“வாட்ஸ்-அப்“ ரசனை வரவுகள்...

“வாட்ஸ்-அப்“ ரசனை வரவுகள்...

இவற்றை எழுதியவர் யார் என்று தெரியவில்லை... பெரும்பாலும் பிறர் அனுப்பியதை அடுத்தவருக்கு அனுப்பும் நண்பர்களே..என்பதால்.. 

ஆனாலும் நான் ரசித்த சிலவற்றை நண்பர்களிடம் பகிர்கிறேன்..

(வாட்சாப்பைத் தமிழில் கட்செவி என்று சொல்கிறார்கள்... ஆனால், கட்செவி என்பதற்குத் தமிழில் பாம்பு என்று ஒரு பொருள் உண்டு! காதே இல்லாமல் கண்ணாலேயே உணரக்கூடிய உயிரினம் என்பதால்.. இதுவும் கண்ணாலேயே உணர்வதால் இப்பெயர் வந்திருக்கலாம்... ஆனால் விடியோக் காட்சிகளில் காதாலும்தானே கேட்கிறோம்? எனவே இப்பெயர் பொருந்தாதே? கண்ணும் காதுமாய்க் கொண்டு அறிவதால் பொருந்துமோ? தமிழார்வலர் கருத்தென்ன?)

--------------------------
சொல்லி மாளாத அளவு எழுத்துப் பிழையோடும், சொல்லிச் சொல்லி ரசிக்குமளவுக்கு ரசனையோடும் இருக்கும் நம் இளைய தமிழர்களுக்கு நன்றி சொல்லி இதோ சில ...

எங்கே? எங்கே? எங்கே?

இயற்கை எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க ஆலங்குச்சி எங்கே

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய நடை வண்டி  எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு  எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள் எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?

குளங்களில் குளித்த கோவணங்கள்எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால்கிலோ கடுக்கன் சுமந்த
காதுகள் எங்கே ?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும
பெரியவர்கள் எங்கே?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த
பருத்தி துண்டுஎங்கே ?

பிள்ளைகளை சுமந்த
அம்மாக்களும்
எங்கே ?

தாய்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?

மங்கலங்கள் தந்த
மஞ்சள் பை
எங்கே ?

மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பையும்
எங்கே?

தாவணி அணிந்த
இளசுகள் எங்கே ?

சுத்தமான நீரும்
எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?

எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழு
ஆயுள் நமக்கு எங்கே?

இதற்கு பாமரனாலும்,
மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,
ஏன் கணினியாலும்
கூட பதில்
சொல்ல முடியாது.

ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து 
பணம் எனும் காகித்தை தேடி இந்த
உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுசரி அடுத்த
தலைமுறையை பற்றி  சிந்திக்க நமக்கு  
நேரம் தான்
எங்கே? எங்கே?
--------------------------------------------- குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது
 
அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.
 
ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய்,
இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில்
விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்..!
அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!
 
கடுப்பான குமார்,
அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த
ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள்
வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்வீட்டில் நாய்..!!
 
மூன்றாம் நாள்
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன்,
காரை எங்கெங்கோ செலுத்தினான்.
 
வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.
ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான்.
இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,
வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டுபுறப்பட்டான்.
 
வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து,
உன் நாய், வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டான்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றாள் அவள்.
 
அந்த சனியன்கிட்டே போனைக் கொடு..!!
வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு.
---------------------------------------------------
அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார். 
 
கஸ்டமர்களை  கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
 
அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.
 
நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.
 
இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார்.
 
அமெரிக்கர் :
'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.
 
உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
 
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.
 
உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது சிறுநீராச்சே' என்றார்.
 
டாக்டர் :
'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே. 
 
எடுங்க ரூ.300 ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.
 
அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.
 
டாக்டர் :
நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.
 
அமெரிக்கர் (பதறிப்போய்) :
டாக்டர் அது சிறுநீர் என்றார்.
 
டாக்டர் :
அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.
 
அமெரிக்கர்: இந்தியர்களை எப்பொழுதுமே ஏமாற்ற முடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்..
படித்தேன் ரசித்தேன் பகிர்தேன்
----------------------------------------------- 

 நன்றி எனது “வாட்ஸ்-அப்” குழு நண்பர்கள்..

ஆனாலும் வழக்கம்போல...
வாட்ஸ்-அப்பில் வருகிற விடியோக்களைத்தான் வலையேற்றத் தெரியவில்லை... அதையும் தெரிந்துகொண்டால் நம் எழுதவே தேவையில்லாத அளவுக்கு வெளுத்துவாங்குகிறார்கள் வாட்ஸ்-அப்பர்கள்!
அதுபத்தித் தெரிஞ்சவுங்க சொன்னாத் தெரிஞ்சிக்கலாம்
--------------------------

11 கருத்துகள்:

 1. எங்கே எங்கே எங்கே என்று
  எங்களை
  ஏங்க வைக்கிறீர்களே அய்யா.
  வாக்கு எந்திரம் எங்கே?.

  பதிலளிநீக்கு
 2. அதுசரி அடுத்த
  தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு
  நேரம் தான்
  எங்கே? எங்கே?

  உண்மை உண்மை ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 3. ரசித்தேன் ஐயா...

  எங்கே... எங்கே... அனைத்தும் மாயம்...!

  பதிலளிநீக்கு
 4. அற்புதம்.... நமக்கு நிறைய இருக்குங்க அண்ணா இங்க

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் அய்யா
  ரசனையான பதிவுகள். கட்செவி எனும் வாட்ஸ் அப் சமூகத்தில் நடக்கும் அவலங்களை உடனுக்குடன் மீடியாக்களுக்கு பகிரவும், நேரலையில் விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சி குறித்த நமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் பெரிதும் பயன்படுகிறது. பகிர்வுக்கு நன்றிகள் அய்யா.

  பதிலளிநீக்கு
 6. காலத்துக்கேற்ப மேம்படுத்திக் கொள்ள முனைவதில் தங்களுக்கே முதலிடம். வாட்ஸ் அப்பை குறைகூறிக் கொண்டிருக்காமல் அதில் உள்ள ரசிக்கத் தக்க தகவல்களை பாராட்டும் பெருந்தன்மையை போற்றுகிறேன் ஐயா.
  பகிர்ந்த அனைத்தும் சுவாரசியம்

  பதிலளிநீக்கு
 7. பகிர்வுக்கு நன்றி ஐயா! ரசித்தேன்! மகிழ்ந்தேன்!

  பதிலளிநீக்கு
 8. ரசித்துப் படித்தேன் முடிவில் வேதனைதான் எஞ்சியது.

  பதிலளிநீக்கு
 9. ஐயா.
  தமிழனை யாரும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த உரையாடல் வாயில்அறிந்தேன்... பகிர்வுக்கு நன்றி மற்றவைகளை இரசித்தேன் த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. ரசனையான பதிவு அய்யா!
  த ம +1

  பதிலளிநீக்கு
 11. எங்கே எங்கே எங்கே என்று எங்களை எங்கோ அழைத்துச்சென்றுவிட்டீர்கள். சுயத்தை இழந்து, மரியாதையைத் துறந்து, பணம் பணம் என்று படித்தவர் முதல் பாமரர் வரை அலைவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
  ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

  பதிலளிநீக்கு