“தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 2இடம், பாஜகவுக்கு 1இடம் கிடைக்குமாம்!” -பந்தயம் கட்டுவமா?


நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தேர்தல் அரசியல் அனல் பறந்தது...
“தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 2இ்டங்கள்,
பாஜகவுக்கு 1இடத்துக்குக் குறையாது” என்று விவாதம் நடந்துகொண்டிருநதது..பந்தயம் எல்லாம் கட்டிக்கொண்டிருந்தார்கள்...

“எந்த எந்த இடத்துலடா ஜெயிப்பாங்க?”
சொல்லித் தொலைங்கடா“

என்றான் புதிதாய் வந்தவன்

உடனே
பொறுமை இழந்தவனாய்

அவனைப் பார்த்துச் சீறினான் இவன்  -

“டேய் நீ சும்மா
இருக்க மாட்டே.
நாங்க அந்த ரெண்டுகட்சிக்கும் டெபாசிட்கிடைக்கிற இடத்தைப் பத்தி பேசிக்கிட்டிருக்கோம்.
நீ என்னடான்னா ஜெயிக்கிறப் பத்திக் கேட்டுக்கிட்டு இருக்கிற?”



காங்கிரசுக்கு இரண்டு இடம் டெபாசிட் கிடைக்குமாம்.
(சிவகங்கை,புதுக்கோட்டையை மனதில் வைத்து?)

பாஜகவுக்கு -அதுவும் அதுக்கு இல்லையாம்,                                                         கூட்டணிக்காம்--
அந்தக் கூட்டணிக்கே ஒருஇடததில்தான்
டெபாசிட் கிடைக்குமாம்... (சிவகாசி?)

தமிழ்நாட்டு நெலம தெரியாமெ இந்த ரெண்டு கட்சிகளோட தேசீயத் தலைவர்கள் தமிழ்நா்ட்டில் --அதுவம் ஒரே நாளில்-- வந்து பேசீயத கேட்டுட்டுத்தான் இந்த விவாதம்.... அட அட அட...!!??

இது ரொம்ப அதிகமோ?
MNCs  SPONSORED  MODI

28 கருத்துகள்:

  1. தலைப்பைப் பார்த்து என்னமோ நினைத்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நினைச்சீங்க வலைச்சித்தரே? நாமும் தேர்தல் கருத்துக் கணிப்பில் இறங்கிட்டமோ ன்னா? அதுக்கெல்லாம் நிறைய மூளை வேணுங்கய்யா... பத்திரிகை, தொ.கா.இருக்கணும் ல? நா எப்படி?

      நீக்கு
  2. இங்க ஜெய்கிறாங்களோ இல்லையோ ?
    மத்தியில் வந்துவிடுகிறார்களே:(
    பாப்போம் அண்ணா, இந்ததடவை ஜனநாயகம் என்ன சொல்லுதுன்னு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
      மெய்போலும்மே மெய்போலும்மே,
      மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால்,
      பொய்போலும்மே பொய்போலும்மே”
      “புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்ப தில்லை
      வெற்றிபெற்ற மனிதர் எல்லாம் புத்தி சாலி இல்லை”
      சிலரைப் பலகாலம் ஏமாத்தலாம்,
      “பலரைச் சிலகாலம் ஏமாத்தலாம்
      எல்லாரையும் எப்போதும் ஏமாத்த முடியாது“ - இதெல்லாம் உனக்கும் தெரியும்தானே பா? ஒரு மரியாதைக்குக் கேக்குற?

      நீக்கு
  3. இந்த பந்தயத்தை மட்டும்தான் நீங்க பாத்தீங்களா? இன்னொருபந்தயமும் நம்ம மக்கள் மத்தியில் நடந்துகொண்டு இருக்கிறதுஇவுங்க இந்ததரம் 2000கொடுப்பாங்க. இல்ல, இல்ல, சேலையும்
    சேத்துக்கொடுப்பாங்க, பாப்பமா ...?பாப்ப ,பாப்ப.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?” என்ற பாரதியின் வரிகளின் ஆழம் எவ்வளவு தூரம் போகிறது பாருங்கள்.. நன்றி.

      நீக்கு
  4. யார் ஆட்சிக்கு வந்தாலும் "சூரியன்" வடக்கே அஸ்தமனமாவது உறுதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பிடீங்கறீங்க? 2001இல் மத்தியில் இருந்த ஆட்சி வேறு,
      1998முதல் 6ஆண்டுகள் பிரதமராக இருந்த வாஜ்பாயி அமைச்சவையிலும், அதைத்தொடர்ந்து 2004-2009, 2009-13 ஆக இரண்டுமுறை பிரதமராக இருந்த மன்மோகன் அமைச்சரவையிலும் ஆக 15ஆண்டுகள் மத்தியில் ஆளுங்கட்சியாகவே இருந்தவர்களுக்கு... இந்தப்பழக்கம் பழசு தானே? ஜெயித்த கட்சிக்கு ஆதரவு தருவது.... புரிகிறதா?

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. புரிகிறது. தேர்தலுக்கு முன் ஒரு நிலைப்பாடு. "மதவாத கட்சி ஆட்சி அமைக்காமல் இருக்க பாடுபடுவோம்" என வீராவேசம். தேர்தலுக்கு பின் வேறொரு நிலைப்பாடு. "மோடி எனது நண்பர். தனிப்பட்ட முறையில் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்" என வழிந்து மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க தூது விடுவது. காற்றடிக்கும் பக்கம் எல்லாம் சாயும் இவரை விட ஜெ அம்மையார் எவ்வளவோ தேவலாமென்றே தோனுகிறது. தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

      நீக்கு
  5. அரசியல் காமெடி என்பது போய் இப்போது காமெடிகளே அரசியலாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாநாயகி தனியாகவும், கவர்ச்சிநடிகை தனியாகவும் இருந்தது போக, இரண்டையும் ஒருவரே பார்ப்பது போல அல்லது,
      வில்லன் தனியாகவும், சிரிப்புநடிகர் தனியாகவும் இருந்தது போக, இப்போது இரண்டையும் ஒருவரே பார்ப்பதுபோலவும்... சரியா?

      நீக்கு
    2. எப்புடி ?! அண்ணா ! எப்படி? செம...செம...:)

      நீக்கு
  6. அரசியல்வாதிகளின் சுயநலத்தினால் மக்களின் பொது நலம் இன்னும்
    எத்தனை காலங்களுக்குத் தான் அப்படியே அடிமையாகிக் கிடக்கப் போகிறது !விரைவில் நன்மை வந்து சேர மக்களே ஒத்துழைக்க வேண்டும் .சிறப்பானபகிர்வுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஐயா .(KFC விளம்பரப் படம் அருமை :))) )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி
      KFC விளம்பரப் படத்துக்கு நன்றி கூகுளார்தான்.
      தேடினேன் வந்தது.

      நீக்கு
  7. பெயரில்லாசனி, ஏப்ரல் 19, 2014

    கன்னியாகுமரி, விருதுநகர், தென்சென்னை, சேலம்,தர்மபுரி போன்ற இடங்களில் பிஜேபி கூட்டணிக்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. சந்தேகம் தான் ஆனால் கன்னியாகுமரி மற்றும் விருதுனகர் உறுதி எனவே படுகிறது. அப்புறம் காங்கிரஸ் க்கு 3வது இடம் கிடக்கலாம் சிலதொகுதிகளில். சிவகங்கை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை போன்ற இடங்களில் டெபாஸிட் கிடைத்துவிடலாம் என்றே தெரிகிறது..ஐயா! பதிவு அருமை நல்ல காமெடி!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதுநகரில் வேண்டுமானால் கிடைக்குமோ கிடைக்காதோ என்று சந்தேகப்படலாம்... டெபாசிட்டைச் சொன்னேன். அதுவும் அங்கு நிற்பவர் வைகோ என்பதால்.
      குமரியில்... அந்த சந்தேகமும் வேண்டாம்...
      மயிலாடுதுறை...? நல்ல காமெடிங்க.

      நீக்கு
  8. அரசியல் பதிவு ...
    இனி தடையேது...வாழ்த்துக்கள்
    தொடர்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதுமே எனக்குத் தடையாக எதையும் நினைத்ததில்லை மது. நான் உண்மையைத்தானே சொல்கிறேன். தேவையெனில் நீதிமன்றம் போய் இதையே சத்தமாய்ச் சொல்லுவேன். எனது பழைய கட்டுரைகளைப் படித்ததில்லை என்று நினைக்கிறேன். கடந்த 1998-தேர்தலின்போது தினமணியில் நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு - “மறுபடியும் சூதாட்டத்தில் பாரதமாதா” நமது வலைப்பக்கத்திலும் இட்டிருக்கிறேன் - படியுங்கள் - http://valarumkavithai.blogspot.in/2014/03/blog-post_22.html#more

      நீக்கு
  9. பேசும் அரசியலும் பேயனாக்கும் எம்மினத்தை
    வீசும் புயலாய் விரிந்து !

    அருமை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நச்சென்று தும்மினும் நல்ல கவிவருமோ?
      உச்சென்னும் முன்னேயும் ஓடிவரு மோகவிதை?
      இனனல் களைவதை எண்ணியே நெஞ்சயரும்,
      கன்னல் தமிழில் கலந்து.

      நீக்கு
  10. ஆஹா பேசட்டும்... எங்க தொகுதியில சிதம்பரம் மகனுக்கு நாலாவது இடம்தான் கிடைக்குமாம்... அதிமுக முந்துவதாக இன்றைய செய்தி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... இதைத்தான் ஒரு நல்லசெய்தி ஒரு கெட்டசெய்தி என்று சொ்ன்னார்களோ? சரிதான்..

      நீக்கு
  11. முத்து நிலவரே....எல்லாம் சரி...? யார் வந்தாலும் நல்லது நடக்கபோரதில்லை. பொறவு எதுக்கு இது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா... அப்படி ஒரு முடிவுக்கு வந்திட்டா எல்லாம் நோடடா தான் அதுவும் சரியா இருக்காதில்ல... நல்லதும் கெட்டதும் கலந்து கெடக்குற நம்ம ஜனநாயகத்துல ந்லலதை இருக்குற கண்டுபிடிக்கிறதும், அதை மத்தவங்களுக்குச் சொல்றதும்தானே சரியா இருக்கும்... எல்லாமே மோசம் என்பது எளிதான ஒரு கிழட்டுச் சித்தாந்தமில்லிங்களா?

      நீக்கு