எந்தப் பொருளை வாங்கலாம்? எவற்றை வாங்கக் கூடாது?
விலைவாசி உயர்வுக்கு நாமும்தான் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

இரண்டு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39.  இன்று 1 US $ = ரூ 65.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....??? அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின்
தயாரிப்பு செலவு 70-80பைசா மட்டுமே...
ஆனால் விற்கப்படும் விலை 10-30ரூபாய்!
எத்தனை மடங்கு  கொள்ளை லாபம் என்பது இதுதானே?
அதாவது 
நாம் குடிக்கும் ஒரு குளிர்பானத்திற்கு ஏறத்தாழ இருபது ருபாய் 
ஏதோ ஒரு வெளிநாட்டிற்கு செல்கிறது...!!!

இதைத் தடுக்கவே முடியாதா...???

முடியும். 
நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???


1 )
 ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள்,                  வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 )
 ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-
வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK... and BOVENTO. KALIMARK… IN TN

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE,FRUITI…

BATHING SOAP:-
வாங்கவும்:-
USE CINTHOL  & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE,VIVEL

TOOTH PASTE:-
வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-
வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-
வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-
வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-
வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-
வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-
வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-
வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.


Food Items:-
வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W. குர்குரே பாக்கெட்ஸ்
இவற்றிலும் கொழுப்பவர்கள் இந்தியப் பணக்காரர்கள்தான் என்றாலும் அந்த லாபத்தில் பகுதியாவது இந்தியாவிலேயே சுழலுமே?

             BUY  INDIAN  TO  BE  INDIAN
நீங்கள் இதை உங்கள் FBயில் செய்யும் ஒவ்வொரு SHARE-ம்                                       நம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது...
------ மேற்கண்ட செய்தியை முகநூலில் பிடித்தேன்.---------
இதில் உள்ளே தவிர்க என்பதைத் தவிர்க்க என்று திருத்திக் கொண்டு நம்நாட்டுப் பொருள்களில் தேவையானதை மட்டும் வாங்கவும்சில தமிழ்நாட்டுப் பொருள்களைச சேர்த்தேன்.
முகநூல் பக்கத்தில் இட்ட திருமிகு வசந்தா அவர்களுக்கு நன்றி
http://www.facebook.com/vasantha.kumari.167
முதலிலும் கடைசியிலுமாக இரு சிறு திருத்தம் மட்டும் நான் செய்தேன்
முத்லில் –  விலைவாசி உயர்வுக்கு அரசுதான் காரணம் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்னும் வரி. இது தவறான கருத்து. மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசு மக்களை ஏமாற்றிவருவதுதான் உண்மை. அரசின் பங்கு இல்லாமல் விலைவாசி ஏறாது. சோசலிச நாடுகளில் பல்லாண்டுகளாக விலைவாசி ஏறாமல் இருப்பதற்கு அரசுதானே காரணம்? அவ்வாறே என்க.
கடைசியில் படத்துக்குள் தவிர்க என்று உள்ளதைத் தவிர்க்கஎன்று திருத்தி வாசிக்கவும். இந்தப் பொருள்களைத் தவிர்த்து சுதேசிப் பொருள்களை மட்டும் வாங்கிய பிறகு நன்றி சொல்லட்டுமா?
அறியாமையாலும், அலட்சியத்தாலும் நம் பொருளாதாரம் பறிபோவதை இனியும் அனுமதிக்காமல் எச்சரிக்கையாக இருப்போம்.
“பொழுதெலாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு
போகவோ – நாங்கள் – சாகவோ
அழுதுகொண் டிருப்போமோ நாங்கள் ஆண்பிள்ளைகள்
          அல்லமோ? – உயிர் – வெல்லமோ?”               பாரதி.

இதை நம் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்லிவிட்டால் நம்மை அவர்களே வாங்க விடமாட்டார்கள்..
என் மகள் இப்போது கோக் உம், குர்குரேவும் வாங்காமல் தவிர்ப்பது மட்டுமல்லாமல், அவற்றைப் பற்றி மற்ற குழந்தைகளுக்கும் விளக்கிக்கொண்டிருக்கிறாள்!...
கோக் ஐ தன் (1978)காலத்தில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச் சாத்திய மொரார்ஜியை நினைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
அதன் பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பிஜேபி இரண்டும் போட்டிபோட்டு அந்நிய மூலதனக் கம்பெனிகளை நடைபாவாடை விரித்து வரவேற்றதையும் அதற்கு இன்றைய சன்டிவி புகழ் முரசொலி மாறனும், பின்னர் அவரது மகனும் லாலி பாடியதையும், கலைஞர் அவர்களுக்கு இசையமைத்துத் தந்ததையும் நாம் இந்தத் தேர்தல் நேரத்தில் மறந்துவிடக்கூடாது.
ஒரு கவிதை -
“தாத்தா, உழவர் சந்தையில்
காய்கறி விற்கிறார்.
பேரன், உலகச் சந்தையில்
இந்தியாவை விற்கிறார்
எழுதியவர் பெயர் தெரிந்தவர்கள் சொல்லலாம். இல்லாவிடில் இதே இடத்தில் தேர்தல் அன்று வெளியிடுவேன்

-----------------------------------------------------------

17 கருத்துகள்:


 1. இந்தியப் பொருட்கள் மட்டும் வாங்கவேண்டும்
  என நினைப்போருக்கு நிச்சயம் இந்தப் பதிவு
  பயனுள்ளதாக இருக்கும்
  பயனுள்ள பதிவு
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரமணி அய்யா. எங்கே நமது கருத்து வேறுபாட்டால் நீங்கள் என் வலைப்பக்கமே வராமல் போய்விடுவீர்களோ என்று உண்மையிலேயே அஞ்சினேன். கருத்து வேறுபாடு வேறு, நட்பு வேறு என்று முன்னுதாரணமாகக் காட்டி எனது அடுத்த பதிவிலேயே வந்து பின்னூட்டமிட்டு விட்டீர்கள். உங்கள் பண்பிற்கும், பெருந்தன்மைக்கும் என் தலைதாழ்ந்த வணக்கம். நம் நட்பு வளரட்டும் அய்யா, கருத்து வேறுபாடுகளைக் காலம் சரிசெய்யும் என்று நம்புகிறேன். மீண்டும் நன்றி வணக்கம்.

   நீக்கு
 2. நல்லதொரு பகிர்வு..நானும் இதை முகநூலில் பார்த்தேன்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பேரப்பிள்ளைகளுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்பதே என் விருப்பம் கிரேஸ்.
   அவர்களை அலலாமல் இந்திய எதிர்காலம் ஏது? நன்றி.

   நீக்கு
 3. பட்டியலில் உள்ள நமது பொருட்களை வாங்கிறோம் - 80% நன்றி...

  திருமிகு வசந்தா அவர்களுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீதி 20% ? ஓ! அது நம் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் வெளிநாட்டு விவகாரங்களை வெளியேற்றிய பின்...? நீங்கள் உண்மையிலேயே நடைமுறைச் சிந்தனை (Practical Knowledge) உள்ளவர்தான்! வலைச்சித்தர் அல்லவா? மிக்க நன்றி அய்யா.

   நீக்கு
 4. அறியாமையாலும், அலட்சியத்தாலும் நம் பொருளாதாரம் பறிபோவதை இனியும் அனுமதிக்காமல் எச்சரிக்கையாக இருப்போம்.

  நல்ல விழிப்புணர்வளிக்கும் பதிவு நண்பரே. எனது மாணவர்களுக்கும் சொல்லியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "அறியாமையாலும், அலட்சியத்தாலும் நம் பொருளாதாரம் பறிபோவதை இனியும் அனுமதிக்காமல் எச்சரிக்கையாக இருப்போம்" - இதுதான் நண்பரே எனது பதிவின் மையக்கருத்து. சரியாகப் புரிந்து கருத்திட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி நண்பா.

   நீக்கு
 5. எது இந்தியப் பொருள்ன்னு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!?

  பதிலளிநீக்கு
 6. அறிதொறும் அறியாமை.... பாமர மக்களை அந்நிய மோகம் கொள்ள வைத்ததே வெகுஜன ஊடகமான தொ(ல்)லைக் காட்சிதான்.2020ல் இந்நாடு வல்லரசாகிறதோ இல்லையோ இந்நிலை நீடித்தால் மீண்டும் நாம் அந்நிய ஆதிக்கத்தில் அமிழும் நிலை உருவாகும். ஊடக வழி உணர்த்த முயலுவதிலும் ஊர்தோறும் இத்தகு கருத்துகளை பரப்புரை செய்ய இயக்கம் கட்ட வேண்டியுள்ளது அவசியம்.

  பதிலளிநீக்கு
 7. இந்தியனாக இரு ,இந்தியப் பொருட்களையே வாங்கு .. உங்கள் பரம எதிரியான rssயும் இதைத்தானே சொல்கிறது ?ஆனால் bjpஇதைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை !

  பதிலளிநீக்கு
 8. ஐயாவணக்கம்!
  இனிமேல் இந்த பட்டியல்தான் எங்க வீட்டிலும்.(வாங்கவும்) நாம்அறிந்துகொள்ளவேண்டியமுக்கியமான தகவல்அயல்நாட்டுப் பொருள்களைப் பயன் படுத்துவது நம்மையும் அறியாமல்நடந்து கொண்டிருக்கிறது அதை நாம் படிப்படியாக குறைத்துக்கொள்ளத்தான் வேண்டும்'.

  பதிலளிநீக்கு
 9. நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. மிக அருமையான விளக்கங்களுடன் இருந்தது மேலும் சிறப்பு ஐயா, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. சிந்தனையை தூண்டும் பகிர்வு . மீண்டும் சுதேசி இயக்கம் தோன்ற வேண்டும்.முடிந்த வரை நம் நாட்டுப் பொருட்களையே வாங்க முயற்சிப்பேன்.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 11. ஐயா ! இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று எனக்கு புரியவில்லை..
  இருந்தாலும் பதிவுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 12. இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்குவோம்.... நல்ல சிந்தனை ஐயா. முயற்சி செய்வோம். அடுத்தவர்களுக்கும் சொல்வோம்.

  பதிலளிநீக்கு