தேர்வு-தினமலர்-தேர்தல்-நகைச்சுவை

மகன் - 'அப்பா.. எப்படியாவது மோடிய இந்தியப் பிரதமரா ஆக்கிருங்கப்பா...?'
அப்பா - டேய் இன்னும் தேர்தலே முடியல... அதுக்குள்ள எப்பிடிடா..?”
மகன் - இல்லப்பா எக்ஸாம்ல ஒரு கொஸ்டின் வந்திருந்துச்சா...இந்தியப் பிரதமர் யாருன்னு..?. நான் தினமலர்ல போட்டிருந்தாங்களேன்னு.. மோடி-னு எழுதிட்டேன்... அதான்ப்பா?
அப்பா - ???????????
 --------------------------------------
(முரளி அய்யா உங்களப்பாத்து நானும் ஜோக் எழுத ஆரம்பிச்சதுக்கும் 
அதுவும் ரீ-மிக்ஸ் ஜோக்கா ஆனதுக்கும் மன்னிக்கணுமய்யா...)
---------------------------------------------------------------------- 
இதன் மூல ஜோக்கையும் வெளியிடுவதுதான் நாகரிகம் -
நேற்றைய (19-04-2014) தினமணி சிறுவர் மணியில் வந்திருந்தது... 
இதுவும் எங்கோ கேள்விப்பட்டதுதான்...

மகன் - அப்பா இந்தியாவோட தலைநகரமா சென்னைய மாத்த முடியாதாப்பா?
அப்பா - ஏன்டா?
மகன் - இல்ல, இன்னிக்கு பரிட்சையில வந்திருந்த “இந்தியாவின் தலைநகரம் என்ன“ங்கிற கேள்விக்கு சென்னை னு எழுதிட்டேன்....!
-------------------------------------------------

14 கருத்துகள்:

  1. தினமலர் மட்டுமா தினமணி கூட இதைத்தான் எழுதுகிறது. நல்ல ஜோக் ஐயா, ஆனால் அது தான் நடந்துவிடும் போலிருக்கிறது........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தான் நடந்துவிடும் போலிருக்கிறது... -இது என்ன உங்கள் அச்சமா? ஆசையா? நடக்காது அய்யா நடக்காது. இந்திய மக்கள் எந்த மதத்தவராயினும் மற்ற மதத்தவரையும் மக்களாக மதிக்கும் பண்பாடு மிகுந்தவர்கள்.. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

      நீக்கு
    2. நடக்கக்கூடாது என்பது தான் என் எண்ணமும் ஐயா!!!

      நீக்கு
  2. நான்லாம் இப்படி தெளிவா யோசிக்காம போனேன்!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தலைமுறை நம்மைவிட நல்லாத்தான் யோசிக்கிறாய்ங்கெ சகோதரி. கருத்திற்கு நன்றி

      நீக்கு
  3. வணக்கம் ஐயா
    இந்த காலத்துப் பசங்க ரொம்ப சமத்து தான் ஐயா. மூல நகைச்சுவையையும் தவறாமல் குறிப்பிட்டது தான் எழுத்துலகத் தர்மம்.தங்கள் நேர்மை குணத்திற்கு வணக்கங்கள் ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலென்ன இருக்கு பாண்டியன். நம்ம சிந்தனைன்னா அதைப் பெருமையாகவும் குறிப்பிடலாம். தழுவல் -ரீமிக்ஸ்-ங்கறத சொல்லுறதுதானே நியாயம்? அதான். நன்றி.

      நீக்கு
  4. ஆனாலும் பாண்டியன் தம்பி சொல்லுறமாதிரி "உங்க நேர்மை எனக்கு பிடுச்சுருக்கு " நல்ல ஜோக் ....ஜோக் காவே இருந்துடட்டும்:))

    பதிலளிநீக்கு