கந்தர்வன் நினைவு கலை-இரவு அழைப்பிதழ்

                                    வணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு

புதுக்கோட்டை தமுஎகச நடத்தும்

கந்தர்வன் நினைவு கலை-இரவும்

சிறுகதைப் போட்டிப் பரிசளிப்பும்

வரும் 07-02-2026 சனிக்கிழமை மாலை

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற உள்ளது

அழைப்பிதழ் இதோ –

அனைவரும் வருக வருக

-------------------------------------------------

சிறுகதைப் போட்டி அறிவித்த ஒருமாதத்திற்குள்

எழுநூறுக்கும் (700+) மேற்பட்ட கதைகள் உலகெங்கும் இருந்து

வந்து குவிந்துவிட்டன!

(உண்மையிலேயே உலகெங்கும் இருந்துதான்! இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மன், கனடா, அரபுநாடுகள், முதலான பல நாடுகளிலிருந்தும் கதைகள் வந்துள்ளன.

ஒரு பெரும் நடுவர் குழு முதற்கட்ட, இரண்டாம் கட்ட, மூன்றாம்கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் வரும் 03-02-2026 அன்றுதான் இறுதிக்கட்ட – பரிசுக்குரிய மற்றும் வெளியிடத்தக்க கதைகளை முடிவுசெய்ய ஆலோசித்திருக்கிறது.

04-2-2026 அன்று தேர்வு பெற்றவர்க்குத் தனித்தனியாக அலைபேசி வழியாகவும், மற்ற அனைவர்க்கும் செய்தித்தாள், சமூக வலைதளங்கள் வழியாகவும் 05-02-2026 தேதிக்குள் தகவல் கிடைக்கும்.

செல்பேசி வழியாக

தனித்தனியாக விசாரிக்க வேண்டாம்

என்று மிகுந்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்றே எனது இந்த வலைப்பக்கத்திலும்

தகவல் பதிவிட முயற்சி செய்வேன்.

------------------------------------------------------------------

கலை-இரவுப் பணிகளில்

தீயாய் சுழன்றுவரும்

மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழுத் தோழர்கள்

மிகுந்த உற்சாகமோடு

30-01-2026 வெள்ளி மாலை

அழைப்பிதழை வெளியிட்டனர்

இதோ அந்த அழைப்பிதழ்

-------------------------------------------------------------- 














கலை இரவில் சந்திப்போம் வருக!

கந்தர்வனைக் கொண்டாடுவோம் 

வருக!வருக!!

----------------------------------------------------------- 

இவண் 

கவிஞர் தங்கம் மூர்த்தி

கலை-இரவு வரவேற்புக்குழுத் தலைவர்,

கவிஞர் ராசி.பன்னீர்செல்வன் - மாவட்டத் தலைவர்,

கவிஞர் ஆலங்குடி வெள்ளைச் சாமி - மாவட்டச் செயலர்,

கவிஞர் மு.கீதா - மாவட்டப் பொருளர்

மற்றும்

மாவட்டத்திலுள்ள மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு, 

மாவட்டத் துணை நிர்வாகிகள், 

மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழுத் தோழர்கள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 

புதுக்கோட்டை மாவட்டம்

------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக