புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம்
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் –(4)- 2019
2019, அக்டோபர் 12,13 (இரண்டாம் சனி, ஞாயிறு)
---------------------------------
மதுரை நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையிலிருந்து, சுமார் 4கி.மீ. தொலைவில் உள்ள ஜெ.ஜெ.கல்லூரியில் நடக்கவுள்ளது.
பயிற்சியில் கலந்துகொள்ள வருவோர், பின் வரும் விவரங்களுடன் தொகை செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
(1) பெயர்,
ஊர்
(2) செல்பேசி
(வாட்சாப்) எண்
(3) மின்னஞ்சல்
முகவரி (இருந்தால் குறிப்பிடலாம் இல்லையெனில் முகாமில் உருவாக்கித் தரப்படும்)
(4) கீழ்க்காணும்
வங்கிக்கணக்கில் பயிற்சிக்கான நன்கொடை ரூ200 (மாணவரெனில் ரூ.100மட்டும்) செலுத்திய
விவரம்
(ஒரு கல்விநிறுவனத்திற்கு மாணவர் இருவர் மட்டும்)
(ஒரு கல்விநிறுவனத்திற்கு மாணவர் இருவர் மட்டும்)
முகாமிற்கு வர இயலாதவர்கள், இணையத்
தமிழ்வளர்க்கும் எமது முயற்சிகளுக்குத் தங்களால் இயலும் நன்கொடை தருவதும் அன்புடன் வரவேற்கப்படுகிறது.
(12-10-19 இரவு தங்குவதற்கான ஏற்பாடுபற்றியும் தெரிவிக்கப்படும்)
(12-10-19 இரவு தங்குவதற்கான ஏற்பாடுபற்றியும் தெரிவிக்கப்படும்)
-----------------------------------------------------------
(நூறு பேருக்குத்தான் இடம் என்பதாலும்,
விருந்தினர், வல்லுநர், ஒருங்கிணைப்புக்குழுவினர் என சுமார்25பேர் வருவதாலும், முந்திப் பதிவுசெய்யும் 75பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்! எனவே விரைவில் பதிவு செய்ய வேண்டுகிறோம்)
நேரில் பார்க்கும் வாய்ப்பிருப்பவர்கள்,
கவிஞர் மு.கீதாவிடம் நேரில் தந்துவிடலாம். இணையத்தில் புலனத்தில் மட்டும் வெளியிடப்படும்
வரவு செலவுப் பட்டியலே ரசீது
தொகை செலுத்தவேண்டிய வங்கிக் கணக்கு
விவரம் –
NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
(வலைப்பதிவர் திருவிழா-2015க்காக உருவாக்கப்பட்ட கணக்கு)
நாம் நடத்திய “வலைப்பதிவர்
திருவிழா-2015” நிகழ்ச்சிக்கான வரவுசெலவு அறிக்கை இன்றும் இணையத்தில்
உள்ளது காண்க-
(செலுத்திய தொகை, வங்கி, நாள் பற்றிய விவரத்தையும் கீழ்க்காணும் எமது செல்பேசி எண்ணில் தெரிவிக்க வேண்டுகிறோம்)
அடுத்து, அழைப்பிதழுடன் சந்திப்போம்
இணையத் தமிழ்ப்
பயிற்சி வகுப்புகள்
((1) கணினியில்
தமிழ் எளிய அறிமுகம் –
(2) இணையத்தில் தமிழ் வளர்ச்சியும்
வணிக வாய்ப்பும் – உரை –
(3) சமூக வலைத்தளங்களில் செய்யவேண்டியதும், செய்யக் கூடாததும்
(4) தமிழில் வலைப்பக்கம் (Blog)
உருவாக்கம்
விரிவாக்கம் –
(5) தமிழில் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுதல்
(6) தமிழில் புலனம் (whatsaap) செயல்பாட்டுப் பயிற்சி -
(7) தமிழில் முகநூல் (FaceBook) செயல்பாட்டுப் பயிற்சி –
(8) தமிழில் ‘இன்ஸ்டாகிராம்’ செயல்பாட்டுப் பயிற்சி –
(9) தமிழில் சுட்டுரை (Twitter) செயல்பாட்டுப் பயிற்சி –
(10) தமிழில் இணைய (Online) வணிக வாய்ப்புகளும் ஏய்ப்புகளும் –
(11)தமிழில் தட்டச்சு செய்யாமலே குரல்வழிப் பதிவேற்றுதல் -
(12)தமிழில் மின்னூல் (E.Book) / இலவசப் பதிவிறக்கம் தகவல்கள் –
(13)தமிழில் கிண்டில் (Kindle) படித்தல், பதிவிறக்கிச் சேமித்தல்
(14)தமிழில் படைப்புகளை You-Tubeஇல் ஏற்றுதல் செயல்பாட்டுப்
பயிற்சி-
(15)தமிழில் மின்-சுவரொட்டி (Flex) தயாரித்தல்,
செயல்பாட்டுப் பயிற்சி -
(16)தமிழில் பார்க்க வேண்டிய குறும்படங்கள் (மாலை,இரவு)
(17)தமிழில் செல்பேசிப் பயன்பாடு பற்றிய பயிற்சி
இவற்றைப் பற்றிய கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்
மேலும், நீங்கள் செலுத்தும் தொகையை விடவும் கூடுதலான மதிப்புள்ள பொருள், நூல்கள் வழங்கப்படும்
“அப்புறம் எதுக்கு கட்டணம்?” எனில்,
“இலவசம் என்பது எதுவும் இலவசமல்ல”
என்பதைப் புரியவைக்கவே!!
