புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் நான்காவது “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்” வருக! வருக!!



கணினித் தமிழ்ச் சங்கம், புதுக்கோட்டை
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4 


இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை
நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி
(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)

 பங்கேற்பாளர்கள் இணைய இணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினி கொண்டுவருதல் நல்லது. 
மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்
இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக 
ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.

பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்


தலைமை
முனைவர் நா.அருள் முருகன் அவர்கள்
கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர்
(இணைஇயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை)

தொடக்கவுரை
முனைவர் .இராசேந்திரன் அவர்கள்
ஆசிரியர் - கணையாழி – இலக்கிய இதழ்
(மேனாள் துணை வேந்தர் –தமிழ்ப்பல்கலைக் கழகம்)

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
திருமிகு நா.சுப்பிரமணியன் அவர்கள்,
செயலர் ஜெ.ஜெ.கல்விக் குழுமம், புதுக்கோட்டை
முனைவர் ஜ.பரசுராமன் அவர்கள் 
      முதல்வர்ஜெ.ஜெ.கலைஅறிவியல் கல்லூரி       
முனைவர் கு.தயாநிதி அவர்கள்
       தமிழ்த்துறைத் தலைவர்

---------- பயிற்சியளிக்கும் கணித்தமிழ் வல்லுநர்கள் --------
முனைவர் மு.பழனியப்பன் காரைக்குடி,  திண்டுக்கல் தனபாலன், சிவ.தினகரன் காஞ்சி,  தி.ந.முரளிதரன் சென்னை பிரின்சு என்னாரெசுப் பெரியார் சென்னை, நீச்சல்காரன் சென்னை, எஸ்.பி.செந்தில்குமார் மதுரை,  முனைவர் பா.ஜம்புலிங்கம் தஞ்சாவூர், கரந்தை ஜெயக்குமார், மற்றும் 
புதுக்கோட்டை நண்பர்கள் - 
யு.கே.கார்த்தி, கஸ்தூரிரெங்கன், எஸ்.இளங்கோ, புதுகை செல்வா,  த.ரேவதி, ஸ்ரீமலையப்பன், காயத்ரி, உதயகுமார், திவ்யபாரதி

-------------------ஒருங்கிணைப்பாளர்கள்-------------------
நா.முத்துநிலவன், ராசி.பன்னீர்செல்வன்மு.கீதா, இரா.ஜெயலட்சுமி, கு.ம.திருப்பதி, எஸ்.டி.பஷீர்அலி, மகா.சுந்தர், .மாலதி, கே.ஸ்டாலின் சரவணன், சு.மதியழகன், மைதிலி, தென்றல், பொன்.கருப்பையா , மீரா.செல்வக்குமார், சோலச்சி. என்.கே.சூரியா
----------------------------------------------
ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் புதுகை நண்பர்களோ, பயிற்சிமுகாமில் பயிற்சி தர விரும்பும் வல்லுநர்களோ விவரம்தெரிவித்தால் அவசியம் பயன்படுத்திக் கொள்வோம். 
வருக வருக!

பயிற்சிக் கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக உதவிசெய்ய, பங்களிக்க விரும்பி நன்கொடை தர விரும்புவோர் நமது ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா அவர்களை தொடர்பு கொண்டு நன்கொடை தந்தால் மிகவும் மகிழ்வோம். வழக்கம் போல முகாம் முடிந்து, வரவு செலவு விவரம் இங்குத்தரப்படும்

இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் விவரம்
(1)  கணினியில் தமிழ் எளிய அறிமுகம்
(2)  இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் வாய்ப்பும் – உரை
(3)  வலைத்தளங்களில் செய்யவேண்டியதும், செய்யக் கூடாததும்
(4)  தமிழில் வலைப்பக்கம் (Blog) உருவாக்கம் விரிவாக்கம்
(5)  தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல்
(6)  தமிழில் புலனம் (whatsaap) செயல்பாட்டுப் பயிற்சி -
(7)  தமிழில் முகநூல் (FaceBook) செயல்பாட்டுப் பயிற்சி
(8)  தமிழில் இன்ஸ்டாகிராம் செயல்பாட்டுப் பயிற்சி
(9)  தமிழில் சுட்டுரை(Twitter)) செயல்பாட்டுப் பயிற்சி
(10)          ,இணைய (Online) வணிக வாய்ப்புகளும் ஏய்ப்புகளும்
(11)          தட்டச்சு செய்யாமலே குரல்வழிப் பதிவேற்றுதல் -
(12)          மின்னூல் (E.Book) / இலவசப் பதிவிறக்கம் பற்றிய தகவல்கள்
(13)          கிண்டில் (Kindle) படித்தல், பதிவிறக்கிச் சேமித்தல்
(14)          படைப்புகளை You-Tubeஇல் ஏற்றுதல் செயல்பாட்டுப் பயிற்சி-
(15)          மின்-சுவரொட்டி (Flex) தயாரித்தல், செயல்பாட்டுப் பயிற்சி -  
(16)          பார்க்க வேண்டிய குறும்படங்கள் (மாலை,இரவு) 

