நாம் படித்த 'அரிச்சந்திரன் கதை' சரியான கதை தானா?


நாம்  படித்த 'அரிச்சந்திரன் கதை' சரியான கதை தானா?

உண்மையே பேச வேண்டும அதைத்தான் நம் குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றக்கருத்து இருக்காது. 
ஆனால், 
அதற்கு, காலகாலமாக 
நாம் சொல்லிவரும் 
“அரிச்சந்திர மகாராஜா கதை“ சரியானதுதானா என்னும் சந்தேகம் எனக்கு நீண்ட நாளாகவே உண்டு.


“அரிச்சந்திரன் வாய்மையைக் காப்பாற்றுவதற்காகத் தன் நாட்டையே இழந்தது மட்டுமல்ல, மனைவி, மக்களையெல்லாம் இழந்தான். அப்படியும் தன் வாய்மையை மட்டும் இழக்கவில்லை... அப்படி இருக்கணும்“ என்று நம்குழந்தைகளுக்குச் சொல்லும்போது நான் மிகவும் தயங்குவேன்... 

ஏனெனில் –
ஒரு சாதாரண மனிதனின் கடமை என்ன?
- தன் மனைவி மக்களைக் காப்பாற்றுவது.
ஓர் அரசனின் கடமை என்ன?
- தனது நாட்டு மக்களைக் காப்பாற்றுவது.
நாடு என்று வந்தால் 
மனைவி மக்களைக் கூட இழக்கலாம் (புத்தர்)

மனைவி மக்களுக்காக 
நாட்டைக் காக்கத் தவறியவர்களை மன்னிக்க முடியாது. 
இதற்கு முற்காலத்திலிருந்து,
தற்காலத் தலைவர்கள்வரை 
நிறைய உதாரணமுண்டு.... இல்லையா?

சாதாரணமான ஒரு மனிதனின் கடமையையோ,
சத்தியம் தவறாத ஒரு புருஷனின் கடமையையோ,
சரித்திரத்தில் நிற்கும் ஓர் அரசனின் கடமையையோ-
சரியாகச் செய்யாத அரிச்சந்திரன் கதை சரியானதுதானா?

இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்தால் 
மேலே படிக்க வேண்டாம்.

ஏனெனில், இந்த மூன்றையும் செய்யத் தவறியவன் அரிச்சந்திரன்.
அவன் எப்படி நம் குழந்தைகளுக்கு 
முன்னோடியாவான்? என்பதே என்கேள்வி

தன் கடமைகளைக் காப்பாற்றத் தவறியவன் 
வாய்மையை மட்டும் காப்பாற்றி என்ன செய்யப் போகிறான்?

இப்போது சொல்லுங்கள் –
இந்த இடத்தில் எதார்த்த வாழ்க்கையை மையப்படுத்தி
வள்ளுவர் சொன்னதுதான் சரியாகப் படுகிறது.
“பொய்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்“ – குறள் எண் – 292
இதற்குப் பொருள் சொல்ல வேண்டியதில்லை. 

ன்றாலும் இந்தத் தலைப்புக்கு ஏற்ப 
விளக்குவதற்காகச் சொல்ல வேண்டுமானால் –
“குற்றமற்ற தன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் வாய்மை என்றே கருதப்படும்“ 
துதானே சரி? இதுதானே எதார்த்தம்?

இதை விட்டு 
வாய்மையைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று 
நாட்டையும் மக்களையும் மனைவியையும் 
விற்றுத் தொலைத்த அரிச்சந்திரன் 
ரொம்ப ஓவர்னு தோணல? 

மகாத்மா காந்திக்கு வேண்டுமானால், அரிச்சந்திரன் கதை உதாரணமாகத் தோன்றியிருக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு அரிச்சந்திரன் கதையைச் சொல்லிப் பாருங்கள்.
என்ன சொல்கிறார்கள் என்று கூறுங்கள்.
சரியாக இருந்தால் வைத்துக்கொள்வோம்.
இலலையென்றால்... ஏதாவது செய்வோம்.

எனக்குத் தோணுது. அதான்...
இப்ப சொல்லுங்கள் -
நாம் படித்த அரிச்சந்திரன் கதை சரியானதுதானா?
--------------------------------------------------
 இந்தியாவின் முதல் திரைப்படம் ராஜா அரிச்சந்திரா (மராத்தி)
தாதா சாகேப் பால்கே இயக்கத்தில் வெளிவந்த ஆண்டு 1913
------------------------------------------------- 
மேல் விவரங்கள் இலக்கியச் சான்றுகள் தேவைப் படுபவர்கள் மட்டும் மேலே படிக்கலாம்-
பதிஇ ழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த 
நிதிஇ ழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும்
கதிஇ ழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார்
மதிஇ ழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான்.
நல்லூர் வீர கவிராயர் எழுதிய “அரச்சந்திர புராணம்“ பாடல் எண் – 1106
இதன் எளிய பொருள்- வாய்மையில் தவறாத அரிச்சந்திரன், அதற்காகத் தன் மனைவியையே படுகொலை செய்ய நேர்ந்த நேரத்தில், தோன்றிய விசுவாமித்திர முனிவன், இப்போதும் ஒன்றும் பிரச்சினையில்லை, நீ சொன்ன சொல்லை இல்லை என்று சொல, எல்லாவற்றையும் திருப்பித் தருகிறேன் என்கிறான். அதற்கு அரிச்சந்திரன், “நாட்டை இழந்தேன், பெற்ற குழந்தையை இழந்தேன், பெற்ற பிற செல்வங்கள் எல்லாவற்றையும் இழந்தேன், “வாய்மையை மட்டுமே கடைப்பிடித்துநான் பெற்ற புண்ணியம் எல்லாவற்றையும் இழந்தாலும், சொன்ன சொல்லை –வாய்மையை- இழக்கமாட்டேன்“ என்று அரிச்சந்திரன் சொன்னான். உடனே “என்ன சொல்வது? வேறென்ன செய்வது?என்றறியாத விசுவாமித்திர முனிவர் அவ்விடத்தை விட்டு மறைந்தார்.

--------------- படங்களுக்கு நன்றி கூகுளார் ------------ 
(முதலில் வந்த 
றுப்புக்குரிய மறுவாசிப்புக் கதை -1 கண்ணகி.
இது எனது
மறுவாசிப்புக் கதை -2 அரிச்சந்திரன்
உங்கள் கருத்தறிந்து இந்தப் பகுதி தொடரும்.)

29 கருத்துகள்:

  1. இது கதையாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ள முடியாததாகத் தான் தோன்றுகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட் நாகராஜ் தொடர்ந்து சிந்திப்போம்.
      “தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா - இன்று
      தோன்றியவாம் எனும் எனும் எவையும் தீதாகா” என்று நம் முன்னோர்கள்தாம் பாடிவைத்திருக்கிறார்கள்

      நீக்கு
  2. எனது மகள் ஏற்கனவே சொல்லிவிட்டாள். முட்டாள்தனமானது என

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி முரட்டடியாக நம் முன்னோர்களை முட்டாள்களாக்கிவிட முடியாது நண்பரே! எப்படியாவது அறவழியில் நடக்க வைக்கவே இப்படிக் கதை விட்டிருக்கிறார்கள் அவர்கள் நோக்கத்தைக் குறைசொல்ல முடியாது. பாரதி சொல்வது போல -
      “கதைகள் மிகநல்ல வேனும் - நன்மை கூறும்
      கட்டுக்கதைகள் அவைதாம்“ என்றே நினைக்க வேண்டும். நல்லமுயற்சிகள் தோற்கலாம், முயற்சி தோல்வியல்லவே?

      நீக்கு
  3. குழந்தைகள் எல்லோரும் அதி புத்திசாலிகள்.....

    முன்பெல்லாம் பாடம் நடத்துவதற்கு முன் மிகுந்த தயாரிப்போடும், அப்பாடத்திலிருந்து என்னென்ன கேள்விகள் எழும் என்று யோசித்து விடைகளைத் தெரிந்துக் கொண்டு தான் வகுப்புக்கு போவோம்........ஆனால் இப்போதெல்லாம் வகுப்பிலிருந்து மும்முனை தாக்குதலாக தான் வருகிறது குழந்தைகளிடமிருந்து......

    காந்தி அரிச்சந்திரன் கதையை படித்து எது வந்தாலும் உண்மை பேச வேண்டும் என்று முடிவெடுத்தார் ' என சொல்லிக் கொண்டிருக்கும் போது. அரிச்சந்திரன் கதையையும் சொல்ல வேண்டியதாயிற்று. அப்போது ஒரு மாணவி எழுந்து [மூன்றாம் வகுப்பு] மேடம், எனக்கு ஒரு சந்தேகம் என்றாள்.....' என்னமா சொல்லு '.என்றேன் .... நீங்கள் மேலே கேட்டுள்ள மூன்று கேள்விகளைத் தாண்டி நாலாவதாக ஒரு கேள்வி கேட்டாள்...... எதுவுமே வேண்டாம்னு எல்லாத்தையும் விட்டவரு அந்த முனிவரு..... அவருக்கு எதுக்கு அரிச்சந்திரன் தன்னோட நாட்டை கொடுத்தாரு? எந்த குவாலிஃபிகேஷனும் இல்லாம அந்த முனிவர் எப்படி பீப்பளை காப்பாத்துவாரு? எனக்கு வேண்டாம்னு தானே அவர் சொல்லியிருக்கனும்? ,,, என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்......
    அரிச்சந்திரன் கதை மட்டுமல்ல நாம் படித்த நிறைய கதைகள் சரிதானா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.......

    பதிலளிநீக்கு
  4. அரிச்சந்திரன் கதை மட்டுமல்ல, நாம் படித்த பல கதைகள் சரிதானா, என்று யோசிகக வேண்டியிருக்கிறது.......
    இதே கதையை மூன்றாம் வகுப்பிற்கு சொல்லிக்கொண்டிருக்கும் போது, ஒரு மாணவி, மிஸ், எதுவுமே வேண்டாம்னு எல்லாத்தையும் விட்ட முனிவருக்கு இந்த ராஜா தன்னோட நாட்டை ஏன் கொடுத்தாரு? அவரு ஏன் வாங்கிகிட்டாரு? அவர் மக்களை [peopleஐ] எப்படி காப்பாத்துவாரு? rule பண்ணிட்டே இருக்கும் போது பாதியிலேயே இந்த ராஜா விட்டுட்டு போனதால இவர் bad ராஜா தானே?... இப்படி அடுக்கிக் கொண்டே போய் என்னை திக்கு முக்காட வைத்து விட்டாள்....
    குழந்தைகள் அதி புத்திசாலிகள்....... நாம் தான்........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “CHILD IS THE FATHER OF MAN“ - என்று ஆங்கிலத்தில் சொன்னதை, “தம்மில் தம்மக்கள் அறிவுடைமை“ - என்று வள்ளுவன் தமிழில் ஏற்கெனவே சொன்னதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்! நம்மைவிட நம் பிள்ளைகள் புத்திசாலிகள்தான் அதிலென்ன சந்தேகம்? நமது கல்விமுறையும் அறம்பிறழ் ஊடகங்களும் அதைக் கெடுக்காமல் இருந்தால் போதும்!
      தங்களின் முதல் வருகை-கருத்துரைக்கு நன்றி சீதா!

      நீக்கு
  5. சிந்தனைக்க உரிய பதிவு ஐயா
    இதற்கு முன் இந்த கோணத்தில் சிந்தித்தது இல்லை
    தாங்கள் கூறுவதுதான் சரியாகப் படுகிறது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோல என் சிந்தனையில் பட்டவை நிறைய உள்ளன நண்பரே அடுத்தடுத்து எடுத்து விடுவோம்... நமக்கு நல்ல சிந்தனைகளைத் தந்த சமூகமே அதன் மீள் பயனையும் பெறவேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. இப்போதும் இதைப் பாடம்வைக்கும்போது சற்றே விளக்கம் தந்து வைக்காத குறையால்தான் இந்தச்சிந்தனை அதுதான் இப்படி... நன்றி

      நீக்கு
  6. தன்-மையை உணராதார் உண்மையை செய்தாலும் துன்பமே. எனக்கும் உங்கள் சந்தேகமே. உண்மையின் நன்மையை புராணத்தில் சொல்லியிருந்தனர்; அதன் தன்மையை ஆய்ந்து சொன்ன தங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “உண்மையின் நன்மையை புராணத்தில் சொல்லியிருந்தனர்;“
      நோக்கம் கதையின் ஒரு வரி “நாட்“ சரிதான்
      கதை சொன்ன விதமும், திரைக்கதையும் குழப்பம் என்பார்களே அது மாதிரியா அய்யா?

      நீக்கு
  7. எனக்கும் ஒரு சந்தேகம் உண்டு ஐயா..தன் மனைவியிடமும் குழந்தைகளிடமும் 'நான் பார்த்துகொள்வேன்' என்று சொல்லியிருப்பான் தானே? அதைக் காப்பாற்றவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொல்லித்தான் திருமணம் செய்வதாக இந்தத் திருமண மந்திரங்கள் சொல்வதாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் அவ்விதம் சொல்லித் திருமணம் செய்திருப்பானாயின் நீங்கள் சொல்லும் சந்தேகம் எனக்கும் வருகிறது. இதை ஏற்றுக்கொண்ட சந்திரமதியை கற்புக்கரசிப் பட்டியலில் வைத்ததும் (முந்திய எனது கண்ணகி பற்றிய பதிவு) பட்டியலின் காரணமன்றி வேறு இருக்க முடியுமா என்ன?

      நீக்கு
  8. வாய்மைக்கு மட்டும் என்று நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்...?

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே! நீங்கள் சொல்வது உண்மை தான் மக்களை காப்பாற்ற வேண்டும். இல்லையேல் மனைவி மகனை காப்பற்றி இருக்கவேண்டும். தீமை நேராமல் நன்மை பயக்கு மெனில் பொய் உரைப்பதில் தவறு இல்லை அல்லவா. நல்ல கேள்வி தான். அருமை வாழ்த்துக்கள் ...!
    இதை \\ ( குழந்தையின் பரராட்டும் தாயின் தாலாட்டும்)// என்ற கவிதையில் குறிப்பிட்டுளேன். முடிந்தால் பாருங்கள்.

    http://kaviyakavi.blogspot.com/2014/02/blog-post_21.html?showComment=1398734267650#c951791692716969136

    பதிலளிநீக்கு
  10. உண்மைதான்..சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம் தான் ஐயா ...

    பதிலளிநீக்கு
  11. நாம் சொல்லும் ஒவ்வொரு பொய்களுக்கும் ஒவ்வொரு பற்கள் விழுவதாக இருந்தால் யாருக்கும் பற்களே இருக்காது என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வந்தது கவிஞரே. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  12. கண்டிப்பாக நீங்க சொல்வது போல யோசித்து தான் ஆக வேண்டும்.. பலமுறை நான் யோசித்ததுண்டு!!

    இந்த காலத்து குழந்தைகள் எங்களை உங்களை விட புத்திசாலிகள்... இதே கதைய அவங்க கிட்ட சொன்னா .... என்ன சொல்ல்வங்க " அரிச்சந்திர மாதிரி பொய் சொல்ல மாட்டேன்னு இருந்தா.. நாங்களும் நாட்டை விட்டு வீட்டை விட்டு எல்லைரையும் விட்டு போயிடுவோமான்னு தான் கேட்பாங்க சார்....

    நிறையவே யோசிக்கணும் ஒரு உதாரணம் சொல்றது முன்னாடி.. இல்லன்னு மொக்கை தான் கிடைக்கும் இப்பல்லாம்!!!

    பதிலளிநீக்கு
  13. அட!! இப்படி ஒரு சிந்தனை இருக்கா? சிந்திக்க தூண்டும் பதிவு.

    பதிலளிநீக்கு
  14. எல்லோருமே ஒரே மாதிரியான பதிலைச் சொல்லியிருப்பது வியப்பாக இருக்கிறது. ஏதோ நம் முன்னோர்கள் வேலையில்லாமல் இதைபோல கதைகளைச் சொல்லுகிறார்கள் என்றும் நம் இந்தக் காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாக அவற்றைக் கேள்விகள் கேட்டு எல்லாவற்றையும் ஒன்றுமில்லை என்று ஆக்கிவிடுகிறார்கள் போலவும் இருக்கிறது.
    எந்தக் கதையானாலும் கொஞ்சம் கற்பனை அதிகமாகவே இருக்கும். எந்த நிலையிலும் பொய்சொல்லக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்தக் கதை. அதற்கு கொஞ்சம் எல்லைமீறிப் போயிருக்கிறார்கள் நம் முன்னோர்கள், அவ்வளவுதான்.
    நோஞ்சான் மாதிரி இருக்கும் தமிழ் பட நாயகன் இருபது முப்பது பேரை ஒண்டிக்கு ஒண்டியாக அடித்து நொறுக்குவதை பார்த்து ரசிக்கிறோம். இதை நம்புபவர்கள், ஏன் அரிச்சந்திரன் கதையை நம்ப மறுக்கிறார்கள்.
    பல விஷயங்களை நாம் நம் இளைய தலைமுறைக்கு சொல்ல விட்டுவிட்டோம். எத்தனை நஷ்டங்கள் இதனால்.
    இன்னும் இதைபோலக் கதைகளையும் நாமே தேவையா, உண்மையா என்று கேட்டால் என்ன ஆகும்?

    பதிலளிநீக்கு
  15. தங்களுடைய சிந்தனைகள், ஆய்வுகள், கேள்விகள் எல்லாம் நியாயமானதே!
    இருப்பினும் இங்கே யாரும் அரிச்சந்திரனின் முதல் பாக கதையை சொல்லவே இல்லை.
    அரிச்சந்திரன் ஆரம்பத்தில் சொல்லாத பொய்யே இல்லை.
    தன் மகனுக்குகாக அவன் அடுக்கடுக்காக சொன்ன பொய்கள் பல.
    இப்படி எல்லாம் வாயைத் திறந்தாலே பொய்ச் சொன்னவன்
    வாழ்க்கையின் பிற்பகுதியில் பொய்யே சொல்ல மாட்டேன்
    என்று சபதம் எடுததால் வந்து விளைவுகளை சந்தித்து,
    அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பது அவனிடம் இருந்து
    நாம் பெறக்கூடிய வாழ்வியல் பாடம்!

    பதிலளிநீக்கு
  16. அன்பின் முத்து நிலவன் - அரிச்சந்திரன் கதை சரியான கதை தானா ? - பதிவு நன்று - சிந்தனை நன்று - மேலும் மேலும் சிந்திப்போம் - முடிவிற்கு வருவோம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  17. நல்ல சிந்தனை. எனக்கும் இப்படி எதாவது மனசுலே தோணிக்கிட்டே இருக்கும்.'பொழுதன்னிக்கும் கோக்குமாக்கா நினைப்பதே உன் வேலையாப்போச்சு' ன்னு அப்பப்ப மனசைத் திட்டுவேன். அது கேட்டுட்டாலும்.....!

    ஆனால் ஒன்னு.... தன்னை நம்பி வந்த மனைவி, குழந்தைன்ற குடும்பத்தை, நட்டாத்தில் விட்டுட்டுப் போறவரை என் மனசு எக்காலத்திலும் மன்னிக்காது.

    இன்றுதான் உங்கள் வலைப்பதிவுகளுக்கு (முதல்முறையாகன்னு நினைக்கிறேன்!)வந்து வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.

    கவிஞர் என்பதால் பயந்து போய் இதுவரை வராமல் இருந்து விட்டேன்:(

    பதிலளிநீக்கு
  18. புலவர் சொன்ன கருத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் ஏன் அரிச்சந்திரன் அப்படி வாய்மை தவறாத மன்னனாக வாழ்ந்தான் என்பது விளங்கும் இவ்வளவு விளக்கம் கொடுத்த புலவருக்கு ஏன் இது ஏன் விளங்கவில்லை என வருத்தம் அளிக்கின்றது.. மற்றொன்று சகோதரி சீதா விசுவாமித்திர் முற்றும் துறந்த முனிவர்தான் ஆனால் அவரும் விஷ்ணுவர் த கௌசிக மனனராக கேகய நாட்டை ஆண்டவர்தான் ஆகையால் நாட்டை ஆளும்

    பதிலளிநீக்கு