இவர் யார் தெரிகிறதா?

இவர் யார் தெரிகிறதா?


தமிழ்நாட்டு மக்களில் 
லட்சத்தில் 
ஒருவருக்காவது 
இவரைத் தெரிந்திருந்தால் 
அதுகூட வியப்புத்தான்! 
ஏனெனில் 
இன்றைய 
நம் நாட்டு நிலைமை 
அப்படி இருக்கிறது! 

நாம் இன்று வாழும் “சுதந்திர“ வாழ்க்கைக்காகத் 
தன் கணவரைத் 
தியாகம் செய்தவர் இவர்!

இந்தியச் சுதந்திரப் போரில் கணவரை இழந்த இவர், 1998இல் காலமானார்.

இவரது கணவரின் தியாகம் உலகமெங்கும் வாழும் இந்தியர்களால் முக்கியமாகத் தமிழர்களால் 
நன்கு அறியப்பட்டது.
2004இல் அந்தத் தியாகத் திருமகனின் நூற்றாண்டுவிழாவை ஒட்டி, சிறப்புத் தபால்தலை வெளியிடப்பட்டது

இவரைத் தெரிவது இருக்கட்டும்.

அண்மையில் இவரது கணவரால் புகழ்பெற்ற அவ்வூருக்குப் போயிருந்தேன். அந்த வீரத்திருமகனின் நினைவிடத்திற்கும் போயிருந்தேன். மாமனிதனின் நினைவிடம் இருந்த இன்றைய இருப்பைப் பார்த்து நொந்து திரும்பினேன் –

ஆம்! அந்த மாவீரனின் நினைவுச் சின்னம், இந்திய விடுதலைப் போரின்  நூற்றாண்டு விழாவின்போது --ஆகஸ்டு,15, 1957ஆம் ஆண்டே-- அன்றைய தமிழக அரசால் திறந்துவைக்கப்பட்ட பெருமைக்குரியது! ஆனால்...
தொடர்வண்டி நிலையத்தின் அருகில் நகரின் நடுவில் நினைவுச் சின்னமும் அருகிலேயே நினைவுமண்டபம் ஒன்றும் இருக்கிறது! அங்கு அந்தத் தியாக சீலனின் வாழ்க்கை வரலாறு அரங்கும் இருக்கிறது அதாவது இருந்திருக்கிறது வாழ்க்கை வரலாறு ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டுள்ள போதிலும் இப்போதெல்லாம் திறக்கப்படுவதே இல்லையாம்! இதேபோல் எதிரிலுள்ள- அதாவது முன்னர் இருந்த- படிப்பகமும் பாழடைந்து குப்பையாகக் கிடக்கிறது!

அந்த நம் சுதந்திரப்போராட்ட வீரன் இறந்த இடத்தில் ஒரு சிறிய மேடை கட்டி சுற்றிலும் இரும்புச் சங்கிலி போட்டிருக்கிறார்கள்! அதைச் சுற்றித்தான் குப்பைகள் கொட்டப்படுகின்றன!

தேசத்தியாகிகளை மறந்து, தேசத்துரோகிகளின் காலடிகளை நத்திக்கிடக்கும் --இன்றைய அரசியலில் தலைவர்களாகத் திரியும்—பலஜென்மங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நான் சிலநேரம் யோசிப்பதுண்டு. நீதிமன்றங்களையே கூட ஏமாற்றிவிடக் கூடிய இவர்களை மக்கள் மன்றங்களின் தீர்ப்பாக இதுபோலும் தியாகிகளின் இருப்பிடத்தைத் தினமும் தன் கையால் விளக்குமாறு கொண்டு கூட்டிச் சுத்தப்படுத்துவதையே தண்டனையாக்க் கொடுக்க வேண்டும் எனத்தோன்றுகிறது

தியாகிகள் பதற
துரோகிகள் செலுத்தும்
அரசியல்”  என நான் எழுதி 30ஆண்டுகளாகிவிட்டன. (கல்கி–1986) ஆனால், நிலைமை முப்பதாண்டுக்குப் பின்னும் இன்னும் மோசமாகியே இருக்கிறது!

அந்தத் தியாகி –             
இந்திய சுதந்திரப்போரின்போது, நம் தேசியக் கொடியைக் கீழே போடச் சொல்லி, ஆங்கில அரசின் அடிவருடிக் காவலனால் அடித்து அடித்து மண்டை உடைபட்டும் கொடியை விடாமல் தன் உயிரைவிட்டுக் கொடிகாத்த குமரன்! அக்டோபர்4,1904இல் பிறந்து, ஜனவரி-11,1932இல் 28வயதில் மறைந்த
கொடிகாத்த குமரன் தான் அவர்!

இந்தப் படத்திலிருக்கும் நம்தாய் அவரது துணைவியார் ராமாயி அம்மாள்.
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்! கருகத் திருவுளமோ? மகாகவி பாரதியின் இவ்வரிகளை வாய்விட்டுப் பாடிப்பாருங்கள்.. பெருமூச்சு வரும். நாடு வாழ்க!
---------------------------------------------------  

36 கருத்துகள்:

  1. நாலு போடு போட்டு விட்டு பிறகு கையில் குடுத்து சுத்தப்படுத்தச் சொல்லலாம்...

    பதிலளிநீக்கு
  2. தியாகிகள் இப்போதெல்லாம் வலைத்தளங்களில்தான் உயிர்வாழ்கிறார்கள் போலும் 😒

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வலைத்தளங்களில் மற்றும் பல உளத்தளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.. கோவில்களுக்குப் போகிறவர்கள் கூட அந்த ஊரில் உள்ள இவர்போலும் தியாகிகளின் நினைவிடங்களை விசாரிக்கவும், அங்கும் போய்வரவும் மறந்துவிடுவதுதான் வருத்தமளிக்கிறது.

      நீக்கு
  3. வேதனையாகவே உள்ளது கேட்க. இப்படி நிலைமை அவர் போன்றோருக்கு நிச்சயம் வரவிடக் கூடாது. மிக்க நன்றி சகோ. தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தங்கையே. அவ்வப்போது தொடர்கிறேன். அந்த ஊருக்கு நான் போய் ஒருமாதமாக இந்த அழுத்தத்தைச் சுமந்து கொண்டே வேறுபல ஊர்களுக்கும் திரிந்துகொண்டிருந்தேன். இப்போதுதான் சுமை குறைந்திருக்கிறது.

      நீக்கு
  4. கொடிகாத்தக் குமரனையே மறந்தாகிவிட்டது
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெஞ்சில் குத்திக்கொள்ளும் கொடியில் உள்ள குண்டுசி குத்தும்போது சில உறுத்தல் வருகிறது -
      இந்தத் தியாகிகளின் நினைவால்..

      நீக்கு
  5. நெஞ்சு கனத்திருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கனத்தை உங்கள் நெஞ்சில் ஏற்றிவிட்டேன் -மன்னிக்கவேண்டும் நண்பரே!

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    பதிவை படித்த போது வேதனையாக இருந்தது.. தாங்கள் சொல்வது போல..நீதி மன்றங்களை ஏமாற்றலாம். அதாவது சட்டத்திலும்ஒரு ஓட்டை உள்ளது அதன்வழி தப்ப வாய்ப்பு உள்ளது .தாங்கள் சொன்ன தண்டணைதான் சரியாக அமையும் மக்கள் தீர்ப்பு.மகேசன் தீர்ப்பு.

    இப்படியான மாமனிதர்களை நாடு என்றதற்கு அப்பால்.. அனைவரும் பூசிக்க வேண்டியவர்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கோ இருந்துகொண்டு நினைக்கிறீர்களே! இங்கே இருக்கும் கோடிக்கணக்கானோர் மறந்துவிட்டார்களே ரூபன்?
      பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  7. சரி தான் :((( பெருமூச்சு தான் வருகிறது அண்ணா:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிம்மா. என்ன ஆச்சுடா அடுத்த பதிவு? ஏன் இவ்வளவு இடைவெளி? பள்ளிக்கூடம்தான் இன்னும் திறக்கலயே?

      நீக்கு
  8. இதெல்லாம் பள்ளி பாடத் திட்டத்தில் வரவேண்டும்...
    அதுவரை விடிவு கிடயாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடத்திட்டத்தில் வந்தால் எந்திரகதியாகிவிடும்.
      சுற்றுலாத் தளம் போல தியாகிகளின் நினைவிடப் பட்டியல் ஒன்று தயாரித்து, அரசே மக்களை வழிநடத்த வேண்டும்.

      நீக்கு
  9. வேதனைதான் மிஞ்சுகிறது அய்யா! நாம் வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, வரலாற்று நாயகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அவர்கள் வாழ்ந்த மண்ணுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. யார் எப்படி போனால் என்ன, நான் பணம் பண்ண வேண்டும். இதுதான் இன்றைய நிலை.
    கல்வியை காசுக்கு விற்கும் வரை இந்த நிலை மாறது..!
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய்களையே நாயகர்களாக நினைக்கும் போக்கால்தான் இந்த நிலை. இது முதலில் மாறவேண்டும்.

      நீக்கு
  10. என்னத்த சொல்வது.. யார் என்று எனக்கும் தெரியவில்லை. அவரை அறிந்த பின் வெட்கத்தால் தலை குனிந்தேன். என்ன செய்வது ஐயா... நம் நாட்டு நிலைமை அப்படி.
    நீங்களாவது எடுத்து சொன்னீர்களே ... மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இவரைத் தெரிந்தும், சட்டென்று பெயர் நினைவில் வரவில்லை. வெட்கத்துடனும் வேதனையுடனும் விவரங்களைத் தேடிய போதுதான் இப்படி ஒரு பதிவு எழுத நேர்ந்தது. நன்றி விசு.

      நீக்கு
  11. தொடர்ந்து ஊதிக் கொண்டே இருப்போம் அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தூங்குவோர் தம்மை எழுப்பிடக் கூடும்
      தூங்குவோர் போல நடிப்பவர் தம்மை..?” என்று கேட்டுக் கடுமையாக எழுதுவார் அண்மையில் காலமான பேரா.இளவரசு அய்யா. அதுதான் நினைவுக்கு வருகிறது எட்வின். தொடர்வோம்

      நீக்கு
  12. நமது கொடியையே மறக்கக்கூடிய நம் மக்கள் கொடிகாத்த குமரனையா,அதுவும் அவர் மனிவியையா நினைவில் கொள்ளப்போகிறார்கள்.மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடந்து,நூலோர்கள் செக்கடியில் நோவுற்று சுதந்திரம் வாங்கினார்கள் என்பதெல்லாம் நமக்கு வெறும் செவி வழிச் செய்திகள்தான்..அதையெல்லாம் மறந்து வெகு நாட்களாகி விட்டன.வெட்கக்கேடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்றை மறந்தவர்கள் அதில் மீண்டும் வாழச் சபிக்கப்படுவர் என்றொரு பொன்மொழி எச்சிரிக்கிறது. எனவேதான் நாமும் எடுத்தெடுத்துச் சொல்ல்வேண்டிய நிலையில் இருக்கிறோம். மறப்பது மக்கள் நிலை, நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதானே நம் கடமை? நன்றி அய்யா

      நீக்கு
  13. தண்டனைகள் இன்றித் தறுதலைகள் வாழ்நாட்டில்
    மண்டியிடும் நீதியிலே மாமனிதர் - எண்ணங்கள்
    வண்டறுத்து வீழ்கின்ற வன்மரமாய் வீணாகும்
    சண்டியனுக் கேதுநற் சாவு !

    கடவுள் ஏன் கல்லானான் என்று எல்லோருக்கும் இனித்தான் தெரியவரும் .. எல்லோரும் உணர வேண்டிய பதிவு ஐயா அந்தப் பகுதி மக்களுக்கு இதுபற்றிய ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தினால் என்ன .?
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்ச்சினிமாக்களில் வில்லன்களை அழிக்க மகன்கள் வருவார்கள், அதற்குள் சுமார் 25ஆண்டு(ஒரு பரம்பரை)க்காலம் வில்லன் தின்று அனுபவித்துக் கொழுத்துக் கிடப்பான். பிறகு வந்து கதாநாயகன் தண்டனை தருவான்! தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதியும் ஒன்றன்றோ? அழகான நேரிசை வெண்பாவுக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா

      நீக்கு


  14. அறிஞர் ஆத்மா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

    நாம் பெற்ற சுதந்திரத்தில்
    நாமே
    தவறு செய்யக் கறறுக்கொண்டோம்
    ஆனால்
    சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களை
    கடுகளவேனும்
    நாம் நினைக்க மறந்துவிட்டோம்!

    பதிலளிநீக்கு
  15. நமக்கு முகவரியைத் தருவதற்காகப் பாடுபட்ட பலரை நாம் இவ்வாறுதானே நடத்துகின்றோம். வேதனையான நிகழ்வுகள் இவ்வாறு தொடர்கதைகள் போல காணப்படுகின்றன. இவ்வாறு உள்ள பெருமக்களைத் தேடி அவர்களுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அறியாததல்ல, சமற்கிருதத்தின், “அழியும் காலம் வந்தால், அவப்புத்தி வளரும்“ என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது அய்யா.

      நீக்கு
  16. படிக்கும்போது மனம் சிறிதும் வலி ஏற்படுவதை உணர முடிகிறது ஐயா!எப்படித்தான் இந்த உலகம் கண்டும் காணாமல் இருப்பது மிகவும் வேதனையாகத்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வேதனைப் பகிர்வுக்கு நன்றி நண்பரே.
      பகிர்ந்துகொள்வதால் மகிழ்ச்சி இரண்டுமடங்காகும், துக்கம் பாதியாகக் குறையும் என்பதுதான் வேறென்ன?

      நீக்கு
  17. கொடிகாத்த குமரனை மறக்க முடியுமா...

    பதிலளிநீக்கு
  18. கல்விதான் வியாபாரமாகிவிட்டதே! கல்வியில் அரசியலும் புகுந்துவிட்டதே! அப்படியிருக்க இவரை எல்லாம் எந்தப் பாடப் புத்தகத்தில் சேர்ப்பார்கள் சொல்லுங்கல் ஐயா! தங்களைப் போன்றோர் இப்படி எடுத்துரைத்தால்தான் எல்லோரும் அறிவார்கள்! நம் நிலை வெட்கக்கேடு! சுயநலவாதிகள் நிறைந்த உலகில் வாழ்க்கை! எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு