விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் -5 ஆரம்பமே சொதப்பலா?

சூப்பர் சிங்கர்-5 ஆரம்பமே சொதப்பலா?

“விஜய் டி.வி.யின் சூப்பர்சிங்கர்-5“ பாடகர் தேர்வின் ஆரம்பத்திலேயே சொதப்பல் + குழந்தைத்தனம் தெரிந்தது.

அது என்ன “சூப்பர் சிங்கர்-ஜூனியர்“னா பெரியமனுசத் தனமாவும், பெரியவுங்களுக்கான தேர்வுன்னா குழந்தைத் தனமாவும் இருக்கணும்னு ஏதும் வச்சிருப்பாங்களோ?


இன்று 04-06-2015 ஒளிபரப்பான (திருச்சியில் நடந்த?) பாடகர் ஆரம்பத் தேர்வில் நடுவர்களாக எஸ்.பி.பி.சரணும்,ஷாலினியும் உட்கார்ந்திருந்தார்கள். ஆர்வத்தோடு பாடவந்த இளைஞர்கள், இளம்பெண்களுடன் வழக்கம்போல -அழுதுவிடத் தயாரான முகங்களுடன்- அம்மா-அப்பா-தாத்தாக்கள் ஆஜர்வேறு!

ஒவ்வொருவராக வரவர பிரியங்காவின் கடித்தொல்லைவேறு! தேர்வுக்குப் போகும் முன் ஒரு நடுத்தர வயதுக்காரரை உட்கார வைத்து, “இவருக்கு சிரிப்புத்தாத்தானு பேரு“...என்று சொல்ல கருப்பு-வெள்ளைத் தலையரான அந்தப் பெரிய மனிதருக்கு 50வயது இருக்கும். அப்பன்னா பிரியங்கா பாப்பாவுக்கு 10வயது தான் போல...! (அது இருக்கும் 30க்கு மேல... ஆனாலும் டி.வி. காம்பியரர்னா என்ன ஒரு நினைப்புடா சாமி? கொசுத் தொல்லை தாங்கலயே!)

சரி சொதப்பல் கதைக்கு வருவோம் –
பாண்டிச்சேரியிலிருந்து 2ஆண்களுடன் இளம்பெண் ஒருவர். மூவரும் பாட்டுவகுப்பில் ஓராண்டாகப் பழகிய நண்பர்கள் என்று ஆரோக்கியமாகத்தான் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.

சரண் அவர்களைப் பார்த்து, “உங்கள் மூவரில் ஒருவரைத்தான் தேர்வு செய்யலாம்னா யாரைச் சொல்லுவீங்க?என்று கேட்க, அவர்கள் மூவருமே தன்னைச் சொல்லிக் கொள்ளாமல், மற்ற இருவரில் ஒருவரையே கைகாட்டிய பெருந்தன்மை அருமை!

ஆனாலும் அவர்களில் இருவருக்கு சிவப்புவிளக்கைக் காட்டி விரட்டி, ஒருவருக்கு முன் பச்சை விளக்கை எரியவிட்டார்கள்.
அவரும் “ஆ..ஊ..“ என்று வெளியில் போய் பிரியங்காவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மற்ற தன் நண்பர்களுடன் குதித்துக்  கும்மாளமிட்டுத் தேர்வைக் கொண்டாட... தேர்வான அந்த இளைஞரை நடுவர்கள் மீண்டும் அழைத்து “ சிவப்பு விளக்கை எரியவிடுவதற்குப் பதிலாக பச்சை விளக்கை எரிய விட்டுவிட்டோம்.. தேர்வான சான்றிதழைக் கொடுங்கள்“ என்று கேட்க அதிர்ச்சியான இவர் தரமறுத்துவிட்டார்...

பாடிக்கொண்டிருக்கும் பாண்டிச்சேரி இளைஞர்தான்
தேர்வாகி ரத்தாகி மீண்டும் தேர்வுக்காகப் பாடுகிறார்
ஆமா... அவர்தானே பாண்டிச்சேரி?
அந்த நடுவர்கள் ஏன் தடுமாறினார்கள்!!!
-------------------------------------------------------------------------------------------- 
தேர்வாகாத மற்ற அனைவரையும் அழைத்து, “எண்ணிக்கைத் தவறும் நடந்துவிட்டது.. இவரைத் தவறுதலாகத் தேர்வு செய்து விட்டோம்.. இவரோ சான்றிதழைத் திருப்பித்தர மறுக்கிறார்“ என்று சொல்ல, அனைவரும், “நாங்கள்லாம் தேர்வாகலன்னா பரவாயில்ல.. இவரைத் தேர்வு செய்துவிடுங்கள்“என்றுசொல்ல சரியென்று மீண்டும் அவரையே தேர்வு செய்து(?)விட்டனர்!

இது என்ன விளையாட்டா..? வேறுவழியின்றி நடந்ததா?

சூப்பர் சிங்கர்-5 ஆரம்பமே இப்படிச் சொதப்பல்னா இன்னும் போகப்போக எப்படியெல்லாம் இருக்குமோ? 
ஆரம்ப அலட்டலே தாங்கலடா சாமி!

---------------------------------------------------

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நாடகத்தையே கூட, கொஞ்சம் கலைத்தன்மையோடு செய்யக் கூடாதா? அதற்குக் கூட பொறுமையில்லை போலும்..

   நீக்கு
 2. எல்லாம் திட்டமிடப் பட்டவையாகவே இருக்கக் கூடும்.

  பதிலளிநீக்கு
 3. கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிகர் செந்தில் சொல்வது போல் ‘எல்லாம் ஒரு விளம்பரம் தான்”

  பதிலளிநீக்கு
 4. எல்லாம் சரி, இரு இடங்களில் ழ உச்சரிப்பு சரி இல்லையென ஒருவர் வாய்ப்பு மறுக்கபடுகிறார். வேறொருவரோ சங்கதி இன்னும் கொஞ்சம் பெட்டெர் ஆ இருகக்கணும், சுருதி பார்த்துக்கணும் தமிழ் ஒரு மாசத்தில நல்ல கத்துக்கணும் என்று வாய்ப்பளிகபடுகிறார்.

  பதிலளிநீக்கு