நேற்று திருச்சி இன்று அருப்புக்கோட்டை நாளை விருதுநகர் மறுநாள் திண்டுக்கல்!

நேற்று திருச்சி 
இன்று அருப்புக்கோட்டை
நாளை விருதுநகர் 
மறுநாள் திண்டுக்கல்!

மேமாதம் என்றாலே நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். பங்குனி – சித்திரை முழுவதையும் விழாக்களுக்காக ஒதுக்கிய தமிழர்களின் நிலவியல் மற்றும் உளவியல் நோக்கை நினைத்தால் வியப்புத்தான்...
அரசுப் பணி ஓய்வு பெற்றாலும் எழுதுவதையும் பேசுவதையும் நிறுத்த முடியாத நிலையில் நானும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்...


மே-3ஆம் தேதி கந்தர்வன் நூலகத்தில் புத்தக்க் கொடையுடன் சொற்பொழிவுகள்.. அதோடு, “கொம்பன்“ திரைப்படத்தில் பாடல்கள் எழுதிய நம் தனிக்கொடிக்கு ஒரு பாராட்டுவிழா! (படம்)
“கொம்பன்“ பாடலாசிரியர் தனிக்கொடியை நூல்கள் வழங்கிப்
பாராட்டுகிறார் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்
இடையில் எனது 60ஆம் பிறந்த நாள் - நான் நண்பர்களை அழைத்து நடத்துமளவுக்கு நேரமோ மனநிலையோ இல்லாவிட்டாலும் என்மீதிருந்த அன்பின் அடையாளமாக நண்பர்கள் தங்கம்மூர்த்தி, பதிவர் தம்பதியினர் கஸ்தூரி தங்கை மைதிலியோடு, ஏஇஇஓ ஜெயாம்மா, நண்பர் மகா.சுந்தர் பதிவர் சகோதரி கீதா, முதலானவர்கள் நேரில் வந்திருந்தது நெகிழ்ச்சியூட்டுவதாயிருந்தது. தமிழாசிரியர்கழக  மாவட்டச் செயலர் குரு தமது வாழ்த்தை அடடையாக்கி அனுப்பியிருந்தார்... அந்தப் படம் இது -

அன்போடு வீட்டுக்கு வந்து என் பேத்தி செம்மொழியோடு பேசி மகிழ்ந்துசென்ற என் அன்புத் தங்கை மைதிலி செம்மொழி பற்றி எழுதிய கவிதை என்பேத்தியைப் போலவே அழகானது.
http://makizhnirai.blogspot.com/2015/05/small-wonder-semmozhi.html

வலைப்பதிவரும் கவிஞருமான தங்கை கீதாவும் ஒரு பதிவு போட்டு என்னைக் கூச்சப்படவைத்துவிட்டார். http://velunatchiyar.blogspot.com/2015/05/blog-post_11.html

13-05-2015 அன்று, உடுமலையில்  அறிவியல் இயக்கம் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் அமைப்புகள் “அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்“ எனும் கருத்தரங்கில் அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேரா.ந.மணி அவர்களுடன் நானும் பங்கேற்ற ஒரு கருத்தரங்கு.. (படம்)



கடந்த வாரம் சென்னையில் ஏர்வாடி திரு இராதா கிருஷ்ணன் அவர்கள் வழங்கிய – நமது நூலுக்கான முதல் விருது மற்றும் முதல்பரிசு விழாவில் வலை நண்பர்கள் கவியாழி, மதுமதி, மற்றும் சகோதரியைச் சந்தித்து வந்தது மகிழ்வாக இருந்தது. சகோதரி கீதா வந்திருந்தும் பார்க்கமுடியாத நிலை வருத்தம்தான்.  

----------------------------------------- 
நேற்று 22-05-2015 திருச்சியில் பெல் நிறுவன மனமகிழ் மன்றத்தில் மேதினப் பட்டிமன்றம்!
இன்று 23-05-2015 அருப்புக்கோட்டை..
நாளை 24-05-2015 விருதுநகர் அருகில் சாத்தூர் (தமுஎகச செயற்குழ)
மறுநாள் 25-05-2015 திண்டுக்கல்..

இடையில் நம் மலேசிய வலைநண்பர் திரு ரூபன் அவர்களின் அன்பின் விருது! மதுரை ரமணி அய்யா அவர்களுடன் எனக்கும் தந்திருப்பதாக ஒரு தகவல்
http://www.trtamilkkavithaikal.com/2015/05/2015.html இது நம் நண்பர் ரூபன் அவர்களின் அன்பன்றி வேறல்ல!

30-05-2015 – ஆலங்குடி தமுஎகச கலைஇரவு!
31-05-2015 திருப்பூர் காலை பாரதி கல்விமையம் இரண்டாமாண்டு தொடக்கவிழா, மாலையில் வாலிபர் சங்க வகுப்பு “மறைக்கப்பட்ட இந்திய வரலாறு!எனக்கான தலைப்பு!

அடுத்தமாதம் குறிப்பிடத்தக்க இரண்டு நிகழ்வுகள் –
06-06-2015 வேலூரில் நமது வலைப்பதிவு உறவினர் திரு விசு ஆவேசம் http://www.visuawesome.com/ அவர்களின் நூல் வெளியீட்டுவிழா நம் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் இந்தப் பதிவு பார்க்க –

19-21-06-2015  -  3நாள் - சென்னை அண்ணா நகர் 
எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி  
கல்வி, கலை, சூழல் 3நாள் கருத்தரங்கு
(இன்னும் இடைநாள்களில் என்னென்ன நிகழ்வுகள் வர இருக்கின்றனவோ.. அப்பத்தானே தெரியும்?!)

 உடலில் சக்தியிருக்கும் வரை      
ஓடிக்கொண்டே  இருப்போம்!

27 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    தங்களின் ஆசிரியர் பணியில் ஓய்வு பெற்ற பின் வீட்டில் இருந்த பாடு இல்லைஒவ்வொரு நாளும் மேடைப் பேச்சாகத்தான் உள்ளது. ஒவ்வொரு நேர சூசியை பார்த்த போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.. தொடரட்டும் சமுகப்பணி. மற்றும் தமிழ்ப்பணி.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசுவது அதிகரித்துவிட, படிப்பது குறைவது கவலை தருகிறது. படித்ததிலிருந்து பேசுவதுதான் நல்ல பேச்சாக இருக்குமன்றி, பேசுவதற்காகப் படிப்பது சரியல்ல என்பதுஎன் கருத்து நன்றி ரூபன்

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    தங்களின் புத்தகத்துக்கு பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.
    தமிழ்மணத்தில் தங்களின் பதிவை இணைத்து விட்டேன் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன், பதிவைப் போட்டுவிட்டு அப்படியே 23-05மதியம் கிளம்பியவன் இப்போது 25-05 (இரவு7மணி) வீடுவந்தேன். தமிழ்மண இணைப்புக்கு நன்றி ரூபன். இடையில் திண்டுக்கல்லில் நம் நண்பர் டிடியைப் பார்க்க முடியாது போனது வருத்தமே.

      நீக்கு
  3. நீங்கள் ஒரு “உலகம் சுற்றும் வாலிபன் (ஆசிரியர்)” என்பதனைச் சொல்லாமல் சொல்லுகின்றீர்கள். வாழ்த்துக்கள்.
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம ஊர்சுற்றிப்புராணம் எழுதிய ராகுல்ஜி ரகம்.
      நன்றி அய்யா

      நீக்கு
  4. தங்கள் தொடர் நிகழ்ச்சி நிரல் கண்டு மகிழ்ச்சி!
    தொடரட்டும்ம்ம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில நிகழ்வுகளும் உண்டு அவை பற்றியும் எழுதியிருக்க வேண்டும்.. எழுதுவேன்

      நீக்கு
  5. வாழ்த்துக்கள் ஐயா...

