தமிழருவி மணியன் ஏன் இப்படி ஆனார்?நல்ல பேச்சாளராக,  விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை உணர்ச்சிகரமாக எடுத்துச் சொல்லி மக்கள் மனதில் தேசப்பற்றை வளர்த்தவர்தான்...
நல்ல எழுத்தாளராக ஆனந்த விகடனில் “ஊருக்கு நல்லது சொல்வேன்எனும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகளின் வீச்சு என்னைக் கவர, அதுவே புத்தகமாக வெளிவந்த புதிதில் நான் சந்திக்கும் நண்பரிடமெல்லாம் அதைப்பற்றிச் சொல்லி வாங்கச் சொல்லி, சிலருக்கு நானே வாங்கியும் தந்து மகிழ்ந்த அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்தான்...

இத்தனைக்கும் மேலாக நல்ல மனிதர் என்று நம்பியிருந்த போதே, திடீரென்று கட்சி என்று ஒன்றை ஆரம்பித்தார்... “ரௌத்திரம் பழகுஎன்றொரு இதழைத் தொடங்கினார். அரசியல் தரகு வேலையை ஆரம்பித்தார்...!.
அப்புறம் பார்த்தால், -இன்றும் புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டிவரும் இனியநண்பர் அந்தக் கட்சியின் மாவட்டத் தொடர்பாளராக அறிவிக்கப்பட நான்கூட மகிழ்ந்தேன். பிறகு... மோடிக்கு ஆள்பிடிக்கும் –ரீல் ஜோடி, ரியல் ஜோடி- தேடி தமிழருவி மணியன் அலையத் தொடங்கியதை அறிந்து எனது மாதச் சந்தாவை அத்தோடு நிறுத்தச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினேன்...

இதோ, சீட் கிடைக்காவிட்டாலும், ஒத்து ஊதும் பணியை விடாமல் செய்து தனது விசுவாசத்தைக் காட்டும் தமிழருவியார்... இப்போது எல்லை கடந்து விட்டார். பொய்த்தகவல்,பொய்யான கருத்துக்கணிப்பு.இத்யாதி..

2002-குஜராத் மதப்படுகொலையில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. 
(மேலுள்ள இரண்டு படங்களில் மேலே உள்ளது)
(இதைக் கலவரம் எனும் சொல்லால் குறிப்பதே தவறு. அதன் பொருள் திட்டமிடாமல் நடப்பது, இது அப்படியல்ல... திட்டமிட்டு இசுலாமியர் மீது மட்டும் நடத்தப்பட்ட படுகொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை) அதில் வந்த இந்தியர் இருவர் முகம் யாருக்கும் நினைவிலிருக்கும். அந்தப் படத்திலிருக்கும் இருவரில் ஒருவர் கைகூப்பி நிற்கிறார். மற்றொருவர் கொடுவாளை ஓங்கியவாறு வெறியேறி நிற்கிறார்...

இந்த இருவரும் –அந்தப் படுகொலைகளுக்குப் பிறகு- பத்தாண்டுக் கழிந்து – மோடியின் மூன்றாவது பொற்கால ஆட்சிக்குப் பிறகு... இப்போது எப்படி உள்ளனர்? இதைத் தனது கூட்டமொன்றில் கேரளாவிற்குக் கொண்டுவந்து மேடையேற்றி இருவருமே அந்த நிகழ்வைக் கண்ணீர் மல்ல நினைவுகூர்ந்து, அந்த 2002 படுகொலைக்குப் பின் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர். பணக்காரர்களுக்கு பாதிப்பும் இல்லை எங்கள் அறியாமையை மதவெறிக் கூட்டம் அரசியலாக்கிக் கொண்டது என்று வாக்குமூலம் தந்து, ஒருவரை ஒருவர் தழுவி சகோதர பாசத்தை வெளிப்படுத்திக் கொண்ட உணர்ச்சிகரமான புகைப்படத்தை தீக்கதிர் இதழ் வெளியிட்டிருந்தது.

2002 குஜராத் கலவரத்தில் மோடியின் கொலைவெறிக் கும்பலால் சாவின் விளிம்பிலிருந்து தப்பிப் பிழைத்த குத்புதீன், மத நம்பிக்கையின் வழியே மதவெறி ஏற்றப்பட்டு கொலை வெறியனாக்கப்பட்ட கூலித் தொழிலாளி அசோக்மோச்சி; இந்த இருவரும் இணைந்து கைகோர்க்கும் அந்தப் படத்தை படமே பேசும்என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார் தமிழருவியார்.

அதில் குத்புதீன், மோச்சி இரு வரும் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். மோதிக் கொண்டு ரத்தப்பலியான நாங்கள் இன்றும் நடுத்தெருவில்தான் நிற்கிறோம். எங்களை மோதவிட்ட முதல்வர் மோடியை பிரதமராக்கி குளிர்காய ஆர்எஸ்எஸ்சும், கார்ப்பரேட்களும் வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கு தான் இழைத்த கொடுமைகளை எண்ணி மனம்மாறிய மோச்சி பின்னாளில் மன்னிப்புக் கேட்டார். ஆனால் மோடிஜி இன்றுவரை மன்னிப்பு கேட்கவில்லை.

கேரளாவில் நடந்த இந்த ஒற்றுமைவிழாப் படத்தை எடுத்துப் போட்டு, “குஜராத்தில் மதக்கலவரத்தின் பின் ஒற்றுமையாய் வாழும் இந்து முஸ்லீம் நண்பர்கள்“ எனும் பொருள் வரும்படி தனது பத்திரிகையில் (ரௌத்திரம் ஏப்ரல்-2014) எழுதியுள்ள- தமிழருவி மணியனை என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே!

வெள்ளாட்டுடன் நட்புக் கொள்வதால் வேங்கை வள்ளலாருக்கு வாரிசாகுமா? படமெடுக்கும் பாம்புக்குப் பால் வார்த்து, நேசத்துடன் நெஞ்சில் வைத்துக் கொஞ்சினால் கொல்லும் விஷத்தை அடியோடு விலக்கி விட்டு அன் றாடம் அது அகிம்சையைப் போதிக்குமா
கோடி லிட்டர் பாலைக் கொட்டி குடமுழுக்குச் செய்தாலும் பாரதிய ஜனதாஎன்னும் கரித்துண்டின் கறுப்பு நிறத்தை மாற்றி விட முடியாது. சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே பாரதிய ஜனதாவின் அணுகுமுறை இருந்தாக வேண்டும் என்பது அதன்பிறப்பிலேயே அழுத்தமாக எழுதப்பட்ட அரசியல் விதி  
இந்த வீர வசனத்த்தை எழுதியது நானல்ல! 
சாட்சாத் நம்ம தமிழருவியாரே தான்! 
(“இன்று புதிதாய் பிறப்போம்“ என்ற நூலில் தமிழருவி மணியன்)

அட அட... என்ன தமிழ் என்ன தமிழ்! 
படிக்கப் படிக்க நாக்குத் துடிக்குதே!
இப்போது சொல்லுங்கள்… 

எப்படி இருந்த 
தமிழருவி மணியன்!
ஏன் இப்படி ஆனார்!!???

தலைப்பு மாற்றம் பற்றிய ஒரு தன்னிலை விளக்கம் -
(எழுத்தின் வழிகாட்டுதல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நம்பும் நான், முதலில் “தமிழருவி மணியனை என்ன செய்யலாம்?” என்றே தந்திருந்த தலைப்பை இப்போது “தமிழருவி மணியன் ஏன் இப்படி ஆனார்?” என்று மாற்றியிருக்கிறேன். ஏனெனில், இதற்கு வந்த பின்னூட்டங்களில் பல பல்வேறு விதமாக நாகரிக எல்லை கடந்து அவரைப் பற்றிக் கீழ்த்தரமாகவெல்லாம் செய்யலாம் என்று வந்தபின் எனது தலைப்பே தவறென்று உணர்ந்தேன். தண்டிப்பதிலும் ஒரு தரம் வேண்டும் என்பதுதான் தமிழர் மரபு எனவே, வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இந்தத் தலைப்பை மாற்றியிருக்கிறேன்..)

---------------------- 0000000 --------------------
தகவல், படங்களுக்கு நன்றி – தீக்கதிர் 23-04-2014 - http://epaper.theekkathir.org/   நன்றி –திரு எம்.கண்ணன்.
---------------------- 0000000 --------------------

32 கருத்துகள்:

 1. maniyanai odhukki thallungal..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்களோடு வளர்ந்தவர், இப்போது தலைவர்களோடு வாழ்கிறார் அதுதான்... மாற்றம்

   நீக்கு
  2. தமிழருவி மணியனை எங்காவது சந்தர்ப்பம் கிடைத்தால் நல்ல பேசவிடலாம் ஆனால் அவர் பேச்சை அவர் மட்டும்தான் கேட்பார்.தலை அரிக்குதென்று கொள்ளிக்கட்டையை தன் தலையில் மட்டுமல்ல இந்தியாவின் தலையிலேயே வைத்திருக்கும் அற்புதமான பேச்சாளர்.இவரைப்போன்றோரால்தான் நல்ல சிந்தனைப் பேச்சாளரின் கருத்துகளை கேட்க அச்சப்படுகிறார்கள். மகாத்மாவைக் கொன்றவன் வாரிசுகளோடு பிணைத்துக்கொண்டவர் காந்திய மக்கள் கட்சி என வைத்திருப்பதையாவது மாற்றி காந்தி என்பதை எடுத்துவிடுவது அவர் இப்போதாவது காந்திக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.'மனம்போன போக்கெல்லாம் போகுது பின்னே மண்டியிட்டுத்தானே சாயுது' என்று பாவலர் ஓம் முத்துமாரி சொன்னதுதான் நடக்கும் .

   நீக்கு
 2. ஆப்பு எனப்படுவது யாதெனில் அவர்
  அவருக்கு அடித்துக்கொள்வது ஆகும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை தன்வினை தன்னைச் சுடும் என்று பழமொழியிலும்,
   “முற்பகல்செய்யின் பிற்பகல் விளையும்“ என்று இலக்கியத்திலும், “நியூட்டனின் மூன்றாவது விதி“ என்று அறிவியலிலும் நீங்கள் சொல்வது போல நடைமுறையிலும் சொல்வார்கள். நன்றி

   நீக்கு
 3. He realized his mistake and found the true color of the terrorists who divided this country and still trying to divide this country. It requires courage to speak against the terrorist's.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துக்கு நன்றி, கருத்து நன்றாயினும் பெயருடன் தமிழில்தர அடுதத முறை முயலுங்கள் நண்பா.

   நீக்கு
 4. என்ன செய்வது.அவரது தமிழைத் தான் நேசித்தோம் .அவரைப்புறந்தள்ள வேண்டியது தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வர வர தமிழை நேசிப்பவர்களைக் கூட நம்ப முடியவில்லை (அ) அவர்கள் தமிழை நேசித்தது உண்மைதானா என்றே சந்தேகம் எழுகிறது. நன்றி கவிஞரே.

   நீக்கு
 5. தமிழருவி மணியன் மீது மிகுந்த மரியாதை உண்டு நீங்கள் சொன்னதுபோலவே. எங்கே போகிறோம் நாம் என் புத்தகப்பரிந்துரையில் எப்போதும் இருக்கும். காங்கிரஸ் கட்சியை எதிர்பதற்காக இப்படி செய்கிறாரோ? இவர், வை.கோ ரெண்டு பேருமே உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பவர்களாக இருகிறார்லே:((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னாய் மைதிலி. எனக்கு வைகோ மீதும் மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால்... இந்த முறை...இருவருமே..

   நீக்கு
 6. அய்யா தா.பாண்டியணை என்ன செய்யலாம் என முதலில் சொல்லுங்கள் ...ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதை தானே........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தத்தம் கருமமே கட்டளைக் கல். தொடர் தவறுகளையும் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்பவர்களைப் பிரித்தறியவும் நமக்குத் தெரியவேண்டும் இ்ல்லையா தாமிரபரணி அய்யா? தவறு யார்செய்தாலும் தவறுதான் என்பதில் மாற்றுக்கருத்தென்ன?

   நீக்கு
 7. அரசியல் சாணக்கியத்தனம் என்னும் பெயரில் அயோக்கியத்தனம் செய்துவரும் சோ, இவர் போன்றவரை எல்லாம் நாடு கடத்திவிடவேண்டும் ஐயா. இவர் பேச்சுகளை நெட்டில் டவுன்லொட் செய்து பார்த்துத் தொலைத்திருக்கிறேன். இந்த தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார். கேப்டன் நிலை குறித்து ஒரு பதிவு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் ஐயா!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேப்டன்? எல்லாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. எம்ஜிஆரின் பிரச்சார வேனில் சென்றவரெல்லாம் முதல்வராக முடியாது. கட்சி தொடங்கி ஐந்தாண்டுகளில் ஆட்சியைப் பிடித்தாலும் அதற்கு முன் பல்லாண்டுகள் அரசியலில் இருந்தவர் எம்ஜிஆர். (அவரே 30ஆண்டுகள் திரையுலக முதல்வராக இருந்தவர், 10ஆண்டுகள் முதல்வராக நடித்தவர் என்பார்கள்)

   நீக்கு
 8. நீங்கள் சொல்லும் வன்முறைச் செயலைக் கண்ணால் கண்டவர் ஒருவராவது உயிரோடு இருக்கிறார். எரிந்துபோன அந்த 60 பேரில் சாட்சி சொல்ல ஒருவர் கூட இல்லையே. அவர்களைக் கொன்ற ஒருவரை அழைத்துவந்து இதுபோல் அழவிட்டுப் படம் எடுத்து உலகுக்குக் காட்ட மற்றவர் யாராவது முன்வரலாமே. இதே போன்ற செயலை எதிர்த் தரப்பினர் செய்திருந்தாலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடியவர்கள் இல்லையா. எப்படியும் உயிரிழப்புகள் துயரமான விசயம்.

  நீங்கள் கூறிய இருவரில் காரப்பரேட்டுகள் பற்றிப் பேசியவர் யாரோ. இப்படியே பேசி கேரளத்தில் மாத ஊதியம் பெற முடியாமல் இருக்கிறார்கள்.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கேள்விக்கான விடை “ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்குக் குர்ரமா?“ என்று நம் ஊரில் சொல்வார்கள். 60தவறுதான். 2000 அதனினும் தவறு என்று நான் முதலிலேயே சொலலிவிட்டேன். எனினும் தங்கள் கருத்துக்கு நன்றி திரு கோபாலன் அய்யா.

   நீக்கு
 9. "குத்புதீன், மோச்சி இரு வரும் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். மோதிக் கொண்டு ரத்தப்பலியான நாங்கள் இன்றும் நடுத்தெருவில்தான் நிற்கிறோம். எங்களை மோதவிட்ட முதல்வர் மோடியை பிரதமராக்கி குளிர்காய ஆர்எஸ்எஸ்சும், கார்ப்பரேட்களும் வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றன."

  மோடிதான் தங்களை தூண்டி விட்டதாக அவர்கள் சொன்னார்களா ? எதற்க்கு இந்த பொய் சொல்லும் பிழைப்பு ?
  கோயபல்சை விட உங்களுக்கு பொய் நன்றாக வருகின்றது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் சொல்வதிலிருந்து, உலக வரலாறு -கல்வியாளர்கள் ஒப்பமிட்டு வெளியிட்ட அறிக்கை வரை எல்லாமே பொய்யா அனானிமஸ் அய்யா?

   நீக்கு

 10. வணக்கம்!

  மணியரை இன்னே பிணியா்என் றோதும்!
  வணிகராய் வந்தார் வளம்

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாவற்றுக்கும் ஒரு குறள் எழுதிவிடுகிறீர்களே! நீங்கள் ஒரு வியப்புக்கவிதான் அய்யா. தங்களின் குறட் கருத்துக்கு நன்றி

   நீக்கு
 11. பதில்கள்
  1. இதனால்தான் யாராவது குறுக்கே புகுந்து சூதுபண்ணுவதை,
   “இதுல அவன் கொஞ்சம் பாலிடிக்ஸ் பண்ணிட்டான்“ என்னும் சொல்வழக்கு வந்ததோ அய்யா? நன்றி

   நீக்கு
 12. அண்ணா
  எதைத் தின்றால் காங்கிரஸ் அழியும் என்கிற பழி உணர்ச்சி மணியனை இத்தகு கீழ்மையான செயல்களில் ஈடுபட செய்திருக்கின்றது என்று கருதுகிறேன்.

  ஈழத்தை அளித்த காங்கை காலி செய்ய முயல்கிறார்.
  சேர்ந்த அணி மிகத் தவறான அணி

  பெயரை சம்பாதிக்க பல யுகங்கள் ஆகும்
  ஆனால் சிதைக்க ஒரே வினாடி போதும் என்கிற விசயத்தை எப்படி மறந்தார் ஊருக்கு நல்லது சொன்னவர்..
  வியப்பு அதிர்ச்சி ஆயாசம்

  ஒருவேளை ஊருக்கு உழைத்தது போதும் கொஞ்சம் சம்பாதிப்போம் என்கிற

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகத் தெளிவாக நீங்கள் சொன்னதைத்தான் நான் படபடவென்று பலபட எழுதிக் கட்டுரையாக நீட்டியிருக்கிறேன் மது. நன்றி

   நீக்கு
  2. nallavangala saagadiikka ungala polla allunga yanga irunthu thaan varuveengaloea

   நீக்கு
  3. ungala maathiri aalungalaalathaan nadu nasamaa poguthu..........

   நீக்கு
 13. நண்பர் திரு சுவாமிநாதன் (பெங்களுரு) மீண்டும் இரண்டு நீண்ட கடிதம் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். நான் படித்துப் புரிந்துகொள்வேன் எனினும் விடைதரும் அளவிற்கு ஆங்கிலம் தெரியாதென்பதால், அவரே தமிழில் எழுதினால் பதில் தரத் தயாராகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வலை எழுத்து என்பது ஜனநாயக மேடை. சரியாகப் பயன்படுத்தினால் நாமும் வளரலாம், சமூகமும் பயன்பெறும் அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 14. தமிழருவி மணியன் ஏமாற்றத்தைத் தந்துவிட்டார்

  பதிலளிநீக்கு
 15. ஒருவேளை மோடி திட்டமிட்டே அந்த பாதகத்தை செய்திருந்திருக்கலாம் . அதற்காக அந்த ஒன்றையே திரும்ப திரும்ப சொல்லி சாடுவது சரிதானா ...?

  தப்பு பண்ணுனவன் கடசி வரையிலும் தப்பு மட்டுமே தான் பண்ணுவானா ? திருந்தவேமாட்டான் என்று எப்படி இவ்வளவு ஊர்ஜிதமாக சொல்கிறீர்கள் ...

  தமிழருவி மணியன் நல்ல நோக்கத்தோடு தான் முயற்சி செய்திருப்பார் என்று நம்புகிறேன் . அல்லாத பட்சத்தில் அவரையே அவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றுதான் அர்த்தம் .

  பதிலளிநீக்கு
 16. “குஜராத்தில் மதக்கலவரத்தின் பின் ஒற்றுமையாய் வாழும் இந்து முஸ்லீம் நண்பர்கள்“ எனும் பொருள் வரும்படி தனது பத்திரிகையில் (ரௌத்திரம் ஏப்ரல்-2014) எழுதியுள்ள- தமிழருவி மணியனை என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே!

  குஜராத்தில் மதக்கலவரத்தின் பின் ஒற்றுமையாய் வாழும் இந்து முஸ்லீம் நண்பர்கள் என்று எழுதி மகிழும் தமிழருவி மணியனுக்கு ஏன் இலங்கையில: தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக ஒரு நாட்டில் வாழ்வது பிடிப்பதில்லை!

  பதிலளிநீக்கு