ஸ்ரீராமனும் – தவளையும் - ஒரு நீதி(பதி)க்கதை



ஆற்றில் குளிக்கப்போன ஸ்ரீஇராமன், தனது வில்லை ஆற்றங்கரை அருகில் மணலில் ஊன்றி நிறுத்திவிட்டுக் குளித்தானாம்!
குளித்து முடித்து வந்து, வில்லை எடுக்கும்போது பார்த்தால்...!
வில் ஊன்றிய இடத்தில், வில்லில் குத்துப்பட்டு ஒரு தவளை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததாம்!

பதறியபடி ஸ்ரீராமன் தவளையிடம் கேட்டானாம் -
“அடப் பாவி தவளையே! என்ன இப்படிக் கிடக்கிறாய்? என் வில்லிலா குத்துப் பட்டாய்...?“
“ஆமாம் பிரபோ.. நான் என்ன செய்வேன்?“ என்றதாம்!

“அடடா.. நான் வில்லை ஊன்றும்போதே கத்தியிருக்கக் கூடாதா? இப்படி அநியாயமாகக் குத்துப்பட்டு விட்டாயே??

“மன்னிக்க வேண்டும் ஸ்ரீராமா... வேறு யாராவது குத்தியிருந்தால் ஸ்ரீராமா என்னைக் காப்பாற்று என்று உன்னைக் கூப்பிட்டிருப்பேன்.. நீயே குத்தும்போது நான் யாரைக் கூப்பிடுவேன் ராமா?என்றதாம்!
------------------------------------------
Judge Gunha 

Judge Kumarasamy
நாறிக்கிடக்கும் 

இந்திய அரசியலில் 
யாராவது தவறுசெய்தால் 
நீதிமன்றத்தில் முறையிடலாம்... 

அந்த நீதி மன்றமே 
மாற்றிமாற்றி 
 நீதிசொன்னால் 
யாரிடம் போய் முறையிடுவது?

இராமனாவது.. 
நீதிமன்றமாவது! 
மக்களுக்கு 
நியாயம் கிடைக்க வேண்டுமெனில், 
இனி மக்களே முடிவுசெய்தால்தான் உண்டு!

---------------------------------

10 கருத்துகள்:

  1. சட்டம் ஒரு இருட்டறை அதில் வாதிடுபவன் ஒரு குருடன் பார்வையாளர்களாகிய நாமெல்லாம் கண்ணிருந்தும் குருடர்கள்.
    அட ராமா ராமா தவளைகூட உன்னிடம் பேசியதாமா ? அட ராமா ராமா.
    தமிழ் மணம் 2 போதுமா ?

    பதிலளிநீக்கு
  2. மக்களே முடிவெடுத்தால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  3. கதை நல்லா இருக்கு. பேசாம கதை எழுதற வேலையை மட்டும் பார்த்தா ஒடம்புக்கு நல்லது :)

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    நல்ல கதைமூலம் நீதியின் தத்துவத்தை சொல்லியுள்ளீர்கள்... ராமா...ராமா... என்ற கோசந்தான்.
    த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. மாற்றிமாற்றி சொல்றவுங்க....அப்புடியே அந்த பேட்டரி வாங்கிக் கொடுத்துச்சுன்னு சொன்ன புள்ளக்கிம் சொல்லிட்டா தேவலைதாண்ணா

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீ ராமனின் இந்த நீதிக் கதையை சிறுவயதிலே கேள்விப்பட்டேன் ஆனால் தற்கால நீதியின் ஒப்பீடு எங்கோ இடிக்கிறதே ஐயா !

    முள்ளில்லாப் பூவென்று முத்தம் இட்டால்
    மூச்சோடு சேர்கிறது நஞ்சின் வாசம்

    பதிலளிநீக்கு
  7. பதிலளி

    அன்பே சிவம் திங்கள், மார்ச் 02, 2015

    அப்ஜக்சன் யுவர் ஆனார் (நான் ஆனர் ன்னுதான் அடிச்சேன் ஆனாலும் ஆனர் எதுக்கோ ஆசைப்பட்டு ஆனார் ஆகிட்டார் புரியலையா? கொஞ்சம் நாள் பொறுங்க சாமி.) புரியும். \|/
    பதிலளி
    பதில்கள்

    Muthu Nilavanசெவ்வாய், மார்ச் 03, 2015

    என்ன? வக்கீலுக்குப்ப டிக்கிறீங்களோ? அலலது வக்கீலைப் புடிக்கிறீங்களா - கிரிக்கெட் வழக்கு எதுவும் நிலுவையா? நன்றி (ஒன்றும் புரியலல்ல.. எனக்கும்தான்..)

    பதிலளிநீக்கு