என்ன... புரிகிறதா?
என்ன... புரிகிறதா?
ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள்.
தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து
இணையத்தமிழ்
வளர்ச்சிக்கு
உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத் தமிழால் இணைவோம்!
இணையத் தமிழால் இணைவோம்!
----------------------------------------------------------
நமது முந்திய பயிற்சி முகாம்களைப் பற்றி அறிய -
--பயிற்சி முகாம் தொடர்பான மேல்விவரம் அறிய –
மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com,
செல்பேசி எண்கள்-
நா.முத்துநிலவன்--9443193293, கவிஞர் மு.கீதா-9659247363
பயிற்சி முகாம் பற்றிய முந்திய
அறிவிப்பு
மூத்த பதிவர்கள் பலரும் இதில் கலந்து கொள்வார்கள் என்பது எனது கணிப்பு...
பதிலளிநீக்குஇது "Mini" வலைப்பதிவர் சந்திப்பு நாளாக அமையும் எனது எதிர்ப்பார்ப்பு...
இவ்விரு நாட்களில் உருவாகும் புதிய வலைப்பதிவர்களோடு, அடுத்த வருடம் நடக்கப் போகும் வலைப்பதிவர் சந்திப்பு மாநாடு நடத்த, நீங்களே பொறுப்பு... ஐயா, இது திணிப்பு அல்ல, நம்
────────o─────
──╔╦╗║╔═╦╦╦║─║
╔═╚╝╬╣╠╗║║║║─║
╚═══╝║╚╝╚╝║╚═╣
─────────────║
கலக்குகிறீர்கள் தனபாலன் ஐயா! கருத்துரையின் முடிவில் உள்ள அந்த ‘அன்பு’ படத்தை நீங்கள் எப்படி வரைந்திருப்பீர்கள் என்பதைக் கூட என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கருத்துரையில் சில சொற்களை மட்டும் தடிமனாக்கி (bold) இருக்கிறீர்களே! அஃது எப்படி முடிந்தது?
நீக்குநண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் பல புதுமைகளெல்லாம் செய்கிறார்...
நீக்குஅந்த நுட்பங்களையெல்லாம் தானே வைத்துக்கொள்ளாமல் நமக்கும் கற்றுத் தருவார் என்பதால்தானே அவரை “வலைச்சித்தர்” பட்டம் தந்து நமது வலைப்பதிவர் திருவிழாவில் பெருமைப் படுத்தினோம்! செய்வார்
நீக்குநிகழ்வு வெற்றி பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅய்யா> வணக்கம்.
நீக்குநீங்கள் “அவ்ளோ”தூரத்திலிருந்து வரமுடியாது தான்! ஆனால் அங்கே இருந்துகொண்டே உங்கள் புகழ்பெற்ற வலைப்பக்கத்த்ில் இந்தச் செய்தியைப் பகிர்வது பேருதவியாக இருக்குமே!
“செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?”
அன்பின் ஐயா, தங்கள் அன்பிற்கு நன்றி. இன்று மாலை வெளியிடுகிறேன்.
நீக்குநாளை வெளியிடவுள்ள அழைப்பிதழோடு உங்கள் வலையில்
நீக்குவெளியிடுங்களேன் அய்யா
வெற்றி பெற வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமேலுள்ள வெங்கட் நாகராஜ் அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்லிவைக்கிறேன் நண்பா!
நீக்குஅவர் உள்நாட்டின் உச்சியில் இருக்கிறார்.
நீங்கள் வெளிநாட்டின் நடுவில் இருக்கிறீர்கள் என்றாலும் செய்க!
கண்டிப்பாக ஐயா...
நீக்குநாளைய பகிர்வில் பகிர்கிறேன்.
மீள் அழைப்புக்கு நன்றி ஐயா! கண்டிப்பாக என் சமூக ஊடகக் கணக்குகளில் பகிர்கிறேன். மிக்க மகிழ்ச்சி!
பதிலளிநீக்குநிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபயிற்சி வகுப்புகள் சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி ஐயா.. நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துகள்..வருவதற்கு முயற்சிக்கிறேன்.. நன்றி!
பதிலளிநீக்கு