பார்க்க வேண்டிய படம் இதுதான்!

புறநகர் ரயில் பயணங்கள் சுவாரஸ்ய மானவை. பலவிதமான குழுக்களை பார்க் கலாம். கஞ்சிரா இசைத்துப் பாடுவார்கள். கானா குழுக்களும் உண்டு. புரட்சிக் குழுக்களும் அனலைக் கக்கும். ரயிலே தடம் புரண்டாலும் கவலைப்படாமல் மும்முரமாக ரம்மி ஆடுவார்கள். விதவிதமான விற்பனையாளர்கள் வருவார்கள்; ராகம் போட்டு விற்பார்கள். இத்தனை விதமான மனிதர்களுக்கு மத்தியில் தனி ஒருவனாக தாய்மொழி வழி கல்விக்காக குரல் கொடுத்து கவனம் ஈர்க்கிறார் வினோத்குமார்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்
வேகமான நடையுடன் ரயிலில் ஏறும் வினோத் குமார் கம்பீரக் குரலில் தொடங்குகிறார். ‘உங்க ளுக்கு நிறைய வேலை இருக்கும். ஆனால், நான் சொல்ல வருவது உங்கள் குழந்தைகளின் எதிர் காலம். தயவு செய்து கவனியுங்கள்..’ என்பவர், இன் றைய தனியார் பள்ளிகளின் தரத்தையும் முறையற்ற கற்பித்தலையும் கிழித்துத் தொங்க விடுகிறார்.

வெறுமனே இவர் சாடுவதில்லை, எடுத்து வைக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் சரியான தரவுகளை வைக்கிறார். உலகளாவிய உதாரணங் கள் அளிக்கிறார். வளர்ந்த நாடுகளின் தாய்மொழி கற்பித்தல் முறைகளை விளக்குகிறார். நம் நாட்டின் தாராசந்த் கல்வி குழு தொடங்கி யஷ்பால் கல்வி குழு வரை அளித்த பரிந்துரைகளை முன்வைக் கிறார். இறுதியாக ‘தாய்மொழி வழி கல்வியே சிறந்தது; ஆங்கிலம் தேவை எனில் தனி மொழிப் பாடமாக கற்றுக் கொள்ளலாம்’ என்கிறார்.

ஆவணப்படம்
தனது இந்த பிரச்சாரத்தை முன்வைத்து, ‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ என்ற ஆவணப் படத்தையும் இயக்கி இருக்கிறார் வினோத் குமார். பிரச்சாரத்தின் ஊடே அதன் குறுந்தகட்டை யும் விற்கிறார். கடந்த 2012-13-ல் தமிழக அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி கற்பித்தல் முறையை கேள்விக்குள்ளாக்குவதில் தொடங்குகிறது இவரது ஆவணப் படம். பலதரப்பட்ட மக்கள் அரசின் ஆங்கில வழிக் கல்வியை வரவேற்கிறார்கள். ஆனால், கல்வியாளர்களான ச.சீ.ராஜகோபாலன், பிரபா கல்விமணி, சமச்சீர் கல்விக்குழுத் தலைவர் சா.முத்துகுமரன் உள்ளிட்டோர் அதை எதிர்க்கிறார்கள்.

இவற்றை எல்லாம் ஆவணப்படத்தில் தொகுத்திருக்கும் வினோத்குமார் தனது தரப்பில் பல்வேறு கேள்வி களையும் எழுப்புகிறார். ‘ஒரு குழந்தை தனது தாய்மொழியை எங்கே கற்றுக் கொள்ளத் தொடங்குகிறது? வகுப்பறையிலா? தாயின் வயிற்றிலா? பிறந்தவுடன் அந்த குழந்தைக்குத் தினமும் இத்தனை முறை மனப்பாடம் செய், இத்தனை முறை எழுது, முட்டிப்போடு என்றெல்லாமா மொழியை கற்க பயிற்சி கொடுத்தோம்?
ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியின் அஸ்தி வாரத்தை பலமாக அமைத்துவிட்டு ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் மட்டுமல்ல, ஆறு மாதத்துக்கு ஒரு மொழி என்று பல மொழிகளை கற்றுக்கொடுங்கள். ஆனால், அறிவியல், கணிதம், வரலாறு, மருத்துவம், பொறியியல் உள்ளிட்டவை தாய்மொழியில் மட்டுமே இருக்கட்டும்’ என்கிறார்.

‘சைக்கிள்’ வேண்டாமே!
வினோத்குமார் சொல்லும் இந்த ஒரு விஷயத்தை கவனித்தால் அவர் சொல்வது எவ்வளவு நியாய மானது என்பது புரியும். ‘‘கல்வி என்பது சிந்தனையை தூண்ட வேண்டும். ‘சைக்கிள்’ என்று சொல்லித் தந்தால் அது குழந்தையின் சிந்தனையை தூண்டாது. மிதிவண்டி என்று சொல்லிக் கொடுங்கள். அப்போது மிதிக்காத வண்டி இருக்கிறதா? என்று குழந்தையின் சிந்தனை தூண்டப்படும். ஏரோபிளேன் என்றால் சிந்தனை தூண்டாது. வானூர்தி என்று சொல்லிக் கொடுங்கள். அப்படி எனில் தரையூர்தி இருக்கிறதா என்று குழந்தை கேள்வி கேட்கும்’’ என்கிறார் வினோத்குமார். நியாயம் தானே!


இப்போதெல்லாம் ஒரு தரமான புத்தகத்தை பிரபலமான பதிப்பகம் வெளியிட்டு மூவாயிரம் பிரதிகள் விற்பதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது. ஆனால், தனது பரப்புரையில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந் தகடுகளை விற்றிருக்கிறார் வினோத்குமார். அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன அவரது ஆவணப்படத்தில்!

நன்றி - தி இந்து தமிழ் நாளிதழ் - 04-7-2017 -திரு டிஎல் சஞ்சீவ் குமார்.

இதோ அந்த ஆவணப்படம் - இணைப்பில்
கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை” 
ஆவணப்படம் 
https://www.youtube.com/watch?v=bwJTVYd9MKE
----------------------------------------------------------------------------------------- 
திரு வெ.பி.வினோத்குமார் 
அவர்களுடன் பேச -9994262666

31 கருத்துகள்:

 1. அற்புத முயற்சி...வெளிச்சமிட்ட பதிவுக்கு வந்தனங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பத்து குறுந்தகட்டுக்குப் பணம் அனுப்பி வாங்குகிறேன், நண்பர்களிடம் விற்போம்.

   நீக்கு
  2. வரும் பதிவர் சந்திப்பில் (?) அனைவருக்கும் தரலாமா...?

   நீக்கு
  3. நல்ல யோசனைதான்! ஆனால் அதற்கு, முதலில் அத்தைக்கு மீசை முளைக்க வைக்கணுமே!

   நீக்கு
 2. விரிவாக அலசி சொல்லப்பட்ட தகவலுக்கு நன்றி கவிஞரே பார்க்க செல்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல் சொன்னவர் இந்து தமிழ் சஞ்சீவ்குமார்.
   நன்றி அவருக்கு, நன்மை நமக்கு

   நீக்கு
 3. நலமா தம்பி! பதிவுக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல நலம் அய்யா. தங்கள் நலமறிய விரும்புகிறேன். இந்தப் படத்தைப் பாருங்கள். நாம் காலமுழுவதும் சொன்னதை இவர் ஒருமணிநேரப் படமாக்கியிருக்கிறார்.

   நீக்கு
 4. தூர நோக்கில் எண்ணிப் பார்க்க வேண்டியவை
  ஈர விழிகளில் எம்நிலை உணர வேண்டியவை
  அருமையாக வெளிப்படுத்தும் குறும் திரைப்படம்!

  பதிலளிநீக்கு
 5. அவசியம் அனைவரும்
  காணவேண்டிய காணொளி

  என் தளத்திலும் அதற்காகவே
  பகிர்ந்துள்ளேன்
  பகிர்ந்து அறியத் தந்தமைக்கு
  நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றியோ நன்றி அய்யா
   உங்கள் பாணியே தனி அய்யா
   மிக்க நன்றி அய்யா

   நீக்கு
 6. நம் ரமணி ஐயா, அவர் தளத்திலும் பகிர்ந்து உள்ளார் ஐயா...

  பதிலளிநீக்கு
 7. தாய்மொழி வழி கல்வி சிறந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை என்றாலும் மாநில மொழிகளை ஒடுக்கும் நோக்கத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு துடிக்கும் வேகத்தை பார்க்கும் பொழுது, இன்றய இந்திய அரசியல் சூழலில் ஆங்கில வழி ஆரம்ப கல்வி அளிப்பதே நல்லது. இந்தியாவெங்கும் மாநிலங்கள் தங்கள் தாய்மொழி வழியே பள்ளி கல்வி அளிக்கும் நிலை வரும் பொழுது நாமும் தமிழ் வழி கல்வி அளிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, அலையெங்கே ஓய்வது? தலையெங்கே குளிப்பது என்பார்களே அதுதான்... அத்தோடு, தாய்மொழியைச் சரியாகக் கற்கும் ஒருவரால்தான் பிறமொழிகளையும் எளிதாகக் கற்க முடியும் என்பதை இவரது படத்தை முழுவதுமாகப் பார்த்திருந்தால் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள். அன்பு கூர்ந்து முழுவதும் மீண்டும் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். (அதுசரி ஏன் பெயரில்லா...?)

   நீக்கு
 8. நன்றி ஐயா
  இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன்

  பதிலளிநீக்கு
 9. இப்போது தான் ரமணி ஐயாவின் பதிவில் குறும்படம் பற்றிய தகவல் பார்த்தேன். இதோ உங்கள் பக்கத்திலும்.

  திரு வினோத்குமார் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதோ கீழே அவரே தனது முகநூல் இணைப்பைத் தந்திருக்கிறார் அய்யா.நாமும் தொடர்வோம்.நன்றி

   நீக்கு
 10. ரமணி சார் அவர்களின் தளத்தில் பார்க்க ஆரம்பித்தேன் நேரம் இல்லாததால் முழுவது பார்க்க முடியவில்லை. உங்கள் தளத்தில் அதை பற்றி விபரமாக தந்துள்ளீர்கள் பாராட்டுக்கள்....என்ன இப்போதெல்லாம் உங்களிடம் இருந்து பதிவுகளை அதிகம் பார்க்க முடியவில்லையே ஏன்? புதுக்கோட்டை பதிவர்கள் எல்லாம் சோர்ந்து போய்விட்டார்களா என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்து மட்டுமே பணியாய்க்கொள்ளாமல் பல்பல இயக்க-இலக்கிய-சமூகப் பணிகளையும் நாங்கள் தொடரவேண்டியிருப்பதால்..( சரி சரி வுடு வுடு சமாளிக்காதே..) இது என்ன மனக்குரலா (மைண்ட் வாய்ஸ்?) உள்ளே கிடந்து உங்களால் கண்டுபிடிக்கப்பட்ட மனக்குறையானு தெர்லயே?)

   நீக்கு

 11. நம்பிக்கை ஊட்டும் செய்தி. நல்ல செய்திக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 12. வெங்கட் ஜி சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன்...
  இங்கே விரிவான அறிமுகம்
  வாய்ப்பு இருந்தால் இவரை ஆசிரியர் பயிற்சிக்கு அழைக்கலாம்
  அல்லது எம் பள்ளிக்கு அழைக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கெனவே பேசிட்டேன் மது! நிச்சயமாக அழைத்துப் பேசவைப்போம், கௌரவிப்போம்! (As we are all sailing in the same boat..) நன்றி

   நீக்கு
 13. தகவலுக்கு நன்ற. மும்பையிலும் இத்தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 14. அருமையான அலசல் அப்பா.
  ஆங்கிலம் என்பது ஒரு மொழி அதனை அறிவு என்று சொல்லிக் கொண்டிருக்கும் மூடர்களில் ஒருவருக்கு இது புரிந்தால் சிறப்பு அப்பா.

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லாசனி, ஜூலை 08, 2017

  If you don't like anony comments, understandable, please ignore this as noise.
  Yes, I do agree mother tongue education is the right way. It doesn't matter, but I do come from tamil govt school root (thx to kamaraj).

  This topic could have been analyzed with more clearer and simpler.
  But this film feels more like a propaganda and one sided. Like any Sankar movies, it fails to see the truth on other side and glorifies it's own side.
  Wonder why such a important topic would need the funny memes(poking fun of other side) with kaundamani and vadivel. And a lot of intellectual arrogance. Don't such a important topic with validity warrant a unbiased analysis without emotion, poking fun and intellectual arrogance. Can't we tamils have a clear and simpler conversation without those elements.

  Thx. ndm - name doesn't matter.

  பதிலளிநீக்கு
 16. தாங்கள் பதிவிட்டபின்னர்தான் இதனைப் பற்றி அறிந்தேன். உண்மையில் பார்க்கவேண்டிய படம்.

  பதிலளிநீக்கு