இவைபற்றிய கையேடுகள்  இலவசமாக வழங்கப்படும்
(இந்த முயற்சியை நமது வலைச்சித்தர்
திண்டுக்கல் தனபாலன் மேற்கொண்டு வருகிறார்.)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு பார்த்து, புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த ”எம்.எஸ்.ஸ்க்ரீன்ஸ்” ஆசிரியர் எம்.எஸ்.ரவி அவர்கள் தொடர்பு கொண்டு, “நான் ஃபோட்டோ ஷாப் வழியாக எப்படி போஸ்டர்கள் வடிவமைப்பது என்பது பற்றிச் சொல்கிறேன்” என்று சொன்னார். நமது அமைப்புகளில் எப்படியும் மாதம் 4,5கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு அழைப்பிதழ், போஸ்டர்கள் வடிவமைக்க நாமே தெரிந்து கொண்டால் எவ்வளவு நல்லது என்று தோன்றியது! எனவே அவரது யோசனையைப் 
பயிற்சி முகாமில் செயல்படுத்தலாம் என்பதுஎன்கருத்து 
– நா.மு., 01-09-2019 இரவு 10.20

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள். 
தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து
இணையத்தமிழ் வளர்ச்சிக்கு
 உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
---------------------------------------
மேற்காணும் தலைப்புகளே அன்றி வேறு தலைப்புகளும் அவசியம் கற்பிக்கப்படவேண்டும் என்று கருதுவோர், அதுபற்றிய தகவல்களோடு, வணிகநோக்கிலன்றி வந்து கற்பிக்கத் தக்க வல்லுநர் விவரங்களையும் தந்துதவ அன்புடன் வேண்டுகிறேன், வணக்கம்.
----------------------------------------------------------
நமது முந்திய பயிற்சி முகாம்களைப் பற்றி அறிய -
--------------------------------- 
பயிற்சி முகாம் தொடர்பான மேல்விவரம் அறிய 

        மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com,
        செல்பேசி எண்கள்-
நா.முத்துநிலவன் 9443193293,    கவிஞர் மு.கீதா-9659247363 
---------------------------------------------

34 கருத்துகள்:

  1. அருமை ஐயா... தொழில்நுட்ப விசயத்தில் என்னை மறுபடியும் மேம்படுத்திக் கொள்ள, இதை சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, முதல்நாளே வந்துவிடுங்கள். திட்டமிட்டுக் கொள்வோம்.
      அப்புறம் பயிற்சிப் பங்கேற்பாளர்க்குத் தரக்கூடிய கையேடுகள் தயாரித்து வழங்கும் யோசனை மிக நல்ல யோசனை செய்யுங்கள்.

      நீக்கு
  2. தகவல் அறிந்து மகிழ்ச்சி.

    குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு செயல் சந்திப்போம் கவிஞரே...

    //முனைவர் மு.பழனியப்பன் காரைக்குடி//
    ஏன் தேவகோட்டை என்று போடவில்லை ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் வரவேண்டும் “கொலைகாரரே!”
      நண்பர் மு.ப. காரைக்குடியில்தானே வசிக்கிறார்?

      நீக்கு
  4. மிகச் சிறப்பான முன்னெடுப்பு. அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டியது அவசியமே. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. தங்கள் தளத்தில் வெளியிட்டுதவ வேண்டுகிறேன்.
      அழைப்பிதழ் தயாரானதும் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன் அதை வெளியிட்டு உதவுங்கள். மீண்டும் முன்கூட்டிய நன்றி

      நீக்கு
  5. இவ்வாறான நற்பணிகள் தொடர வேண்டும்.
    ஏற்பாட்டுக் குழுவிற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைப்பிதழ் தயாரானதும் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன் அதை வெளியிட்டு உதவுங்கள். மீண்டும் முன்கூட்டிய நன்றி

      நீக்கு
  6. பெருமை மகிழ்ச்சி கொள்கிறேன் அய்யா. எனது முகநூல் பக்கத்திலும் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அய்யா வணக்கம்.
    வலைப்பக்க வளர்ச்சியில் எங்கள் முன்னோடி என்பதைச் சொல்லாமலே செய்துவிட்டீர்கள்.
    (சொல்லாமலே பெரியர் செய்வர் என்று பெரியவர்கள் சொன்னதும் சரிதானே?) மிகுந்த நன்றியும் வணக்கமும் அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! இது என்ன? நம் முன்னோடிப் பதிவர் அய்யா ரமணி அவர்கள் நமது வேண்டுகோளை ஏற்றுத் தன் வலைப்பக்கத்தில், நமது இந்தப் பதிவை அப்படியே எடுத்துப் போட்டதற்கு நன்றி சொல்லி அங்கேயே பின்னூட்டமிட்டால் அது அப்படியே இங்கே வந்துவிட்டது! ஆகா! அய்யா என்னென்னமோ பண்ணி வைத்திருக்கிறார் நன்றி அய்யா!

