தஞ்சைப் பெரிய கோவிலில் கட்டுமானப் பொறியியல் இல்லையா?


பொள்ளாச்சி PAP-தொழில் நுட்பக்கல்லூரி ஆண்டுவிழாவில் இளைய தலைமுறையிடம் நான் கேட்ட கேள்வி இது.. (தொடர்ந்து படிக்க)
மனிதர் கண்டுபிடித்த எந்திரங்கள் பலவாறு உதவுகின்றன. அவை, அசுர வேலைகளைப் பார்த்தாலும் அவற்றுக்கு அறிவு கிடையாது. உலகத் தகவல்களை ஒரு சொடுக்கில் கொண்டுவந்து கொட்டும் கணினிக்கு, “எப்படி இருக்கிறாய்?(How are you?) எனும் சாதாரணக் கேள்விக்கு விடை சொல்லத் தெரியாது! ஆனால், எந்திரங்களோடு பழகிப் பழகி மனிதர் பலரும் எந்திரமாய் மாறிவருவதை சார்லி சாப்ளின் (1889-1977) சுமார் நூறாண்டுக்கு முன்பே “மாடர்ன் டைம்ஸ்“ - மௌனப் படத்தின் மூலம் உலகைப பேசவைத்தார்.
     சொந்த சிந்தனையைத் தூண்டாத படிப்பும் எந்திரம் போலத்தான்.
     சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் –சுமார் 50கல் சுற்றளவில் மலையே இல்லாத- தஞ்சையில் கட்டப்பட்டது பெரியகோவில்! அங்கிருந்து 60கல் தொலைவிலுள்ள –இன்றைய புதுக்கோட்டை மாவட்டம்- நார்த்தாமலையிலிருந்து, சுமார் 80டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெரும்பெரும் கல் பாறைகளை, வெட்டி, எடுத்துக் கொண்டுவந்து சுமார் 60மீட்டர் உயரத்திற்கு ஏற்றி நிற்கவைத்துக் கட்டியது கட்டுமானப் பொறியியல்(CIVIL  ENGINEERING) இல்லையா? இதில்  எந்திரப் பொறியில் (MACHANICAL  ENGINEERING)  இல்லையா?  
இன்றும் கூட அந்தக் கோவிலைப் பக்தி எனும் பெயரில்தான் பார்க்கிறோமே தவிர, பொறியியல் கல்வி முன்னோடி என்று நாம் ஏன் பார்ப்பதில்லை? கல்லணையும் இப்படித்தான் உலகையே வியப்பில் ஆழ்த்திக்கொண்டு இருக்கிறது! இவை இரண்டையும் பொறியியல் மாணவர்கள் அவசியம் பார்க்க, கற்க, கண்டுபிடிப்புகளைத் தொடர வேண்டும்! 
சிமிண்ட் இல்லாத காலம்!
கிரேன் முதலிய பெரும் எந்திரங்கள் இல்லாத காலம்!
முக்கியமாக ஆங்கிலம் இந்தியாவில் இல்லாத காலம்!
(இந்தியாவில் ஆங்கிலத்தின் வயது வெறும் 600ஆண்டுதான்!)
இவ்வளவும் இருக்க –
இப்போது,
தமிழில் கட்டுமானப் பொறியியல் இல்லையாம்!
தமிழில் எந்திரப் பொறியியல் படிக்க முடியாதாம்!
இன்றைய இளைஞர்கள் இதைச் சிந்திக்க வேண்டுகிறேன்.
---------- (இந்தவாரச் சிந்தனை-25-03-2014)--------------- 


POLACHI  P.A.POLYTECHNIC  ANNUAL DAY - 15-03-2014  ADDRESS BY Naa.MUTHU NILAVAN
in Dias  Er. P.APPUKKUTTY CHAIRMAN, Mr.K.RAGUNANDANAN, JGM, L&T, and others 

26 கருத்துகள்:

  1. மிகச்சரியான ஆக்கப்பூர்வமான கேள்விகள் அண்ணா. அந்த கோவிலை பார்க்கும் ஒவ்வொரு பாமரனும் தனக்குள் கேட்கும் கேள்வி ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாமரர்கள் கேட்கிறார்கள், படித்தவர்கள் தான் கேட்கவேண்டும், அதைவிடப் பொறியியல் படித்தவர்கள் பார்க்கக் கூட மறக்கிறார்கள் எனும் ஆதங்கம்தான் எனக்கு. நன்றிம்மா.

      நீக்கு
  2. fine explanation sir. This is what we are saying in our training sessions also. This is not Language problem this is understanding problem. Memory made our youngsters fool.

    Anu Varatharajan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிதலில் சிக்கல் இ்ல்லை, செயல்புரிதலில் சிக்கல். இன்றைய இளைய தலைமுறை இதனைப் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன்மா. புத்தகம் எப்படிப் போகிறது? வாழ்த்துகள்.

      நீக்கு
    2. the difference of doing and understanding. unfortunately students are not given enough time to digest their learning and to exhibit their learning...

      நீக்கு
  3. உள்ளூர் ஆட்டக்காரனுக்கு மரியாதையில்லைன்னு சொல்றது இதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளுர் மேளம்? வெளிநாட்டுக்காரன் வந்து சந்து பொந்தெல்லாம் புகுந்து ஆராய்ச்சி செய்கிறான்... நாம் அதன் அருமை புரியாமல் அங்கே அசிங்கம் செய்வதைப் பெருமையாக நினைக்கிறோம்!

      நீக்கு
  4. // “எப்படி இருக்கிறாய்?” (How are you?) எனும் சாதாரணக் கேள்விக்கு விடை சொல்லத் தெரியாது!// இந்த வாரம் விகடனில் ஹெர் படம் பற்றிபடித்தீர்களா அண்ணா? இந்த வரிகளுக்கு பொருத்தமாய் இருந்தது!
    தொழில்நுட்பக் கல்லூரில் தமிழ் பற்றிய சிந்தனையை எப்படி கொக்கி போட்டு இழுத்திருக்கிறீர்கள் ! கேள்விகள் எழுப்பாமல் பதில் கிடைப்பத்தில்லையே! அருமையான கேள்வி அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் செந்தூரான் பொறியியல் கல்லூரியிலும் கேட்டேன், நமது முதன்மைக் கல்வி அலுலவர் முன்னிலையில், தமிழாசிரியர் மத்தியிலும் கேட்டேன்.இப்போதுதான் வலையில் பதிவுசெய்ய வாய்த்தது. “கேள்விகளால் வேள்விகளை நாம் செய்வோம்!”

      நீக்கு
  5. ஐயா, தமிழில் இன்னும் நிறையவே இருக்கிறது. அனால் தமிழ் வழியில் கட்டுமானப் பொறியியல்,எந்திரப் பொறியியல் படித்தவர்களுக்கு எங்கே மதிப்பு இருக்கிறது. வளாக நேர்காணலில் கண்டுகொள்ளவே இல்லையே ஐயா! இவற்றை கற்க கூடாதாம் ,மேலை நாட்டிலுள்ள பொறியியலைத்தான் படிக்க வேண்டுமாம்! நான் கூறவில்லை அரசு தான் கூறுகிறது. பாடத்திட்டத்தில் இருந்தால் தானே பயில முடியும்? superb speech sir..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ஓரறறி வதுவே உற்றறி வதுவே“ என்றதோடு, 2000ஆண்டுக்கு முன்பே, “புல்லும் மரனும் ஓரறிவினவே“ என்றவர் நம் தொல்காப்பியர். ஆனால் தாவரங்களுக்கும் உயிர்உண்டு என்னும் “தனது“ கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றவர் நம் ஜெகதீஸ் சந்திரபோஸ் அல்லவா? ஆகா..வடை போச்சே!!!

      நீக்கு
  6. அடுத்த நாட்டுக்காரர்கள் கோடு போட்டால் தான்
    நம் நாட்டவர் அதிலே ரோடு போடுவார்கள். இதுவே இன்றைய பொது விதியாகி விட்டது.
    யானை செல்லம் வழிதான் பாதை என்பதை நம்மவர் மறந்து விட்டார்கள் ஐயா.
    உங்களின் கேள்வி அருமையானது.
    பதில்.....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவின் மிகப் பழைய நகர நாகரிகம், திராவிடர்களின் சிந்து வெளிநாகரிகம்.. என்று -1921இல்- சர் ஜான் மார்ஷல் என்னும் வெளிநாட்டவர்தானே வந்து சொல்லவேண்டியிருந்தது! எனினும் நாமே வெறும்பெருமை பேசியே வீணாய்ப்போனோம் சகோதரீ!

      நீக்கு
  7. நம்மவர்கள் பெரியக் கோவிலைப் பார்க்கின்ற க்ண்ணோட்டமே தவறு.
    பெரிய கோயில் பக்தியின் உன்னதம் என்பதைவிட,
    அறிவியலின் உச்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுபற்றி நிறையப் பேசலாம் அய்யா. அறிவியலின் உச்சத்தில் நின்று ராஜராஜன் பரப்பியதென்னவோ பக்தியைத்தான்... தொலைக்காட்சியில் ராசிபலன் சொல்வதுபோல... நாம்தான் நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளவேண்டும்.

      நீக்கு
  8. மிகவும் அருமையான கேள்வி ஐயா...
    நம் தஞ்சைக் கோவிலை வெறும் கோவிலாக மட்டும் பார்க்காமல் அறியவியல் பூர்வமாகப் பார்க்க வேண்டும்...
    அருமை ஐயா..

    பதிலளிநீக்கு
  9. தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. //தமிழில் கட்டுமானப் பொறியியல் இல்லையாம்!
    தமிழில் எந்திரப் பொறியியல் படிக்க முடியாதாம்!
    இன்றைய இளைஞர்கள் இதைச் சிந்திக்க வேண்டுகிறேன்.///

    //இந்தியாவின் மிகப் பழைய நகர நாகரிகம், திராவிடர்களின் சிந்து வெளிநாகரிகம்.. என்று -1921இல்- சர் ஜான் மார்ஷல் என்னும் வெளிநாட்டவர்தானே வந்து சொல்லவேண்டியிருந்தது! //

    நல்ல பதிவு தான். ஆனால் எந்த வரலாற்றாசிரியரும் சோழர்கள் தமிழர்கள் அல்ல என்று கூறாத போதும். இக்பால் செல்வன், வவ்வால் போன்ற பதிவர்கள். பெரிய கோயிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனின் பரம்பரையினர் தமிழர்கள் அல்ல, தெலுங்கு கலப்புள்ள ஆரியர்கள் என்கிறார்கள். இங்கு பெரியகோயிலையும், தமிழில் கட்டுமானப்பொறியியலையும் பற்றிப் பெருமைப்படும் யாரும் அவர்களை எதிர்க்கவுமில்லை, தமது கருத்தைத் தெரிவிக்கவுமில்லை. அவர்கள் கூறுவது உண்மையானால், ஆரியர்களின் கட்டுமானப் பொறியியலைப் பார்த்து, தமிழர்கள் எப்படி பெருமைப்பட முடியும்? .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜராஜசோழனிடம் எனக்கே பற்பல கருத்து வேறுபாடுகள் உண்டு. அவன் அறிவியல் பொறியியல் எல்லாவற்றையும் தனது அரச வர்க்க நலனுக்கே பயன்படுத்தினான். தேவாரத்தை விடுதலை செய்து வெளிக் கொண்டுவந்தவன்தான் வடமொழியை வழிபாட்டு மொழியாக அனுமதித்தான். என... மற்றபடி அவன் தமிழனல்ல என்போரிடம்தான் அதற்கான விளக்கங்களைக் கேட்க வேண்டும் நண்பரே!

      நீக்கு
  11. சிந்திக்க வேண்டிய (வைத்த) கேள்வி...

    நீங்க அசத்துங்க ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. மாமன்னன் ராஜராஜ சோழன் - கோயிலைக் கட்டிய சாதனையை விட - அந்த சாதனையைக் குறித்து இன்றளவும் (இனி வருங்காலத்திலும் கூட) பேசச் செய்ததுவே சாதனை!.. தஞ்சை பெரிய கோயில் - ஆன்மீகமும் அறிவியலும் பின்னிப் பிணைந்த கலைச் சங்கமம்!..

    பதிலளிநீக்கு
  13. /// சிமிண்ட் இல்லாத காலம்!
    கிரேன் முதலிய பெரும் எந்திரங்கள் இல்லாத காலம்!
    முக்கியமாக ஆங்கிலம் இந்தியாவில் இல்லாத காலம்!
    (இந்தியாவில் ஆங்கிலத்தின் வயது வெறும் 600ஆண்டுதான்!)
    இவ்வளவும் இருக்க –
    இப்போது,
    தமிழில் கட்டுமானப் பொறியியல் இல்லையாம்!
    தமிழில் எந்திரப் பொறியியல் படிக்க முடியாதாம்!


    ஐயா !!! சரியாக தான் சொல்லியுள்ளார் கல்லூரி தலைவர் !!! எல்லா தொழில்முறை படிப்பையும் தாய்மொழியில் கற்றால் நல்லது தான்... கல்லணையும் , பெரிய கோவிலும் கட்டும் போதும் ,தென்னததில் தமிழ் மட்டுமே பேசப்பட்டிருந்தது..ஆனால் இன்று ???? தமிழில் கட்டுமான பொறியியலும், எந்திர பொறியியலும் படித்தால் நல்ல வேலையும், சம்பளமும் கிடைக்குமாயின், எல்லோரும் அதை படிக்க விரும்புவார்கள்...

    ஏதோ என் மதில் பட்டதை சொல்லிவிட்டேன்..

    பதிலளிநீக்கு
  14. ‘செம்மொழி ஆய்வறிஞ’ருக்கான விருதைக் குடியரசுத்தலைவரிடமிருந்து பெற்ற முனைவர்.சு.மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அவருக்கு நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்புரை ஆற்றிய கவிஞர். நா.முத்து நிலவன் ’ஆசிரியர்கள் இன்றைய செய்திகளையும், புதிய சமூக இலக்கியப் போக்கு களையும் படித்துக்கொண்டே இருந்தால்தான் சிறந்த மாணவர்களையும், புதிய சமூகத்தையும் உருவாக்கமுடியும்’ என்று தெரிவித்துள்ளது வரவேற்க வேண்டிய கருத்து.

    பதிலளிநீக்கு
  15. பக்தி என்பது வேறு, கலையை ரசிப்பது என்பது வேறு. நம்மவர்கள் இவற்றைக் குழப்பிக்கொண்டு ஆயிரமாண்டு கால கலையையும் பண்பாட்டையும் மறந்துவிடுகிறார்கள். பக்தி ஒரு புறம் இருக்கட்டும். அதே சமயம் தொழில்நுட்பத்தையும் கலை வடிவையும் போற்றிப் பாராட்டவேண்டியது நமது கடமை.

    பதிலளிநீக்கு