நடிகையின் நிர்வாணத் தேர்தல் விளம்பரம் - சகோதரிகள் மன்னிக்க


காதலர்தினத்தைக் கலாச்சாரக் கேடு என்றவர்கள்-இப்போது செய்துவரும் இந்த      யூ-ட்யூப் விளம்பரத்தைப் பாருங்கள்... (சகோதரிகள் மன்னிக்க வேண்டும். இந்தப் படம் ஒன்றுதான் நம் வலைப் பக்கத்தில் போடுமளவுக்கு “நாகரிகமா” இருக்கு) மற்ற படங்கள் இணைப்பில் உள்ள யூ-ட்யூபில்...


http://www.youtube.com/watch?v=n5o0X8uy6U0

இதற்கு நான் விளக்கம் எழுதினால் வருங்காலப் பிரதமரைத் திட்டுகிறேன் என்பார்கள்...

நான் ஒன்னுமே சொல்லல சாமீ!

நம் வீட்டுப் பெண்கள் இந்த விளம்பரத்தில் தவறில்லை என்று சொல்லிவிட்டால் அந்தப் பெண் விளம்பரம் செய்யும் சின்னத்திற்கே ஓட்டுப் போடுங்கள்... மோடி பிரதமராகட்டும்!

இந்த விளம்பரத்தை அந்தக் கட்சியோ, அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளரோ தந்திருக்க மாட்டார்கள் என்றும் அவர்களின் ஒப்புதலுடன் வந்திருக்காது என்றும் நான் நம்ப விரும்புகிறேன்...
ஆனால், இன்றுவரை 42,580பேர் பார்த்திருக்கும் இந்த விளம்பரத்தை இதுவரை யாரும் மறுக்கவில்லை!
அதில் வந்திருக்கும் விவரத்தையும் தருகிறேன் -

----------------- Published on Feb 10, 2014------------------------------- 
Bollywood Actress create sensation to make Narendra Modi next Prime Minister.  Actress goes nude to promote Narendra Modi
------------------------------------------------------------------------------------------- 


அதில் உள்ள பின்னூட்டத்தில் இந்த நடிகையின் தந்தை ஒரு காங்கிரஸ்காரர் என்றும் அவர் மோடியை இழிவுபடுத்தவே இப்படிச் செய்திருக்க வேண்டும் என்றும் ஒருவர் கருத்துச் சொல்ல, அப்படியானால், ஒரு தந்தையே தன் மகளை இப்படி விளம்பரம் செய்யச் சொல்லியிருப்பாரா என்று எதிர்க்கேள்வி வந்திருக்கிறது. எது எப்படியோ, கி்ட்டத்தட்ட ஒருமாதமாக இந்த விளம்பரம் யூட்யூபில் இருக்கிறது. இதுவரை யாரும் மறுக்கவில்லையே!????

(அது சரி இந்த விளம்பரத்தை நமது வலைப்பக்கத்தில் நமது சகோதரிகள் பார்த்தால் நிச்சயம் திட்டுவார்களே, எனில்...
எடுத்துச் சொன்ன நம்மைத் திட்டினால் திட்டட்டும். விளம்பரம் செய்தவர்களின் தராதரத்தை இதன்மூலமாவது புரிந்துகொண்டால், அதற்காக நாம்  எவ்வளவு திட்டும் வாங்கிக்கொள்ளலாம். காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொள்ளலாம். தப்பே இல்லை. பொதுக்காரியங்களில் மான அவமானம் பார்க்கக் கூடாது என்று தந்தை பெரியார் நமக்குச் சரியாகவே சொல்லிக் கொடுத்திருக்கிறார்.)

தாமரை சேற்றில் பிறக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இப்படிச் சேறாகவே இருக்குமா என்று கேட்க விரும்புகிறேன்.
-----------------------------------------------------------------

23 கருத்துகள்:

 1. சே எவ்வளவு மோசமான நிலை?.பார்த்த உடனே பெண்களை தெய்வமாக போற்றும் இந்து மதம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாமா?தெய்வமாக போற்றிக்கொண்டே பாலியல் வன்கொடுமை செய்யும் நாட்டில் என்னத்த சொல்றது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மலிவான விளம்பரத்தை அவர்களே செய்யா விட்டாலும், செய்தவர்களைக் கண்டிப்பதுதானே முறை? அது செய்யாவிடில் இதற்கு ஒப்புதல் தந்ததாகத்தானே பொருள்? அதுதான் என் வருத்தம்... பார்க்கலாம் மே-12முடிய (மே-16தொடங்க) என்ன நடக்கிறதென்று பார்க்கத்தானே போகிறோம்?

   நீக்கு
 2. ஆர்வக் கோளாறினால்
  விளம்பர ஆசையினால்
  சிலர் செய்யும் இதுபோன்ற முட்டாள்தனமான
  செய்கைகளுக்கு தாமரையை எப்படிப் பொறுப்பாக்கமுடியும் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை நீங்கள் மிகமிகவும் நல்லவன் என்றோ கெடடவன் என்றோ சொல்கிறீர்கள்... (என்று வைத்துக்கொள்வோம்?) நான் மௌனமாக இருந்தால் நீங்கள் சொ்லவதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன் என்பதுதானே நடைமுறைப் பொருள்? அதுதான்....

   நீக்கு
 3. வெட்கப்படவேண்டிய அதேசமயம் சிந்திக்கவேண்டிய செய்தி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் வெட்கப் படுவதாகத் தெரியவில்லை. நாமாவது சிந்திக்க வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு... நன்றி அய்யா

   நீக்கு
 4. பதில்கள்
  1. தவறு செய்தவர் வெட்கப் படவேண்டும்- ஆணாக இருந்தாலும். என்பதுதான் நம் எதிர்பார்ப்பு

   நீக்கு
 5. மேக்னா பட்டேல் பெரிதும் அறியப்படாத நடிகை.சிலவேளைகளில் அவர் பிரபலத்துக்காகவும் இப்படிச் செய்திருக்கலாம்.இதையும் பாருங்கள்
  http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=217696&cnt=2

  பதிலளிநீக்கு
 6. இந்தச் சந்தேகம் எனக்கும் இருந்தது தினேஷ், அதனால்தான் என் பதிவில், “இந்த விளம்பரத்தை அந்தக் கட்சியோ, அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளரோ தந்திருக்க மாட்டார்கள் என்றும் அவர்களின் ஒப்புதலுடன் வந்திருக்காது என்றும் நான் நம்ப விரும்புகிறேன்...
  ஆனால், இன்றுவரை 42,580பேர் பார்த்திருக்கும் இந்த விளம்பரத்தை இதுவரை யாரும் மறுக்கவில்லை!“ என்று போட்டிருந்தேன் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன்... இது வெறும் நடிகை சார்ந்த விடயமாகத் தெரியவில்லை நண்பரே... பின்னணியில் இருப்பவர் ஆதரவாளரா எதிர்ப்பாளரா என்பதல்ல இதை அவர்கள் (தொடர்புடைய இரண்டு தலைவர்களுமே) ஏற்கிறார்களா மறுக்கிறார்களா என்பதுதான் நம் கேள்வி. இரண்டுபேருமே மறுதததாகத் தெரியலயே? அப்படின்னா....?

   நீக்கு
 7. வளர்ந்த நாடுகளில் இந்த்போன்ற விளமபரங்கள் சகஜம்..., அங்குள்ளவர்களும் இதை மிக எளிதாகவே எடுத்துக் கொள்வர், ஏனென்றால், அவை முன்னேறிய நாடுகள்...
  70 கோடி மக்களுக்கு கழிப்பறை கூட இல்லாத இந்த சமூகத்திற்கு இது போன்ற கேடு கேட்ட விளம்பரங்கள் எதற்கு என்றுதான் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ......ஆனால், “வளர்ந்த நாடு, முன்னேறிய நாடுகள்“ என்னும் சொற்கள்தான் புரியவில்லை... உங்கள் கருததின் பிற்பகுதியை நான் அப்படியே ஏற்கிறேன்.

   நீக்கு
 8. இதேபோன்ற இன்னொரு நிர்வாண நடிகை ராகுல் காந்தி படத்தை ஏந்தி விளம்பரம் கொடுத்த படத்தையும் வெளியிட்டிருக்கலாமே! அதற்கும் இதற்கும் சரி-அவ்வளவே! சுயவிளம்பரத்திற்காக. நடிகைகள் இப்படி செய்வது வாடிக்கைதானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதையும் நமது கருத்தாளர் டினேஷ் அனுப்பிய இணைப்பின் வழியாகப் பார்த்தேன். அது செட்-அப் என்பது அப்பட்டமாகத் தெரிகிறதே! “கலாபூர்வமாக“ இதுபோல இல்லையே! எனக்கு ராகுலா, மோடியா என்பது முக்கியமில்லை அய்யா. நாடுதான் முக்கியம்... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய, இந்நாட்டின் பெருமையின் முன் எந்தத் தனி மனிதரும் முக்கியமில்லை. இந்த மட்டரகமான விளம்பரத்தை அவர்கள் ஏற்கிறார்களா இல்லையா என்பதே என் முக்கியமான கேள்வி நன்றிஅய்யா

   நீக்கு
 9. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கேவலமான செயல்கள் கூட நடக்கலாம்!
  அவர்கள் அனுமதித்தாலும் இவருக்கு எங்கே போனது புத்தி எனத்தெரியவில்லை? தைரியமான பதிவு ஐயா! இதுபோல் இன்னும் எதிர்பார்க்கின்றோம் உங்களிடமிருந்து.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் என்ன தைரியம் வந்தது ஜெயசீலன்? இதை மறுப்பதில்தான் தைரியம் இருக்கிறது. நான் சொல்வது புரிகிறதா?

   நீக்கு
  2. "இதற்கு நான் விளக்கம் எழுதினால் வருங்காலப் பிரதமரைத் திட்டுகிறேன் என்பார்கள்...",,,"தாமரை சேற்றில் பிறக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
   இப்படிச் சேறாகவே இருக்குமா என்று கேட்க விரும்புகிறேன்."


   இதைத் தான் சொன்னேன் ஐயா! தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்!

   நீக்கு
 10. அடக்கடவுளே....இதுவரை இதை எதிர்த்து ஒரு குரல் கூட கேட்கவில்லையே.....அதன் நடிகையின் படங்களைப் பார்ப்பதை பெண்கள் தடுக்க வேண்டும்...பெண்கள் அமைப்புகள் கூடவா அமைதியாய் இருக்கின்றன????

  பதிலளிநீக்கு
 11. கால மாற்றத்தின்
  கோலத் தோற்றமோ?
  தேர்தல் முடிவு
  என்ன ஆகுமோ?
  "???"

  பதிலளிநீக்கு
 12. இப்படி ஒரு விளம்பரம் - அந்த நடிகைக்கோ கட்சிக்கோ தேவையா?

  பல விளம்பரங்கள் இப்படி நமது வீட்டிற்குள் வர ஆரம்பித்து விட்டன - நமது தொலைக்காட்சிப் பெட்டி வழியாக .... :(

  பதிலளிநீக்கு