தடைசெய்யப்பட வேண்டிய கேவலமான விளம்பரம்


தடைசெய்யப்பட வேண்டிய கேவலமான
விளம்பரம்
இந்த விளம்பரத்தைப் பார்த்திருக்கிறீர்களா...?

''INDIAN MEN WANTED   FOR MY BOAT PARTY''  

இது என்ன இப்படி ஒரு கேவலமான விளம்பரம் என்று
என் மகள்தான் முதலில் கவனித்துச் சொன்னாள்...

AXE  என்னும் வெளிநாட்டு செண்ட்டுக்கான
இந்திய விளம்பரம்தான் இது... 
(அந்தந்த நாட்டில் அந்தந்த நாட்டு ஆண்களை அழைப்பார்கள்! நக்குற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன?) விளம்பரம் என்பது வியாபாரிகள் தாம் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்வதற்காகச் செய்யும் வேலை தான் என்றாலும், அதற்கும் ஓர் கலாச்சார எல்லையுண்டு, பண்பாட்டு அளவீடு உண்டு.

இந்த எல்லைகளை எல்லாம் கடந்து, ஏன் மனித நாகரிக எல்லை கடந்து என்றும் கூடச் சொல்லும் அளவிற்கு கிட்டத்தட்ட விபச்சாரம் செய்ய அழைப்பது போலும் ஒரு விளம்பரம் வந்துகொண்டுள்ளது.

மற்ற நாடுகளில் இந்தியன் என்பதற்குப் பதிலாக அந்தந்த நாட்டைப் போடுவார்கள். நம்ம சூர்யா நடித்த “ஏழாம் அறிவு“ படத்தில் தமிழன், தெலுங்கன், என்று மாநில உணர்வை அந்தந்த மொழிப் படங்களில் தூண்டினார்களே! அப்படித்தான்! நாய்விற்ற காசு குரைக்குமா என்ன?

நமது தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு லாபம் ஒன்றே குறி எனில் இந்த  விளம்பரங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம்.

நாட்டு முன்னேற்றம் பண்பாடு கலாச்சாரம் என்று நம்பிக்கையோடு இருக்கும் யாரும் இது பற்றி அக்கறைப்பட்டே ஆக வேண்டும்.

இவர்கள் மேல் 
அல்லது விளம்பரத் தடைகோரி
வழக்குத் தொடுக்கலாமே?

விளம்பர மேல் விவரம் அறிய – (அறிய மட்டும்தான்)

இந்தக் கேவலத்தைப் பார்த்து நடவடிக்கை எடுக்க நினைப்போர் 
பார்க்க வேண்டிய படங்கள்-
https://www.youtube.com/watch?v=GOdtoyRLBf4

பொதுநல அக்கறையுள்ள -
இந்தியாவில்  வாழும் -
வழக்குரைஞர்கள் முன்வரவேண்டும்.

அந்த வழக்குரைஞர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

--------------------------------------------------------------------------------------------- 

39 கருத்துகள்:

 1. நிச்சயம் இவ்வாரான விளம்பரத்தை புறக்கணிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புறக்கணிப்பது நம்மவர் பணி. அதுஒரு பக்கமிருக்க இதுபோலும் விளம்பரங்கள் வாராமல் தடுக்க வேண்டியதும், வந்தால் நிறுத்த வேண்டியதுமான அரசின் பணி என்ன? நமது அரசு மக்கள்நல அரசு தான் என சொல்லிக்கொள்ள விரும்பினால் இதுமாதிரியான விளம்பரங்கை நிறுத்தச்சொல்ல வழிவகை செய்ய வேண்டும். அதுதான் என் எதிர்பார்ப்பு நன்றி.

   நீக்கு
 2. இது போல் விளம்பரம் செய்யும் பொருட்களை வாங்க மாட்டோம் என்று அந்த நிறுவனத்திற்கே தெரிவிக்க வேண்டும் ஐயா..பலரும் செய்தால் நிலைமை மாறும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்டுக்கதை தெரியுமா உங்களுக்கு? அதுதானே நம் வீழ்ச்சிஃ
   (ஒரு நண்டு மேலேறினால் அடுத்த நண்டு அதைக் கீழே இழுத்துப் போட்டுவிடுமாம் நமக்குள்தானே எதிரிகள்?) இதை நல்லதுதானே என்று சொல்வோரும் இருப்பர் பாருங்களேன்...

   நீக்கு
  2. தங்களது பொருட்களை யாரும் வாங்கவில்லையே என்றுதான் இப்படியெல்லாம் மட்டரகமான விளம்பரம் செய்து விற்க முயற்சிக்கின்றனர்.

   நீக்கு
 3. ஆம் நிச்சயமாக கேவலமான
  விளம்பரம்தான்
  எதிர்ப்பினைப் பதிவு செய்தமைக்கு
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டுக்கு நன்றி அய்யா.
   தங்களுக்கு எனது மே தின வாழ்த்துகள்

   நீக்கு
 4. எத்தனையோ பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் பொது நல அமைப்புகள் எல்லாம் கண்டிப்பாக இம்மாதிரியான விளமப்ரங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வழக்கு தொடர வேண்டும்.

  தாங்கள் அழைப்பை ஏற்று கண்டிப்பாக யாராவது முன்வருவார்கள். ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அப்படியே நம்புகிறேன்.
   நல்லது நடக்கும் நடக்கவேண்டும்.
   நன்றி நண்பரே.

   நீக்கு
 5. பெயரில்லாவியாழன், மே 01, 2014

  இது மட்டுமா கேவலமான விளம்பரம் பல இந்திய விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டியவை. சேரிப் பக்கம் இருந்து வரும் பெண்ணின் ஆடையில் நாற்றமடிக்கவில்லையா தொடங்கி சாதாரண உடையில் 5 ஸ்டார் ஓட்டலுக்கு வரும் பெண்ணை கேவலமாக லுக் விடும் முதலாளி கறுப்பாக இருக்கும் பெண்ணுக்கு வேலை இல்லை என வன்மத்தை கக்கும் பல விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டியவைகளே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வதுபோல நிறைய இருக்கிறது அய்யா.
   கல்வியைவிடவும் முக அழகும், பல்லழகும், முக்கியம் என்றும் ஒரு விளம்பரம்... பைக் அழகைப் பார்த்தும் ஒரு மிட்டாய் (மிண்ட்டு)க்காகவும் கணவனையே விட்டுவிட்டு ஒரு பெண் ஓடிவருவதாக... நிறைய எழுதலாம்... வழக்குப் போடுவோர்க்கு ஏராளமான தகவல்கள் உள்ளன.. தங்கள் கருத்துக்கு நன்றி

   நீக்கு
 6. பெயரில்லாவியாழன், மே 01, 2014

  வணக்கம்
  ஐயா.

  சமுதாயத்தை திசைருப்பும் கவர்சிகர விளம்பரங்களை உண்மையில் தடைசெய்ய வேண்டியதுதான்....நல்ல விழிப்புணர்வுப்பதிவுவாழ்த்துக்கள் ஐயா

  என்பக்கம் கவிதையாக.
  எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரூபன், நன்றி.
   விரைவில் பார்க்கிறேன்.
   தங்களுக்கு எனது மே தின வாழ்த்துகள்.

   நீக்கு
 7. கேவலமான விளம்பரம் தான்.... இதையும் விரும்பும் சிலர் உண்டு... :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியாயின் .. இதை விரும்புவோர் கேவலமானவராக இருக்கவேண்டும்... இல்லையா நண்பரே? நன்றி.

   நீக்கு
 8. 67 வயது முன்னால் மாநில முதல்வர் 43 வயது குடும்ப பெண்ணை காதல் செய்கிறார் .அப்போ அந்த கணவனின் நிலை என்ன ஆவது ? எந்த பெண்ணிய அமைப்பு குரல் கொடுக்க போகிறது? இது தான் இந்தியா.இங்கு எதுவுமே அசிங்கம் இல்லை.நாம் ஒரு மெகா மகா அசிங்கத்தில் உழன்று , ஆனால் பெருமையாக நாகரீகமாக வாழ்கிறோம் என்று சொல்கிறோம் .என்ன கொடுமை!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ''இங்கு எதுவுமே அசிங்கம் இல்லை.நாம் ஒரு மெகா மகா அசிங்கத்தில் உழன்று'' -- பாரதியாரின் சாபக்கதை நினைவிருக்கிறதா நண்பரே? பன்றிக்குடும்பம்? அதுதான் எனக்கு நினைவிற்கு வருகிறது..

   நீக்கு
 9. இது மட்டுமில்லை, பல விளம்பரங்கள் இதை விடவும் மோசமாகவே இருக்கின்றன. ஆனால் யாரும் எந்தப் பெண்ணிய அமைப்புகளும் தடை செய்யச் சொல்லிக் கோரிக்கை விடவில்லை. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை.. பல கேவலமான பததிரிகை விளம்பரங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி, சினிமாக் காட்சிகளையும் நிறுததியிருக்கிறார்கள்.. இது எப்படித் தப்பித்தது என்று தெரியவிலலை.. மாட்டும். விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்.

   நீக்கு
 10. ஒரு ஜெல்லி விளம்பரத்தில் ஜெல்லிக்காகப் பிள்ளையிடம் அன்பு செலுத்தும் அம்மாவா காஜல் என்னும் நடிகை நடித்த விளம்பரம், ஷேவிங் ப்ளேட் விளம்பரம்(இதில் இப்போக் கொஞ்சம் பரவாயில்லை) திரு இக்பால் செல்வன் சொல்லி இருக்கும் விளம்பரங்கள், என எத்தனையோ இருக்கின்றன் அ.

  பதிலளிநீக்கு
 11. காசேதான் கடவுளடா! என ஆகிவிட்டது உலகம்! தங்கள் கட்டுரையை
  நான் முழுதும் வழிமொழிகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் மதிப்பிற்குரிய உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றியும் வணக்கமும் அய்யா.

   நீக்கு
 12. நான் பார்க்கவில்லை. ஆனால் இது போன்ற விளம்பரங்கள் குறிப்பாக இந்தத் தயாரிப்புக்கு அடிக்கடி வருகிறதுதான். கண்டிக்க வேண்டிய விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிக்கப்படவும் தொடர்ந்தால்
   தண்டிக்கப்படவும் வேண்டியவைதான்.
   நன்றி ஸ்ரீராம் அவர்களே.

   நீக்கு
 13. ஊடகங்களின் சுதந்திரம் எது? கடமை? எது என்பதை மறந்து இன்றைய ஊடகங்கள் செயல்படுகின்றன. இதற்கான தீர்வு நுகர்வோரிடம் தான் உள்ளது. விளம்பரங்களைக் கண்டு அந்தப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து இயன்றவரை நம் நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு முன்னுரிமை தருவதே இதற்கான சரியான தீர்வாக இருக்கமுடியும் என்பது என் கருத்து நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் விழிப்போடு இருப்பதுதான் நிரந்தரத் தீர்வு. ஆனால், புதுமை எனும் பெயரில் பொருள்உற்பத்தியாளரின் பொருளியல் சார்புத்தன்மையை மக்கள் கவனிக்கத் தவறுகிறார்களே அதுதான் பிரச்சினை. தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 14. இவ்வாறான விளம்பரங்கள் இந்தியாவில் மட்டும் தடை செய்து பயனில்லை, ஐயா! உலகெங்குமே தடை செய்ய வேண்டும். தங்கள் பொறுப்பு வாய்ந்த கருத்தை வரவேற்கிறேன்.

  புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா? (http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html) என்ற பதிவிற்குத் தங்கள் பதில் கருத்து என்னவாயிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் - “யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்“ என்பதுதான் இலக்கணப்படியும், இலக்கியப்படியும் (அழகியல்) சரியாக வருகிறது. நீஙகள் “பாபுனைய“ என்று ஒற்றின்றிப் போட்டிருப்பதன் காரணம் என்ன? அதற்குரிய இலக்கணம் உண்டாயின் தெரிவிக்க வேண்டுகிறேன். ( பாபுனைய என்று -ப் -ஒற்று மிகாமல் இருக்க)

   நீக்கு
  2. எனது பதில் கீழுள்ள இணைப்பில்
   http://paapunaya.blogspot.com/2013/11/blog-post_2149.html?showComment=1398947226636#c3755067277091767443

   நீக்கு
 15. தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.
  தங்களின் யாப்பிலககண ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.
  தங்களின் பதிவுகளைப் பார்த்தும் வருகிறேன்.
  விரைவில் தங்கள் தளத்தில் என்கருத்தைப் பதிவு செய்வேன்.

  பதிலளிநீக்கு
 16. எப்படி வேண்டுமானாலும் விளம்பரம் செய்யலாம் என்ற நிலை மாற வேண்டும். கேவலமான விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டும். நல்லதொரு விழிப்புணர்ச்சியைத் தூண்டும் பதிவு! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 17. ஐயா, வடிவேலுவின் புதிய படத்தை வெளியிடக் கூடாது, என ஒரு அமைப்பினர் கொதித்து எழுந்தனர், கமலஹாசனின் படத்தை வெளியிடக் கூடாது என ஒரு அமைப்பினர் கொதித்து எழுந்தனர், அனைவருமே தங்கள் அமைப்பிற்காக, மதத்திற்காக, சாதிக்காகப் போராட வருகிறார்களே தவிர,
  தமிழகத்திற் இறையான்மையைக் காக்க, யாரும் போராட முன் வர மறுக்கிறார்கள். போராட்டம் என்பது இவர்களைப் பொறுத்தவரை, விளம்பரம்.
  இது போன்ற விளம்பரங்கள் தடைசெய்யப்பட வேண்டும்.
  சினிமாவிற்கு தணிக்கைத் துறை இருப்பதைப் போல், இன்று வியாபித்திருக்கும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கும், தொலைகாட்சி விளம்பரங்களுக்கும் புதிதாக ஒரு தணிக்கை துறை ஏற்படுத்தப்பட வேண்டும் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் அய்யா. திரைப்படத்திற்கு இருக்கும் தணிக்கைமுறையைத் தொலைக்காட்சிக்கும் கொண்டுவருவதில் சிக்கல்கள் இருந்தாலும், அதைவிடவும் இது நேரடியாக நமது வீட்டுக்குள்ளேயே நுழைவதால் அதைச் சிந்திக்கத்தான் வேண்டும். நல்ல கருத்து நன்றி அய்யா

   நீக்கு
 18. கண்டிப்பாக எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும் எப்படி என்று தான் தெரியவில்லை? எங்கே ஒருங்கிணைய வேண்டும்?

  பதிலளிநீக்கு
 19. நான் பார்த்ததில்லை...

  மிக மிக கேவலமான விளம்பரம்..

  பதிலளிநீக்கு
 20. திருவீழிமிழலையின் சிறப்புகள் அனைத்திற்கும் நன்றி ஐயா...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 21. இந்த விளம்பரத்தை பார்த்து நானும் முகம் சுளித்தேன். விளம்பரக் கட்டுப்பாடு அவசியம் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 22. இது மட்டும் இல்லை இன்னும் சில கேவலமான விளம்பரங்களும் இன்று மிகப் பிரபலமாக உள்ளன.

  என் பதிவைப்படித்துப்பாருங்கள். இங்கே...
  http://wp.me/p5gvcj-32
  வீட்ல தின்ன சோறே இருக்காது... அப்புறம் என்ன ஸ்கின் ஸ்கோரு...

  http://vnsraghavan.wordpress.com

  ராகவன்
  சிங்கப்பூர்

  பதிலளிநீக்கு