புதுக்கோட்டை, மார்ச் 24-
எந்தத்
துறைக்கான ஆய்வாக இருந்தாலும் அது சமூகத்திற்கான தேவையை வெளிப்படுத்துவதாக
இருக்க வேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின்
மாவட்டத் துணைத் தலைவரும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்
பேராசிரியருமான முனைவர் சு.மாதவன் மத்திய அரசின் 'செம்மொழி ஆய்வறிஞ'ருக்கான விருதை மேதகு குடியரசுத் தலைவர் பிரணாப் முகரஜியிடமிருந்து
பெற்றுள்ளார். பாராட்டுச் சான்றுடன் ஒரு லட்சரூபாய் வழங்கப்படுகிறது.
அவருக்கான
பாராட்டு விழா தமுஎகச திருக்கோகர்ணம் கிளையின் சார்பில் புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு
கேட்டரிங் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு
கிளைத் தலைவர் எஸ். இளங்கோ தலைமை வகித்தார். செயலாளர் செ.சுவாதி வரவேற்றார்.
மாவட்டச் செயலாளர் ரமா.ராமநாதன், பொருளாளர் சு.மதியழகன், கிளைப் பொருளாளர் மகா.சுந்தர், விமலா
மாதவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விருது
பெற்ற முனைவர் சு.மாதவனுக்கு நினைவுப் பரிசு வழங்கி மாநிலச் செயற் குழு உறுப்பினர்
கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றினார்.
அவர்
பேசும் போது,
'15,20ஆண்டுகளுக்கு
முன்னால் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களும், வழக்கறிஞர்களும்
இப்பொழுதும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால்தான் அவர்களால் தற்காலத்திலும்
நிலைத்து வெற்றிபெற முடிகிறது. அது போலத்தான் ஆசிரியர்களும். இன்றைய செய்திகளையும், புதிய சமூக-இலக்கியப்போக்குகளையும் அன்றன்றும்
-படித்து-கற்றுக் கொண்டே இருந்தால்தான் சிறந்த மாணவர்களை மட்டுமல்லாமல் முன்னேறும்
சமூகத்தையும் உருவாக்க முடியும்.
இன்றைய
பள்ளிக்கூடங்களில் 11,12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், தமிழைப் புறக்கணிக்குமாறு உயர்கல்வி அனைத்தும் ஆங்கிலத்தில்
இருக்கிறது. வேலைவாய்ப்புவரை ஆங்கிலம் உதவலாம், வாழ்நாள் முழுவதும் வரக்கூடியதாகத் தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன. பெற்றோர்கூட இதைப் புரிந்துகொள்வதில்லை.
அதனால்தான் பல முனைவர் பட்ட ஆய்வுகள் வெறும் தரவுகளாகவே இருக்கின்றன. ஆய்வுகள் சமூகத்தின் தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். அந்த வகையில் முனைவர் மாதவன் தமிழ் இலக்கியங்கள் குறித்த தரமான ஆய்வுகளை மேற்கொண்டு
வருகிறார். தமிழறிஞர்களின் பட்டியலில் அவர் முக்கிய இடம் வகிப்பார்” என்றார்.
நிறைவாகப்
பேராசிரியர் முனைவர் சு.மாதவன் ஏற்புரையில், தானும் தன் துணைவியார் விமலாவும், வறுமையிலிருந்து போராடி வளர்ந்து வந்த பின்னணியில் முற்போக்கு
இலக்கிய வளர்ச்சியின் அவசியத்தை உணர்ந்து அவ்வழியே தமது ஆய்வு தொடரும் என்று
தெரிவித்தார்.
கூட்டத்தில் செய்தியாளர் மீனாட்சி சுந்தரம், பேராசிரியர்கள் சுபாஸ்சந்திரபோஸ், சிவகவி காளிதாசன், உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் (ஓய்வு) வெங்கடசுப்பு, வடடார வள மையப் பயிற்சியாளர சங்கர், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கோவிந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக, வந்திருந்த
அனைவரும் சுயஅறிமுகம் செய்து கொண்ட போது, அண்மையில் தான் படித்த புத்தகம் பற்றியும் சொன்னது புதுமையாக
இருந்தது. வாசிப்பைத் தூண்டுவதாக அமைந்தது.
நிறைவாக சக்தி நன்றி கூறினார்.
------------------------------------------------------------------------------------------------------
(செய்தியைப் படத்துடன் வெளியிட்ட நாளிதழ்களுக்கும்,
செய்தியாளர் நண்பர்களுக்கும் நன்றி, நன்றி
தீக்கதிர், தினமணி, தமிழ்இந்து, தினகரன், தினமலர்-24-03-2014
செய்தியாளர்கள் - மோகன்ராம், சு.மதியழகன், சுரேஷ், மோகன், செந்தில்.
புகைப்படம் - சூர்யா, சக்தி.)
// ஆய்வுகள் சமூகத்தின் தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் // சிறப்புரை அருமை ஐயா...
பதிலளிநீக்குமுனைவர் சு.மாதவனுக்கு ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
முனைவர் சு.மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசொல்ல வேண்டிய இடத்தில் ,சொல்லவேண்டிய கருத்தை நச்சுனு சொல்லிருக்கிங்க அண்ணா . இன்று எல்லா பேப்பர்லயும் அண்ணா வந்திருக்கிறார். நான் மிஸ் பண்ணிட்டேன். online ல படிக்கிறதுல இது ஒரு குறை. இரவு வணக்கங்கள்.
பதிலளிநீக்குஉண்மையான ஆய்விற்கு காலந்தாழ்ந்தே உரிய மரியாதை கிடைக்கின்றது.வாழ்த்துக்கள் முனைவர் மாதவன் அவர்களுக்கும் ,உங்களுக்கும்.
பதிலளிநீக்குமுனைவர் சு மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு