'மேதை’ – மாதமே!
“எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு,
எட்டுமணி நேர உறக்கம் - இதை
கெட்டமன மூலதன வர்க்கமே! தருக”எனக்
கேட்டெழுந்த போரின் தொடக்கம் (1)
வேர்வையில் நனைந்த உடல், வேதனை சுமந்த மனம்
வீதியில் வெடித்த முழக்கம் - அந்த
ஊர்வலம் உழைக்கும் வர்க்கம் கேவலக் கடல்கடக்க
ஓங்கு கலங்கரை விளக்கம். (2)
மேதினி முழுதும்இந்த மேதினம் நினைவில் எழும்
மெய்சிலிர்த்துக் கைஉயர்த்து மே! – தமிழ்
மாதத்தில் உழவனுக்கும் ஓர்திங்கள் நினைவில் எழும்
மாதம்உண்டு தை-மாத மே! (3)
சேற்றிலே கிடந்துழன்று நாற்றிலே உடன்துயின்று
காற்றிலே உயிர் வளர்த்தவன் - புதிய
ஏற்றத்தை அவன்கரத்தில் மாற்றத்தை அவன்கருத்தில்
என்று, 'தை'யை மாற்றிவரும் மே! (4)
‘ரெண்டு காலிலே நடந்து’ சென்றுநாம் சமர்புரிந்து
வென்றுமீள மே உணர்த்து மே! – அன்று
குண்டு போட்டழிக்க வந்த கூட்டமே நடுங்க ரத்தக்
கொடியெடுத்த தை,உணர்த்து மே! (5)
முன்புபோல அல்ல இன்று,’மூண்டெழுந்த போர்கள் வென்று
முன்நடக்கும் மே முழங்கு மே! – அந்த
நன்மையை உணர்ந்து மே-தை ரெண்டையும் இணைத்தெழுப்ப
நமதுவர்க்கப் போர்தொடங்கு மே! (6)
பாரதத்து வர்க்கசமர்த் தேரினை நடத்தவரும்
படைவியூக மே! தை-மாதமே! – ‘இந்த
ஈரெழுத்து நமதுநாட்டுப் போரெழுத்து’ என்றஞானம்
ஈந்தமாதம் ‘மேதை’ மாத மே! (7)
-------------------------------------------------------
மே – உலகத் தொழிலாளர் தினம்,
தை – தமிழ் உழவர் தினம்.
தொழிலாளரும் உழவரும் இணைந்து நடக்கவேண்டும். (இதை‘ரெண்டுகாலில்’நடப்பது என்பார் சீனப்புரட்சித் தலைவர் மாஓ.) இந்தியாவில் அப்படி நடந்தால்தான் இந்திய-தமிழ்ச் சமூக மாற்றம் சாத்தியமாகும் என்பதே சத்தியமாகும்.
அந்த நோக்கில் இந்தக் கவிதை..
எனது “புதிய மரபுகள்“ தொகுப்பிலிருந்து...
கவிதை பழசுதான்... ஆனால் நிலைமை பழசைவிடப் பழசாக இருக்கும் போது...உழைப்பாளர் பிரச்சினைகள் புதுசைவிடப் புதுசாக வந்துகொண்டே இருக்கும்போது... மறுபதிவு.
படத்திற்கு நன்றி - http://www.mathavaraj.com/ (இவர் எழுத்தாளர் மாதவராஜ், அண்மையில் காலமான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மருமகன் என்பதும் மற்றொரு செய்தி)
சிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
அருமை ஐயா...
பதிலளிநீக்குதொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்...
புதிய செய்திக்கும் நன்றி...
நன்னாளில் நல்ல பதிவு.
பதிலளிநீக்குவணக்கம் !
பதிலளிநீக்குதங்களின் பொன்னான பா வரிகள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா !
தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள் உழைக்கும் மக்கள்
அனைவருக்கும் இங்கே உரித்தாகட்டும் .
உழைப்பாளர்கள் தின நல் வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம +1
சிறப்பான சந்தக் கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு