விளக்கை விசாரிக்கும் இருட்டுகள்!

விளக்கை விசாரிக்கும் இருட்டுகள்!

தமிழ்நாடு முழுவதும் 3லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் நேற்று நடந்திருக்கிறது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் சமீபத்தில் தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடந்தில்லை. மாவட்டந்தோறும் அலையலையாகப் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கில் பங்கேற்பு.
முதல்வர் பொறுப்பிலிருக்கும் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த ஆசிரியர் சங்கத் தலைவர்களைப் பார்க்க வரச்சொல்லிவிட்டு, சுமார் பத்துமணிநேரம் காக்கவைத்து, அவமானப்படுத்திவிட்டு பார்க்க மறுத்துத் திருப்பி அனுப்பியிருக்கிறார்.
ஒரு நல்ல சமூகத்திற்கு – நாட்டு முன்னேற்றத்திற்கு இது நல்லதல்ல!
எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவோர் ஆசிரியர்கள் என்பதை ஒருநல்ல அரசியல் தலைவர் உணர்ந்து செயல்படுவதுதான் எல்லார்க்கும் நல்லது.
நான் ஆசிரியப்பணியில் இருந்தபோது 1985இறுதியில் இப்படித்தான் “மத்திய அரசுக்கு நிகரான“ ஊதியம் கேட்டு லட்சக்கணக்கானோர் அதிகபட்சமாக 56நாள் சிறைநிரப்பிப் போராடினோம். அதில் புதுக்கோட்டையில் கைதான முதல்பட்டியலில் -15பேரில்- நானும் ஒருவன் என்பதை என் வாழ்நாள் பெருமையாக நான் இன்றும் கருதுகிறேன். பிறகு...கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு, அனைவரும் விடுதலையானோம்..
அப்போது, முதல் 18நாள்வரை அரசாணையை எரித்தவர்களைக் கைதுசெய்து காலவரையற்ற தண்டனையில் சிறையில் போட்ட அரசு.. அலையலையாக அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பெண் ஆசரியர் உட்பட லட்சக்கணக்கானோர் கைதானோம்! அதே தவறை –18ஆம் நாளுக்குப்பிறகு அரசாணையை எரித்தவர்களை- கைது செய்துவிட்டு அன்றுமாலையே விடுதலை செய்து வீட்டுக்கனுப்பியது...
நாங்கள் கேட்டோம் –“ஒரே தவறை18நாள்வரை செய்தவர்க்குச் சிறை, 19ஆம் நாளிலிருந்து விடுதலையா?
அரசு சொன்னது –“சிறையில் இடமில்லை
நாங்கள் பாடம் நடத்தினோம் அன்றைய அரசியலுக்கு!
சிறையில் நான் நடத்திய கவியரங்க்க் கவிதையை கல்கி முழுப்பக்கமாக வெளியிட்டது. அந்தக் கவிதைதான் எனது “புதிய மரபுகள்“ தொகுப்பில் இடம்பெற்ற வலைப்பக்கத்திலும் இடம்பெற்ற “எங்கள் கிராமத்து ஞானபீடம்
(பார்க்க - 
இன்னொரு பக்கம்-
சத்துணவு ஊழியர்கள் தம் வாழ்க்கையைச் சீரழித்த அரசுக்கொள்கையை எதிர்த்து மறியல் போரில் சிறைநிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையைத் தொலைத்த அவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அரசு இவர்களின் தலைவர்களை அழைத்து உடனடியாகப் பேசி, நல்ல தீர்வு கண்டு, பள்ளிச்சூழல் அமைதியாக நடக்க முன்கை எடுக்க வேண்டும். பொம்மைத் தலைவர்களிடம் பேசிவிட்டு, பொய்யாட்டம் ஆடக்கூடாது!

அந்த ஜேக்டீ போராட்டத்தின்போது, 
கவிக்கோ அப்துல் ரகுமான் ஜூனியர் விகடன் வாரஇதழில் தொடர்ந்து இலக்கியம் எழுதி வந்தார். அப்போது, இந்தப் போராட்டத்தில் கைதாகி சிறையிலிருந்தே எழுதி, ஜூ.வி.நடுப்பக்கத்தில் இரண்டுபக்கம் வெளியான புகழ்பெற்ற 
அவரது கவிதைத் தலைப்பு தான்
நீண்ட ஆழமான கவிதையின் தலைப்பே அனைத்தையும் உடைத்துச் சொன்னது
“விளக்கை விசாரிக்கும் இருட்டுகள்“

மாநில முதல்வரோ
மக்களின் முதல்வரோ 
நான் இன்றைய அரசுக்குச் 
சொல்வது இதுதான்-

குழந்தைகளுக்குப்
பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
போராடத் தொடங்கினால்,
அரசியல்வாதிகளுக்கும்
பாடம் நடத்துவார்கள் என்பது
தமிழ்நாட்டின் வரலாறு!

வேண்டாம் இந்த 
விபரீத நிலை!
நமது அரசு
இதை உணர்ந்து 
செயல்பட வேண்டும்!

---------------------------------
படத்திற்கு நன்றி-
http://www.tntam.in/2015/03/dinakaran.html
--------------------------------

5 கருத்துகள்:

 1. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. //முதல்வர் பொறுப்பிலிருக்கும் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த ஆசிரியர் சங்கத் தலைவர்களைப் பார்க்க வரச்சொல்லிவிட்டு, சுமார் பத்துமணிநேரம் காக்கவைத்து, அவமானப்படுத்திவிட்டு பார்க்க மறுத்துத் திருப்பி அனுப்பியிருக்கிறார்.//

  இரண்டு நாளுக்கு முன்பு நீங்கள் அவரை பார்க்க வருவதாக சொல்லி இருக்க வேண்டும் அப்பதான் பன்னீர் செல்வம் அம்மாவிடம் அனுமதி வாங்கி இருப்பார்.அப்படி செய்யாமல் இப்படி அவரை குறை சொல்வது சரியா?

  தலைவர் வெயிட் பண்னிய நேரத்தில் பன்னீர் செல்வம் அம்மாவை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள தொடர்ந்து 10 மணிநேரம் முயற்சித்து இருப்பார் போல ஆனால் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால்தான் தலைவரை பார்க்க மறுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  இறுதியில் சொல்லிய கருத்து கொஞ்சம் சிந்திக்க வைத்தது...சொல்வார்கள்
  விரால் இல்லாத மோட்டைக்கு தத்து குறவ தலைவன் என்பது போல ஐயா..இது ஒரு
  பழமொழி...இதைய நிலைதான் தாங்கள் சொல்லியது... கருத்தும்

  விரால் மீன் இல்ல குட்டையில் ஆகையும் கழிக்கப்பட்ட மீன்தான் தத்து குறவை...இதுதான் தலைவன்....ஆகா...ஆகா... த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. இவ்வாறான நிகழ்வுகளை வைத்து பிழைப்பு நடத்துகின்ற அரசியல்வாதிகள் திருந்துவது சிரமமே.

  பதிலளிநீக்கு
 5. வேண்டவே வேண்டாம் இந்த விபரீத நிலை...

  சிறையில் நடத்திய கவியரங்க் கவிதையை இப்போது தான் அறிந்தேன் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு