நூறாவது வாரம் “விதை-கலாம் நிகழ்வு! வருக!

குருவி வளர்த்தேன், பறந்துவிட்டது,
அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது,
மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்து விட்டது!
-என்று சொல்லிச் சென்ற மாமனிதர் அப்துல்கலாம் உசுப்பிவிட்டுச் சென்ற புதுக்கோட்டை இளைஞர்களின் பணி 
இப்போது 100வாரத்தைத் தொட்டுத் தொடர்ந்து செல்கிறது! 
உண்மையிலேயே பாராட்டவேண்டும்!


இன்று தொடங்கியதுபோல இருக்கிறது…
100வாரம்முடிந்துவிட்டதாம்!
கண்களில் நம்பிக்கை ஒளியேற்றும் கனலோடு, மலையப்பன் நேற்றுவந்து சொன்னபோது எனக்கே மலைப்பாயிருந்தது!

நூறு வாரங்களாக ஒவ்வொரு ஞாயிறும், இளைஞர்சிலர் அதிகாலையில் கிளம்பி ஏற்கெனவே, திட்டமிட்டு, அனுமதிபெற்ற இடத்திற்குப் போய், குழிதோண்டி, சிலமரக்கன்றுகளை நடுவது, அவற்றைப் பாதுகாத்து, நீர்ஊற்றி வளர்ப்பதற்கான உறுதியை அந்தப் பகுதிஇளைஞர் ஒருவரிடம் தந்து அடுத்தவாரம் அடுத்த ஞாயிறு இதுபோலவே வேறொரு இடம் தேடிக் கன்று நடுவது…

இதைச் சொல்லும்போது எளிதாகத் தெரியலாம்.
செயல்படுத்தும்போதுதான் எத்தனை கடினம் என்பது புரியும்.

இதுவரை ஆயிரத்தைத் தாண்டும்மரக்கன்றுகள்.. 100இடங்களில் தளதளவென்று... அதிலும் காலஞ்சென்ற கவிஞர் வைகறை வைத்த கன்றுகள் வளர்ந்து நிற்பதைப் படத்தில் பார்க்கும் போது அவரது மாறாத சிரித்த முகம் கண்களைக் கலங்க வைத்துவிட்டது!

ஒன்றிரண்டு இளைஞர்கள் காலஓட்டத்தில் பிரிந்திருக்கலாம். 
ஆனால், புதியவர் இணைய இணைய 
இப்போது சுமார் 25முதல் 30பேர்வரை பணியாற்றுகிறார்கள்!
அவ்வளவு பேரும் 30வயதுக்குள் இணைகிறார்கள் என்பது ஒன்றும் சாதாரண செய்தியல்ல - நமது “நாற்றமெடுத்த நமது சமூகத்தில்” 
இதுவே பெரிய வரமல்லவா? 

இந்த இளைஞர்களைப்போற்றிப் பாராட்டுவதோடு, 
கைகொடுத்து, தோளும் கொடுத்து 
தொடர்வோம் வாருங்கள்! 
நம் வயது குறையட்டும்!

வரும் ஞாயிறு 23-7-2017 காலை 6மணி 
புதுக்கோட்டை- மருப்புணிச் சாலை - சேங்கைத்தோப்பு, செல்லையா கோவில் அருகில்.
100ஆவது “விதை-கலாம்” வருக!

இயன்றோர், இயன்றதைச் செய்க, இணைவோம் வருக!

“விதை-கலாம்” ஓர் அறிமுகம் –


13 கருத்துகள்:

  1. மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வு தோழர். நம் உறவுகளை மனசார பாராட்டி மகிழ்கின்றேன். நிகழ்வில் நானும் கலந்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....

    பதிலளிநீக்கு
  3. அருமையான செயல் அனைவருக்கும் வாழ்த்துகள்.
    கலாம் ஐயாவின் ஆசைகளில் ஒன்றுதான் மரக்கன்றுகள் நடுதல் இதனை செயல்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் எனது நெஞ்சம் கனிந்த பாராட்டுகள் அப்பா.

    பதிலளிநீக்கு
  4. பதிவிற்கு நன்றி அய்யா ... இடம் : சேங்கைத்தோப்பு செல்லையா கோவில் திடல் ( மருப்பணி சாலையில் வரும்போது வலது புறம் )
    நேரம் : காலை 6 மணி

    பதிலளிநீக்கு
  5. மிக அரிய முயற்சி! அருமையான முயற்சி! மாற்றம் வேண்டும் வேண்டும் என வெறுமே பேசிக் கொண்டிருந்தால் போதாது; மாற்றத்தை நோக்கி ஓரடியாவது நாம் எடுத்து வைக்க வேண்டும்! அதுவும் தனித்தனியாக இல்லாமல் இப்படி ஓர் இயக்கமாக அதைச் செய்தால்தான் காலத்துக்கும் நீடிக்கும்! இந்த இளைஞர்கள் வாழ்த்துக்குரியவர்கள் இல்லை; வணக்கத்துக்குரியவர்கள்! புதுமையான யோசனை! சென்னையில் இதைச் செயல்படுத்த முடியுமா என முயன்று பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. விதை கலாம் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....

    அட... புகைப்படத்தில் நானும் இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  7. குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். இவ்வாறு ஒரு பணியைத் தொடர்ந்து செய்வது என்பது போற்றத்தக்கதாகும். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. போற்றத் தக்க சேவை.சமுதாய அக்கறையில் புதுக் கோட்டை
    நண்பர்கள் காட்டும் ஆர்வம் சிறந்த முன்னுதாரணம். கலாம் ஐயாவின் வரிகள் அற்புதம்சிறந்த ஆலோசனைகள்,வழிகாட்டுதல்களோடு செயல் வீரராகவும் திகழ்கிறீர்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான செயல்கள்....வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

    தொடரட்டும் அவர்களின் பண்பான பணிகள் மென்மேலும்...


    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள்.....நல்லவை தொடரவேண்டும். நல்ல பகிர்வு...மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  11. பாராட்டுக்கள் தோழர். பயனான பணி

    பதிலளிநீக்கு