    தம்பியின் "அன்புடன்" சந்திக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா மன்னிக்க வேண்டும். இன்று 25-05-15 மதியம் திண்டுக்கல் நகரில்தான் இருந்தேன் திரு லியோனியுடன். ஆனாலும் தங்களைச் சந்திக்க நேரமின்றித் திரும்பிவிட்டேன். 6ஆம் தேதி முழுவதும் உங்களோடு என்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  6. அண்ணன் இப்படி பறந்து பறந்து கலக்குறாரே!!! பணிக்கு மட்டும் தான் ஓய்வு என அப்போதே தெளிவா சொன்னவராச்சே:) ரூபன் சகாவிற்கு என் நன்றிகள்:) last பன்ச் டச்சிங் அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா -தங்கையென்றாலும் அன்பில் அம்மாதான்- நீயும் என்னை மன்னிக்கணும்மா... உன் அன்பின் நெகிழ்ந்த என்பேத்தி பற்றிய கவிதைக்குறிப்பை இப்போதுதான் இந்தப் பதிவில் சேர்த்தேன்.. இருந்தாலும் தப்புத்தான் தோப்புக் கரணம் போட்டுக்கிறேன்.. (வயசாகுதுல்ல..மறதியும் வருது?) இப்ப ஏத்தினபிறகுதான் நிம்மதி.. இப்பப் பாரேன்.. நன்றிடா.

      நீக்கு
  7. இனி வரும் காலங்களும் நிற்காமல் உங்களை பணி புரிய வைக்கட்டும் அண்ணா...விருதுகள் உங்களை அடைந்ததால் மகிழ்வு பெற்றன...வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் கடன் அலைந்து திரிந்து பரப்புரை செய்வதே! (அந்த ஈரோட்டுக் கிழவன் வாழ்நாள் முழுவதும் அலைந்தாரே! அவரில் 100இல் ஒரு பகுதியைக் கூட நம்மால் செய்ய முடியாது போலிருக்கே?)

      நீக்கு
  8. வாழ்த்துக்கள் ஐயா
    தொடர்ந்து ஓடிக் கொண்டே இருங்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா... தஞ்சை வந்து பாறைஓவியக் காட்சியைப் பார்க்க வேண்டியது ஒன்று பாக்கியிருக்கிறது.. வருவேன்.. நன்றி அய்யா

      நீக்கு
  9. பதில்கள்
    1. நன்றி தோழரே! நேற்று விருதுநகர் சாத்தூர் வந்திருந்தேன் நீங்கள் தங்போது எங்கிருக்கிறீர்கள் தோழா?

      நீக்கு
  10. எதிலும் வெற்றி வாகை சூட
    எனது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றியாவது ஒன்னாவது... இதில் நம் வெற்றி என்ன இருக்கிறது நம் வேலையை வெற்றிகரமாகப் பார்ப்பது என்னும் அர்த்தத்தில் எனில் சரிதான்.. முடிந்தவரை பார்க்க முயல்கிறேன். நன்றி நண்பா

      நீக்கு
  11. ஓட்டம் தொடரட்டும்
    விருதுகளுக்கு வாழ்த்துக்கள்
    ஆமா மனோராவோ என்னமோ ஒரு ஊர் இருக்கிறதா கேள்விப்பட்டேன் அது விவேகானதர் குறுக்குச் சந்து துபாயில் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. (மனோரா? நச் னு ஏதோ சத்தம்? பின்மண்டையில் சின்னதா ஒரு வீக்கம்..) மேன் ப்ரபோசஸ் சூப்பர் மென் டிஸ்போசஸ் என்ன செய்ய? கடனை விரைவில் அடைப்போம் மகி நிறைக் குட்டிகளுடன் ஒரு முழுநாள் எப்படியாவது செலவிட ஆசைதான்.. பார்ப்போம் நினைவில் முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்கிறேன் அதுவரை மன்னிக்க

      நீக்கு
  12. சுற்றும் நிலவே
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. அல்லும் பகலும் அமிழ்தைத் தெளித்திட
    நில்லாமல் ஓடும் நிலவையா - செல்லும்
    இடஞ்செழித்துச் சிந்தை இனித்தேக வேண்டும்
    கடம்பனே உன்னருள் கொண்டு !

    தங்கள் பயணம் சிறக்க தமிழன்னையை முன்னிறுத்தித்
    தயாபரனை வேண்டுகிறேன் ஐயா
    பெற்றிட்ட விருதுகளுக்கும் பெறப்போகும் விருதுகளுக்கும்
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு