ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - படவிமர்சனம்




சிம்புதேவன் படமாச்சே  
சிரிப்பாத்தான் இருக்குமின்னு,
வம்படியா கிளம்பினமே 
                    வகைதொகையா மாட்டுனமே!
பொம்பளைங்க யாரும்வர்ல?’
பொண்டாட்டி என்னத்திட்ட
சிம்புதேவ நான்திட்ட
சிரிப்பாத்தான் இருந்துச்சுங்க!?
  
இருந்தவுக ஏழுபேரு! நாங்க
                    ரெண்டுபேரு போக,மிச்சம்
இருந்தவுக அஞ்சுபேரு! அதுல
                    ரெண்டுபேரு ஊழியரு!!
ஒருநிமிச வித்தியாசம் இந்த
                    உலகமெல்லாம் மாறிடுமாம்
பெரியஇந்த விசயத்த சிம்பு
                    பிரம்மனோட(?) சொல்லிட்டாரு!

ஒருகதைய மூணுவிதம் சொன்ன
                   உத்தியின்னு நான்சொல்ல
குறும்படமா எடுக்கறத சிம்பு
                   பெரும்படமா எடுத்ததுனு
பெருமாட்டி சொன்னாங்க!அட
                    பெறவுஎன்ன நாஞ்சொல்ல?!
அருள்நிதிக்கு நட்டமில்ல-ஆனா
                    ஆப்புட்டது நாமல்லோ?


================================================ 
04-04-2014 படம்வெளியான அன்றே 
விவரம் தெரியாமல் நாங்க போயிட்டோம். 
1,200 பேர் உட்காரும் புதுக்கோட்டை விஜய்-திரையரங்கில்,
மாலை 6மணிக் காட்சி பார்த்தவர்கள் எங்களையும் சேர்த்து ஏழுபேர்!
படம் முடிந்து வந்தால் இரவுக்காட்சி பார்க்க யாருமே வரவில்லை!
இதுக்குத்தான், விமர்சனங்களப் பாத்துட்டு  
படம்பாக்கப் போகணும்ங்கறது...!
வயசாகுதே தவிர அறிவு மட்டும் வளரவே மாட்டேங்குது!..ம்...?
இப்படி என் மனைவி நினைச்சிருப்பாங்க...
ஏதோ ஒரு மரியாதை(?) காரணமா சொல்லவில்லை.
இருந்தாலும், அவங்க நினைச்சதை, நம்ம 'மைண்ட் வாய்ஸ்' சொல்லிருச்சே!
நல்லவேளை உங்களுக்குக் கேக்கல இல்ல...? )
 =================================================== 

41 கருத்துகள்:

  1. simple and super review sir, ur old student {1986 -1988}

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே சரவணன்..? எங்கேப்பா இருக்கே? எப்படி இருக்கே?
      என் தனியஞ்சலில் விவரம் சொல்.
      கருத்துக்கு நன்றி சரவணன்.

      நீக்கு
  2. the concept of releasing movies in cinema hall have gone.It is better to release movies in mobile as Android apps as paid movies.Or Youtube is best choice to release movies.But cinema people will not understand technologies. http://bullsstreetdotcom.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'the concept of releasing movies in cinema hall have gone' - I dont think so. Now itself, rural peoples are coming to the hall only. So that some of our Tamil movies (Director Shankar and some others) have released their movies through sattelite, and throw away the films concept!

      'It is better to release movies in mobile as Android apps as paid movies.Or Youtube is best choice to release movies' - This is a good idea, what Kamal tried and failed I think. He tried to release his film thr.TV channels. But theater owners not agreed with him... One thing is proved now a days, that the producers’ goal is youth only, not rural, not THE PUBLIC in general .so the Tamil cinema is falling downwards This is the only thing what i want to say. Thank You bullsstreet Rest in next.

      நீக்கு
  3. நல்ல காலம் நாங்க உங்களால தப்பிச்சிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. யாம்பெற்ற துன்பம் பெறாதிருக்க இவ்வையம்!
    நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. இந்த காலத்துல யாரையும் நம்பி படத்துக்கு போகக்கூடாது போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க கீதா, சிம்புவின் 23ஆம் புலிகேசி அப்படி இருந்தது. பிறகு வந்த அறைஎண்..இல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் கூட பரவாயில்லை ரகம். வித்தியாசமான நகைச்சுவை இதைச் சொல்லித்தான் -சந்தேப்பட்ட என் மனைவியை சமாதானப் படுத்தி அழைத்துப் போனேன்... தப்புத்தான்...

      நீக்கு
  6. யாம் பெற்ற துன்பம்... :(

    நல்ல விமர்சனம். தில்லியில் இருப்பதில் ஒரு சவுகர்யம். பெரும்பாலான தமிழ்ப் படங்கள் இங்கே வெளியிடப்படுவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்... குறள் அறிவு நமக்கும் வரலையே... நீங்க அங்க இருக்கிறதால தப்பிச்சுட்டீங்க...

      நீக்கு
  7. கவலையை பாட்டாவே படிச்சுடீங்களே ! சில சமயம் இப்படி பெரிய இயக்குநர்கள் சொதப்பிவிடுகிறார்கள் :((( பாவம் அண்ணி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தோசத்துலயும் பாட்டுவரும், சங்கடத்துலயும் வரும்லப்பா..? அடுத்து அவர் இயக்குறதாகச் செய்தி வருகிற விஜய் படத்தையும் இதே மாதிரி ஊத்திக்க வச்சா, சிம்புவுக்குப் பெரிய புண்ணியமாப் போகும்..(?) வர வர விஜய் படங்கள்... தாங்கலப்பா.. பாவம் உங்க அண்ணி மட்டுமில்லப்பா.. அவுங்கள நார்மலுக்குக் கொண்டுவர நா பட்ட பாடு எனக்கில்ல தெரியும்..

      நீக்கு
    2. //அவுங்கள நார்மலுக்குக் கொண்டுவர நா பட்ட பாடு எனக்கில்ல தெரியும்..// ஹா...ஹா...ஹா..(பொழைப்பு இப்படி சிரிப்பாசிரிச்சு போச்சே)
      ஆனால் இரும்புகோட்டை, புலிகேசி இரண்டிலும் சிம்பு பயன்படுத்திய கூர்மையான பகடி முறை m.r.ராதா வை நினைவுபடுத்தும். நல்ல இயக்குநர் தான் ஆனாலும் என்ன பொருளாதார , அதிகார நெருக்கடியில் இப்படி செய்தார் என்பதும் ஆய்வுக்குறியது தான்.

      நீக்கு
    3. என்ன “பொருளாதார, அதிகார“ நெருக்கடியோ.. நுட்பம் டா!

      நீக்கு
  8. ஒரு கன்னியும் மூணுகளவாணிகளும் படம் சிம்புதேவன் படமாச்சே என்று போன உங்களுக்கு ‘எப்படிப் படம் இருக்க்க்கூடாது?’ என்ற அனுபவத்தைத்தந்துள்ளாரே, அதற்கு நன்றி சொல்லக்கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இல்லயா பின்ன? முதல்நாள் என்று தெரியாமலே போய் பட்ட அனுபவம் இனி வாழ்நாள் முழுசுக்கும் போதுமே? இதுலயும் அறிவு வரலன்னா எப்படி? நன்றி தோழரே.

      நீக்கு
  9. இனிமே இப்படி விஷப்பரீட்சை செய்ய மாட்டீங்கன்னு நினைக்கிறேன் !
    ஒரு கன்னியும்மூணு களவாணிகளும் படத்திற்கு வந்த ( உங்களுடன் அண்ணி சரி ),பாவம் அந்த மூணு களவாணிங்க யாரு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவானே! நீங்க படம் பாக்கலங்கிற தைரியத்துல பேசுறீங்க... நானே நொந்து நூடுல்ஸாக் கிடக்கிறேன்... சிம்பு, அருள்நிதி, அப்பறம் அந்தத் தயாரிப்பாளர்னு நெனைக்கிறேன்... (கன்னியர் கணக்கு ரெண்டு வருது... என்ன லாஜிக்கோ என்னமோ?)

      நீக்கு
  10. வலையில் விமர்சனத்தைப் படித்துவிட்டு அல்லவா சென்றிருக்க வேண்டும்.
    இதுவும் ஓர் புதிய அனுபவம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா தப்புப் பண்ணிட்டேங்கய்யா தப்புப் பண்ணிட்டேன்... (உங்க கிட்டமட்டும் அந்த ரகசியத்தைச் சொல்றேன்... நம்ம பாண்டியன் “நிமிர்ந்துநில்“ பற்றி எழுதியிருந்ததப் பாத்து அந்தப் படம் ஓடுன அரங்கத்துக்குத்தான் போனோம்! அது 03-04-2014 முதல்நாளோட ஓடிடுச்சு போல! அடுத்தநாள் 04-04-2014 இந்தப்படம் வெளிவந்ததும் எனக்குத் தெரியாது...சரி வந்தது வந்தோம் “சிம்புதேவன் படம்தானே?“ பாத்துருவம்பா..னு என் துணைவியாரிடம் சொல்ல... அவரும் என்னை நம்பி சரி“ங்க..) அப்ப.. விமர்சனத்தப் பாத்துட்டுப் போனேங்கறது சரிதானா?

      நீக்கு
  11. கவிதையில் ஒரு சினிமா விமர்சனம்
    கலக்கல்..........அய்யா....
    இப்ப வர்ர சினிமா இப்படித்தான் எனிமா கொடுக்கின்றன சிம்புதேவன் சும்மாவே சூட்ட கிளப்புவார்.....படத்தின் பெயரை கேட்டாலே அடிவயிறு கலங்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கூர்ந்து கரந்தையாருக்கு எழுதிய என் முந்திய பதிலைப் படித்துக்கொள்ள வேண்டுகிறேன்... படத்தின் பெயரைப் பார்த்தும் நான் போனது தப்புத்தான்... ஆனா, இப்ப எல்லாம்தான் படத்தின் பெயருக்கும் கதைக்கும் தொடர்பு இருப்பதில்லையே..ன்னு...சரீ...

      நீக்கு
  12. அட...! விமர்சனம்... நன்றி...

    அதை விட....

    சரவணன் சந்திப்பு உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி ஐயா...

    பதிலளிநீக்கு
  13. அப்பாடா நான் தப்பிவிட்டேன் தங்களால் நன்றி நன்றி !
    அப்போ சோக பாட்டே பாடிட்டீங்க ரசித்தேன் நன்றி! வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் சோக கதைய கேளு தாய்க்குலமே! - அதைக்
      கேட்டாக்கா தாங்காதம்மா உங்க மனமே! சரி விடுங்க...
      இது கிடக்கட்டும்... கட்டுரைப் போட்டியில் பரிசு வென்றதைத் தொடர்ந்து எழுதுங்கள்.. இதைவிடவும் உயர்ந்த இடம் உங்கள் எழுத்துக்குக் காத்திருப்பதன் அடையாளமாகவே இதை எடுத்துக்கொண்டு எழுதுங்கள்.பாராட்டு, வாழ்த்துகள்மா!

      நீக்கு
  14. "//“இதுக்குத்தான், விமர்சனங்களப் பாத்துட்டு
    படம்பாக்கப் போகணும்ங்கறது...!
    வயசாகுதே தவிர அறிவு மட்டும் வளரவே மாட்டேங்குது!..ம்...?“//"

    உங்களுக்கு அறிவு நிறையவே இருக்கு. அதனாலதான், நீங்க கஷ்டப்பட்டு பார்த்துட்டு வந்த படத்தை, விமர்சனமா எழுதி யாரும் போகாதீங்கன்னு சொல்லியிருக்கீங்க.

    எல்லோருமே விமர்சனம் படிச்சுட்டு தான் படம் போய் பார்க்கணும்னு நினைச்சா, அப்புறம் யார் விமர்சனம் எழுதுறது??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுசரி... அந்தத் தணிக்கைக்குழு ஆளுங்க இருக்காங்களே அவங்கள நினைச்சா ஒரு பக்கம் எரிச்சலாவும் இன்னொரு பக்கம் பாவமாவும் இருக்கில்ல... எல்லாத்தையும் பாத்து மெண்டலாகாம எப்படித்தான் இருக்காங்களோ? சரி விடுங்க.
      அய்யா.. கட்டுரைப்போட்டியில் தேர்வு பெற்றதற்கு வாழ்த்தும் பாராட்டுகளும் அய்யா... தொடர்ந்து எழுதவேண்டுகிறேன். பாரதி இரண்டாம் பரிசு பெற்றதை அறிவீர்கள் இல்லையா? நான் உள்பட நடுவர்களின் தேர்வு எல்லாமே மிகச்சரியானவை என்று நினைக்க வேண்டாம்... நீங்கள் பாராட்டுக்குரியவர் அவ்வளவே, தொடர்ந்து எழுதுவதன் மூலமாக உங்கள் இடத்தை நீங்களே உறுதியாகப் பிடிக்கலாம். தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துகள்!

      நீக்கு
  15. பதில்கள்
    1. என்னதிது?
      என் பதிவு உங்கள இப்படி ஆக்கிருச்சா...
      பாவம்!
      நா ஏதாவது தப்புப் பண்ணிட்டனா?

      நீக்கு
  16. another view http://kanavuthirutan.blogspot.com/2014/04/blog-post_6.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க வலைப்பக்கம் போய், விமர்சனத்தையும் பார்த்தேன். உண்மையிலேயே நல்லா எழுதியிருக்கீங்க. பிற மொழி அறிவோ, பிறமொழித் திரைப்பட ஞானமோ இருந்தா நா ஏன் இப்படி எழுதுறேன்? நமக்குத் தெரிஞ்சத ஏதோ எழுதுறோம். அதுல நமக்குத் தெரிஞ்ச அளவு உண்மை இருக்கும் அவ்வளவுதான். உங்கள் வருகை, கருத்துக்கு நன்றி

      நீக்கு
  17. கவிதை நடையில் விமர்சனம்..??? கேட்டதும் இல்லை... கண்டதும் இல்லை.. மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் அய்யா.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது...? கவிதை... நடையிலா... ?
      அப்ப இது கவிதை இல்லையா?
      ஆகா... கவுத்திட்டிகளேய்யா...
      இருந்தாலும், “மிகச் சிறப்பாக“ன்னெல்லாம் சொல்லியிருக்கீக
      நன்றிங்கய்யா.. - முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      நீக்கு
    2. ஹையோ ஹையோ (வடிவேலு பாணியில் படிக்கவும் )

      நீக்கு
  18. ""நங்குன்னு"" நாச்சியப்ப வாத்தியாரு நடுமண்டையில கொட்டுனாபல இருக்கு. சபாஷ் தோழர்

    பதிலளிநீக்கு