போய்வாருங்கள் நண்பரே!
கல்பாறை என்றென்னைக்
கண்டபலர் மத்தியில்
“ஓவியப் பாறை”என
உண்மையினைச் சொன்னவரே!
என்கதையை முழுநூலாய்
எழுதிவெளி யிடுமுன்னே
எமைப்பிரிந்து போகின்றீர்!
என்-கல்-நெஞ்சே கலங்குதய்யா,
இம்மனிதர் என்னாவார்?
தொல்பொருளும் நடுகல்லும்
இல்பொருளாய் ஆனதய்யா!
ஆவும் அழஅதன்,
கன்றும் அழுததென
ராமன் பிரிந்தகதை கம்பன் எழுதியதே!
திருமயப் பாறையிதோ தேம்பி அழுகிறது,
ராஜராஜன் பெருவழியும் பாதிவழி நிற்கிறது
பஞ்சு நூலாகும் கோவைக்கே போகின்றீர்
பாறையும் பாதையும் நூலாக முடியாதா?
உம்மால் முடியுமய்யா! உமதுபணி வெல்லுமய்யா!
கோவிலில் பக்திகண்டார்
கோவிலைச் சுற்றிவந்தார்
காணாத பலசெய்தி
கண்டவர் விண்டவர் நீர்தான்
நுணுக்கச் செய்திகளை
நூலாக்கிக் காணுமுன்னே
இப்போதே பிரிகின்றீர்
இதற்குநாம் என்னசொல்ல?
காடுகரை குன்றமெல்லாம்
காதவழி நீர்நடந்தீர்
பாதிவழி பிரிகின்றீர்
பரிதவித்தே நிற்கின்றோம்!
ராஜராஜன் பெருவழியும்
பாதிவழி நிற்குதய்யா,
அன்னவாசல் ஓவியமும்
அனாதையாய் பார்க்குதய்யா!
கல் நானே கலங்கியழ
மற்றுள்ளோர் என்செய்வர்?
எங்கிருந்த போதிலும் உம்
இயங்குபணி தொடரட்டும்!
அன்புடன்,
ஓவியப்பாறை,
திருமயம்
----------------------------------
பட உதவிக்கும் இன்னும் பலப்பல பணிகளுக்கும் நன்றி –
திரு அருள்முருகன் அவர்களின் வலைப்பக்கம் -
--------------------------------------------------
இக்கவிதை பற்றிய மேல் விவரம் அறிய -
http://valarumkavithai.blogspot.in/2015/06/blog-post_3.html
---------------------------------------------------
வித்தியாசமாய்... பிரமாதம் ஐயா...
பதிலளிநீக்கு“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
நீக்குவாக்கினிலே இனிமை உண்டாம்“ - ஆசான் பாரதி.
நான், என்னை அவ்வப்போது கவிஞனாக உணரும் சில உணர்ச்சி வசப்படும் பொழுதுகளில் மட்டுமே கவிதை வரும். அப்படி வந்த கவிதைதான் இது.. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. நன்றி.
ஓவியப்பாறையின் வருத்தம் அனைவருடன் பழகிய அனைவருக்குமே உண்டு. தங்களால்தான் (புதுக்கோட்டை கணினி பயிற்சி வகுப்பு) அவர் எனக்கு அறிமுகமானார். அவர் இங்கிருந்து பணியில் செல்லல் இங்கு இழப்பு என நினைக்கவேண்டாம். அவர் போகும் இடத்திற்கு லாபம், பெருமை என்றே நினைப்போம். நல்ல நிர்வாகியை, வரலாற்று ஆர்வலரைப் போற்றுவோம்.
பதிலளிநீக்குஎங்கிருந்தாலும் அவர் மனத்தளவில் நம்மோடே இருப்பார் என்பதொன்றே இப்போதைய நம் ஆறுதல். அன்பான குடும்பம், அரிய நண்பர் பலர். அவரை நண்பராகப் பெற்றது நான்பெற்ற பேறு.
நீக்குகல்லுக்குள் ஈரம் என்பதனைக், கவிதையாய் தந்து,கல்விப்பணி செய்யும் புதுகை நெஞ்சங்களில் இருக்கும் (முதன்மை கல்வி அலுவலர் முனைவர் நா . அருள்முருகன் அவர்களின்) பிரிவாற்றாமையை நெஞ்சு தழுதழுக்க விம்மும் வார்த்தைகளால் வெளிப்படுத்திய கவிஞருக்கு என்னென்று சொல்வேன்.
பதிலளிநீக்குஆசிரியர் எஸ்.மது அவர்களின் ‘மலர்த்தரு’ வலைத்தளத்தில் நான் எழுதிய கருத்துரை ( http://www.malartharu.org/2015/06/farewell-to-ceo-drarulmurugan.html ) இது.
// புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் பயிற்சியின்போது அவர் ஆற்றிய பங்கும் கொடுத்த ஒத்துழைப்பும், அவரோடு சில நிமிடங்களே நான் பேசிய காட்சியும் நிழலாடுகின்றன..
பதிவில் உள்ள கட்டுரையைப் படிக்கும்போதே படைப்பாளியின் (ராசி பன்னீர் செல்வன்) பிரிவாற்றாமையை உணர முடிகிறது. அதனால்தான் நீங்கள் (எஸ்.மது) உங்கள் கட்டுரையை எழுதவில்லை என்று நினைக்கிறேன்.
நெஞ்சம் தழுதழுக்க இருக்கும், புதுக்கோட்டை கல்விப்பணி நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை. இவர் மற்ற அதிகாரிகளினின்றும் வேறுபட்டவர்; அன்புடையார் என்றும் (என்பும்) உரியர் பிறருக்கு. இந்த ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு வலைப்பதிவர்கள் மாநாட்டில் அவரை அழைத்து கவுரவிக்க வேண்டுகிறேன். //
த.ம.2
ஆம் அய்யா, இங்கிருந்து, வழிநடத்த வேண்டியவர், நம் சிறப்பு விருந்தினராக வருவார். வரவேண்டும். பார்க்கலாம். நன்றி
நீக்குஉண்மை அண்ணா மனம் கனத்து போய் உள்ளது...இப்போதுதான் புரிகிறது அவரை எவ்வளவு பாக்காமலே நேசித்து உள்ளோம் என்பது...
பதிலளிநீக்குஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...?
நீக்குநானும் அப்படித்தான் உணர்கிறேன் கவித்தங்கையே!
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அவரின் மேல் வைத்துள்ள அன்பின் அடையாளத்தை கவித்துவத்தில் அழகாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நமது படிக்காத மேதையாம் பாமர உழைப்பாளிகள், “நல்லது போகும்போது தெரியும், கெட்டது வரும்போது தெரியும்” என்றது சும்மாவா? அனுபவப் பிழிவு அல்லவா? நன்றி ரூபன்.
நீக்குஉண்மையிலேயே புதுக்கோட்டை கல்வித் துறைக்கு
பதிலளிநீக்குஓர் பெரிய இழப்பு
இதனை எவராலும் ஈடு செய்ய இயலாது என்பதும் உண்மை
கல்வித்துறைக்கு ஓரிழப்பு என்றால், இலக்கியவாதி-ஆய்வாளர்க்குப் பேரிழப்பு அய்யா..
நீக்குமீண்டும் உணர்வு வெள்ளத்தில் ஆழ்த்துகிறீர்கள்..
பதிலளிநீக்குவெகு சிறப்பான பிரிவுரை ...
கோயம்புத்தூருக்கு யோகம் வேறு என்ன..
யாம் பெற்ற பேறு பெறுக இனி கோவை.
நீக்குஅடுத்த வாரம் -அய்யாவிடம் கேட்டுக்கொண்டு
போய்ப் பார்த்துவருவோம்.
கல்லும் கரைந்ததோ ம்..ம்..ம் அழகிய கவிதை அண்ணா. உறவும் பிரிவும் சகஜம் தானே கவலை வேண்டாம். ...
பதிலளிநீக்கு“உறவும் பிரிவும் இரண்டானால்,
நீக்குஉள்ளம் ஒன்று போதாதே!“ - இதுவும் கடந்து போகும் என்னும் டிடியின் முகப்பு வாசகம் நினைவுக்கு வருகிறது. நன்றி தங்கையே
பிரிவுக் கவிதை அட்டகாசம். ஒவ்வொரு வரியும் அருள் முருகன் ஐயா வின் பெருமையை அற்புதமாக பறை சாற்றுகிறது.வியக்க வைத்த அலுவலரை புதுக்கோட்டையில் சந்தித்ததை எண்ணி இன்றும் உளம் மகிழ்கின்றேன். அத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தங்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குபாறைகள் புலம்பும் வண்ணம் வித்தியாசமான சிந்தனையுடன் பொருத்தமான கவிதை அமைத்ததை பாராட்ட வார்த்தைகள் இல்லை
பறை (பாறை) சாற்றியது. நான் அதை மொழிபெயர்த்தேன்.
நீக்குஉணர்வுகளின் மொழிபெயர்ப்புத்தானே உண்மையான கவிதை?
நன்றி முரளி. (வரும் 19,20,21 ஜூன் சென்னை அண்ணாநகர் SBOA பள்ளியில் கல்வி- சுற்றுச்சூழல் பற்றிய 3நாள் கருத்தரங்கு. பெரிய பெரிய கல்வியாளர்களுடன் பேச என்னையும் அழைத்திருக்கிறார்கள்.உங்களிடம் பேசுகிறேன். சந்திப்போம்)
மனம் கணக்கும் கவிதை. ஒரு அரசு அலுவலர் எத்தனை தூரம் உங்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்திருக்கிறார், என்பதை உணர முடிகிறது.
பதிலளிநீக்குத ம 8
எனது அடுத்த ஒரு நல்ல பதிவுக்கு உங்கள் அன்பும் கருத்துரையும் புள்ளியிட்டுள்ளது. விரைவில் கோலம் போடுவேன் நண்பரே நன்றி.
நீக்கு