“ஆங்கில இலக்கியம் முழுவதும்
அழிந்துபோனாலும் பரவாயில்லை எங்கள் ஜான்சனும் பாஸ்வெலும் இருக்கிறார்கள் அவர்கள் போதும் நினைவிலிருந்தே அத்தனை இலக்கியங்களையும் மீட்டுத் தந்துவிடுவார்கள்“ என்று சொல்லக்
கேட்டிருக்கிறேன். அது உண்மையோ இல்லையோ நமக்குத் தெரியாது – நம்ஆங்கிலப் புலமை
அவ்வளவுதான்! வேறொன்றுமில்லை!
ஆனால்-
எனக்குத் தெரிந்து தமிழில்
அப்படி ஒருவர் இருந்தார்! திருவையாறு அரசர் தமிழ்க்கல்லூரியின் முதல்வராக இருந்து
பின்னர் புதுவை அரசின் பல்கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, கடந்த
ஆண்டு காலமான -
எங்கள் பேராசிரியர் திரு.தி.வே.கோ. (என்று நாங்கள் பெருமையாக்க் குறிப்பிடும் கோபாலய்யர்) தான் அவர்!
நான் அவரிடம் படித்தபோது, எந்தப் பாடத்திற்கும் புத்தகத்தை அவர் பார்த்து நடத்தி நான் பார்த்தில்லை!
எங்கள் பேராசிரியர் திரு.தி.வே.கோ. (என்று நாங்கள் பெருமையாக்க் குறிப்பிடும் கோபாலய்யர்) தான் அவர்!
நான் அவரிடம் படித்தபோது, எந்தப் பாடத்திற்கும் புத்தகத்தை அவர் பார்த்து நடத்தி நான் பார்த்தில்லை!
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம்,
கம்ப ராமாயணம் எதுவாயினும் “இன்னிக்கு என்ன பாடம்டா..?“ என்பார். நாங்கள்
சொல்வோம்.. அவ்வளவுதான்! பாடல்கள் இசையோடும் உரையிடையிட்ட நாடகமாகவும் தமிழருவி
கொட்டும். நாங்கள் குளித்துக் கரையேற வெகுநேரம் பிடிக்கும்! அதுதான் தமிழ்க்கடல் தி.வே.கோ.
அவர்கள்!
அதுபோல இன்னொருவர் இருப்பாரா
என்பது ஐயமே!
ஆனால்...
தமிழ்நூல்கள், பதிப்பு விவரங்கள், நூலாசிரியர் பற்றிய மேற்செய்திகள், குறிப்பிடத்தக்க இலக்கியநிகழ்வு பற்றிய தகவல்களை அருவியாகக் கொட்டக்கூடிய ஒருவரும் நம்மோடு நம் காலத்தில்
புத்தகங்களில் உயிரை வைத்துக்கொண்டே வாழ்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்!?
தமிழ்நூல்கள், பதிப்பு விவரங்கள், நூலாசிரியர் பற்றிய மேற்செய்திகள், குறிப்பிடத்தக்க இலக்கியநிகழ்வு பற்றிய தகவல்களை அருவியாகக் கொட்டக்கூடிய ஒருவரும் நம்மோடு நம் காலத்தில்
புத்தகங்களில் உயிரை வைத்துக்கொண்டே வாழ்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்!?
அவர்தான் எங்கள் ஊருக்குப் பெருமை
சேர்த்துவரும்-
“ஞானாலயா” ஆய்வுநூலக
நிறுவனரும் தமிழறிஞரும்,
தமிழ்நூல் தகவல் களஞ்சியமுமான
அய்யா –
பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்!
ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி
அவர்களின் பவளவிழா வருகிறது!
வரும் 15,16-08-2015
இருநாள்கள் புதுக்கோட்டையில் பெரும் விழா, நூல்கள் மற்றும் மலர் வெளியீடுகள், என, பெரிய
அளவில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன!
தமிழ் எழுத்தாளர், வாசிப்பை
நேசிப்பவர் என அனைவர் பங்கும் ஏதாவது ஒருவகையில் வரவேற்கப்படுகிறது.
பின்வரும்
இணைப்பைச் சொடுக்கியும், ஞானாலயாவின் இணைய தளத்தில் பார்த்தும், சென்னை நண்பரும்
நூல் பதிப்பாளருமான வைகறைவாணன் அவர்களை நேரில் தொடர்புகொண்டும் ஏதேனும் ஒருவகையில்
விழாவில் பங்கேற்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
http://www.gnanalaya-tamil.com/
சென்னை வைகறைவாணன்- (விழாஒருங்கிணைப்பாளர்)
செல்பேசி எண் – 9445182142
தொடர்பு முகவரி,
பா. கிருஷ்ணமூர்த்தி, ‘ஞானாலயா’,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொலைபேசி: 04322-221059
செல்பேசி : (0) 9965633140
e-mail: gnanalayapdk@gmail.com
----------------------------------------------
அன்புள்ள கவிஞர் ஆசிரியர் முத்துநிலவன் அவர்களுக்கு வணக்கம். தமிழ்மணத்தில் ’ஞானாலயா’ பற்றிய பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம் அங்கு செல்ல வேண்டும், மரியாதைக்குரிய கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. எத்தனையோ முறை நான் புதுக்கோட்டை வந்தும் தயக்கம் (எந்த ஆய்வு நோக்கமும் இன்றி, தனியே போய் என்ன செய்வது என்ற கூச்சம்) காரணமாக ’ஞானாலயா’ செல்ல இயலவில்லை.
பதிலளிநீக்குஎனவே தாங்களோ அல்லது கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களோ முன்னின்று, ’ஞானாலயா’ வர விருப்பம் உள்ள வலைப்பதிவர்களை ஒருங்கிணைத்து அங்கே ஒரு சந்திப்பை நிகழ்த்தினால் நன்றாக இருக்கும் என்றும், இந்த சந்திப்பு ’ஞானாலயா’ வளர்ச்சிக்கு ஒரு துவக்கமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பவளவிழா செவ்வனே நடைபெற எனது வாழ்த்துக்கள்.
த.ம.2
\\\\எங்கள் பேராசிரியர் திரு.தி.வே.கோ. (என்று நாங்கள் பெருமையாக்க் குறிப்பிடும் கோபலய்யர்) தான் அவர்!
பதிலளிநீக்குநான் அவரிடம் படித்தபோது, எந்தப் பாடத்திற்கும் புத்தகத்தை அவர் பார்த்து நடத்தி நான் பார்த்தில்லை!////
உண்மையில் ஆச்சரியமாகவே உள்ளது. அதுபோன்றே,\\\\\இலக்கியநிகழ்வு பற்றிய தகவல்களை அருவியாகக் கொட்டக்கூடிய ஒருவரும் நம்மோடு நம் காலத்தில்
புத்தகங்களில் உயிரை வைத்துக்கொண்டே வாழ்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்!? //// இவற்றை கேட்க ரொம்ப மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது ஆற்றலையும் ஆர்வத்தையும் கண்டு. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...! இவற்றை அறியத் தந்தமைக்கு நன்றி! அண்ணா. நலம் தானே?
உங்கள் ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் உதவி செய்யும் மனதிற்கும். விரைவில் பேசுவோம்.
பதிலளிநீக்குஉங்கள் வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பு (TEMPLATE) நன்றாக இருக்கிறது. நானே உங்களிடம், உங்களது வலைத்தளத்தின் பழைய வடிவமைப்பை மாற்றச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
பதிலளிநீக்குநான் படிக்கும் போது எங்களுக்கு பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வில் தமிழ் படம் எடுத்த சுந்தரம் அய்யா என்ற எங்கள் தமிழய்யவும் அப்படிதான். புத்தகத்தை எடுக்காமலே பாடம் நடத்துவார். மிகவும் கண்டிப்பான ஆசிரியர் என்பதால் நாங்கள் கொஞ்சம் எட்டவே நின்றோம். ஆனாலும் அவரின் தமிழ் இனிமையானது. எனது பள்ளி வாழ்வை நினைக்க வைத்த தங்களின் பதிவுக்கு எனது நன்றிகள்.
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள். விழா வெற்றிகரமாக அமைய என் இனிய அன்பு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதாங்கள் எனக்கு வலைச்சரத்தில் வைத்துள்ளதோர் கோரிக்கையை முடிந்தால் வரும் 13.06.2015 சனிக்கிழமையே நிறைவேற்றலாம் என என் மனதில் நினைத்துள்ளேன். என் முயற்சிகள் வெற்றிபெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்புடன் VGK
மிக்க நன்றி அய்யா. வலைச்சரம் தாமதமாகவே பார்த்தேன்.
நீக்குஅதில் என்பதிவுகள் பற்றியும் எழுதியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் பணி தொடர்க.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
நிச்சயம் போற்றப்படவேண்டியவர்கள்.. இது சம்மந்தமான பதிவை கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் தளத்தில் சென்ற வாரம் பதிவிட்டார் அதிலும் படித்து மகிழ்ந்தேன் ஐயா.. நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
களப்பணிக்காக பல முறை புதுக்கோட்டை சென்றபோதுகூட ஞானாலயா செல்லவில்லை என்பது எனக்கு ஒரு குறையே. விரைவில் செல்வேன். அண்மையில் கரந்தை ஜெயக்குமார்கூட ஒரு பதிவிட்டிருந்தார். பதிவிற்கு நன்றி.
பதிலளிநீக்குவர முயற்சிக்கிறேன் ஐயா..
பதிலளிநீக்குபுத்தகத்தை பார்க்காமலே பாடம் சொன்ன ஆசிரியர்கள் இப்போது இல்லைதான்! சிறப்பான இரு அறிஞர்களை அறிந்து கொண்டேன்! விழா சிறக்க வாழ்த்துக்கல்!
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா
பதிலளிநீக்குவிழாகுழு முழுவேகத்தில் செயல்பட ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கேன்.
மலர்க்குழுவின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் வழக்கம் போல அசத்துங்கள்
தம +
விழாவில் அவசியம் பங்கேற்கிறோம் ஐயா
பதிலளிநீக்குநூல்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கும்
மாமனிதர்அல்லவா அவர்
நன்றி ஐயா
தம +1
அன்புடையீர்! வணக்கம்!
பதிலளிநீக்குஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (13/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
அன்புள்ள கவிஞர், ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பதிவுகள அடிக்கடி படிக்கும் வாய்ப்பு பெற்ற வாசகர்களில் நானும் ஒருவன். (சரி .. சரி .. இது தெரியாதா? இதைச் சொல்லவும் வேண்டுமோ என்று சொல்ல வேண்டாம். ஒரு மரபுக்காக .... .... அவ்வளவுதான்)
பதிலளிநீக்குஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (13.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/13.html
வணக்கம்
பதிலளிநீக்குநல்ல தகவல் தந்திருக்கிறீர்கள். அன்றைக்கு புத்தகத்தைப் பார்த்து பாடம் நடத்தாத ஆசிரியர்களும், இன்றைக்கு புத்தகத்தைப் படிக்காமல் பரீட்சை எழுதும் மாணவர்களும்தான் அதிகம் என்று நினைக்கிறேன். தாங்கள் தந்த இத்தகவல் கட்டாயம் பத்திரிகைகளில் பதிவு செய்ய வேண்டிய ஒன்று. என்னால் முடிந்த முயற்சியைச் செய்கிறேன். ஞானாலயா திரு. பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்...
அன்பிற்குரியீர் வணக்கம். தங்கள் எழுத்துகளைக் கடந்த 25ஆண்டுக்கும் மேலாக நான் அறிவேன். -தினமணி ஞாயிறு மலராகத் தமிழ்மணி தனிஇணைப்பாக வந்த 1990களில்... நானும் அதில் சில முக்கியமான கடிதங்களை எழுதியிருக்கிறேன். பின்னர்தான் தினமணியின் தலையங்கப் பக்கக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். சங்க இலக்கியம் பற்றிய தங்களின் பல கட்டுரைகளை பல்வேறு இதழ்களில் வாசித்திருக்கிறேன். எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ எனும் இலக்கிய விமர்சன நூலைத் தங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். தங்களின் முகவரியைத் தரவேண்டுகிறேன் - எனது மின்னஞ்சல்-muthunilavanpdk@gmail.com அன்பு கூர்ந்து தொடர்பு கொள்க. நன்றி
நீக்கு