ஆபிரகாம் லிங்கன் தன் மகனையும் சமூகத்தையும் சமமாக நேசித்தவர்... அவரது கடிதம் கேளுங்கள்.




பெரியவுங்க
எப்பவும்
பெரியவுங்கதான்!

நான் என் மகளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அது பெரும்பாலும் அவளது கல்வியைப் பற்றியதாக இருந்தது.

பள்ளி, கல்லூரியைத் தாண்டியும் கல்வி எப்படி விரிந்து கிடக்கிறது என்று பிரமாதமாக எழுதிவிட்டதாக நினைத்தேன்.



இன்றுவரை, எனது வலைப் பக்கத்தில் மிக அதிக நண்பர்கள் வாசித்துக்கொண்டே இருக்கும் படைப்பாக இதுவே இருக்கிறது.
பார்க்க -http://valarumkavithai.blogspot.in/2013/06/blog-post_9.html

ஆனால்...
நம்மைவிட அறிவும், அனுபவமும்
இரண்டுக்கும் மேலாக இந்த சமூக முன்னேற்றத்தை நேசிக்கும் பண்பும் கொண்ட ஆபிரகாம் லிங்கன் அவர்கள் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தைப் படித்த-கேட்ட-பிறகு, நாம் இன்னும் எவ்ளோ தூரம் போகவேண்டியிருக்குன்னு டக்னு புரிஞ்சிருச்சி...

என்னைக் கவிஞர்னு சொல்றாங்க... சரிவிடுங்க, ஆனா... லிங்கனை யாரும் கவிஞர்னு சொன்னதாத் தெரியல... கேட்டுப் பாருங்க ஒவ்வொரு வரியும் கவிதையாக் கொட்டுது.

பெரியவுங்க
எப்பவும்
பெரியவுங்கதான்!
நாம நாமதான்...இல்லியா?

லிங்கனின் கடிதத்தை இந்த நண்பர் தன் பாந்தமான குரலில் படிக்கக் கேட்பது பக்திவயப்பட்டவர்கள் கீதோபதேசம் கேட்பது போல இருக்கு... கேட்டுப் பாருங்களேன்... நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுடன் கேளுங்கள்...
http://nhisham.blogspot.in/2014/03/blog-post_13.html

கேட்டுட்டீங்களா... அப்படியே அந்தத் தளத்தில் போய் ஒரு நன்றியை என் சார்பில் போட்டு, வாழ்த்திட்டுப் போங்க...நன்றி.
---------------------------------------------------

(அப்படியே....

பொள்ளாச்சி, கோவை, கூடலூர் பகுதி 
வலைப்பூ நட்பூக்களுக்கு...
ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்ங்க...

நாளை 15-03-2014 சனிக்கிழமை பிற்பகல் 3-00மணிக்குப் பொள்ளாச்சி பி.ஏ.பி.கல்லூரி ஆண்டுவிழாவில் சிறப்புரை

மாலை7-10 மணிவரை கோவையில் நண்பர்கள் சந்திப்பு.

16-03-2014 ஞாயிறு காலை 10மணி - 2மணி. கூடலூர் (ஊட்டி தாண்டி!)
“மக்கள் ஒற்றுமைக் கலைவிழா”வில் சிறப்புரை

இந்தப் பகுதிகளில் இருக்கும்
நம் வலை நண்பர்களை, நேரில்
சந்திக்க முடியுமானால் மிகவும் மகிழ்வேன் -
எனது அலைபேசிக்கு அழைக்க - 94431 93293.
இயலுமெனில் நேரில் சந்திக்கலாம்)

26 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உங்களைப் போன்றவர்களின் ஆசிகளால்தான் இந்த 58வயதிலும் ஓடிக்கொண்டே நாடுமுழுவதும் நாவால் நடந்து திரிகிறேன். வரும் 11-05-2014 வந்தால், 59 !அப்புறம்? அரசுஊழியத்திலிருந்து விடுதலை விடுதலை விடுதலை!!!! நன்றி அய்யா.

      நீக்கு
  2. பகிர்வுக்கு நன்றிங்க சகோ!

    பதிலளிநீக்கு
  3. பண்பால் எப்பொழுதும் உயர்வாகக் கருதப்படும் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவற்றை உரிய நேரத்தில் நாம் கற்றுக்கொள்வதே நல்ல பயனைத் தரும். வாழ்வின் பொருளை அறிய அதனை ஒரு வாய்ப்பாகக் கொள்ளவேண்டும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வின் பொருளை அறிய அதனை ஒரு வாய்ப்பாகக் கொள்ளவேண்டும் - ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகம் அய்யா

      நீக்கு
  4. கடிதத்தை கேட்கிறேன் ஐயா...

    தொடர்ந்து கலக்கல் பயணங்கள்.... அசத்துங்க ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலக்கல்...? ஓ நீங்கள் இன்னும் இளைஞராகவே இருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு பேச்சையும் இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பாகவே கருதுகிறேன் குமார்! கரும்பு தின்னக் கூலியும் தந்து கூப்பிடுகிறார்கள் ஓடுகிறேன் குழந்தை உடல் நலமா?

      நீக்கு
  5. ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு ஆசிரியரும் படிக்கவேண்டியது இக்கடிதம்..
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் மூன்று குழந்தைகளைப் பெற்றவன் உலகத்துக் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகளே என்னும் நினைப்பில்... யாதும் ஊரே, யாவரும் நம் குழந்தைகளே! கூடுதலாக நான் ஆசிரியர் வேறு! இரண்டு முனைப் பணி! நன்றி சகோதரி.

      நீக்கு
  6. எனது ஆதர்சத்திற்குறிய கடிதம்....
    மீண்டும் ஒருமுறை படிக்கிறேன்...
    நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்பப்ப படிக்கணும்னு தான் அந்த வலைப்பக்கத்தையே இணைப்பாகத் தந்தேன்... நன்றி மது!

      நீக்கு
  7. முன்பு உங்கள் கடிதத்தை படித்தபோதே
    எனக்கு லிங்கன் மற்றும் நேருவின் கடிதங்கள்
    நினைவில் வந்தது அண்ணா! அத்தனை செறிவாய் இவர்களுக்கு சற்றும் குறையாதது தான் உங்கள் கடிதம். இது முகஸ்துதியோ ,ஐவைத்தலோ அல்ல அல்ல ! பயணம் சிறக்கட்டும் அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை இல்லை நீ ஐஸ் வைக்கமாட்டாய், தவறு என்று தெரிந்தால் சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டாய் என்று தெரியும். இருந்தாலும், அன்பின் மிகுதியில் நீ சொல்லும் வார்த்தைகளை நான் புரிந்துகொள்வேன்.. எப்படியானாலும், நான் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்பதைக் கவிஞரல்லாத லிங்கனின் கவிதைசொட்டும் வரிகள் எனக்குக் கற்றுக்கொடுத்தன என்பதை நீயும் ஒப்புக்கொள்வாய் என்று நம்புகிறேன். சரியா? அடுத்து ஒவ்வொரு கூட்டத்தில் பேசும்போதும் நான் உபதேசம் செய்வதில்லை, கற்றுக்கொள்கிறேன் என்றே நம்புகிறேன். இன்று தமிழ் இந்துவில் ஐன்ஸடீன் பற்றிய கட்டுரைகள் பார்த்தாயா?

      நீக்கு
    2. உங்கள் பதிலை பார்த்தவுடன் online ல் படித்தேன் அண்ணா !
      உங்கள் நேற்றைய பாடம் என் இன்றைய பாடமாகிவிட்டது !
      சமீபத்தில் body language பற்றி ஒரு புத்தகம் படித்தேன், அதில் ஒரு வரி "இன்று போல் மீடியாக்கள் அன்று இல்லாததால் அச்சுஊடகங்கள் மட்டுமே இருந்ததால் லிங்கன் போன்ற மோசமான பேச்சாற்றலும் அருமையான எழுத்தாற்றலும் கொண்டோர் வெல்லமுடிந்தது" என்கிறார் ஆசிரியர்!!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தாயாக மட்டுமின்றி தகுதியான ஆசிரியராகவும் நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி கவிஞரே!

      நீக்கு
  9. வணக்கம் சகோதரா!
    நிச்சயம் எல்லோரும் கேட்க வேண்டிய கடிதம் அவ்வளவும் பொன் மொழிகளே...! நன்றி ! தொடர வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
  10. //பெரியவுங்க
    எப்பவும்
    பெரியவுங்கதான்!//
    உங்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன் ஐயா.
    பொள்ளாச்சி விழா சிறக்க வாழ்த்துக்கள்
    நன்றிஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கரந்தையாரே. பொள்ளாச்சி முடித்து, கூடலூர் போய் ஒருவழியாகி வந்தேன். நிகழ்ச்சிக்ள் சிறப்பாகவே இருந்தன. பயணக் களைப்புத்தான் இன்னும் இரண்டுநாளாகும்போல...

      நீக்கு
  11. மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது. அருமை மகன் எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு - உருகும் அன்பான அப்பா!..

    ஐயா தாங்கள் சொல்லிய மாதிரியே - செய்து விட்டேன்!..
    இனிய பதிவுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா. எங்கே தவறாக எண்ணிவிடுவீர்களோ என்று குழப்பத்துடனே இருந்தேன். தங்களின் பெருந்தன்மைக்கு என் தலைதாழ்ந்த வணக்கம். நம் நட்பு தொடரட்டும். நன்றி.

      நீக்கு
  12. "வரும் 11-05-2014 வந்தால், 59 !
    அப்புறம்?
    அரசுஊழியத்திலிருந்து விடுதலை" என்றாலும்
    திண்டுக்கல் லியோனியும் விடார்...
    தமிழக உறவுகளும் விடார்...
    நூறு கடந்தாலும்
    தங்கள் பணி தொடரவேண்டும்!
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு லியோனி அவர்களோடு கட்சி நிகழ்ச்சிகளுக்கு நான் போவதில்லை என்பதை அவரிடமே சொல்லிவிட்டேன். எந்த வழியிலும் நம் பணி தொடரும்... பார்க்கலாம். தங்கள் வாழ்த்து பேராசையூட்டுவதாக உள்ளது. எனினும் தங்களின் அன்புக்கு நன்றி

      நீக்கு
  13. முத்துநிலவன் ஐயா முதலில் மன்னிக்கனும். என் கடவுச்சொல்லை தொலைத்துவிட்டேன் கண்டுபிடிக்க தாமதமாகிவிட்டது. என் பதிவை தாங்கள் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். யார் மொழிபெயர்த்தார் என்று தெரியவில்லை ஆனால் என் குரலில் YouTube Channelஇல் நான் பகிர்ந்தது. உங்கள் வாழ்த்து இன்னும் ஊக்கம் தந்தது நன்றி!

    பதிலளிநீக்கு