எங்களது இரண்டு பட்டிமன்றங்களைப் பார்க்க அழைக்கிறேன்

எங்களது இரண்டு பட்டிமன்றங்கள்
பார்க்க அழைக்கிறேன்
--------------------
கலைஞர் தொலைக்காட்சியில்
எங்கள் பட்டிமன்றம்
-----------------------------------------
கடந்த வாரம்
சேலத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட 
எங்கள் பட்டிமன்றம்
மாதா தொலைக்காட்சியில்
வரும் ஞாயிறு (05-04-2015 ஈஸ்டர் தினத்தன்று)
மதியம் 12மணிக்கு ஒளிபரப்பாகிறது.
-------------------------
வரும் 14-04-2015 சித்திரை 1, காலை9மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள பட்டிமன்றம்,
04-04-2015 சனிக்கிழமை மாலை 6மணிக்கு
சென்னை தேனாம்பேட்டை
கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது
நேரில் பார்க்க விருப்பமுள்ள 
சென்னை நண்பர்கள் வருக!
---------------------------
நடுவர்
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ.லியோனி

-- பங்கேற்கும் பேச்சாளர்கள் --
நா.முத்துநிலவன்        கோவை தனபால்,
(அணித்தலைவர்)            (அணித்தலைவர்)
சென்னை விஜயகுமார்,        விழுப்புரம் வல்லபராசு.
------------------------ 


கணினித்தொழில் நுட்பத்தில் வல்ல நண்பர்களுக்கு
ஓர் அன்பு வேண்டுகோள்-
இவ்விரண்டு பட்டிமன்றங்களையும்
ஒளிப்பதிவு செய்து
குறுந்தட்டாகவோ, மின்னஞ்சலிலோ
எனக்கு அனுப்ப முடிந்தால்
அதற்காகும் செலவைத் தந்துவிடுவேன்.
பிறகு நம் வலையில் ஏற்றுவோம். நன்றி.
----------------------
சென்னை நண்பர்கள் ஒளிப்பதிவைப் பார்க்க
04-04-15 அன்று மாலை, 
நேரில் வரமுடியுமெனில்,
என்னைத் தொடர்பு கொள்ளலாம்
எனது செல்பேசி எண்-94431 93293
E-Mail: muthunilavanpdk@gmail.com
----------------------

8 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் நண்பரே பார்க்கிறேன்
    தமிழ் மணம் இரண்டுக்கும் இரண்டு.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    நிச்சயம் பார்க்கிறோம் வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வர முயற்சிக்கிறேன்ஐயா! .பின்னர் தொடர்பு கொள்கிறேன்.
    பட்டிமன்றம் சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பட்டிமன்றம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
  5. பட்டிமன்றம் சிறக்க வாழ்த்துகள் அய்யா...

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  6. மாதா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ சமூக முன்னேற்றத்தைப் பெரிதும் தீர்மானிப்பவர்கள்... அனுபவமிக்க முதியோர்களா? ஆற்றல் மிக்க இளைஞர்களா?” பட்டி மன்றம் பார்த்தேன்.
    ஊர்திக்கு எரிபொருளாக இளைஞர் இருந்தாலும் விபத்தின்றி இயக்கும் ஓட்டுநராக முதியோரின் தேவையையும், அன்னை தெரசாவின் தொண்டு, காந்தியடிகளின் நவகாளி யாத்திரை முதலியன சமூக முன்னேற்றத்திற்கு எப்படி வழி செய்தன என்பதையும் முதியோரின் வழிகாட்டலும் வாழ்த்தலும் அனுபவங்களுமே இளைஞரை நெறிப்படுத்தும் என்பதையும் நறுக் காகச் சொன்னீர்கள். திருந்திய மைந்தன் கதை நல்ல எடுத்துக்காட்டு.
    இளம்பெண்கள் கைப்பேசிச் செயல், 100,108 போன்ற பழைய செய்திகளைத் தவிர்த்திருக்கலாம்.
    கோவை தனபால் “கிழிந்ததைத் தைத்துப் போடும் முதுமை” எடுத்துக்காட்டும் அருமை.
    சேலம் விஜய்குமாரின் மூன்றுவரிக்கவிதை நன்று. தெரசாவின் புகழைக் கவிதையாக்கிய இளைஞன் எடுத்துக்காட்டும் அருமை. அவர் சோடா குடிக்கும் முதுமை, நாற்பதுக்குமேல் நாய்க்குணம் போன்ற சொற்றொடர்களை தவிர்த்திருக்கலாம்.
    வல்லபராசு சாதி மதம், கல்லாமை ஆகியவற்றைக் கிழித்துப் போடும் இளமை என்றதும், நாட்டு விடுதலைக்கு பெரிதும் காரணமாயிருந்த செண்பகராமன், நேதாசி, வாஞ்சிநாதன், திருப்புர் குமரன் சேகுவேரா, யாழ்திலீபன், வேலுநாச்சியார் சான்சி அரசி இலக்குமி ஆகியஆகியோரைச் சுட்டிக்காட்டியதும் சிறப்பு.
    ஆனால் தலைப்பிலிருந்து விலகி நிறைவாக அவர் வழங்கிய கவிதையில் ஒரு சார்புநெடி இருந்ததை மறுப்பதற்கில்லை. இடத்திற்கேற்ப இப்படித்தான் பேசவேண்டுமோ?
    நடுவர் லியோனியின் வழக்கமான நகைச்சுவையோடான கருத்துகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெரியாரிடம் கொடுக்கப்பட்ட “ முட்டாள்” துண்டுச் சீட்டுச் செய்தி பெரியாரின் மதிநுட்பத்தைப் பறைசாற்றுவதாக இருந்தது.
    தீர்ப்பு கூட நீங்களும் நானும் எதிர்பார்த்ததுதான். முதுமை சரியாக வழிகாட்ட இளமை ஆற்றலோடு செயல்பட்டு சமூக முன்னேற்றத்திற்குத் துணை நிற்கும். வழிகாட்டல்தானே அவசியம்.
    மொத்தத்தில் ஒரு நல்ல நிகழ்ச்சி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு