ஆறறிவில் ஓரறிவு அவுட்டு!
- மிஞ்சும்
அஞ்சும்கூட இருக்குமின்னா
அதுவும்கூட டவுட்டு!
--என்று எழுதியவர்--
மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்!
மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்!
(1)
(2)
(3)
(4)
------------------------------------------
இதுபற்றி
யாராவது ஏதாவது
எழுதுங்கள்
(எனக்கு வரும் எரிச்சலில்
கன்னா பின்னான்னு
திட்டத்தான் தோணுது)
நிஜ வாழ்க்கையில் முழுமையாக எதையும் துறக்க முடியாதவர்கள், முழுமையாக துறந்தவர்களிடம் அவர்களுக்கு தேவையான எதையோ பெறக்கூடிய ஆர்வம் இதில் தெரிகின்றது.
பதிலளிநீக்குஅய்யா நீங்கள் புகழ்பெற்ற எழுத்தாளர்தான்.. ஒப்புக் கொள்கிறேன். இதில் வஞ்சப்புகழ்ச்சி இருப்பதாக என் சிற்றறிவுக்கு எட்டுகிறது. சரிதானா?
நீக்குநான் எதார்த்தமாக எழுதியதை சங்கடமாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்.
நீக்குஅய்யா..அய்யா.. நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும். தவறாகப் புரிந்து கொள்ளும்படி நான் எழுதிவிட்டதைத் தங்கள் கடிதம் பார்த்துத்தான் புரிந்துகொண்டேன். தங்களைப் புண்படுத்துவது என் நோக்கமல்ல. அப்படித் தோன்றினால் அன்புகூர்நது மன்னிக்க வேண்டுகிறேன்.
நீக்குஅய்யா வணக்கம்.
பதிலளிநீக்குசமணர்களின் ஒரு பிரிவினரான திகம்பரர்கள் ( திக் + அம்பரர் = திசைகளையே ஆடையாகக் கொண்டோர்) என்னும் பிரிவினர் இவ்வாறிருப்பர் என்றும் ஊர் எல்லையினின்று விலகி மலைகளிலும் குன்றுகளிலும் தம்பள்ளியமைத்துறைவர் என்றும் படித்ததுண்டு.
இவர்களின் இதுபோன்ற செயலை இழித்தும் பழித்தும் வைதிக சமயிகள் குறிப்பாகத் தேவார திருமுறைகளில் ( இன்னும் குறிப்பாகத் திருஞான சம்பந்தர்) பல இடங்களில் சாடி இருப்பர்.
நீங்கள் நான்காவதாகக் காட்டியுள்ள படம் அவ்வகை அமணராயிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
அதற்கு முன் உள்ள படங்கள் வைதிகர் உடையது. வைதிகத்தில் இதற்கு இடமிருப்பதாக நான் அறிந்தில்லை. இது புதிது.
ஒருவேளை வழமைபோலவே, மதங்கள், தமக்கு முன்னுள்ள சமயக்கொள்கைகளில் இருந்து ஏற்பன எடுத்து முலாம் பூசித் தம் நெறியென வழங்குதல் போலே ( நல்ல எடுத்துக்காட்டு, புலால் உண்ட வைதிகம் , சமணத்தில் இருந்து அதை எடுத்துத் தன்வயப்படுத்தி தமக்குரிய மேட்டிமை நெறியாகக் கைக்கொண்டமை )
எனக்கென்னமோ மக்கள் மத்தியில் இவர் நிலைகாணத் தோன்றுவது,
உலகொடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
என்பதுதான்.
நன்றி
வணக்கம் விஜூ. விளக்கம் அருமை. இவர்களைப் பற்றிய வரலாற்று விளக்கத்தைவிட, இன்றைய தேவைபற்றிச் சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து.
நீக்குதிருக்குறளில் செய்த மாற்றம் அருமை.
ஆனால், இவர்கள் பலகற்றார் போலவா தெரிகிறார்கள்?
வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்கும் நன்றி.
ஆடை துறந்து நிற்கும் சாமியார்களை (? ) காட்டிலும் அவர்களை கும்பிடும் மற்றவர்கள் மன நலம் குன்றியவர்களாகவே தோன்றுகிறது
பதிலளிநீக்குஅதுதான் அதேதான்..
நீக்கு“ஏமாற்று என்னை ஏமாற்றாமல் விட்டுவிடாதே“ எனும் “அடிமை மோகி“கள் இருக்கும் வரை ஆசாமி சாமியாடத்தான் செய்யும்
கேட்டால் பக்தியின் ஒரு நிலை என்பார்/ன்,
பதிலளிநீக்குவேடிக்கை மனிதர்கள்
பதிலளிநீக்குதம +1
வேதனை வளர்க்கும் வேடிக்கை. நன்றி கரந்தையாரே
நீக்குஎன்னத்தை சொல்ல, இதுதான் தேசிய உடை என்று நம் ஆடையை களையாமல் இருந்தால் சரி
பதிலளிநீக்குமோடி வித்தை அதைத்தானே சொல்லவருகிறது? நன்றி நண்பரே
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
இதுதானா முற்ரும் திறந்த நிலையோ......பார்த்தவுடன் சிரிப்பே வந்தது.... ஏன் என்று கேட்டால் பக்தி நிலை என்பார்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அவசரமா? எழுத்துப்பிழை... இதில் இருந்தால் பரவாயிலலை.
நீக்குநீங்கள் அறிவித்திருக்கும் போட்டி அறிவிப்பிலும், ஒட்டச்சொல்லி அனுப்பிய வலையொட்டியிலும் இருக்கலாமா? திருத்துங்கள்.
அய்யய்யோ...!
பதிலளிநீக்குஓ... இப்படித்தான் அந்த சாமிகளைக் கும்பிடணுமா ?
நீக்குவெட்கப்படவேண்டிய நிகழ்வுகள். இவ்வாறான மூட எண்ணங்களிலிருந்து எப்போது நாம் விடுபடப்போகிறோம் எனத் தெரியவில்லை.
பதிலளிநீக்குவிடுபடுவதா? அனைத்துத் துறைகளும் இதை வளர்க்கத்தானே நீர்வார்க்கப்படுகிறது? பாவம் மக்கள்..
நீக்குகாட்டு மிராண்டித் தனத்திற்கு கைவாய் பொத்தி கருத்திழப்பதில் காவிக்குக் காக்கிச் சளைப்பில்லை காண்.
பதிலளிநீக்குகாக்கி பாவம் எடுப்பார் கைப்பிள்ளை, காவிதான் அரசை ஆட்டிவைக்கும் செல்லப்பிள்ளை. நன்றி பாவலரே.
நீக்குஐயா எங்கிருந்துதான் பிடித்தீர்கள் இந்தப் படங்களை?. சட்டென்று சிரிப்புத்தான் வந்தது.
பதிலளிநீக்குவாட்ஸ்-அப் இல் உங்களுக்கு வருவதில்லையா?
நீக்குவாரி வழங்குகிறார்கள்.. சிலவற்றைப் பிடித்துப்போட்டேன்.
நன்றி முரளி.
எத்தனை பிரேமானந்தா, நித்தியானந்தா வந்தாலும் ஏமாந்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் கேடு கெட்ட ஜென்மங்களை எப்படித் திருத்துவது? பட்டுக்கோட்டை சரியாகத்தான் பாடியிருக்கிறார்!
பதிலளிநீக்குஇவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். கும்பமேளா சமயத்தில் மட்டும்தான் வெளியே வருவார்கள். மற்ற நேரங்களில் இவர்களை பார்க்க முடியாது. கூட்டமாக வந்து குவியும் இவர்களுக்குத்தான் அங்கு முதல் மரியாதை. சில மணி நேரம் இருந்துவிட்டு மீண்டும் மறைந்து விடுவார்கள். அந்த கொஞ்ச நேரத்தில் இவர்கள் செய்யும் அலம்பல் தாங்கமுடியாது. அதிலும் ஆணின் பிரெத்யேக உறுப்பு இவர்களிடம் படும் பாடு இருக்கிறதே. வாயிருந்தால் அழுதுவிடும். இந்த நாகா சாமியார்கள் வித்தியசமானவர்கள்தான்.
பதிலளிநீக்குமுன்பே இந்த பதிவை படித்து விட்டேன். என்ன எழுதுவது என்று அப்போது எழுதவில்லை.
பதிலளிநீக்குவட இந்தியாவில், இந்துமதத்தில் ஒருசாராரின் வழிபாடாக நிர்வாண சாமியார்களுக்கு செய்யும் மரியாதை என்று நினைக்கிறேன்.
ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், திருச்சியில் அவர்களது நிர்வாண சாமியார்களை கடைவீதியில், ஊர்வலமாக அழைத்து வர எதிர்ப்பு கிளம்பியதால், இப்போதெல்லாம் அவர்களது (ஜெயின்) பகுதியில் இருக்கும் மண்டபத்திலேயே அவர்களுக்கு வழிபாடு செய்து கொள்கிறார்கள். அவ்வப்போது இந்த செய்தியை திருச்சி பத்திரிகைகளில் காணலாம்.
அதெல்லாம் சரி. எங்கோ நடந்த, மற்றவர்களுக்கு அருவருப்பான இந்த படங்களுடன் கூடிய செய்தியை நீங்கள் ஏன் உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. படங்களைப் போடாமலேயே எதிர்ப்புக்குரல் கொடுத்து கண்டித்து இருக்கலாம் என்பது எனது கருத்து.
த.ம.7 (இரண்டு நாட்கள் ஆகி விட்டால், இந்த வாக்களிப்பு கணக்கில் வருவதில்லை; இதுபற்றி தாங்கள் ஒரு கட்டுரை எழுதவும்)