15.04.2014 மாலை 3 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் ப்ரெஸ்க்ளப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை.
தமிழக வரலாற்றில்
224
கலைஞர்கள், கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் ஒன்று கூடி
இப்படி ஒரே குரலில் ஒரு வேண்டுகோளை
தமிழ் மக்கள் மத்தியில் ஒலித்தது
சமீப காலங்களில் இதுவே முதல் முறை.....
இனி அவர்களின் அறிக்கை -
பா.ஜ.க. கூட்டணியை நிராகரிப்பீர்
200க்கு மேற்பட்ட கல்வியாளர்கள்-கலைஞர்கள்-எழுத்தாளர்கள்
200க்கு மேற்பட்ட கல்வியாளர்கள்-கலைஞர்கள்-எழுத்தாளர்கள்
தமிழக
மக்களுக்கு விடுத்துள்ள தேர்தல் வேண்டுகோள்
சென்னை, 16-04 - 2014
இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாதஅளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ் செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார்.
இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாதஅளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ் செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார்.
எழுத்தாளர் அழகிய பெரியவன் |
இந்த ஆபத்தை எதிர்த்து இன்று இந்தியத் துணைக்கண்டம்முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், இதழாளர்கள்மற்றும் கலைஞர்கள் களம் இறங்கியுள்ளனர், அவர்களின் குரலுடன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களாகிய நாங்களும் இணைந்துகொள்கிறோம்.
தமிழகத்தைப் பொறுத்த மட்டில் ஆதிக்க சாதிகளின் கூட்டணியை உருவாக்கிச் செயல்படும் ஒரு கட்சியும் இக் கூட்டணியில் இணைந்திருப்பது இந்த ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது. மதச்சார்பின்மையை முன் வைத்து உருவான திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் இரு கட்சிகள் மோடியை முன்நிறுத்துவதில் துணை போகின்றன.
இந்த ஆபத்து குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து, இதைத்தடுப்பதற்கான எல்லவிதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு, நமது மதச் சார்பற்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென பொறுப்புள்ள குடிமக்களையும், அமைப்புக்களையும் நாங்கள்வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
பா.ஜ.கவால் தலைமைதாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கைப்பற்ற முனையும் இந்தக் கார்பொரேட் - மதவாத -சாதிய சக்திகளின் முயற்சியை வீழ்த்துமாறு தமிழகவாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மதச் சார்பர்ற, ஜனநாயகசக்திகளை ஆதரித்து வாக்களிக்க வேண்டுகிறோம்.
“Never before in post-independence India have witnessed political forces, which are a front for an organisation committed to create a Hindu Rashtra, strong bid for power in the coming elections. These forces are led by a person who presided over a pogrom against Muslims in Gujarat in 2002 and has never accepted his role in that ghastly incident. And they continue to get support and the backing from the most powerful corporate houses in the country. The prospect of this alliance of corporate capital and communal forces coming to power constitutes a palpable threat to the future of our secular democracy.
"Writers, artists and intellectuals all over India are deeply concerned with this danger and are appealing to the electorate to take note of this danger. We, the Tamil writers and artists are also joining our hands with them.
" We are more concerned about the situation in Tamilnadu as the casteist forces have joined hands with these communalist forces. Two other parties which claim the secular legacy of the Dravidian parties are also in that coalition.
“We urge all responsible individuals and political formations to ponder over the situation and urgently take necessary steps to defend our secular democracy. We appeal to the electorate to foil this corporate-communal alliance’s bid for power by voting against the BJP-led NDA."
“Never before in post-independence India have witnessed political forces, which are a front for an organisation committed to create a Hindu Rashtra, strong bid for power in the coming elections. These forces are led by a person who presided over a pogrom against Muslims in Gujarat in 2002 and has never accepted his role in that ghastly incident. And they continue to get support and the backing from the most powerful corporate houses in the country. The prospect of this alliance of corporate capital and communal forces coming to power constitutes a palpable threat to the future of our secular democracy.
"Writers, artists and intellectuals all over India are deeply concerned with this danger and are appealing to the electorate to take note of this danger. We, the Tamil writers and artists are also joining our hands with them.
" We are more concerned about the situation in Tamilnadu as the casteist forces have joined hands with these communalist forces. Two other parties which claim the secular legacy of the Dravidian parties are also in that coalition.
“We urge all responsible individuals and political formations to ponder over the situation and urgently take necessary steps to defend our secular democracy. We appeal to the electorate to foil this corporate-communal alliance’s bid for power by voting against the BJP-led NDA."
கையெழுத்திட்டுள்ள
எழுத்தாளர்கள், கலைஞர்கள்
கி.இராஜநாராயணன், மூத்த எழுத்தாளர், புதுவை,
பிரபஞ்சன்,சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர், சென்னை,
இந்திராபார்த்தசாரதி, மூத்த தமிழ் எழுத்தாளர். டெல்லி,
முனைவர்தொ.பரமசிவன், எழுத்தாளர்/ வரலாற்றறிஞர், திருநெல்வேலி,
கவிக்கோ அப்துல் ரஹ்மான், மூத்த தமிழ்க் கவிஞர், சென்னை,
விஜய்சங்கர், ஆசிரியர், ஃப்ரன்ட்லைன், சென்னை,
வெங்கடேஷ்சக்கரவர்த்தி, திரைக் கோட்பாட்டாளர், ஹைதராபாத்.
கலாப்ரியா,மூத்த கவிஞர், திருநெல்வேலி,
அப்பண்ணசாமி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
வெளி ரங்கராஜன், எழுத்தாளர்/இதழாசிரியர்,சென்னை,
ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், த. மு.எ.க.ச, பத்தமடை,
எஸ்.வி.இராஜதுரை, மூத்த எழுத்தாளர், கரூர்,
மருத்துவர் ருத்ரன்,எழுத்தாளர், சென்னை,
எஸ்,ராமகிருஷ்ணன், எழுத்தாளர், சென்னை,
வஹீதையா கான்ஸ்டான்டின், எழுத்தாளர், நாகர்கோவில்,
அம்பை,எழுத்தாளர், டெல்லி,
வண்ணதாசன் (கல்யாண்ஜி), எழுத்தாளர்,திருநெல்வேலி,
வ.கீதா, எழுத்தாளர், சென்னை,
கோணங்கி,எழுத்தாளர், கோவில்பட்டி,
முனைவர் ஆனந்தி, பேராசிரியர், சென்னை,
முனைவர் ஆனந்தி, பேராசிரியர், சென்னை,
அ.மார்க்ஸ், எழுத்தாளர்,சென்னை,
சந்திரா, எழுத்தாளர், சென்னை,
கவின்மலர், எழுத்தாளர்,சென்னை,
கோ.சுகுமாரன், மனித உரிமைப் போராளி/எழுத்தாளர்,புதுவை,
ராமானுஜம், எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர், சென்னை,
தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர், சென்னை,
யூமா வாசுகி,எழுத்தாளர், சென்னை,
முனைவர் சாதிக், கவிஞர்/முன்னாள்துணைவேந்தர், சென்னை,
ஞாநி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
துரைராஜ், மூத்த இதழாளர், திருச்சி,
வாசுதேவன், எழுத்தாளர்/விமர்சகர், சென்னை,
முனைவர் ராஜன் குறை, எழுத்தாளர், டெல்லி,
யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர், லண்டன்,
ஓவியர் விஸ்வம்,சென்னை,
ஓவியர் நடேஷ், சென்னை,
பா.ரஞ்சித், திரைப்படஇயக்குனர், சென்னை,
அமீர், திரைப்பட இயக்குனர், சென்னை,
வெற்றிமாறன், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர்,சென்னை,
பொ.வேல்சாமி, எழுத்தாளர்/தமிழறிஞர், நாமக்கல்,
வி.எம்.எஸ்.சுபகுணராஜன், எழுத்தாளர், திரை இதழாசிரியர்,சென்னை,
சு.வெங்கடேசன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ்எழுத்தளர், மதுரை,
பாரதி தம்பி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
கிராமியன், எழுத்தாளர்/விமர்சகர், திருச்சி,
கிராமியன், எழுத்தாளர்/விமர்சகர், திருச்சி,
ஷோபாசக்தி,எழுத்தாளர், பாரிஸ்,
முகம்மது சிப்லி, இதழாளர், சென்னை,
அஜயன்பாலா. எழுத்தாளர், சென்னை,
அசதா, எழுத்தாளர், விழுப்புரம்,
முனைவர் வீ.அரசு, எழுத்தாளர்/பேராசிரியர், சென்னை,
பாஸ்கர்சக்தி, எழுத்தாளர், சென்னை,
முருகேச பாண்டியன், எழுத்தாளர்/விமர்சகர், மதுரை,
முருக பூபதி, அரங்க இயக்குனர், கோவில்பட்டி,
பிரளயன், அரங்க இயக்குநர், சென்னை,
சுபா தேசிகன், இதழாளர்/எழுத்தாளர், சென்னை,
சி.மோகன், எழுத்தாளர்/சிறு பத்திரிக்கைஎழுத்தாளர், சென்னை,
தளவாய் சுந்தரம், எழுத்தாளர், சென்னை,
சங்கர ராம சுப்பிரமணியன், எழுத்தாளர்/ இதழாளர், சென்னை,
மீனா,எழுத்தாளர், திருவண்ணாமலை,
பிருந்தா, எழுத்தாளர், சென்னை,
நேசமித்திரன், கவிஞர்/இதழாசிரியர், நைஜீரியா,
ச.கோபாலகிருஷ்ணன், இதழாளர், சென்னை,
ஜெயராணி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
ஜெயராணி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
தீஸ்மாஸ் டீ சில்வா,எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
லஷ்மி சரவண குமார், எழுத்தாளர்,சென்னை,
சிபி செல்வன் எழுத்தாளர், சேலம்,
அழகிய பெரியவன்எழுத்தாளர், வேலூர்,
தேவிபாரதி, எழுத்தாளர், சென்னை,
கவிதாசொர்ணவல்லி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
மனுஷ்யபுத்திரன்,கவிஞர்,சென்னை,
சுசீந்திரன் நடராசா, எழுத்தாளர், பெர்லின்.
ஏ.மெஹபூப் பாஷா, மனித உரிமைச் செய்தி இதழாசிரியர், மதுரை,
ரியாஸ் குரானா, எழுத்தாளர்/விமர்சகர், இலங்கை,
ஆர்.பி.அமுதன்,திரைப்பட இயக்குநர், சென்னை,
பிரகதீஸ்வரன், நாடகக் கலைஞர்/பதிப்பாளர், புதுகை,
சுகுணா திவாகர், எழுத்தாளர்/கவிஞர், சென்னை,
விஷ்ணுபுரம் சரவணன், கவிஞர், சென்னை,
நீலகண்டன், பதிப்பாளர்,சென்னை.
பா.ம.மகிழ்நன், ஊடகவியலாளர், சென்னை,
இரா.தெ.முத்து, எழுத்தாளர், சென்னை,
இரா.தெ.முத்து, எழுத்தாளர், சென்னை,
ப,கு,ராஜன், நூலாசிரியர்,சென்னை,
அருள் எழிலன், எழுத்தாளர், சென்னை,
ஜீவ சுந்தரி,எழுத்தாளர், ன்னை,
அபு சாலிஹ், இதழாசிரியர். சென்னை,
ஷாஜஹான், எழுத்தாளர், டெல்லி,
ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்படஇயக்குநர், சென்னை,
தி.கண்ணன், எழுத்தாளர், ஶ்ரீரங்கம்,
வினிசர்ப்பனா, இதழாளர், சென்னை,
புதுஎழுத்து மனோன்மணி,இதழாசிரியர், வேரிப்பட்டிணம்,
ஜமாலன், எழுத்தாளர்/விமர்சகர்,ஷார்ஜா,
கமலக்கண்ணன், திரைப்பட இயக்குனர், கோவை,
ஆத்மார்த்தி, கவிஞர், மதுரை,
ஆதவன் தீஷண்யா, எழுத்தாளர்/இதழாசிரியர், ஓசூர்,
தேனுகா, ஓவிய விமர்சகர், கும்பகோணம்,
பேரா.பா.கல்விமணி, கல்வியாளர், திண்டிவனம்,
பேரா. ப.சிவகுமார்,கல்வியாளர், சென்னை,
பேரா. மு.திருமாவளவன், கல்வியாளர்,சென்னை,
ஜாபர் சாதில் பாகவி, இதழாசிரியர், சென்னை,
ரஜினி,மனித உரிமைப் போராளி, மதுரை,
குட்டி ரேவதி, கவிஞர்,சென்னை,
அருண், திரைப்பட இயக்கம், சென்னை,
இளங்கோகிருஷ்ணன், கவிஞர், சுதிர் செந்தில், இதழாசிரியர், திருச்சி,
ஐயப்பமாதவன், கவிஞர், சென்னை,
தாமிரா திரைப்பட இயக்குனர்,
தாமிரா திரைப்பட இயக்குனர்,
வ.கீரா திரைப்பட இயக்குனர்
நக்கீரன்,கவிஞர், நன்னிலம்,
லிபி ஆரண்யா, கவிஞர், மதுரை,
குமார செல்வா,எழுத்தாளர், மார்த்தாண்டம்,
ஜே.ஆர்.வி.எட்வர்ட், எழுத்தாளர்,நாகர்கோவில்,
இசை, கவிஞர், கோவை
மகுடேஸ்வரன், கவிஞர்,திருப்பூர்,
மேகவண்ணன், எழுத்தாளர், இராமேஸ்வரம்,
றஞ்சி,எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்த்,
அன்புச் செல்வன், கவிஞர்,மதுரை,
பவுத்த அய்யனார், எழுத்தாளர்/பதிப்பாளர், சென்னை,
முத்துமீனாள், எழுத்தாளர், சென்னை,
யாழன் ஆதி, கவிஞர்,ஆம்பூர்,
தை.கந்தசாமி, கவிஞர், திருத்துறைபூண்டி,
முனைவர்ரவிச்சந்திரன்
ஶ்ரீராமச்சந்திரன், எழுத்தாளர், கோவை,
நிஷா மன்சூர்,கவிஞர், மேட்டுப்பாளையம்,
அருண், திரைப்பட இயக்கம்,சென்னை,
சே.கோச்சடை, எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர்,காரைக்குடி,
முனைவர் ஜீவரத்தினம், ஆய்வாளர், ரெட்டைவயல்,
சி.சரவண கார்த்திகேயன், எழுத்தாளர், பெங்களூரு,
போஸ் பிரபு(பிரேமா), கவிஞர், சிவகாசி,
யுவ கிருஷ்ணா, பத்திரிகையாளர்,மடிப்பாக்கம்,
லீனா மணிமேகலை, கவிஞர், சென்னை,
சா.விஜயலக்ஷ்மி, கவிஞர், சென்னை,
சா.விஜயலக்ஷ்மி, கவிஞர், சென்னை,
நந்தகுமார், எழுத்தாளர், கடார்,
பா.ரவீந்திரன், எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்த்,
தளவாய், எழுத்தாளர்/இதழாளர், சென்னை,
பூ.இராமு, திரைக் கலைஞர், சென்னை,
கருப்புகருணா, குறும்பட இயக்குநர், திருவண்ணாமலை,
சிவக்குமார், திரைஆய்வு எழுத்தாளர், சென்னை,
உமர் ஃபாரூக், எழுத்தாளர், கம்பம்,
தமிழ்நதி, கவிஞர், கனடா,
சுகன் கனகசபை, கவிஞர், பாரிஸ்,
அ.வெற்றிவேல், எழுத்தாளர், சவூதி அரேபியா,
கார்டூனிஸ்ட் பாலா,சென்னை,
அதிஷா, இதழாளர், சென்னை,
வெய்யில், கவிஞர்,காரைக்கால்,
நடராஜன் கிருஷ்ணன், எழுத்தாளர், குன்றத்தூர்,
நந்தகோபால், இதழ் ஆசிரியர், சென்னை,
எஸ்.காமராஜ், எழுத்தாளர்,சாத்தூர்,
ஜபருல்லா ரஹ்மானி, எழுத்தாளர், சிங்கப்பூர்,
நீரைமகேந்திரன், இதழாளர், சென்னை,
கவுதம சக்திவேல், மனிதஉரிமைப் போராளி, பொள்ளாச்சி,
நரன், கவிஞர், சென்னை,
கவிதா முரளீதரன், இதழாளர், சென்னை,
கவிதா முரளீதரன், இதழாளர், சென்னை,
முனைவர் பெருந்தேவி,எழுத்தாளர், நியூயார்க்,
விஷ்ணுராம், ஊடகவியலாளர், சென்னை,
ராஜவேலு, லேபர் நியூஸ் நிர்வாகி, சென்னை,
சிவகுமார்,எழுத்தாளர்/பேராசிரியர், சென்னை,
மாரிச்செல்வன், எழுத்தாளர்,சென்னை,
முகம்மது ஆசிக், கவிஞர், வல்லம்,
இரா.ஜவஹர், மூத்தஇதழாளர், சென்னை,
டி.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர், சென்னை,
ஃபைஸ் ஃபைசல், இதழாசிரியர்,சென்னை,
மு.சிவகுருநாதன், எழுத்தாளர், திருவாரூர்,
டாக்டர்ஹிமானா சையத், எழுத்தாளர், சென்னை,
பாரதிநாதன்,நாவலாசிரியர், சென்னை,
இரா,வினோத், ஊடகவியலாளர்,பெங்களூரு,
இளவேனில், கவிஞர், பள்ளிப்பட்டி,
சக்தி ஜோதி,கவிஞர், மதுரை,
எஸ்.ஷங்கர். இதழாளர், மடிப்பாக்கம்,
ஶ்ரீ குமார்,விமர்சகர், சென்னை,
கார்த்திகைப் பாண்டியன், எழுத்தாளர், மதுரை.
தேவரசிகன், கவிஞர், கும்பகோணம்,
ஜி.சரவணன், எழுத்தாளர்,அம்மாசத்திரம்,
சிராஜுதீன், பதிப்பாளர், சென்னை,
பிரேமா ரேவதி,எழுத்தாளர், சென்னை,
கு.ப, விமர்சகர், மதுரை,
ஜி.ஶ்ரீதரன்,எழுத்தாளர், ஓசூர்,
அத்தாவுல்லா, எழுத்தாளர், நாகர்கோவில்,
ஆளூர்ஷாநவாஸ், எழுத்தாளர், சென்னை,
ஆர்,முருகப்பன், நூலாசிரியர்,திண்டிவனம்,
மா.ச.மதிவாணன், ஊடகத்துறை, சென்னை,
சாம்ராஜ்,கவிஞர், மதுரை,
யவனிகா ஸ்ரீராம், கவிஞர், திண்டுக்கல்,
செல்மாபிரியதர்ஷன், கவிஞர், திண்டுக்கல்,
அ.கரீம், எழுத்தாளர், கோவை,
அறிவழகன், எழுத்தாளர், சேலம்,
ம.மதிவண்ணன், கவிஞர்,பெருந்துறை,
குமார் அம்பாயிரம், எழுத்தாளர், திருவண்ணாமலை,
பிரியாபாபு, எழுத்தாளர், சென்னை,
முனைவர் தி.பரமேஸ்வரி, கவிஞர்/பதிப்பாசிரியர், காஞ்சீபுரம், பவாசெல்லத்துரை, எழுத்தாளர், திருவண்ணாமலை,
முனைவர் தி.பரமேஸ்வரி, கவிஞர்/பதிப்பாசிரியர், காஞ்சீபுரம், பவாசெல்லத்துரை, எழுத்தாளர், திருவண்ணாமலை,
கே.வி.சைலஜா,எழுத்தாளர்/பதிப்பாளர், திருவண்ணாமலை,
கே.வி. ஜெயஸ்ரீ,எழுத்தாளர், திருவண்ணாமலை,
எழுத்தாளர் அ.மார்க்ஸ் |
திரைக்கலைஞர் ரோகிணி |
எழுத்தாளர் லிவிங்ஸ்மைல் திவ்யா |
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் |
தமயந்தி, எழுத்தாளர், செனனை,
நவீன், திரைப்பட இடக்குனர், சென்னை,
பிரின்ஸ் என்னாரெசுபெரியார், திரைப்பட இயக்குனர், சென்னை,
பாலசுப்பிரமணியம்பொன்ராஜ், எழுத்தாளர், சென்னை,
நிழல் திருநாவுக்கரசு, எழுத்தாளர்/இதழாசிரியர், சென்னை,
ராஜ்முருகன், திரைப்பட இயக்குனர்,சென்னை,
புகழேந்தி, ஓவியர், சென்னை,
ட்ராட்ஸ்கி மருது, ஓவியர்,சென்னை,
ரோகிணி, நடிகை, சென்னை,
ஸ்டாலின் ராஜாங்கம்,எழுத்தாளர், மதுரை,
கரிகாலன், கவிஞர், விருதாசலம்,தமிழ்ச்செல்வி,ஏழுத்தாளர்,விருத்தாசலம்,
அ,வெண்ணிலா, கவிஞர்,வந்தவாசி,
பாரதி கிருஷ்ணகுமார், இயக்குனர், சென்னை,
யாழினிமுனுசாமி, எழுத்தாளர், சென்னை,
பி.ஜி. சரவணன், கவிஞர், மதுரை,
மீனா கந்தசாமி, எழுத்தாளர், சென்னை,
கோவி லெனின்,பத்திரிகையாளர் , சென்னை,
புதிய மாதவி, எழுத்தாளர் மும்பை,
கண்மணி ராஜா முகமது, திரைத்துறை, சென்னை,
காலபைரவன்,எழுத்தாளர், விழுப்புரம்,
சீனு இராமசாமி, திரைப்பட இயக்குனர்,சென்னை,
நாச்சியாள் காந்தி, ஊடகவியலாளர், சென்னை,
வெற்றிவேல், ஆவணப்பட இயக்குநர், சென்னை,
நறுமுகை தேவி,கவிஞர், கோவை,
ஏகாதேசி, பாடலாசிரியர், சென்னை,
ஶ்ரீஜித்,அரங்கக் கலைஞர், சென்னை.
லிவிங்ஸ்ஐல் வித்யா, அரங்கக்கலைஞர், சென்னை,
மு.வி.நந்தினி, இதழாளர், சென்னை,
------------------------------------------------------------------------------------------------------------
சூப்பர் ஸ்டாரை இவரே போய்ச் சந்தித்தாலும் சரி...
சூப்பர் தளபதி இவரை வந்து சந்தித்தாலும் சரி...
“உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே!”
வலைப்பக்கம் - http://ramaniecuvellore.blogspot.in/2014/04/blog-post_16.html
அருமை!! நல்லதொரு முயற்சி..மதச்சார்பற்ற ஆட்சி அமைய..
பதிலளிநீக்குமுன் எப்போதும் இல்லாத அளவு இப்பொழுது பயம் வந்திருக்கிறது எனக்கு..எப்போதோ நடந்த கலவரத்திற்கு இப்பொழுது என்ன என்று கேட்கும் படித்த மக்களைப் பார்க்கும்பொழுதும் கேட்கும்பொழுதும்..அவர்கள் மனதிலும் மதவெறியே உள்ளது என்று அறியும்போதும்..
பகிர்விற்கு நன்றி ஐயா.
நன்றி சகோதரி. சிலவற்றை நாமே மறக்க நினைத்தாலும் மறக்க முடிவதில்லையே? அந்தப் பட்டியலில் 2002குஜராத் கலவரம் அதைக் கலவரம் என்பதுகூடத் தவறு. திட்டமிட்ட கலகம். அதை எப்படி மறப்பது? நலலதே நடக்க இத் தவறுகளை இனியும் செய்ய நினைக்காத நிலை வேண்டும். நன்றி சகோதரி.
நீக்குகோத்ரா விற்கு பின் எந்த படைப்பாளியும்
பதிலளிநீக்குமோடியை ஆதரித்தால் தானே விந்தை?!
நல்ல விஷயம் அண்ணா. ஊர் கூடி தேரிழுப்போம் !
ஆமாம் மைதிலி, என்னிடம் யாரும் அணுகவில்லை, கேட்டிருந்தால் இன்னும் பல நூறுபேரிடம் ஒப்பம் பெற்று அனுப்பியிருக்க முடியும்ல? எனினும் நல்லதே நடக்கட்டும்.
நீக்குசிவப்பு வண்ணப் பின்னணியில்
பதிலளிநீக்குதகவல் இருப்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது
யாருக்கு வோட்டளிக்க வேண்டாம் என
ஒற்றுமையாகச் சொல்லும் இவர்களிடம்
யாருக்கு ஓட்டளிக்கலாம் எனக் கேட்டால்
சபை நிச்சயம் சிதறிவிடும்
முதலில் யார்-யாருக்கு வேண்டாம் என்பதை முடிவுசெய்து கொண்டால், பிறகு அவரவர் விருப்பத்திற்கு புரிதலுக்குத் தக வாக்களிக்கலாமே? அதுதானே ஜனநாயகம்? இவர்கள் எல்லாரும் சிவப்புப் பின்னணி (?) உள்ளவர் அல்லர். இந்திரா பார்த்தசாரதியை உங்களுக்குத் தெரியாதா? அப்துல்ரகுமான், கி.ரா., ரோகிணி, கவிதா முரளிதரன்? எல்லாருமா கம்யூனிஸ்ட்?
நீக்குரமணி அய்யா நீங்களுமா அவசரப்படுகிறீர்கள்? ஆனால், ஒன்று தெரிகிறது அய்யா, நியாயத்தைப் பேசினால், மதச்சார்பின்மை பேசினால், அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று ஏன் எல்லாரும் நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை அய்யா. எனினும் தங்களின் கருத்திற்கு நன்றியும் வணக்கமும்
வணக்கம்,
பதிலளிநீக்குமதச்சார்பின்மை பற்றிப் பெசும் அனைவருக்கும் எனது பணிவான கேள்வி.
1) தனது மதத்தினர் அனைவரும் யாருக்கு ஒட்டளிக்க வேண்டும் என்பதைக் காலம் காலமாக மசூதிகளும் சர்ச்சுகளும் முடிவு செய்கின்றன என்பதை மறுக்கமுடியுமா.
2) இதே போன்று தனது மதத்தின் ஓட்டுவங்கியைக் காட்டி அரசைப் பணியவைப்பது சரியா/தவறா. (ஒரு மதம் சார்ந்த கட்சித் தலைவர் .... பற்றி முதல்வர் பேசாவிட்டால் எங்கள் மதத்தினரின் ஓட்டு கிடைக்காது என்று கூறியது தற்போதைய செய்தி)
3) 2000 பேர் கொல்லப்பட்ட துயரமான நிகழ்வுக்கு அடிப்படைக் காரணமான 60 பேர் சிலரால் எரித்துக் கொல்லப்பட்டது பற்றி இவர்களில் ஒருவராவது பேசாதது ஏன். அப்படிச் செய்தவர்களுக்கு அத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது. (அவர்கள் உள்ளூர்க் காரர்கள் என்பது முதலில் வந்த செய்தி)
4) இந்துக்கள் செய்தால் அது தீவிரவாதம், மற்றவர்கள் செய்தால் அது வெளிநாட்டினரின் ஊடுறுவல் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா. இருப்பினும் அவர்கள் இருக்க இடம் கொடுத்தவர்கள் யார்.
5) அமைதிப் பூங்காவாக இருந்த்த தென்னிந்தியாவில் ஸிமி போன மத அமைப்புகள் வந்ததற்குக் காரணம் என்ன.
6) ஒரு சிறிய தகராறு என்றாலும் கூட்டம் கூட்டமாக ஒரு மதத்தினர் வருவது வட இந்தியாவில் மிகச் சாதரணமான விசயம். பின்பு ஏற்படும் வன்முறைகளை இருவரும் செய்திருந்தாலும் எல்லாப் பழியையும் மற்ற மதத்தினரின் போட்டுவிட்டு ஓட்டைக் காட்டி அரசை மிரட்டுவதுதான் நடந்திருக்கிறது.
7) இந்துத்துவம் பற்றிப் பேசும் எவரும் மதத்தின் பெயரால் உள்ள மற்ற கட்சிகளைப் பற்றி வாய் திறக்காதது ஏன்.
நமது நாட்டில் மதச் சார்பின்மை பற்றிப் பேசுவது கற்றவர்கள் போடும் வேசம். எல்லோரும் விரும்புவதும் மதச் சார்பின்மைதான். இருப்பினும் உண்மைகள் ஓட்டு வங்கி அரசியலால் ஒருதலைப்பட்சமாக மூடி மறைக்கப் படுகின்றன.
நன்றி,
கோபாலன்
வாங்க கோபாலன் வணக்கம்.
நீக்குஎனக்குத் தெரிந்த பதில்கள் இவை, இவற்றை நீங்கள் ஏற்கமாட்டீர்கள் எ்ன்பதும் எனக்குத் தெரிந்ததுதான், எனினும் இதைப்படிக்கும் என் நண்பர்களுக்காக இதை வெளியிடுகிறேன் -
(1)மறுக்கமுடியாதுதான். மதத்தலைவர்களின் வேலையே அதுதானே? -இந்து மதத்தையும் சேர்த்து.
(2)தவறுதான். முன் பதிலின் பின் ஒட்டு மீண்டும்.
(3)60பேர் கொல்லப்பட்டது அயோக்கியத்தனம் என்றால், அதற்குப் பதிலடியாக, 2000பேர் கொல்லப்படுவது யோக்கியமா?
(4)மத-அடிப்படைவாதம், தீவிர வாதத்தை யார்செய்தாலும் அது தடுக்கப்படவேண்டும் - யார் செ்ய்தாலும்.
(5)400ஆண்டுகளாக இருந்த பாபர் மசூதியில் ராஜிவ் காலத்தில் திருட்டுத் தனமாக இராமர் சிலையை கொண்டு வைத்துவிட்டு, அது இராமர் பிறந்த இடம் என்று அடம் பிடித்து, கோவில் கட்ட இடம் பிடிக்கும் மத-அடிப்படைவாதிகள் தான் காரணம்.
(6) அரசை மிரட்டுவதும், தனக்கான அரசைக் கொண்டுவரத் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குவதையும் யார் செய்வது? அப்படி யார் செய்தாலும் அது இந்தியாவுக்குக் கேடுதானே?
(7)சிறுபான்மையின் தவறுகள் சிறிய விளைவாகவும், பெரும்பான்மையின் தவறுகள் பெரும் விளைவுகளையும் உருவாக்கும் எனும் சாதாரணமான கணக்குத்தான்.
இப்போது எனது கேள்வி - சாமி கும்பிடுகிறவர்கள்தான் இன்னொரு சாமி கோவிலை இடிக்கிறார்கள். பேசாமல் எங்களைப் போல சாமியே வேண்டாமென்று இருப்பவர்கள் எந்தக் கோவிலையும் இடித்ததில்லையே? பேசாமல் எல்லாருமே சாமி வேண்டாமென்றால் சண்டையே இல்லை் அல்லவா? “கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும்பேச்சு, பலர் கஞ்சிக்கில்லாதார் வறுமைபோக்கவே கருத வேண்டியதை மறந்தாச்சு”-ப.கோ.க.
தங்களின் விரிவான கருத்திற்கு நன்றி. விவாதம் தொடர நான் தயார், என் கடைசிக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால்...
இந்த மாதிரி பொறுமையான விளக்கங்களை மதத்தை அரசியலுக்கு பயன்படுத்துவோரிடம் எதிர்பார்க்கமுடியாது. அருமையான விளக்கம் !!!
நீக்கு,
நீக்குநா.முத்துநிலவன்//
என் கடைசிக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால்..//
மரத்திற்கு பிடி வேண்டியதில்லை
கொடிக்கு வேண்டியதாகத்தான் இருக்கிறது
சராசரி நிலை கடந்த அறிவு ஜீவிகளுக்கு
மதம் கடவுள் தேவை இல்லைதான்
சராசரிகளுக்கு அந்த நிலை கடக்கும் வரை
முட்டாள்தனமானதாகினும் ஒரு நம்பிக்கை
ஏற்படுத்த கடவுள் நம்பிக்கை தேவையாகத்தான்படுகிறது
அதுவும் பகுத்தறிவுவாதிகள் மனைவியையும்
மருமகளையும் கோவிலாக அனுப்பிக் கொண்டிருக்கும்
இந்தக் காலச் சூழலில்...
மதத்தை அரசியலில் கலந்த வரலாறு, இந்தியா முழுவதும் உண்டு. அதன் தொடர்ச்சிதான் இன்றைய மதவெறிக் கட்சிகள். அவற்றைத் தனிமைப் படுத்த அனைத்து மதங்களின் சாதாரண மக்கள் யோசித்து -உணர்ச்சி வசப்படாமல் - செயல்படவேண்டும் அதை ஊடகங்களைக் கையில வைத்திருப்பவர் விரும்புவதில்லை. ஏதாவது பதற்றம் இருந்தால்தான் உணர்ச்சிகளைத் தூண்டும் எதையாவது செய்தால்தான் அறிவு பிறழும் அவர்கள் நினைத்தது நடக்கும். இதற்கு மக்கள் இரையாகாமல் பார்க்க வேண்டியது மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நம்போன்றவர்களின் கடமை பெரிதல்லவா? நன்றி நண்பா.
நீக்குரமணி அய்யாவுக்கு வணக்கம். திரு சோமசுந்தரம் அவர்களின் பின்னூட்டத்திற்கு இட்ட பதில் முதலில் வந்துவிட்டது. இப்போது உங்களுக்கு எனது நன்றியுடன் - “அதுவும் பகுத்தறிவுவாதிகள் மனைவியையும்
நீக்குமருமகளையும் கோவிலாக அனுப்பிக் கொண்டிருக்கும்
இந்தக் காலச் சூழலில்“ - இது உங்கள் கிண்டல் என்பதை நான் ஏற்கிறேன், அவர்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்குபவன் அல்லேன். அவர்கள் உண்மையான பகுத்தறிவு வாதிகள் அல்லர் என்பதோடு, மனைவியை மருமகளை அவர்களின் ஜனநாயகத்தை மதிப்பவர் என்னும் பெயரோடு, அவர்களுக்கு விளக்க அறிவோ, பொறுமையோ, நடைமுறை உண்மையோ இல்லாதவர்கள் அவர்களை நான் பெரிதாக எண்ணுவதில்லை மற்றபடி “சராசரிகளுக்கு அந்த நிலை கடக்கும் வரை
முட்டாள்தனமானதாகினும் ஒரு நம்பிக்கை
ஏற்படுத்த கடவுள் நம்பிக்கை தேவையாகத்தான்படுகிறது“ என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அவர்களிடமதான் இன்னும் கூடுதல் பாசத்தோடும் உண்மையான அறிவோடும் செயல்பட்டாக வேண்டும். இன்னும் எத்தனை காலம்தான்..? மற்றபடி எனது கடைசிக் கேள்வி அப்படியே நிற்கிறதே? என்னையும் ஒருபொருட்டாக நினைத்துக் கருத்திடடமைக்கு நன்றியும் வணக்கமும் ரமணி அய்யா.
நான் அவசரப்படவில்லை.
பதிலளிநீக்குமதத்தின் பெயரையே
கட்சியின் பெயராகக் கொண்ட ஒரு கட்சியை
உடன் வைத்துக் கொண்டு மதசார்பின்மை குறித்துப்
பேசுகிற கட்சியை எல்லாம் விமர்சிக்காமல்
பயந்து கொண்டாவது மதத்தின் பெயரை
வெளிக்காட்டாமல் இருக்கிற கட்சியை விமர்சிப்பது
எந்தவிதத்தில் சரி என எனக்குப் புரியவில்லை
அதற்கு எழுத்தாளர்கள் என்கிற பட்டயம் வேறு
என நினைக்கையில் கொஞ்சம் மனதிற்கு
சங்கடமாகத்தான் உள்ளது
நியாயம் பேசுபவன் கம்னியூஸ்ட் என்கிற
எண்ணம் எல்லாம் மாறி நியாயம் போல்
பேசுபவன் கம்னியூஸ்ட் என்கிற எண்ணம்
மக்கள் மனதில் தோன்றி வெகு காலம் ஆகிவிட்டது
அதை தேர்தல் முடிவு மிகச் சரியாகக் காட்டும்
உடன் மனம் திறந்த பதிலுக்கு மனமார்ந்த நன்றி
“நியாயம் பேசுபவன் கம்னியூஸ்ட் என்கிற
நீக்குஎண்ணம் எல்லாம் மாறி நியாயம் போல்
பேசுபவன் கம்னியூஸ்ட் என்கிற எண்ணம்
மக்கள் மனதில் தோன்றி வெகு காலம் ஆகிவிட்டது“
எனக்கு கம்யூனிஸ்ட்களைப் பிடிக்கும் கம்யூனிசம்தான் பிடிக்காது என்று எழுதிவரும் திரு சோ அவர்களின் தாக்கமா இது? அவர்களும் மனிதர்கள்தான் அய்யா. அவர்களிடமும் தவறு இருக்கிறது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுதான் செயல்படுகிறார்கள்.2002ஐ நியாயப்படுத்தி 2014இலும் செயல்பட உற்சாகமூட்டுகிறவர்களைப்பற்றி நீங்களும் பேசமாட்டீர்கள்! தேர்தல் வெற்றிகள் நல்லவர்களை அடையாளம் காட்டாது. மூவரும் ஒருவரல்ல என்றாலும், காமராசரும், இந்திராவும், ஜெயலலிதாவும் தோல்வியுற்றவர்கள் தான் என்பதை நீங்கள் மறந்தாலும் சாதாரண மக்கள்தான் இதை சாதித்தவர்கள் எனவே தேர்தலுக்குப் பின்னரான செயல்களும் முக்கியம். தங்களின் கருத்தில் நான் முரண்பட்டாலும், தாங்கள் மதித்துப் பின்னூட்டமிட்டதற்கு என் வணக்கங்கள் அய்யா. நன்றி