எனது நூறாவது பிறந்த நாளன்று...இப்படி ஒரு கேள்வி கேட்டால்..?

தங்கை மைதிலியின் கேள்விகள் - http://makizhnirai.blogspot.com/

என் பதில்கள் - 

1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
நான் இல்லாமலே, நண்பர்கள் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நன்றி மறவாமல் இருக்கவும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும். 

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
கடைசியாக..? ஏன்?  இனிமேல் சிரிக்கமாட்டேனா என்ன?   (இந்தக் கேள்வி பார்த்து)

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
விசிறிக் கொள்வதுதான் – இன்வெர்ட்டர் அவ்வளவு நேரம் வராதே!

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 
வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு என்னைவிட நன்றாக வாழ்க

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் 
எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
அவரவர் உணவை அவரவரே சம்பாதிக்கும் சுயமரியாதை வளர்ப்பதை

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் பேரப்பிள்ளை மற்றும் இளைய தலைமுறையிடம் –  வளரும் தொழில்நுட்பம் பற்றி.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
குறள்-510. அல்லது நியூட்டனின் மூன்றாம் விதி.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
உடனடியாக அல்ல, எனினும் நிச்சயமாக இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்வேன். 
(கணவரை இழந்த தோழிக்கும் இதையே சொல்வேன்)

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
படிப்பு, எழுத்து, இசை, தொலைக்காட்சி, தொலைபேசி, அடுத்த வேலையைத் திட்டமிட்டுவிட்டு நிம்மதியான தூக்கம். 
---------------------------------------------------------- 
இனி இந்தக் கேள்விகளைப் பின்வரும் வலை உறவுகளுக்கு
அன்புடன் அனுப்பித் தருகிறேன் - அவர்கள் பதில் தருக! 

கவிஞர் புதியமாதவி - http://puthiyamaadhavi.blogspot.in/
அய்யா தி.தமிழ்இளங்கோ -http://tthamizhelango.blogspot.com/
அய்யா முனைவர் பா.ஜம்புலிங்கம் - http://drbjambulingam.blogspot.in/
கவிஞர் சுவாதி - http://swthiumkavithaium.blogspot.com/
நண்பர் கரந்தை ஜெயக்குமார் - http://karanthaijayakumar.blogspot.com/
நண்பர் - வா.நேரு - http://vaanehru.blogspot.in/
நண்பர் மகா.சுந்தர் - http://mahaasundar.blogspot.in/ 
நண்பர் - ஜோசப் விஜூ- http://oomaikkanavugal.blogspot.in/
நண்பர் குருநாதசுந்தரம் - http://gurunathans.blogspot.in/
தம்பி கொ.சுப.கோபிநாத் - http://ilakkanatheral.blogspot.in/ 

(நம்  நண்பர்களில் தி.ந.முரளி, கரந்தையார், பாண்டியன் ஆகிய மூவர் ஏற்கெனவே நம் நண்பர்களின் பட்டியலில் இடம்பெற்று விட்டதால்  மீண்டும்  மாற்றியிருக்கிறேன் அவர்களும் பதில் இடலாம்.. நண்பர்கள் பட்டியல் பத்தும் பத்தாதுதானே ? )

(நட்பு வலை விரிய வழிகாட்டிய தங்கை மைதிலியைப் பாராட்டுங்க...
--அல்லது திட்டுங்க.. ஏனெனில் இதை என் பக்கம் தள்ளியவர் அவரே)
---------------------------------------------------------------------------------- 
ஏற்கெனவே பதில் தந்த நட்புறவு வலைகள் -
நண்பர் மது -கஸ்தூரி - http://www.malartharu.org/
தங்கை கிரேஸ் - http://thaenmaduratamil.blogspot.com/
தங்கை சசி - http://veesuthendral.blogspot.in/
நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் - http://unmaiyanavan.blogspot.in/

---------------------------------------------------------------------------------  
இந்த இனிய விளையாட்டை (?) தொடங்கி-மாட்டி-வைத்த 
நண்பர் மதுரைத்தமிழனுக்கு நன்றி(கர்ர்ர்ர்ர்ர்...மக்கா...)
-http://avargal-unmaigal.blogspot.com/

48 கருத்துகள்:

 1. அண்ணா thank u soooooooooooooooooooo much.
  மதுரை தமிழன் சகா இதை தொடங்கி வைத்தபோதே நானும் இதை தான் நினைத்தேன். ஒரு ஆரோக்கியமான நட்பு வட்டம் விரியுது இல்லையா :)
  பாண்டியன் சகோ, முரளி சார் ரமணி சார் எல்லாம் ஏற்கனவே கட்டம் கட்டப்பட்டவர்கள் தான் :)))))
  அண்ணா உங்க விடைகளை படிச்சுட்டு ஆஹா!!! ஆஹா!!னு ரசித்துக்கொண்டே இருந்தேன். தனக்கான உணவை// சான்சே இல்லேண்ணா !சூப்பர் ! சூப்பர்! சூப்பர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தூண்டியது நீ, தொடர்ந்தது நான்.
   எனவே இந்தப் பெருமைகளை உனக்கே ஃபார்வேர்டு செய்கிறேன்.

   நீக்கு
 2. வணக்கம் ஐயா..


  குறள் 510: தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
  தீரா இடும்பை தரும்..

  அத்தனையும் முத்தான பதில்கள் ஐயா..:)

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  கேள்விக்கான பதில் நன்றாக உள்ளது மற்றவர்களின் பதிலுக்காக காத்திருக்கேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. உங்கள் பதில்கள் அருமை...
  செமை யூத் நீங்க ....
  பதில்கள் யூத்புல் கலக்கல்..
  உண்மையை சொல்லி இருக்கீங்க...
  http://www.malartharu.org/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடலுக்கான வயது வேறு
   அறிவுக்கான வயது வேறு.
   (20 வயதில் முளைக்கும்அறிவுப்பல் கேள்விப்பட்டிருக்கீங்களா?மனிதர்க்கு 32வயதும் அடுத்தடுத்து முளைப்பதில்லையே?)
   அந்த வகையில் நான் யூத் தானே 36..?

   நீக்கு
 5. அட பெரிய & நல்ல ஆசிரியர் கூட என்னுடைய கேள்விகளுக்கு அட்டகாசமாக பதில் அளித்து இருக்கிறாரே..!!!!

  சந்தோஷமாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கு நன்றியும் வணக்கமும்.
   தங்களின் பதிவுகள் பார்த்து அசந்திருக்கிறேன்.. அருமை நண்பரே.
   அதுசரி.. பெரிய & நல்ல..? இருங்க திரும்பிப் பார்த்துக்கிறேன் எனக்குப் பின்னால் யாராவது நிக்கிறாங்களா ?
   ஓ... என்னையா சொன்னீங்க...
   கவிதையாப் பேசுறீஙககளே!!!
   ”கவிதைக்குப் பொய் அழகு”-வைரமுத்து.

   நீக்கு
 6. பதில்கள் ஒவ்வொன்றும் அருமை ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆங்... அந்தக் கதையெல்லாம் வேணாம் அய்யா..
   பதில்...பதில்...பதில் வேணும்..(அருள்கூர்ந்து எழுதுங்களய்யா..)

   நீக்கு
 7. வணக்கம் ஐயா
  தங்களின் பதில்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. திருமணநாளில் சொல்ல விரும்புவது பதில் எனக்கென்று எடுத்துக் கொள்கிறேன். நண்பர்கள் வட்டமும் அவர்களின் எண்ணங்களையும் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. நண்பர்கள் தொடரவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் நான் பெறாத மகன்தான் பாண்டியன். (என் மகனைவிட இளைய வயதுதான் என்பதால்..)
   தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
   மன்னுயிர்க் கெல்லாம் இனிது -குறள்.
   சரி சரி பதில் எங்கே? விரைவில் உங்கள் பதிவில் இடுக..

   நீக்கு
 8. ஒவ்வொன்றும் முத்தான பதில்கள் அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா.. என் தங்கை மைதிலி, என்னைவிட -- அடுத்த தலைமுறை என்பதால்-- முந்திக்கொண்டு உங்களைப் பட்டியலிட்டுவிட்டார், எனவே நான் வி்ட்டு வி்ட்டேன்.எனினும் உங்களின் பதில்களை எதிர்பார்த்திருக்கிறேன்.எழுதுவீங்கல்ல..?

   நீக்கு
 9. அட்டகாசமான பதில்கள்! கரண்ட் கட் பதிலை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குச் சிரிப்பு... தமிழ்நாட்டுக்கு வந்து பாருங்க தெரியும்.. இப்ப நேத்து இல்லங்க.. நாலஞ்சு வருசமா.. பழகிப்போச்சு..

   நீக்கு
 10. அழகாய் சொல்லி தப்பிட்டீங்க நாங்க மாட்டிக்கிட்டோம் அவ்வ்வவ்வ் ...

  அறிவார்ந்த பதில்கள்
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாட்டிக்கிட்டாலும் இது மகிழ்ச்சியானதுதானே
   (ஆமா நீங்க என்ன அய்யா வவ்வால் அவர்களின் தம்பியா?)

   நீக்கு
 11. சிரிப்பு கேள்விக்கு உங்கள் பதில் ரொம்ப அருமை. ஆனால் கொஞ்சம் யோசித்து தான் சிரித்தேன். அர்த்தம் என்னவெனில் தங்கள் கேள்வி-பதில் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறது என்று சொல்லுகிறேன் மன்னா !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.. யாரங்கே அந்த பொற்காசு முடிச்சினை எடுத்து வாருங்கள்... அதற்குள் இங்கு யார் நக்கீரனா..? என்னய்யா பிரச்சினை ஓ.. இதைப் பற்றிக் கேள்வி கேட்டு அதன்பின்தான் பரிசா.. கேளும் கேளும் கேட்டுப் பாரும் பாரும்.. (உஸ் அப்பாடா)

   நீக்கு
  2. அடடே பொற்கிழி கெல்லாம் இங்க வேலை இல்ல மன்னா ஒரு சுக்கு மல்லி காப்பி சொல்லட்டுமா ...உடம்புக்கு நல்லது. (உஸ் அப்பாடா)அது சரி இம்புட்டு பேரையும் எப்படி நினைவில் வைத்து இருக்கிறீர்கள்?வல்லாரை லேகிய மகிமையா ?

   நீக்கு
  3. வல்லாரை இங்கெதற்கு, வாய்த்தஉம் போலுள்ள
   நல்லாரைப் பெற்ற நமக்கு? (நமது தெருக்குறள்)

   நீக்கு
 12. சுருக்கமான தெளிவான பதில்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா.. டெல்லிக்காரங்க இந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட மா்ட்டீங்க.. உங்க பிரச்சினை வேறு!

   நீக்கு
 13. தங்களின் பதில்கள் அனைத்துமே இளமையாக இருப்பதின் ரகசியம் என்ன ஐயா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யே... இது கூடத் தெரியாதா...?
   என் இளமை உணர்வின் (எச்சரிக்கையான வார்த்தை தானே?) ரகசியம்- உங்களைப் போலும் இளைஞர்களுடன் நட்பாக இருப்பதுதான்..(அப்பாடா தப்பிச்சேன்...)
   மற்றும்..
   “யாண்டு பலவாக நரையில வாகுதல்
   யாங்கா கியர்என வினவுதிராயின்
   இண்டிகா டை என இயம்புவென் மற்று...”

   நீக்கு
  2. இப்படி ரகசியத்தை போட்டு உடைக்கலாமா ..மார்க்கண்டேயரே

   நீக்கு
  3. ஐயா இது திருக்குரளா ? அல்லது திரு.முத்துநிலவன் ஐயாவின் குரலா ?

   நீக்கு
  4. நானும் கூட இந்த கேள்வி-பதில் சிக்கலில் மாட்டி இப்பொழுதான் என்னை விட்டார்கள் ஐயா.

   நீக்கு
  5. அய்யா கில்லர்ஜிக்கு -
   1. அய்யா இது நான் நானேதான் எழுதிய தெருக்குறள் அய்யா
   2.யாம் பெற்ற (து)இன்பம் பெறுக இவ்வையம்.

   நீக்கு
 14. விடைகள் விரும்பத்தக்கதாய் உள்ளது ஐயா.

  பதிலளிநீக்கு
 15. முத்துக்கு முத்தாக
  பத்துக்குப்க பத்தாக
  கேள்வி - பதில்
  நன்றாக இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால், நட்புக்குப் பத்தும் பத்தாதே! (பட்டியலி்ல்) நன்றி அய்யா

   நீக்கு
 16. உங்கள் பதில்களில் அனுபவமும் புத்திசாலித்தனமும் நகைச்சுவையும் பளிச்சிடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா... நீங்க சொன்னா சரிதான்...
   (சரீ...“என்னை வச்சிக் காமெடி கீமெடி எதுவும் பண்ணலியே?“
   ம்கூம்.நீங்க பெரியவங்க அப்டியெலலாம் பண்ணமாட்டீங்க)

   நீக்கு
 17. அசத்தல் சகோதரா ஆர்ப்பாட்டம் இல்லாமல் எவ்வளவு அழ்ந்த கருதுக்களுடன் நகைசுவையாய் பதிலளித்துள்ளீர்கள்.
  நன்றி வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி. நானும் உங்கள் பதில்களை உங்கள் தளம் சென்று பார்த்து மகிழ்ந்தேன்.. எதார்த்தமான பதில்கள் நன்றி மா.

   நீக்கு
 18. பத்து கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டேன். தாமதத்திற்கு பொறுத்தருள வேண்டுகிறேன். சில கேள்விகள் அதிகம் சிந்திக்கவைத்துவிட்டன. நான் பதில் கூறியபின்னரே உங்களது பதில்களைப் படித்தேன். வழக்கம்போல் சிறப்பாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 19. பத்து கேள்விக்கான பதிவர்களின் பதிலை படிக்காமலே இருந்தேன் ,என் பதில்களில் அவை பிரதிபலித்து விடக்கூடாது என்பதற்காக !
  நான் காமெடியா பதில் சொல்லி இருக்கிறேன் ,நீங்கள் சீரியஸா சொல்லி இருப்பது அருமை !
  குறளுக்கு விளக்கமும் சொல்லிவிட்டால் ....திருக்குறள் உரையை நான் மட்டுமல்ல ...பலரும் தேட வேண்டி இருக்காது !

  பதிலளிநீக்கு
 20. முத்தான பதில்கள்.
  8 & 9 வெகு அருமை.

  பதிலளிநீக்கு
 21. " அவரவர் உணவை அவரவரே சம்பாதிக்கும் சுயமரியாதை வளர்ப்பதை "

  அனைத்து பதில்களும் அருமை என்றாலும்,இது அருமையிலும் அருமை ஐயா !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு