ஒன்றானது! 

ஆம் நண்பர்களே! கடந்த நான்கு ஆண்டுகளாக நானும் தமிழ்-வலைப்பதிவுலகில் எழுதி வருகிறேன். மற்ற பல்வேறு அமைப்பினரும் தமக்கென ஓர் அடையாள முத்திரையை –இலச்சினையை- லோகோ வைத்திருக்கிறார்கள். அதுதான் எளிதாக அனைவரையும் அடையாளப் படுத்தும் எளிய சின்னம்! ஆனால், அது ஏன் தமிழ் வலைப்பதிவர் பயன்பாட்டில் இல்லை என்று நான் பலமுறை யோசித்ததுண்டு!

சென்னையில் பதிவர் சந்திப்பின் போது, தமிழ் எழுத்தின் முதல் எழுத்தில் பேனாவை இணைத்து ஒரு லோகோ வைத்திருந்தனர் (ஆனால், பேனா பயன்படுத்தாத இடத்தில் பேனா ஒட்டவில்லையே என்று நினைத்திருந்தேன் சொல்லவில்லை. அதனை விழாவில் தவிர வேறு யாரும் எங்கும் பயன்படுத்தவும் இல்லை) 

அகரம் தான் தமிழின் முதல் எழுத்து, ஆனால்,அதைவிட “த“என்பதே இன்னும் “தமிழ்“ எனப் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் என்றும் சமீப காலமாக எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது மேலும் அது “ப்ளாக்கர் எனும் தமிழ்-வலைக்கான உலகப் பொது அடையாளத்துடன் இணைந்திருந்தால் பொதுவான வலைப்பயணிகள் யாரும் இதைப் புரிந்து ஏற்றுக் கொள்வார்கள் தத்தம் வலைகளில் பயன்படுத்தவும் செய்வார்கள் என எதார்த்தச் சிந்தனையும் எழுந்தது...

இந்த விழாவை ஒட்டியாவது “தமிழ் வலைப்பதிவர்க்கென லோகோ“ ஒன்றை உருவாக்கிவிட வேண்டும் என்று நானும் விழாப்பணிகளைத் தொடங்கிய நாளிலிருந்தே பார்க்கும் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

சிலநாள் முன்புதான், தினசரி மாலைச் சந்திப்பிடமாகிவிட்ட யு.கே.இன்ஃபோடெக் இளைஞர்கள் கார்த்தி, முகுந்தன், மற்றும் நம் “புதுக்கோட்டை வலைச்சித்தர் திண்டுக்கல்லாரின் புதுக்கோட்டைப் பதிப்புஎன்று நான் அவ்வப்போது  சொல்லிக்கொண்டிருக்கும் ஸ்ரீமலையப்பனிடமும் சொன்னவுடன் உடனடியாகச் சில படங்களை அந்த இளையவர்கள் முன்வைத்தனர். ஆனால் ஏனோ அவை மனசில் ஒட்டவில்லை. பிறகு இதை மறந்தும் போனோம். விழாத் தொடர்பான வேலைகள் நம் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போன திசையில்தான் ஓட முடிந்ததே தவிர நாமாக ஆசைப்பட்டு எங்கே நடக்க முடிந்தது?

ஆங்கில வலைப்பதிவர்களுக்கு உலகளவில் லோகோ உள்ளது. உலகம் முழுதும் பயன்படுத்தவும் படுகிறது. சட்டென்று வலையுலாப் பயணியர் அனைவரும் புரிநதுகொள்ளும அளவு புகழ்பெற்றதும் கூட.

அதுபோல, தமிழ் வலைப்பதிவர்க்கென்று ஒரு லோகோ உருவாக நாமாவது முயல்வோம் என்று நினைத்தும் சரியான பொருத்தமான யோசனை (ஐடியா) பிடிபடவில்லை. நாளும் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த விழாவில் விளம்பரப் பதாகை (ஃப்ளெக்ஸ்) தயாரிக்கும் பணியில் இருந்தபோது, அந்தக் கடைப்பணியாளர் (என்மாணவன் சண்முகராஜா) கிடுகிடுவென்று ஃபோட்டோ ஷாப்பில் விளையாடியதைப் பார்த்து, “இவனிடம் சொல்லிப் பார்த்தால் என்ன?“ என்று ஆங்கில “ப்ளாக்கர்“ படத்தை எடுத்துப்பார்த்து அதிலிருந்து தொடர்பு படுத்தி யோசிக்கச் சொன்னேன். 

அருகிலிருந்த கவிஞர் வைகறையும், பின்னர் வந்து சேர்ந்துகொண்ட நமது விழாக்குழு வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கவிஞர்கள் மு.கீதா, செல்வா ஆகியோரும் ஆளுக்கொரு யோசனையாகச் சொல்லிச் சொல்லிப் பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமாக லோகோ கண்முன்னே எழுந்து வந்தே விட்டத!

“தமிழ் வலைப்பதிவர்“ என்பதில் உள்ள முதல் எழுத்து “த“ தமிழின் அடையாளமாகவும் இருக்கும் என்று அந்த எழுத்தையே மையமாக வைத்து, த எழுத்தில் பலவகை எழுத்துருக்களையும் “ப்ளாக்கர்“ லோகோவின் உள்ளே வெளியே மேலே கீழே என்று மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்து, கடைசியாக ....  யுரேகா..யுரேகா..!

இந்த லோகோவை நமது புதுக்கோட்டை விழாவில் பயன்படுத்துவது என்று முடிவெடுத்துவிட்டோம். மனசுக்குள் மகிழ்ச்சி அலையடிக்க, வெளியே மழைத்தூறல்!

நசநசவென்று தூறினாலும், ஆர்க்கிமிடீஸ் போல “யுரேகா“ யுரேகா“ என்று கத்திக்கொண்டு தெருவில் ஓட ஆசையாக இருந்தது. பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு, சூடா ஒரு காஃபி குடிப்போம் என்று அபிராமியில் போய் உட்கார்ந்து மகிழ்ச்சியை ஊற்றி ஆற்றிக் குடித்தோம்.

அந்த மாமேதை உலகப் புகழ்பெற்ற மிதத்தல் விதியைக் குளியலறைத் தொட்டியிலிருந்து கண்டுபிடித்துவிட்டு, கண்டுபிடித்த மகிழ்ச்சிப் பெருக்கில் தன்னையே மறந்து உடம்பில் துண்டுத் துணி கூட இல்லாததையும் மறந்தல்லவா தெருவில் ஓடினான்...!

நாமோ அவன் கால்தூசு பெறுமளவு மேதையும் இல்லை. இதுவொன்றும் அந்த அளவிற்குப் பெரிய கண்டுபிடிப்பும் இல்லை என்று எனக்குநானே சமாதானம் செய்து கொண்டாலும் மகிழ்ச்சி அலை ஓய்ந்தபாடில்லை.

நன்றாக இருக்கிறதா நண்பர்களே?

பலவாறு யோசித்துப் பார்த்து, சரியென்று தோன்றினால் தமிழ் வலைப்பதிவர் அனைவரும் பயன்படுத்துவோம்.

இல்லையெனில் புதுக்கோட்டை விழாவோடு போகட்டும்.

நண்பர்கள் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன்.

என்ன ஒரு கருத்தொற்றுமை பாருங்கள்... 
இந்தப் பதிவை நான் அடித்து, பதிவேற்றும் முன்பாக நமது இரண்டு நண்பர்கள் இதே சிந்தனையில் இருந்திருப்பது தெரிந்தது. 

ஒருவர் நம் வலைச்சித்தர் திரு திண்டுக்கல் பொன்.தனபாலன்
அவர் விடிகாலையில் தொலைபேசியிலேயே பேசினார்
இரண்டாமவர் திரு மதுரை தமிழ்வாசி பிரகாசம்.
அவர் இதுபற்றி நேற்றிரவு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். நேற்று முழுவதும் நடந்து மாலையில் அடிக்க ஆரம்பித்த பதிவு இது. நடுவர்களின் மதிப்பெண்களைத் தொகுக்கும் வேலையில் இதை ஏற்ற முடியவில்லை. இப்போதுதான் மீண்டும் முடிகிறது

இந்த நண்பர்கள் இருவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்து இதையே அவர்களுக்கான பதிலாகவும் பதிவிடுகிறேன்.

மீண்டும், 
நண்பர்கள் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன்.

இதைப் படிக்கும் நண்பர்கள் 'முகநூல்' மற்றும் 'கூகுள்+' முதலான தமக்குத் தொடர்புடைய சமூக வலைத்தளங்களில் எல்லாம் இந்த லோகோவைப் பகிர்ந்து கருத்துகளை அறிய உதவுங்கள். நன்றி.
--------------------------------------------

29 கருத்துகள்:

  1. லோகோ நன்றாக இருக்கிறது ... வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி
      மற்றவர் கருத்துகளையும் பார்ப்போம்

      நீக்கு
  2. உங்கள் திட்டங்கள், செயல்கள் அத்தனையும்மனது நிறைக்கிறது ஐயா!
    ”தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”
    கனவுகள் பலிக்கத்தொடங்கிவிட்டதென நினைக்கிறேன்!

    எனக்கு இந்த லோகோ திருப்தி!
    பார்ப்போம் சகோதரர்களின் கருத்தினையும்!..

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கு உரியவனாக எனது முயற்சியைத் தொடர்ந்துகொண்டே இருப்பேன் சகோதரி.
      நன்றி மற்ற நண்பர்களின் கருத்துகளையும் பார்ப்போம்

      நீக்கு
  3. Why copy the blogspot's employem... Try our best...


    sivaparkavi

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களோ நானோ ஏற்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி-
      “B“ என்னும் எழுத்தை அடிப்படையாகக் கொண்ட லோகோவை உலகம் முழுவதும் 'Blogger' என்பதற்கு அடையாளமாக ஏற்றுக்கொண்டு விட்டது. அதற்குள் த என்னும் எழுத்து தமிழ்வலை என்பதன் சுருக்க -விளக்கமாக அமையும்.
      ( அதாவது “B“ என்னும் லோகோ முன்பே புரியக் கூடியது, அதற்குள் இருப்பது ஏதோ ஒரு மொழிக்கான லோகோவாகத்தான் இருக்க முடியும் என்பதை ப்ளாக்கர் பற்றி அறிந்த தமிழறியாத யாரும் எளிதில் யூகிக்க முடியும். தவிரவும், “தமிழ்வலை“ என்பதை, பார்த்தவுடன் தெரிந்து கொள்ள எளிய வழியாகவும் இது தெரிகிறது. மேலும் யோசியுங்கள். யோசிப்போம்.

      நீக்கு
  4. இதில் எனக்கு மாறுபட்ட கருத்திருக்கிறது
    முன்னர் சென்னைப் பதிவர்களால் அமைக்கப்பட்டிருந்த
    லோகோவில் பார்த்தவுடன் "அ "என்ற எழுத்து இருந்ததால்
    அது தமிழைக் குறிப்பதாகவும் பேனாக் குறியீடு
    எழுத்தாளர்களைக் குறிப்பதாகவும் இருந்தது

    (அகரம் தமிழுக்குச் சிகரம், அகர முதல எழுத்தெல்லாம்,
    அம்மா என்பதெல்லாம் நமக்கு "அ" வின் சிறப்பினை
    நமக்குள் பதிய வைத்திருக்கிறது)

    இதில் "த "என்ற எழுத்து தமிழைக் குறிப்பது
    என்பதைக் கூட நாம் விளக்கித்தான்
    சொல்ல வேண்டியிருக்கும்

    "அ "போல அத்தனைச் சிறப்பான/கனமான
    சொல் இல்லை "த ".அதற்குத் தனித்த எழுத்தைக் கொண்டு
    குறிக்கவேண்டுமெனில் "ழ"வைக் கூட
    குறிப்பிடலாம்.ஏனெனில் தமிழ் தவிர வேறு
    மொழிகளில் இந்தச் சிறப்பு "ழ "இல்லை

    ஆயினும் எழுத்தாளர்கள் என்பதைக் குறிக்க
    வேறு ஏதேனும் ஒரு குறியீடு வேண்டி இருக்கும்

    நீங்கள் இத்தனை விளக்கமளிக்காமல்
    இந்தத் "த " லோகோவை மட்டும் போட்டிருந்தால்
    எத்தனை பேர் இது தமிழ் என யூகித்திருப்பார்கள்

    இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது ரமணி அய்யா, தங்கள் கருத்திற்கு நன்றியும் வணக்கமும்
      ஆனால், நமது லோகோவில் உள்ள “த“ என்பது “தமிழ்“ என்பதன் அடையாளம் மட்டுமல்ல, “தமிழ்வலை“ என்பதற்கும் சேர்ந்த அடையாளம்
      மேலும் “B“ என்னும் எழுத்தை எப்படி உலகம் முழுவதும் 'Blogger' என்பதற்கு அடையாளமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ அந்தப் பின்னணிக்குள் “த“ என்னும் எழுத்து (உள்ளே) இருப்பதால் இதைத் “தமிழ்வலை“ (Tamil Blog) என்று மொழி தெரியாதவர்கள் கூட எளிதாக யூகிக்க முடியும் என்பதோடு, பேனாவுக்கு வேலையில்லாத வலைப்பக்கத்தில் பேனா தேவையில்லை என்பதும் எனது தாழ்மையான கருத்தாகும்.
      இந்தப் பின்னணியல் யோசித்து, மீண்டும் தோன்றுகிற தங்கள் கருத்தைப் பகிர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
  5. யோசனை என்று வந்து விட்டால் ஒவ்வொருவரும் ஒன்று சொல்வார்கள். எனது யோசனை இது. அகரம் தமிழுக்கு சிகரம் என்பார்கள் ‘த’ வுக்கு பதில் ‘அ’ வை வைத்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். ஏற்கெனவே நண்பர்கள் ரமணி அய்யா, சிவ பார்கவி ஆகியோர்க்குத் தந்த எனது பதிலில் தங்களுக்கான பதிலும் இருப்பதாகத்தான் நினைக்கிறேன். மீண்டும் யோசிக்க வேண்டுகிறேன். தங்கள் கருத்திற்கு நன்றி

      நீக்கு
  6. தமிழ் வலைப்பூக்களின் தனித்த அடையாளமாக 'த' இலச்சினை நன்றாக உள்ளது. வடிவமைக்க உதவிய அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. இலச்சினை பொருத்தமாக உள்ளது. பெரும்பாலும் நம் நண்பர்களும் இதனை ஏற்பர் என நினைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. எதிர்பார்க்காமல் அமைந்து விட்ட சிறப்பான வடிவமைப்பு...நிச்சயம் வெல்லும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பாராமலா...? எத்தனை யோசனைகளுடன் மாற்றி மாற்றி B எனும் ஆங்கில லோகோவை உருட்டிப் பார்த்து, அதன் உள்ளே வெளியே பக்கத்தில் மேலே கீழே த எழுத்தைப் போடச் சொல்லி, என்று சண்முகராஜாவை பாடாய்ப் படுத்தி நீங்களும் நண்பர்களும் கூட இருந்தபோதே அமைத்த படம் உங்களுக்கு எதிர்பாராமலா.. அமைந்தது கீதா? சரி.. சரி விழா நினைவுக் கேடயம் மற்றுமுள்ள வேலைகள் அழைக்கின்றன ( ஷீல்டு ) இனிமேல் பின்னிரவுதான் வந்து இங்கே கருத்திட முடியும் நண்பர்கள் அதுவரை பொறுமை காக்க வே்ண்டுமென கீதாவின் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டுச் செல்கிறேன்.. நன்றி (இப்பவே மணி 1.50)

      நீக்கு
  9. வணக்கம்,
    எனக்கு மகிழ்ச்சியான ஆச்சிரியம், என் கணவர் என்ன இதற்கு லோகோ ஒன்றும் இல்லையா என்ற போது, நான் நீங்கள் வடிவமையுங்கள் அது குறித்து நான் பதிவு எழுதுகிறேன் என்றேன். இது இப்போ தான் இந்த போட்டி அறிவித்தீர்களே, அதன் பிறகு, அவரும் சரி என்றார், உடன் ‘வ‘ க்குள் ‘த‘ இதே அமைப்பில் வடிவமைத்தார்,,, அவர் துறை என்பதாலோ என்னவோ உடன் செய்தார். நான் தான் கொஞ்சம் இதனை பெரிய விசயமாக கருதல,,,,,
    ஆனால் அதனை இங்கு இப்போ பார்க்கும் போது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
    அருமை அய்யா தங்கள் குழு சார்ந்த பணி,,,,,
    வணங்குகிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பொருத்தமானதே கவிஞரே எனக்கு மிகவும் பிடித்து விட்டது காரணம் நானும் அடிக்கடி தமிழ் தமிழ் என்று எழுதி விட்டே எதையும் எழுத தொடங்குவேன் அதாவது...

    சிவமயம்
    போடுவார்களே அதைப்போல அந்த புலம்பலின் காரணமே எனது மகனுக்கு ''தமிழ் வாணன்'' என்று பெயர் வைத்தேன் இதில் முழுமையாக மூன்றெழுத்தும் கொண்டு வருவது சாத்தியப்படாது ஆகவே இந்த ஒற்றையெழுத்து
    '' த ''
    தமிழ் தழைத்தோங்கட்டும்

    தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  11. ஆஹா! நானும் இதைத்தான் யோசித்தேன் அண்ணா. வினோத் 'வ' பயன்படுத்தி வடிவமைத்துப் பின்னர் வேண்டாமெனெ விட்டுவிட்டோம்..
    இந்த லோகோ நன்றாய் இருக்கிறது அண்ணா , வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. கூகிள் தட்டச்சு செயலியிலும் 'த' பயன்படுத்தப்படுவதால், அதுவே எளிதாக அனைவரையும் போய்ச்சேரும் என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு
  13. எனக்கும் கூட
    யுரேகா யுரேகா யுரேகா
    என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது
    மனம் மகிழ்கின்றது ஐயா
    எனது இன்றைய பதிவே தங்களது இலட்சினைப் பற்றித்தான்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  14. இதையேதான் நானும் இனைத்து இருந்தேன் ஆனால் எத்தனை பேர் அதை அக்சப்ட் பண்ணிக் கொள்வார்கள் என்று தெரியாததால் விட்டுவிட்டேன் . நானும் இது போலதான் அட்டைவடிவமைப்பில் செய்ய வேண்டும் என்று நினைத்து கடைசியாக விட்டுவிட்டேன்

    நான் மற்று மற்றவர்கள் நினைப்பதை நீங்களும் உங்கள் விழாக் குழுவினரும் முயற்சி செய்கிறததை எண்ணி மகிழ்கிறேன்

    பதிலளிநீக்கு
  15. நன்றாக இருக்கிறது! மாற்றங்கள் குறித்து யோசித்து பிறகு கூறுகிறேன்!

    பதிலளிநீக்கு
  16. ஐயா ,பொருத்தமாக இருக்கிறது. 'விவாதம்' ஆரோக்கியமானது தானே.
    த ..என்ற எழுத்தே சரி!

    பதிலளிநீக்கு
  17. ஐயா... வணக்கம்...

    நம் (http://bloggersmeet2015.blogspot.com/) தளத்தை browser-ல் பாருங்கள்... நம் லோகோ வந்து விட்டதா...?

    விரைவில் (விரும்பும்) அனைத்து வலைப்பதிவுகளும் இது போல்.... தொழிற்நுட்ப பதிவு விரைவில்...

    பதிலளிநீக்கு
  18. எமக்கு அம்புட்டு ரசனை இல்லை...... பெரும்பாண்மை பதிவர்கள் சொன்னால் சரிதான்...

    பதிலளிநீக்கு
  19. லோகோ ரொம்ப நல்லாயிருக்கு! பி என்பது வலையைக் குறிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும். அதனுள் தமிழைக் குறிக்கும் த எழுத்து சிறப்பு! த மேல் மி அதன் மேல் புள்ளி வைத்து தமிழ் என்று எழுதலாம். (எ.கா: படம்:- http://oomaikkanavugal.blogspot.com/2015/09/blog-post_11.html) தமிழென்று எளிதில் எல்லோராலும் புரிந்துகொள்ளப்படும். அ தான் வேண்டும் என்று சொல்பவர்கள் கூட இதனை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் நடு எழுத்து இப்போதுள்ள த போலல்லாமல் சிறியதாகிவிடும்.

    பதிலளிநீக்கு