      நீக்கு
  8. என் பெயரையும் சேர்த்ததற்கு நன்றி அய்யா கண்டிப்பாக பகிர்கிறேன் பங்குபெறுகிறேன் பயிற்சியும் அளிக்க காத்திருக்கிறேன் நன்றி.. யு கே கார்த்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கார்த்தி!
      நமது “வீதி” கூட்டத்தில் நீங்கள் “இணையத்தில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்” என்று பேசியதை அத்தனைஇளைஞர்களும் குறிப்பாக இளம் பெண்களும் கேட்டே ஆகவேண்டும் என்று நான் நினைத்ததையே நம் நண்பர்களும் வற்புறுத்தினார்கள். அவசியம் வந்து --முடிந்தால் பவர் பாயிண்டுடன்-- பேசுங்கள். நன்றி

      நீக்கு
    2. வணக்கம் கார்த்தி
      வீதி நிகழ்வில் தொடக்கவிழாவில் நீங்கள் ஒருமணிநேரம் நிகழ்த்திய உரையை, பயிற்சி முகாமில் அனைவரும் இருக்கும் நேரத்தில் தொடக்கவிழாவிலேயே அரைமணிநேரம் சொல்லவேண்டும்.
      உங்களால் மட்டுமே முடியும். காத்திருக்கிறோம் கார்த்தி

      நீக்கு
  9. சிறப்பு அண்ணா பகிர்கின்றேன்

    பதிலளிநீக்கு
  10. தகவல் தொழில்நுட்பம் பற்றி நமது மொழியின் வாயிலாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
    பயன் படுத்திக் கொள்கிறோம் ‌‌‌‌ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் வாருங்கள் சகோதரி!
      முன்கூட்டியே தங்கள் விவரங்களைத் தெரிவித்து உதவுங்கள். எனது அடுத்த பதிவில் அழைப்பிதழுடன் வெளியிடுவேன். வணக்கம்

      நீக்கு
    2. வணக்கம்
      உங்கள் வருகையை உறுதி செய்து இந்த செல்பேசி எண்ணுக்குத் தெரிவியுங்கள் சகோதரி - கவிஞர் மு.கீதா-9659247363

      நீக்கு
  11. உங்களுடன் இணைந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் அனுபவங்களை பகிர வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன்.இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் வாருங்கள். முன்கூட்டியே எனது மின்னஞ்சலுக்குத் தங்களைப் பற்றிய விவரங்களைத் தாருங்கள் (அடுத்த பதிவில் பதிவு செய்யும சிறு படிவம் ஒன்றை வெளியிடுவேன்) வணக்கம்

      நீக்கு
    2. வணக்கம்
      உங்கள் வருகையை உறுதி செய்து இந்த செல்பேசி எண்ணுக்குத் தெரிவியுங்கள் நண்பரே - கவிஞர் மு.கீதா-9659247363

      நீக்கு
  13. ஐயா, வழக்கம் போல் இன்னொரு மிகச் சிறப்பான முயற்சியை முன்னெடுத்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி!

    பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பயிற்சி தரப்பட வேண்டுமானால் பரிந்துரைக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அண்மைக்காலமாகக் குழந்தைகளும் கைப்பேசி வழியே இணையத்தை மிகவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் அவர்கள் இணையத்தில் ஆங்கிலத் தளங்களையும் ஆங்கில உயூடியூபு வலைக்காட்சிகளையுமே பார்க்கிறார்கள். ஆகவே குழந்தைகளுக்கு இணையத்தில் இருக்கும் சுவையான தமிழ்த் தளங்களையும் தமிழ் வலைக்காட்சிகளையும் அறிமுகப்படுத்த வேண்டியது இன்றியமையாதது. அதற்கான வாய்ப்பும் இருந்தால் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் நண்பரே!
    நல்ல யோசனை. செல்பேசியில் தமிழ்ப்பயன்பாடு பற்றியே நிறையச் சொல்ல வேண்டியுள்ளது. சொல்வோம். தங்லீஷ் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும்.இதுபற்றியும் அவசியம் செய்வோம். நன்றி

    பதிலளிநீக்கு
  15. ஆகா... நீங்கள் செய்த இந்த நுட்பம், முத்து நிலவன் ஐயாவிற்கு திகைப்பு...! சந்திப்போம்....

    பதிலளிநீக்கு
  16. நானும் பங்கேற்க விரும்புகிறேன்.
    முனைவர் அ.கோவிந்தராஜூ,
    வலைப்பதிவர், கரூர்.

    பதிலளிநீக்கு
  17. நான் கண்டிப்பாக கலந்து கொள்கிறேன். அதற்கான பதிவு படிவம் பூர்த்தி செய்ய இயலவில்லை. வேறு பதிவு அனுப்புங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  18. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு