“முகமது சிங் ஆசாத்!“ -இப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


அது, 1940ஆம் ஆண்டு...
உண்மையைச் சொன்னால் உலகம் ஆங்கிலேய வெறித்தனத்தைத் தெரிந்து கொண்டு காறித்துப்பிவிடுமாம்! அதனால், ஜெனரல் டயர் என்னும் ஆங்கிலப் பிரபுவை நேருக்கு நேராக நின்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்காக லண்டன் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்த அந்த 40வயது இந்தியரைப் பைத்தியம் என்றனர் ஆங்கிலேயர்.
இந்திய விடுதலைப்போராட்ட வீரர்களில் சிலர் லண்டனில் நடந்த அந்த வழக்கிலிருந்து இவரை விடுவிக்க வேண்டுமென்று அன்றைய இந்தியாவின் பிரபல வக்கீல் கிருஷ்ண மேனனை அணுகினர். அவரும், “அவரைப் பைத்தியம் என்று சொல்லிவிட்டால் வழக்கு நிற்காது!என்றார்.
ஆனால், அந்த தேசபக்தர் இதற்கு ஒப்புக்கொள்ள வில்லை! வழக்கு நடந்தது

லண்டன் நீதிமன்றத்தில் அந்தச் சிங்கம் முழங்கியது –
“நான் பைத்தியமல்ல 
என்பெயர் முகமது சிங் ஆசாத்!

ஆங்கில நீதிபதிக்குப் புரிந்தது இப்படி ஒரு பெயர் இந்தியாவில் இருக்க முடியாதென்று! ஏனெனில், இந்தியப் பெயர்களில் ஏதாவதொரு மதத்தின் பெயரும், உள்ளே சாதியின் பெயரும் கூட இருக்குமென்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதோடு, முகமது என்பது இசுலாமியப் பெயர்! சிங் என்பது சீக்கியப் பெயர்! ஆசாத்(சுதந்திரம்)என்பது இந்துப் பெயர்! இப்படி மும்மதங்களின் சேர்க்கையாக ஒரு இந்தியப் பெயர் இருக்க முடியாதே!?!

“சொல் உன் உண்மையான பெயர் என்ன?
“நான் மதமற்றவன், இந்தியன்திரும்பவும் சொன்னார் அந்த வீரர்! “ஆங்கில நாய்களை இந்தியாவிலிருந்து விரட்டுவதே என் நோக்கம்! 1919 ஏப்ரல்-13 அன்று, எனது ஜாலியன் வாலாபாக் மண்ணில் எந்தத் தவறும் செய்யாத சுமார் 20,000 இந்தியர்களைக் காக்கை குருவிகளைச் சுடுவதுபோல் சுட்டுக்கொல்ல ஆணையிட்டான் அந்த மைக்கேல் டயர் எனும் ஆங்கிலேயன். அந்த அழகிய பூங்கா, மதம்கடந்த எமது மக்களின் ரத்தத்தால் சிவந்துபோனது அப்போது -எனது 20வயதில்-- கண்ணெதிரில் பார்த்த இந்தப் படுகொலைக்கு பழிவாங்கவே 20ஆண்டுகளாகக் காத்திருந்தேன். 1940 மார்ச்-13 அன்று லண்டன்  மன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த ஜெனரல் டயரை நான் என் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பழிதீர்த்துக் கொண்டேன். ஜாலியன் வாலாபாக்கில் இந்துக்களும் இசுலாமியர்களும் சீக்கியர்களும் அன்று இந்தியர் எனும் பெயராலேயே கூடியிருந்தனர். நான் மதம்கடந்த அந்தத் தியாகிகளின் அடையாளம்! எனக்கு மதமில்லை நான் இந்தியன்! முகமது சிங் ஆசாத்!“

என்ன ஒரு தேசப்பற்று! மதம் கடந்த தேசப்பற்று! தூக்குத் தண்டனையை நிறைவேற்றியதும் சீக்கிய மத இறுதிச் சடங்குகளைக் கூட அனுமதியில்லை!

அந்த மாவீரனின் உண்மைப்பெயர் உத்தம்சிங் என்பது! 

அவர்பிறந்த பஞ்சாபின் அன்றைய ஆங்கிலஅரசு, அவரது தியாகத்தை தேசபக்தியாக ஏற்க மறுத்த்து மட்டுமல்ல, டயரின் மனைவிக்கு அனுதாபச் செய்தியும் அனுப்பியது!
காந்தியும் நேருவும்கூட “உத்தம் சிங்கின் வழிமுறை தவறு“ என்றனர்!
ஆனால், விஷயம் தெரிந்த பஞ்சாப் மக்கள், அடுத்தமாதம் நடந்த ஜாலியன் வாலாபாக் -20ஆம் ஆண்டு- நினைவாஞ்சலியில் ஆயிரக்கணக்கில் கூடிநின்று, முழக்கமிட்டனர் 
“உத்தம்சிங் வாழ்க! பாரத் மாதாகீ ஜே!” 

நெடுநாள் கழித்து, சுதந்திரம் பெற்றுப் பல்லாண்டுகள் கழித்தே அந்த உத்தமரின் தியாகம் இந்திரா அரசால் ஏற்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது.
ஆனால்-
மக்கள் முன்னரே மரியாதை செலுத்திவிட்டனர்!
ஏனெனில்,
“விதைத்தவன் தூங்கலாம்!
விதைகள் தூங்குவதில்லை“அல்லவா?

நாம் உத்தம்சிங்கின் விதையில் முளைத்த-கிளைகள்-மரங்கள் -விழுதுகள்!
நம் தேசபக்தப் பூங்காவைக் குரங்குகளிடமிருந்து காப்போம்!
வாழ்க உத்தம்சிங்குகள்! வளர்க மதம் கடந்த இந்திய தேசபக்தி!
---------------------------------------------------------------  
பி.கு. (1) “ஜாலியான் வாலாபாக் படுகொலையில் ஈடுபட்டவன் ஜெனரல் டயர் ( Reginald Edward Harry Dyer ). முகம்மது சிங் சுட்டுக் கொன்ற Michael O'Dwyer என்பவர் அப்போது பஞ்சாபின் கவர்னராக இருந்தவர். ஜெனரல் டயரை காப்பாற்ற முயன்றவர். இவர் தான் சுட்டுக் கொல்லவும் தயங்காதே என்ற உத்தரவை ஜெனரல் டயருக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த தகவல் களையும் இணைத்துச் சொல்வது சில தெளிவுகளையும் பெயர் குழப்பங்களையும் தவிர்க்கும்“-  --என்று பின்னூட்டத்தில் தெளிவுறுத்திய எழுத்தாளர் நீலன் அவர்களுக்கும்,
“ஒரு சின்ன திருத்தம் மட்டும் சொல்ல விழைகிறேன். உத்தம் சிங் கொல்வதற்கு முன்பே நோய் வாய்ப்பட்டு இறந்து போனான் கொடுமைக்காரன் ஜெனரல் டயர் . உத்தம் சிங் கொன்றது டயரின் கொடுமைக்கு துணைபோன அன்றைய பஞ்சாப் துணை நிலைய ஆளுநர் மைக்கேல் ஓ டயர்(michael o'dwyer). கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின் லண்டனில் ஒரு கூட்டத்தில் அந்தக் கயவன் சொன்னான் " வாய்ப்பு கிடைக்குமானால் இன்னொரு ஜாலியன் வாலாபாக் படுகொலையை இன்று ஆப்ப்ரிக்காவில் நடத்தவும் தயங்கமாட்டேன் என்று" சொல்ல,
"
அந்த வாய்ப்பு உனக்கு கிடைக்காது மைக்கேல்" என்று அவனெதிரில் தோன்றி முழங்கிக்கொண்டே அவனை தனது துப்பாக்கியால் தீர்த்துக் கட்டியது பஞ்சாப் சிங்(கம்)“ – என்று பின்னூட்டத்தில் கூடுதல் தகவல் தந்த எழுத்தாளரும் உதவிக்கல்வி அலுவலரும், வலைப்பதிவருமான நண்பர் தி.ந.முரளிதரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இத இத இதத்தான் நான் எதிர்பார்க்கிறேன். தகவல்களில் தவறுஇருந்தால் திருத்திக்கொள்வது அவசியம்தானே? நான் ஒன்றும் குமாரசாமியில்லயே(?)
நன்றி நண்பர்களே!
-----------------------------------
பி.கு. (2) 31-05-2015 -  “மறைக்கப்பட்ட இந்திய வரலாறு”
இன்றைய  வகுப்புக்காக எடுத்த குறிப்புகளிலிருந்து... நன்றி -திருப்பூர் - DYFI

31 கருத்துகள்:

  1. அரிதான தகவல் பரிமாற்றத்திற்கு நன்றிகள்.

    வாழ்க பாரதம்.

    கோ

    பதிலளிநீக்கு
  2. ஜாதி வெறி, மத வெறி கொண்டு, இவற்றைத் தாங்கி பதிவுகள் வரும் இந்த தருணத்தில், ஜாதி, மதம் கடந்த ஒரு சமத்துவ எண்ணம் கொண்ட இளைஞனின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒரு பதிவு. ஆசிரியருக்கு நன்றி.

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. உடல்நலம் எவ்வாறுள்ளது? வரவேண்டும் என்றே நினைக்கிறேன்..தள்ளித் தள்ளிப்போகிறது..நம் வேலைகளைத் திட்டமிடமுடியாமல் பலவெளிவேலைகள் கையைப்பிடித்து இழுத்துப்போகிறது. (திடீரென்று வருவேன்.)

      நீக்கு
    2. ஆசிரியர் அவர்களின் நலன் விசாரிப்புக்கு நன்றி. கால் காயம் முன்பு இருந்ததைவிட ஆறி விட்டது; இப்போது நடக்க முடிகிறது. வலைப்பதிவர் - ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கிய தகவலை ஆசிரியர் எஸ்.மது அவர்கள் தெரிவித்து இருந்தார். மணவை ஜேம்ஸ் அவர்களை செல்போனில் விசாரித்ததில், அவருக்கு இடது காலிலும், இடது கையிலும் நல்ல காயம் போலிருக்கிறது; இடது கை விரல்களிலும் பிரச்சினை போலிருக்கிறது. ஒரு தகவலுக்காக இதனை இங்கு சொன்னேன்.

      நீக்கு
  3. சிங் குறித்து ஆசிரியர் அறையில் என்றோ நடந்த விவாதத்தை நினைவில் கொண்டுவந்தது
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவாதம் நடந்தது எனில் உங்கள் ஆசிரியர் அறை ஆரோக்கியமாக உள்ளது என்று புரிகிறது. நன்றிகள் மது.

      நீக்கு
  4. உத்தம் சிங் போற்றுதலுக்கு உரியவர்
    வணங்குவோம்
    வீர வணக்கத்தை காணிக்கையாக்குவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தளம் வந்து நாளாகிறது. விரைவில் (திருப்பூர் போய்) வருவேன்.. தங்கள் தளம் வரலாற்றுப் பெட்டகமாய் வளர்கிறது.

      நீக்கு
  5. மதம் கடந்த தேசப்பற்று என்றால் இது தான்...

    என்னே வீரம்...!

    பதிலளிநீக்கு
  6. போற்றுதலுக்குரிய மாமனிதர்.....

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  7. முகமது சிங் பற்றிய தகவல் பாராட்டத்தக்கது. இத்தகைய போராளிகள் பற்றி பாடப் புத்தங்களே இருட்டடிப்புச் செய்துவிடுகின்றன. உயர்சாதியில் பிறந்த பார்ப்பனராக இருந்தால் வாஞ்சி நாதன் போல பாராட்டப்பட்டு இருப்பார், ஆனால் சாதாரண குடும்பத்தில் பிறந்து உண்மையான போர்க் குணத்தோடு போராடியவர்கள் மறக்கப்பட்டு விட்டனர்.

    பிறகு ஜாலியான் வாலாபாக் படுகொலையில் ஈடுபட்டவன் ஜெனரல் டயர் ( Reginald Edward Harry Dyer ). முகம்மது சிங் சுட்டுக் கொன்ற Michael O'Dwyer என்பவர் அப்போது பஞ்சாபின் கவர்னராக இருந்தவர். ஜெனரல் டயரை காப்பாற்ற முயன்றவர். இவர் தான் சுட்டுக் கொல்லவும் தயங்காதே என்ற உத்தரவை ஜெனரல் டயருக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த தகவல்களையும் இணைத்துச் சொல்வது சில தெளிவுகளையும் பெயர் குழப்பங்களையும் தவிர்க்கும். நன்றிகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, தங்களுக்கு நன்றி தெரிவித்து இந்தத் தகவலை அப்படியே வலைப்பதிவில் இணைத்துவிட்டேன். மீண்டும் நன்றி

      நீக்கு
  8. அருமை அருமை ஐயா .அதிகம் அறிந்திராத உண்மையான தேசபக்தரை அறியச் செய்தமைக்கு நன்றி . ஒரு சின்ன திருத்தம் மட்டும் சொல்ல விழைகிறேன். உத்தம் சிங் கொல்வதற்கு முன்பே நோய் வாய்ப்பட்டு இறந்து போனான் கொடுமைக்காரன் ஜெனரல் டயர் . உத்தம் சிங் கொன்றது டயரின் கொடுமைக்கு துணைபோன அன்றைய பஞ்சாப் துணை நிலைய ஆளுநர் மைக்கேல் ஓ டயர்(michael o'dwyer). கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின் லண்டனில் ஒரு கூட்டத்தில் அந்தக் கயவன் சொன்னான் " வாய்ப்பு கிடைக்குமானால் இன்னொரு ஜாலியன் வாலாபாக் படுகொலையை இன்று ஆப்ப்ரிக்காவில் நடத்தவும் தயங்கமாட்டேன் என்று "
    "அந்த வாய்ப்பு உனக்கு கிடைக்காது மைக்கேல்" என்று அவனெதிரில் தோன்றி முழங்கிக்கொண்டே அவனை தனது துப்பாக்கியால் தீர்த்துக் கட்டியது பஞ்சாப் சிங் (கம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி முரளி. எந்த டயர் முன்னால் இறந்தது, எந்த டயரை உத்தம் சி ங் சுட்டார் என்பதில் எனக்கும் குழப்பமிருந்தது. தெளிவுறத் தந்த உங்களுக்கு நன்றி தெரிவித்து, உங்கள் பின்னூட்டப் பகுதியை அப்படியே பதிவின் இறுதியில் இணைத்துவிட்டேன். மீண்டும் நன்றி முரளி.

      நீக்கு
  9. நான் பள்ளியில் படிக்கும் போது எனது தமிழாசிரியர் உத்தம் சிங் பற்றி உணர்சிப்பொங்க கூறியிருக்கிறார். அந்த மாவீரனை மீண்டும் நினைவில் கொண்டு வந்ததற்கு நன்றி!
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் செந்தில் எனக்கும் எனது வரலாற்று ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். நான் பின்னர் என் பிள்ளைகளுக்குச் சொன்னதுதான்.. பாடப்புததகங்களில்தான் இல்லையே? தமிழ்மண வாக்கிற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  10. \\\ நம் தேசபக்தப் பூங்காவைக் குரங்குகளிடமிருந்து காப்போம்! /// குரன்குப்படைகளிலிருந்து இந்தியாவை முதலில் காப்போம்! மறக்கப்பட்ட , மறைக்கப்பட்ட இந்திய வரலாறு. பதிவுக்கு நன்றி .

    M. செய்யது
    Dubai
    த. ம + 1

    பதிலளிநீக்கு
  11. உத்தம் சிங் அவர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  12. இத்தகைய வீர தியாகிகளின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு வகுப்பறைகளில் சொன்னால் சுதந்திரத்தின் பெருமையை புரிந்து கொள்வதுடன், பரவி வரும் மதவெறி எனும் நஞ்சுக்கு மாற்றாக அமையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடப்புத்தகங்களில் இல்லாவிட்டாலும் இவை போன்ற மறைக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துச் சொல்வதுதான் நல்ல ஆசிரியர்களின் கடமை. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
  13. உத்தமர் ஒருவரைப் பற்றிய பகிர்வை எங்களுக்குத் தந்தமைக்கு நன்றி. இவ்வாறான தியாகங்களை நாம் மறந்துவிட்டு மறுபடியும் சாதி, மதம் என்ற எல்லைக்குள் சிக்குண்டு நம்மையும் தொலைத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது வேதனைப்படவேண்டியதாக உள்ளது. நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
    http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் வாசிக்கிறேன் அய்யா.
      தங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள்.
      பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா.

      நீக்கு
  14. வலைப்பூவிற்கு வந்ததற்கு மகிழ்ச்சியடைந்த நாட்கள் ஏராளம். அத்தனை பயனுள்ள தகவல்கள், நினைவூட்டல்கள். இங்கே நம் நேரத்தை கழிக்கவில்லை, பயன்படுத்துகிறோம் என உணர்த்தும் பதிவுகளில் இதுவும் ஒன்று அண்ணா. முகமது சிங் ஆசாத் இன்று என் மாணவர்களுக்கு அறிமுகம் ஆவர்:) உத்தம்சிங் பற்றிய விரிவான பதிவிற்கு வலு சேர்க்கும் அந்த பின் இணைப்புக்களும் சூப்பர். நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே நம் நேரத்தை கழிக்கவில்லை, பயன்படுத்துகிறோம் என உணர்த்தும் பதிவுகளில் இதுவும் ஒன்று ஆமா மைதிலி... இதையெல்லாம் வகுப்பறைகளில் சொல்ல நம் பாடத்திட்டம்தான் இடம்தரவில்லை.. ஆசிரியர்களின் கடமையே “மறைக்கப்பட்ட வரலாற்றை“ குழந்தைகளுக்கு வெளிச்சப்படுத்துவதுதானே? நானும் அப்படித்தான் செய்தேன்

      நீக்கு
  15. அருமையான பதிவு! சாதி மதம் கடந்த போற்றுதலுக்குரிய மாமனிதரைப் பற்றிய அழகான பதிவு ஐயா! மாபெரும் வீரர்!!! இப்படி சாதிமதம் கடந்த வீரர்கள் வாந்த நம் நாடு இப்போது அதில் சிக்கிச் சீரழிகின்றதே ஐயா!

    பதிலளிநீக்கு