நோட்டா - சின்னம் - இதுதான்

நோட்டா சின்னம் தெரியுமா எனும் கேள்வியைக் கேட்டதும் நமது வாசகர்  பலர் எஸ்ஆனது இருக்கட்டும், தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளின் தலைவர்களே “எஸ்“ஆன விவரத்தை ஆனந்தவிகடன் வாரஇதழ் வெளியிட்டிருக்கிறது... 

அதை அப்படியே ஓர் எழுத்தையும் மாற்றாமல் தருகிறேன்.
(நம் தலைவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதால் அவர்களின் பெயருக்கு முன் திருமிகு என்பதை மட்டும் சேர்த்தேன். 


திருமிகு பொன்.ராதாகிருஷ்ணன்      (திருமிகு பொன்னார்)

(பா.ஜ.க.தமிழகத்தலைவர்)
“நேத்துத்தானே தேர்தல் ஆணையம் அறிவிச்சாங்க. என்கிட்ட கூடச் 
சொன்னாங்களே.. நேரம்பாத்து ஞாபகம் வரமாட்டேங்குதே..“ என்றவர் நீண்ட யோசனைக்குப் பிறகு, “தேர்தல் பரபரப்புல நியூஸ் பேப்பரும் படிக்கலப்பா“

திருமிகு சுதீஷ்
திருமிகுசுதீஷ்
(தேமுதிக மாநில இளைஞர் அணிச்செயலர்)
“தம்ஸ் அப் மாதிரி தம்ஸ்-டவுண் 
விரல்சின்னம்தான் நோட்டா சின்னம் 
சரியா?

திருமிகுவேல்முருகன்

(தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)
திருமிகுவேல்முருகன்
“இந்தியா முழுக்கவே நோட்டாவுக்கு ஒரே சின்னம்தான். நோட்டாங்கிற எழுத்தையே ஒரு டிசைனா மாத்தி சின்ன மாக்கிட்டாங்க“ என்றார்.“அது என்ன சின்னம்? சின்னத்தின் வடிவம் என்ன?என்று மீண்டும் மீண்டும் கேட்டாலும், “அதான், நோட்டா சின்னம்... நோட்டாவைச் சின்னமாக் கிட்டாங்க!என்று அதே பதிலில் விடாப்பிடியாக இருந்தார்.

திருமிகுவளர்மதி 

(தமிழ்நாடு - சமூகநலத்துறை அமைச்சர்)

திருமிகு வளர்மதி
“தெரியலையே! 
என்னப்பா நீ! 
ஸ்கூல் வாத்தியார் மாதிரி 
தேதோ கேக்குற?“
என்று அதட்டுகிறார்.


விடை – நான்கு முனைகளிலும் மடிக்கப்பட்ட செவ்வகம்
நன்றி – ஆனந்தவிகடன் – வாரஇதழ் (09-04-2014)

பின் குறிப்பு -
திரு எனில் திருமணமானவரா ஆகாதவரா என்பது தெரியாது. திருமதி எனில் திருமணமான பெண் என்பது தெரியும். இந்த “திரு“வில் பெண்ணடிமைத்தனம் இருப்பதால் இருவருக்கும் சமமாக “திருமிகு“ போடுவதே சரியானது என்பது என் கருத்து
----------------------------

13 கருத்துகள்:

 1. அந்த சின்னத்தையும் போட்டு காட்டி இருக்கலாமே ?

  பதிலளிநீக்கு
 2. நோட்டாவுக்கு சின்னம் என்ன என்பது எனக்கும் தெரியாமல் இருந்தது! பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. திருமிகு!!!!! நன்றாக இருக்கிறதே இனி நானும் தொட‌ர்கிறேன் ஐயா!

  அமைச்சர்????? பதில் அருமை! சுதீஸுக்கு கூடவா தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
 4. நோட்டாவுக்கும் ஒரு சின்னம். மக்கள் இந்த சின்னத்துல யாரோ நிக்கிறாங்க போலன்னு நினைச்சு ஓட்டு போட்டுட்டப்போறாங்க!!!

  பதிலளிநீக்கு
 5. நோடாவுக்கு ஒரு சின்னம். நேற்றைய தில்லி தேர்தலில் நிறைய பேர் நோடாவிற்கு வாக்களித்ததாக கேள்வி.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா
  கலகலப்பாக பதிவு நகர்ந்துள்ளது. நோட்டா சின்ன வடிவம் பற்றி பயனுள்ள தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றீங்க ஐயா. நம்ம அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருப்பதே வேற. அவங்ககிட்ட போய் இந்த கேள்வியைக் கேட்கலாமா! திருமிகு நல்ல யோசனை ஐயா. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

  வலைச்சர தள இணைப்பு : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

  பதிலளிநீக்கு
 8. திருமிகு - மிகவும் பொருத்தமான சொல். தெரிவுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. நானும் விகடன்ல படிச்சேன். ரொம்ப தாமதமா தான் நினைவுக்கு வந்தது அண்ணா:(
  "திருமிகு" நல்ல யோசனைதான்!

  பதிலளிநீக்கு
 10. பதிவினை விட "திருமிகு" நன்று

  பதிலளிநீக்கு
 11. அறிஞர் மு.வ. அவர்கள் கட்சிகள் தோற்றம் பெற்றதைச் சொல்வது நினைவிற்கு வருகிறது ஐயா. முடியும் கோலும் ஆரம்ப காலத்தில் செல்வாக்குப் பெற்று விளங்கின. பின் அவ்விடத்தைப் படைகளும் படைக்கருவிகளும் பெற்றன. அடுத்து செல்வமும் செல்வாக்கும் பெற்று காலப் போக்கில் கட்சிகளாகவும் கட்சிக் கொடிகளாகவும் அவை பரிணமித்தன. இன்று ஊடகங்களும் மேடைகளும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அத்துடன் வெற்று வாக்குறுதிகளும் கரன்சிகளும் மக்களை விலை பேசும் மோசமான நிலைக்கு நம் ஜனநாயகம் பணநாயகமாக மாறி விட்டதே.
  நாக்கில் எலும்பில்லை என்ற அதனாலே
  வாக்குறுதி சொல்வதை வாடிக்கை யாய்க்கொண்டார்
  நோட்டுக் கொடுத்துநம் ஒட்டு விலைபேசின்
  நோட்டாவை நோக்கி அழுத்து.

  பதிலளிநீக்கு