நான்கு குமாரசாமிகள்!

நான்கு குமாரசாமிகள்! 

இப்போதைய நீதியரசர் குமாரசாமி – உங்களுக்குத் தெரியும்

இவருக்கு முன்னோடிக் குமாரசாமி ஒருவரும் உண்டு!

அவரும் உயர்நீதிமன்ற நீதியரசர்தான்! (சென்னை உ.நீ.ம.)

1918இல் ஆங்கில அரசு கொண்டுவந்த –ஆங்கில அரசுக்கு எதிரான இந்தியரின் போராட்டங்கள் அனைத்தையும் “தேசத்துரோகம்” என்று சொன்ன “ரௌலட் சட்டத்தை“ உருவாக்கிய “ரௌலட் சட்ட வரைவுக்குழு“ உறுப்பினராக இருந்தவரும் ஒரு குமாரசாமிதான்! 
இதன் தலைவராக இருந்த ரௌலட்டின் பெயரிலேயே இந்தச் சட்டம் வந்ததால் இவர் “புகழ்“ வெளியில் தெரியவில்லை!


தமிழ்நாட்டிலிருந்து 
இந்த தேசப்பணிக்காக 
டெல்லி சென்ற 
அன்றைய 
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பெயரும்
குமாரசாமிதான்! 
இந்த செய்தி தெரிந்து பெருமைப் பட்டுக்கொள்ள திருவாளர் ரௌலட் இப்ப இல்லயே! என்ன செய்ய?


இவர்கள் இருவர் மட்டுமல்ல....
மூன்றாவது குமாரசாமி ஒருவரும் உண்டு!
அவர் திருப்பூர் குமரன் எனப் புகழ்பெற்ற குமாரசாமி.

அதுதான் அவரது இயற்பெயர்! 

இப்பச் சொல்லுங்க...

குமாரசாமிகள் 
முன்பே இருந்திருக்கிறார்கள் இல்லையா?

(காலஞ்சென்ற ராமாயி அம்மா மன்னிக்க!அடுத்து-
“ஞானப்பழமான“ 
நம்ம குமாரசாமியான 
அப்பன் முருகனும்
மன்னிக்க.

அவன் மன்னிச்சுடுவான்.

அவன் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா வாச்சே!

தப்பு பண்ண பிரம்மனையே காதைப்புடுச்சு திருகுனவனாச்சே!

அதுமட்டுமில்லாம
உலகத்துக்கே நீதிசொன்ன ஔவைக் கிழவிக்கே பாடஞ்சொன்ன அறிவுக் கொழுந்தல்லவா?

அறியாமையில் கிடந்துழலும் 
நம்ம முட்டாள்தனத்த நிச்சயம் மன்னிச்சுடுவான்! முருகா!!! 
 -------சரீ.. கூட்டணி யாரோட குமரா?---------- 

12 கருத்துகள்:


 1. அட நான்காம் குமாரசாமி நம்மாள் ஆயிற்றே !

  குமாரசாமிகள் தொகுப்பு அருமை ஐயா !
  வாழ்த்துக்கள்
  தம கூடுதல் ஒன்று  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான்காம் குமரன் சாமி
   தமிழுக்கும்
   கடவுள் அல்லவா!

   நீக்கு
  2. ஆமாமா... ”எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்“ என்றவரும் கவிஞர் ஞானக்கூத்தன்தான்!

   நீக்கு
 2. வேல்முருகனுக்கு மொட்ட ஒண்ணு போடப்போறோம்டோய்.
  காப்பி அடிச்சா அவன் பாத்துக்கிடுவான்
  பாஸு பண்ணுனா வேல வாங்கித்தருவான் ன்னு 25 வருடங்களுக்கு முன்னாடியே ஒரு திரைப்படப்பாடல் வந்திருக்குங்கைய்யா.

  சரீ.. கூட்டணி யாரோட குமரா?
  இதென்ன கேள்வி
  குமரனின் கருணை நிறைந்த பார்வைக்காகவும்
  பாவ மன்னிப்புக்காகவும் பல பேர் தவம் கிடக்கையில்
  குமரனைப்பார்த்து இப்படியெல்லாம் கேட்கலாமா ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கயோ குத்துறமாதிரி தெரியுதே!
   என்ன வச்சு காமெடி கீமெடி பண்லயே!
   சிவம்.. சிவனேன்னு இருக்க விடமாட்டிங்களே!

   நீக்கு
 3. அட நம்ம குமாரசாமிக்கு இத்தனை தகைமைகளா அவன் ஞானப் பழம் அல்லவா அதான் நிச்சயம் மன்னிச்சுடுவான் அண்ணா. பதிவுக்கு நன்றி! வாழ்க வளமுடன் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா..
   மன்னிச்சுடுவான்ல? அவனும் தமிழ்க்கடவுள் தானே?
   நாமளும் தமிழ்க்கவிஞன் தானே? அவனும் நம்மாள் தானே?

   நீக்கு
 4. தங்கள் தளத்தில் குமாரசாமியை (நான்காமவரைக் கூறுகிறேன்) கண்டதில் மகிழ்ச்சி. தஞ்சையம்பதி தளத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளதோ என முதலில் நினைத்தேன். பின்னர்தான் தாங்கள் குமாரசாமியைப் பற்றித் தாங்கள் பகிர்ந்ததை அறிந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 5. blogspot.in to blogspot.com மாற்றினால் தான் தமிழ்மணம் செயல்படும் ஐயா...

  பதிலளிநீக்கு
 6. அட! எங்களுக்குப் பிடித்த அந்த நான்காவது குமாரசாமி நம்ம ஆளைய்யா....தமிழ்!!! தமிழ்!!

  பதிலளிநீக்கு
 7. நலன் குமாரசாமி என்றொரு பிரபல இயக்கு நர் கூட இருக்கிறார். சூது கவ்வும் அவர் இயக்கிய படம்...

  பதிலளிநீக்கு