“த.மு.எ.க.ச. கலை-இலக்கிய விருதுகள்“ அறிவிப்பு

“த.மு.எ.க.ச. கலை-இலக்கிய விருதுகள்“ அறிவிப்பு

    பத்துவகைவிருதுகள் – பரிசு ரூ.50,000+விருது


மிழ்நாடு முற்போக்கு ழுத்தாளர்-லைஞர்கள் ங்கம் 2014ஆம் ஆண்டுக்குரிய கலை-இலக்கிய விருதுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைசார்ந்த நூல்கள் / குறுந்தகடுகளை அனுப்பலாம். இது தொடர்பாக மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை –

2014ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்கள்/குறுந்தகடுகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.

வந்த நூல்களைத் திரும்பப் பெற இயலாது. விருதுக்குத் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பிரிவுக்கும் “தமுஎகச விருது“, சான்றிதழ், ஆகியவற்றுடன் ரூ.5,000 ரொக்கப் பரிசு கௌரவமான விழா ஒன்றில் வழங்கப்படும்.

(1) கே.முத்தையா நினைவு விருது –தொன்மைசார் நூல்
(2) கே.பாலச்சந்தர் நினைவு விருது –நாவல்
(3) சு.சமுத்திரம் நினைவு விருது –விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு
(4) இரா.நாகசுந்தரம் நினைவு விருது –கலை-இலக்கிய விமர்சன நூல்
(5) ப.ஜெகந்நாதன் நினைவு விருது – கவிதை நூல்
(6) அகிலா-சேதுராமன் நினைவு விருது – சிறுகதை நூல்
(7) வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது –மொழிபெயர்ப்பு
(8) பா.ராமச்சந்திரன் நினைவு விருது – குறும்படம்
(9) என்.பி.ரத்தினம்-நல்லசிவம் விருது- ஆவணப்படம்
(10)                    முசி.கருப்பையா பாரதி நனைவு விருது – “நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது“ (தகுதிமிக்கதொரு நாட்டுப்புறக் கலைஞர் பெயரைப் பரிந்துரைக்கலாம்)
-------------------------------
2015-ஜூலை,15ஆம் தேதிக்குள் 
அனுப்ப வேண்டிய முகவரி
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்)
மதுரை – 625 001
தொலைபேசி-0452 2341669

----------------------------
நமது வலைப்பதிவர்கள்,எழுத்தாளர்கள் நூல்களையும் குறும்படங்களையும் 
உறைமேல் “எந்த வகை விருதுக்கானது“ எனும் விவரத்தையும் எழுதி,
அனுப்பிட வேண்டுகிறேன்

-நா.முத்துநிலவன்- 
செல்பேசி -+91 9443193293

8 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா

  தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி... த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. பரிசு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வலைச்சித்தரே. வேறு தளங்களில் பகிர யோசனை சொல்ல வேண்டுகிறேன்.

   நீக்கு
 3. அறிவிப்பு கண்டு மகிழ்ந்தேன் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கரந்தையாரே.
   தங்கள் நூல்களில் அந்தந்தத் தலைப்புக்கேற்ற நூல்களை அவசியம் அனுப்பிவைக்க அன்புடன் வேண்டுகிறேன்.

   நீக்கு
 4. வணக்கம் !
  தங்களின் இந்த அறிவித்தலைக் கண்டு மகிழ்ந்தேன் !பரிசு பெறப்போகும் நல் உள்ளங்களுக்கும் இவ் அறிவித்தலை வெளியிட்ட தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

  பதிலளிநீக்கு

 5. நண்பர்கள் யார் யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை பார்ப்போம்
  தம +

  பதிலளிநீக்கு