காலங்களில் அவன் வசந்தம் (கண்ணதாசன் பிறந்தநாள் கட்டுரை)


   புதுக்கோட்டையை அடுத்த ராமச்சந்திரபுரத்தில் “திருமகள்“ பத்திரிகையில் சேர்ந்தபோது, அவனுக்கு வயது பதினேழு!
  அங்கு அவனது பெயரைக் கேட்டபோது, சட்டென்று தோன்றிய ஒரு கற்பனையான புனைபெயரைச் சொல்லி வைத்தான். பின்னாளில் தமிழ்த்திரைப்படப் பாடல்உலகில் முப்பதாண்டுக் காலம் முதலிடத்தில் இருக்கப் போவது இந்தப் பெயர்தான் என்பது அந்த முத்தையாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் அது நடந்தது 1944ஆம் ஆண்டில்!

     இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, அவன் உச்சப் புகழில் உட்கார்ந்திருந்த போது, ஒருநாள் ஏதோ பேசுவதற்காக, தினமணிக்கதிர் பத்திரிகைக்குப் பேசினான்.
     அப்போது அதன் ஆசிரியராக இருந்த “சாவி“யே பேசினார்.
     பேசவந்ததைப் பேசிமுடித்த பிறகு, “நமக்கு ஏதாவது எழுதுங்களேன்?“ என்று கேட்கிறார் சாவி. “ஓ! எழுதுகிறேனே!என்கிறான் இவன்.
     “இப்போதே டைட்டில் சொல்லுங்கள், விளம்பரம் செய்துவிடலாம்என்கிறார் சாவி. என்ன தோன்றியதோ தெரியவில்லை, சட்டென்று “அர்த்தமுள்ள இந்துமதம்என்று கூறிவிட்டான்.
     என்ன எழுதப் போகிறோம் என்று திட்டமிடாமலே கூறிவைத்த தலைப்பில் பல பாகங்கள் எழுதி, அவை நூலாக வெளிவந்து, இன்றுவரை வெளிவந்த தமிழ்க்கட்டுரை நூல்களில் மிக அதிகப் பிரதிகள் விற்றுக்கொண்டிருக்கும் நூலாக அர்த்தமுள்ள இந்து மதமே விளங்குகிறது. ஐம்பது பதிப்புக்கும் மேல் விற்றுக் கொண்டே இருக்கிறது. (இந்த 2014இல் இது நூறு பதிப்பைத் தாண்டியிருக்கலாம்)
     ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு, முதற்பதிப்பு விற்கவே மூன்றாண்டுக்கும் மேலாகும் தமிழ்ச்சூழலில்,  முப்பது ஆண்டுகளுக்குள் ஐம்பது பதிப்புகளை – ஐம்பது ஆண்டுக்குள் நூறு பதிப்புகள் வரை – தொட்டிருக்கும் அதிசயம், அவனது தமிழின் அழகின் அடையாளம். எவ்வளவு பெரிய விஷயத்தையும் சின்ன வார்த்தைகளுக்குள் செதுக்கிவிடும் சிறப்பு.
     கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் உள்ளிட்ட  எழுத்துகளை, வெறும் மதப்பிரச்சாரமாக அல்ல, வாழ்க்கை அனுபவவிளக்காக- ஆற்றாமைக்கு ஓர் ஆறுதல் மொழியாகவே தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
இதிகாசங்களில் வருகிறவர்கள் மனிதர்கள்தான். ராமன் என்ற மனிதன் தன் நடத்தையால் தெய்வமானான். ராவணன் என்ற மனிதன் தன் நடத்தையால் மிருகமானான்“ என்பன போன்ற எளிய விளக்கங்களில் கண்ணதாசன் எனும் மனிதன் படிக்காத மேதையாக ஏற்கப்பட்டான். (ராமனைக் கூட மனிதனாக அவதரித்த திருமால் என்னும் அளவில் ஏற்கும் மதவாதிகள், அரக்கனான ராவணனைக் மனிதன் என்று கண்ணதாசன் சொல்வதை ஏற்பார்களா தெரியவில்லை. இதுபோலும் விளக்கங்களைத்தான் மதம் கடந்த மனிதவாழ்வின் நுட்ப விளக்கம் என்கிறேன்)
கைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரியில்
24-06-2014 அன்று நடந்த கண்ணதாசன் விழாவில்..
கல்லூரித் தலைவர் கவிஞர் கதிரேசன், தாளாளர் பி.கருப்பையா,
முதல்வர் கலியபெருமாள் ஆகியோருடன்...நா.மு.
(நன்றி தினமணி செய்தியாளர் இரா.மோகன்ராம்,
புகைப்படம் - டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை)

----------------------------------------------
நீங்கள் நடுத்தரவயதுக்காரர் எனில், சென்னை வானொலி வாரம் ஓரிருநாள் இரவு பத்து மணிக்கு ஒலிபரப்பும் பழைய தமிழ்த்திரைப்படப் பாடல்களைக் கேட்டது உண்மையெனில், உங்களால் அந்நேரத்து அழுகையை அடக்க முடியவில்லை எனில், நிச்சயமாக நீங்கள் கேட்ட பாடல்கள் கண்ணதாசன் பாடல்கள்தாம் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. அவன் நிம்மதியில்லாமல் எழுதிய பாடல்களையே நாம் நமது நிம்மதிக்காகவும் நிம்மதியாவும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!
சுற்றியிருந்தவர்களால், அவன் மனம் இற்றுக் கிடந்தபோது, பல்லவிகள் அவனிடம் சரணமாகி விழுந்தன... அவன் அழுதுகொண்டே எழுதினான். அப்படி அவன் அழுது, மூன்று தலைமுறை இதயங்களில் மூச்சுக்காற்றாக வெளிவந்த பாடல்தான் –
“எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றதே,
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றதே
கையில் காசுஇருந்தால் எப்படியும் அனுபவிப்பான், எல்லார்க்கும் உதவி செய்வான், எவரையும் எளிதில் நம்பி ஏமாந்து போவதே அவனது வாடிக்கையான வாழ்க்கை. சுய ஆற்றாமை மேலெழும்போது சொற்கள் சுதியோடு வந்து சூடாக விழும்.
     “எல்லோரும் நலம்வாழ நான்பாடுவேன் நான்வாழ யார் பாடுவார்?
     “கலைமகள் கைப்பொருளே! உன்னைக் கவனிக்க ஆளில்லையோ?என்பன போலும் வரிகள், கதைப்பாத்திரத்தோடு ஒட்டிவந்து விழுந்த இவனது கண்ணீர்தான்.
   அவனது வாழ்க்கை முழுவதும் அவலமும்,ஆனந்தமும் அவனே வரவழைத்துக் கொண்ட அனுபவங்கள்தாம்! ஆனந்த உலகின் உச்சத்தில் இருந்தபோது எழுதிய வரிகள் – “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”  என்று எழுதியது போலவே இன்றும் நிற்கிறானே!
   இன்றைய தேதியில் காதலிப்போரும் ஏற்கெனவே காதலித்தோரும்கூட “காதல் சிறகைக் காற்றினில் விரித்து, வான வீதியில் பறக்க வா!(பாலும் பழமும்), “காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்“(பாவ மன்னிப்பு), வரிகளைக் கேட்டுக் கறுகிறுத்து நிற்பது இன்றும் என்றும் சாதாரணம்.
     அல்லது, காதலில் தோல்வியுற்றோர் – இதுதானே பெரும்பான்மை!
     “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
   பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?“ என்று கேட்டு விம்முவதையும், “பூ உறங்குது பொழுதும் உறங்குது, நீ உறங்கவில்லை நிலவே!என விசும்புவதையும் தலைமுறை தாண்டியும் அனுபவித்து அழுவதையும் அவனது தமிழின் வெற்றியென்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?
     இன்றைக்கும் உலகின் எந்த மூலையிலும் தமிழர்களின் திருமணத்தின்போது, ஒலிபெருக்கி வைக்கப்பட்டால், அங்கு –
     “வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோஎன முதலில் வந்து வரவேற்பது காலத்தை வென்ற இந்தக் கவிஞன்தானே?
     கவிஞரை நேரடியாக அறியாத இளைய தலைமுறைகூட, பள்ளியிறுதி வகுப்பையோ கல்லூரி றுதியாண்டையோ விட்டுப்பிரியும்போது, விடைபேற்றுவிழா (Sent off function)  நடைபெறும்போது அவர்களின் அழுகையை அதிகப்படுத்துவதும் இவன்தானே? “பசுமை நிறைந்த நினைவுகளே!
பாடித் திரிந்த பறவைகளே!
           பழகிக் களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம் - நாம் பிரிந்துசெல்கின்றோம்!
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோஎனும் வரிகளில் அழாதவர்கள் சேர்ந்து வாழத் தகுதியற்றவர்களே!
எட்டாம் வகுப்பு வரையே படித்த ஒருவன், ஏராளமான ஆய்வாளர்க்கு டாக்டர் பட்டங்களைப் பெற ஆய்வுப்பொருள் ஆனதற்குக் காரணம் அவனது வளமான தமிழும், நலமான சொல்அழகுமே! அவன் தமிழில் பாதி பழந்தமிழின்  பரம்பரை வரவு எனில், மீதி அவனது அனுபவ நெருக்குதல்!
யார்யாரையோ நம்பிக் கையெழுத்துப் போட்டுவிட்டு, கடனில் மூழ்கி ஜப்தி நோட்டீஸ் வந்துவிட்டது, ஏழை முத்தையா இருபத்திரண்டு வயதில் செட்டிநாட்டு வழக்கப்படி லட்சாதிபதித் தம்பதியர்க்கு சுவீகாரப் புத்திரனாகி நாராயணன் ஆனபிறகும் இந்த நிலை!
பாவ மன்னிப்பு படத்திற்குப் பாடல் கேட்டார்கள். கவிஞன் அழுதுகொண்டே எழுதினான் – அனுபவத் தமிழ் சிரித்த்து –
“சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்“ கோர்ட் நோட்டீஸ் வந்துவிட்டது. சொத்தெல்லாம் போய்விட்டது, சுற்றி இருந்தவர்கள் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகளானார்கள். பாலும் பழமும் படப்பாடல் பிறந்தது –
“போனால் போகட்டும் போடா -இந்த
பூமியில் நிலையாய் வாழ்பவர் யாரடா? என்றாலும் நம்பிக்கையை விடாமல் தமிழ் இருக்கும் தைரியத்தில் அவன் மற்றவர்க்கு ஆறுதலானான்!
“மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா வாழ்கையில் நடுக்கமா?  
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு
இவ் வரிகளில் ஆறுதல் பெற்று மீண்டும் முயன்று வென்றவர் வாலிபோல் ஏராளம்!
     எதிலும் வெறித்தனமான ஈடுபாடு, அதே வேகத்தில் குறைகண்டு வெறுப்பும் மாறுபாடும் வேறுஇடமும் அவனுக்குத் தவறாகவே படவில்லை.
     “தலைவர் மாறுவார், தர்பார் மாறும், த்ததுவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
    அண்ணா,காமராசர்,இந்திரா,கருணாநிதி,எம்ஜிஆர் என யார் யாரையெல்லாம்    விண்ணுக்குப் புகழ்ந்தானோ அவர்களை மறுத்து வெளியேறும்போது மண்ணுக்குள் தள்ளி மறம் பாடிவிடுவான்
     அவ்வளவு பெரிய அற்புதக் கவிஞனுக்கு அரசியல் தெளிவும் அழுத்தமான கொள்கைப் பிடிப்பும் இல்லாமல் போனது தமிழின் நல்லகாலம் தான்!
     “உதவாத பாடல்பல உணராதார் மேற்பாடி
    ஓய்ந்தனையே பாழும் மனமே!– என்று தன்னையே நொந்து எழுதினாலும், இன்றைய கவிஞர்கள் பலரும் கற்றுக்கொள்வதற்கு அவனிடம் ஏராளம்உண்டு!
     “வனவாசம்“முன்னுரையில் கவிஞனே கூறியதுபோல, “எப்படி வாழவேண்டும்  என்பதற்கு இது நூல் அல்ல, எப்படி வாழக்கூடாது என்பதற்கும் இதுவே வழிகாட்டிஎன்று கொண்டாலும் கூட, அனுபவச் சுரங்கத்தில் எதை எடுத்துக் கொள்வது என்பது அவரவர்க்குத் தெரிந்திருக்க வேண்டும் –
     அது, சுரங்கம் என்பதை முதலில் உணர வேண்டும். 
        ------------நன்றி “தினமணி“ நாளிதழ் ---------
பின் குறிப்பு - கண்ணதாசன் 24-06-1927இல் பிறந்தார், இவரது பாடல்களுக்குப் பொருத்தமான இசையை வழங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், சரியாக ஓராண்டுக் கழிந்து, 24-06-1928இல் பிறந்தார். பாடல் பிறந்தபின் இசைபிறந்தது! இருவருக்கும் நம் இதய நன்றியை இசைவரிகளால் அர்ப்பணிப்போம். 
            -------------------------------------
நன்றி -(1) தினமணி நாளிதழுக்கு இந்தக் கட்டுரையை 
சுமார் பத்தாண்டுக்கு முன்பு வெளியிட்டமைக்காக, 
நன்றி-(2) 24-06-2014இல் புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த கண்ணதாசன் பிறந்தநாள்விழாவில் நான் பேசிய (கிட்டத்தட்ட) இக்கட்டுரைச் சுருக்கத்தைப் படத்துடன் வெளியிட்ட தினமணிச் செய்தியாளர் திரு.இரா.மோகன்ராம் அவர்களுக்கு - இணைப்புக்குச் செல்ல -http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2014/06/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/article2298665.ece
நன்றி-(3) தினமணியில் வந்த கட்டுரைகளைத் தொகுத்து, “நினைக்கப்பட வேண்டியவர்கள்“ எனும் தலைப்பில் பெரு நூலாகத் தொகுத்து அதில் இந்த எனது கட்டுரையையும் சேர்த்து வெளியிட்ட 
INTERNATIONAL TAMIL LANGUAGE FOUNDATION -WOODRIDGE, ILLINOIS, USA-JAN.2002.
       -------------------------------------------

57 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்....இன்று அவசியமான,,,தேவையான,,,அற்புதமான பதிவு...நன்றி

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான கட்டுரை.. கண்ணதாசன் எதிரிகளாலும் வெறுக்க முடியாத கவிஞர்
    அவரைப் பற்றி முப்பு எழுதிய சிறு கவிதை காலத்தை வென்றவன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. படித்தேன்-
      “ஒரு கோப்பையில்
      குடியிருந்தபோதும்
      உன் கவிதைகள்
      ஒருபோதும்
      தள்ளாடியதில்லை“ - உண்மையான வரிகள். அருமை அய்யா.

      நீக்கு
  3. அருமை....இனிய வாழ்த்து.
    இன்றைய என் பதிவு.
    http://kovaikkavi.wordpress.com/2014/06/24/20-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/
    Vetha.Elangathilakam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. உங்களின் சின்னஞ்சிறிய கவிதை பார்த்தேன். ஆனால் பின்னூட்டமிடுவதில் ஏன் இத்தனை சிக்கல்? முயன்று முயன்று தோற்ற்துதான் மிச்சம்.. போங்கள்..

      நீக்கு
    2. பெயரில்லாபுதன், ஜூன் 25, 2014

      I am pasting this inmy poem. Thank you...I don't know about kanany tachnic. sorry I can't help you.Please..try...try... '
      Vetha. Elanagthilakam.

      நீக்கு
  4. நடுத்தர வயதுகாரர்கள் தான் கேட்க வேண்டுமா அண்ணா? நீங்கள் தொடக்கத்தில் குறிப்பிட்ட பாடலே ஸ்ரீநிவாஸ் அவர்கள் தேன் குரலில் இதோ இன்னும் என் காதுகளில் இழைகிறது !!! கோடை பண்பாலையில் தேன்கிண்ணம் கேட்பது ரொம்ப பிடிக்கும். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்" மாதிரியான பாடல்களை கேட்கும் போது நீங்கள் சொன்னது போல் கண்ணீர் வந்து விடும். கண்ணதாசன் நினைவை போற்ற பொருத்தமான பதிவு !! அருமை அண்ணா ! எனக்கு அவரது காலக்கணிதம் மிகவும் பிடிக்கும். அதன் தாக்கம் தான் என்னை வாழ்க்கையோடு ஒரு உடன்படிக்கை போடத்தூண்டியது. காலத்தால் மறையாத கவியரசு!!! அண்ணா உரிமையில் பேசிவிட்டேன். தவறில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உனக்குப் பிடித்த “உள்ளத்தில் நல்ல உள்ளம்“ பாடல்தான் தனது இறுதி ஊர்வலத்தில் ஒலிக்கவேண்டும் என்று அவரே சொன்னதை இந்தக் கட்டுரை எழுதிய பின் அறிந்தேன். அது ஒரு மகா சமுத்திரம் தாயி.. சின்னஞ்சிறு கரண்டியால் அளக்க முடியுமா என்ன? எவ்வளவு சொலலியும் மிச்சமிருக்கும் அமுத சுரபி. எழுத வேண்டும் என்று தோன்றியதை எழுதினேன்.

      நீக்கு
  5. அய்யா வணக்கம்!
    கண்ணதாரனைப் பற்றிய சிறந்த அலசல்.
    பெரும்பாலான திரை இசைப்பாடல்கள் தமிழ்கற்றுக் கொடுத்த காலத்தின் தலைமை ஆசிரியனாய் விளங்கியவனைப் பற்றிய பதிவாய் இதைக் காண்கிறேன்.,
    பரோபகாரியாய் , பிச்சைக்காரனாய், கவிஞனாய்க் கடன்காரனாய் அவன் வகிக்காத பாத்திரமேது? நீங்கள் கூறுவதைப் போல அனுபத்தில் அடிபட்ட அவன் கவிதைகளுக்கு இணையேது.
    போற்றியவரை அடுத்தகணமே தூற்றத் தயங்காதவன் என்ற உங்கள் வரிகாணும் போது,

    “மானிடரைப் பாடியவர் மாறியது மேசுவதென்
    வாடிக்கை யான பதிகம்
    மலையளவு தூக்கி யுடன் வலிக்கும் வரை தாக்குவதில்
    மனிதரில் நான் தெய்வ மிருகம்“
    என அவனைக்குறித்து ““அவர்““ பாடியது நினைவுக்கு வருகிறது.
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விஜூ.“வார்த்தைச் சித்தர்“ என்று உங்களுக்கு ஒரு பட்டம் தரலாம் போல.. அவ்வளவு பொருத்தமான (Apt word?) சொற்களாகப் பார்த்துப் போடுகிறீர்கள். அவனை அவர் பாடியது சங்க மரபு? கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. தொடர்வோம்.

      நீக்கு
  6. கவியரசரைப் பற்றிய அருமையான பதிவு...அவரது பாடல்கள் என்றும் இனிமையே, எனக்கு மிகவும் பிடிக்கும். பகிர்விற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. தொடர்வோம்.
      ஜோடியா வந்து கேள்விபதிலில் கலக்கிட்டீங்க.நா ரொம்ப ரசிச்சேன்

      நீக்கு
  7. ரசிக்க வரிக்கும் சிறப்பான கட்டுரை ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  8. கவியரசு குறித்து மிகவும் அருமையான கட்டுரை... அவரின் ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் அவரது வாழ்க்கை ஒளிந்திருப்பதை அறியலாம். அனைத்தையும் அருமையான கட்டுரை வடிவம் ஆக்கியிருக்கிறீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே. மீண்டும் பணியிடம் சேர்ந்துவிட்டீர்களா நீங்கள் இங்கிருநத்போது உங்களை 8012811774எண்ணில் சில முறை தொடர்பு கொண்டு பார்த்தேன். பதில் இல்லையே? புதுமனைக் கனவு நிறைவேறியது போலவே உள்ளுரில் பணியும் விரைவில் கிடைக்க வாழ்த்துகிறேன். நன்றி

      நீக்கு
    2. மன்னிக்கவும் ஐயா... இந்த முறை கிராமத்தில் சில வேலைகளாக மாட்டிக் கொண்டேன். தாங்கள் போன் செய்ததை அறியவில்லை... விரைவில் தொடர்பில் வருகிறேன் ஐயா...

      நீக்கு
  9. தமிழ் எழுத்து மட்டுமே அறிந்தவர்களையும் தமிழ்ப் பத்திரிக்கை வாசகர்களாக்கினார் சி.பா.ஆதித்தனார். தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்களையும் இலக்கிய ரசனையை உணரும்வண்ணம் எளிய மொழியில் உயர்ந்த கருத்துக்களைச் சொன்னார் கண்ணதாசன். காலம் உள்ளளவும் அவர் பெயர் நிலைக்கும். வழக்கம்போல உங்களின் அழகான இன்னுமொரு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. அருமையான ஒப்பீடு
      தங்களின் வாழ்த்துக் கலந்த பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  10. சிறப்புப் பதிவு
    மிக மிக அருமை
    படித்துச் சிறிது நேரம்
    அவர் குறித்த நினைவுகளில்
    மூழ்கி மகிழ்ந்தேன்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. கண்ணதாசனைப் போற்றும் அற்புதக் கட்டுரை ஐயா
    கண்ணதாசன் ஒரு சுரங்கம்தான்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லாபுதன், ஜூன் 25, 2014

    சுவையான பதிவு அய்யா.
    பாண்டியன்
    புதுக்கோட்டை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அய்யா,
      லினக்ஸ் எப்பவுமே என் உடன் இருக்கும் :-)
      உங்களைத் தொடர்பு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முயன்றேன். நாளை புதுகை வருவேன். நேரில் சந்திக்க முயல்கிறேன். தங்களிடம் ஒரு செயல் குறித்து கலந்தாலோசிக்க வேண்டியிருக்கிறது.

      உங்கள் அலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டேன். உங்கள் கமெண்டிலிருந்து அந்த எண்ணை நீக்கிவிடுங்கள்.

      நன்றி.

      பாண்டியன்
      புதுக்கோட்டை

      நீக்கு
    2. நன்றி பாண்டியன். இன்று மாலையிலிருந்து நான்கு நாள் தொடர்ந்து வெளியூர். தொலைபேசத் தடையில்லை. எப்போதும் பேசலாம். ஏதாவது புதிதாக முயற்சி செய்துகொண்டே இருக்கும் உன்னைத் தொடர்ந்து வர நானும் முயல்வேன்.

      நீக்கு
  13. நம் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்தவர் கண்ணதாசன். அவருடைய பாடல்களையும், தத்துவங்களாஇயும், காதல் மொழியையும் சந்திக்காமல் அன்றைய நாள் யாருக்குமே கழியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி. முப்பதாண்டுக்கும் மேலாகத் தமிழரின் காதுவழி நுழைந்து, நெஞ்சில் குடியிருந்த கவியரசுதான் கண்ணதாசன்.. இப்போதும் அந்த வரிகளை அவ்வப்போது நினைக்காமல் இருகக முடியவில்லை அ்ல்லவா? நன்றிசகோதரி.

      நீக்கு
  14. “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை,
    ‘எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை//
    ஆம், உண்மை. காலத்தை வென்றவர்.

    அருமையான கட்டுரை கண்ணதாசன் அவர்களைப்பற்றி.

    கண்ணதாசன் 24-06-1927இல் பிறந்தார், இவரது பாடல்களுக்குப் பொருத்தமான இசையை வழங்கிய மெல்லிசை மன்னர் விசுவநாதன் சரியாக ஓராண்டுக் கழிந்து, 24-06-1928இல் பிறந்தார். பாடல் பிறந்தபின் இசைபிறந்தது! //
    அருமையான செய்தி. இருவரும் சேர்ந்து அற்புதமான காலத்தால் அழியாத பாடல்களை அளித்தார்கள்.
    இன்றும் எல்லோராலும் விரும்பி கேட்க படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் பிறந்த அடுத்த நாள் இசை பிறந்தது! எவ்வளவு அபூர்வம்! இப்போதெல்லாம் இசைமட்டும் தனியே பிறந்து, பென் டிரைவ் வழியாக கவிஞரிடம் போய் அவர் ஃபில் அப் த ப்ளாங்க் வேலைதான் நடப்பதாகக் கேள்வி! நன்றி சகோதரி.

      நீக்கு
  15. கவிஞரைப் பற்றிய கவிஞரின் நல்ல அலசல். ஒருபக்கக் கட்டுரையே ஆனாலும் தகவல்கள் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பக்கக் கட்டுரையா நான்கு பக்கம் வந்திருக்கிறது அய்யா. தினமணியில் வந்த போது தினமணியின் நடுப்பக்கத்தில் அரைப்பக்கம் இருந்தது. அதுவே தகவல் குறைவுதான். அந்தச் சுரங்கத்தில் அள்ளினாலும் இரண்டு கைகளால்அள்ளமுடிந்தது இவ்வளவே. நன்றி அய்யா.

      நீக்கு
  16. தங்கு தடையின்றி பெருக்கெடுத்தோடும் உணர்வுகளின் பிரதிபலிப்பே கவிதை என்றான் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் .......தன் வாழ்க்கையின் பிரதிபலிப்பை பாடல்களில் பாடினார் கவியரசர் ...நல்ல பகிர்வு ...நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  17. மிக மிக அற்புதப்ப்பாடல்களை தந்த உயர்ந்த கவிஞரைப்பற்றி அருமையான அலசல். பதிவிற்கு மிக்க நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  18. காலங்களில் அவன் வசந்தம் (கண்ணதாசன் பிறந்தநாள் கட்டுரை) = திரு நா.முத்துநிலவன் அவர்களின் விரிவான, அற்புதமான கட்டுரை.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி ஐயா திரு நா.முத்துநிலவன்

    பதிலளிநீக்கு
  19. கண்ணதாசன் புத்தகங்களை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க மனம் வராது. நல்ல பலாபளத்தை கொஞ்சம் தேனில் தொட்டு சாபிடுவது போல... அவளவு சுவை...அதெல்லாம் அனுபவித்தால் தான் தெர்யும். நல்ல நேரத்தில் நல்ல கட்டுரை. வாழ்க தோழர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீகாரில் “பலாபளம்“தான் கிடைக்குமா?
      நம் ஊர்ப் பலாப்பழம் அங்குக் கிடைப்பதில்லைஎன்பதைத்தான் இப்படிச் சொல்கிறீர்களா நண்பா? எனினும் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
    2. ஓஹோ நீங்க சொல்லுறது பளமா? பழம் என்பதே சரியானது நான் சீரியஸா எடுத்துகிட்டேன் தோழர்.

      நீக்கு
  20. வணக்கம் சார்.ஆச்சர்யமான கொட்டும் அருவியாய் தமிழ் நாவினில் தவழ்ந்த கவிஞர் பற்றிய பதிவு அருமை.நன்றி

    பதிலளிநீக்கு
  21. வணக்கம்
    ஒலி நயம் கொண்ட பாடல் வரிகள்
    கண்ணதாசன் தமிழர்களின் காதுகளுக்கு தந்த வரம்,,
    பார்த்தேன் மலைத்தேன் ஒரு உதாரணம்...


    அருமையான கட்டுரை
    வாழ்த்துக்கள்
    www.malartharu.org

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசையொழுங்கும் கருத்தாழமும் இணைந்த சொல்மயக்கம்தான் கண்ணதாசனின் பெரிய பலம். நன்றி மது.

      நீக்கு
  22. மிகவும் அற்புதமாய் அனுபவித்து எழுதப்பட்ட கட்டுரை. கண்ணதாசன் பற்றிய பல தகவல்களை அவரைப் பற்றி அறிந்திராத இளைய தலைமுறையினருக்குக் கடத்தும் அரிய முயற்சி. மிகவும் ரசித்தேன். நன்றியும் பாராட்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
  23. அற்புதமான இடுகை. பொழுது போக்கு என்று தினம் தினம் எது எதையோ படிக்கிறோம். உங்கள் இந்த இடுகையைப் படிக்கும் போது மனதில் ஒரு நிறைவு. மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வலைத்தளங்களின் வண்ணப்படங்கள் கண்ணைப் பறிக்கின்றனவே? நீங்கள் எடுத்தவைதான் என்று உங்கள் கேமரா சொல்கிறது... உஙக்ளின் வித்தியாசமான கருத்துகளைப் பார்த்து மகிழ்ந்து தொடர்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். நன்றிசகோதரி.

      நீக்கு
  24. ஐயா...! நான் ஏற்கனவே படித்த கட்டுரை என்றாலும், படிக்கப் படிக்க மனசுக்குள் ஏதோ செய்தது ஐயா..! கண்முன்னே கண்ணதாசனைக் கொண்டு வந்த தங்களின் கட்டுரை,'கவியரசரின்' பாடல் போலவே இனித்தது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினமணியில் படித்திருப்பீர்கள், எனது வலைப்பக்கத்தில் இப்போதுதான் பதிவிடுகிறேன். நன்றி அய்யா.

      நீக்கு
  25. என் உள்ளம் நிறைந்த
    கண்ணதாசன் பகிர்வு
    சிறந்த இலக்கியப் பாடம்
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  26. உன்னதமான கவிஞர் பற்றிய அருமையான கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. 'அர்த்தமுள்ள இந்துமதம்' தினமணி கதிரில்தான் முதன் முதலாக வந்தது என்ற செய்தி எனக்கு பெரும் உவப்பைத் தந்தது அய்யா!.
    புத்தம் புதிதான கருத்துகளோடு கட்டுரை அருமை!.

    தினமணி இணையத் தளத்திலும் செய்தியை படித்துவிட்டேன். வாழ்த்துகள் அய்யா!.




    பதிலளிநீக்கு
  28. எட்டாம் வகுப்பு வரையே படித்த ஒருவன், ஏராளமான ஆய்வாளர்க்கு டாக்டர் பட்டங்களைப் பெற ஆய்வுப்பொருள் ஆனதற்குக் காரணம் அவனது வளமான தமிழும், நலமான சொல்அழகுமே! அவன் தமிழில் பாதி பழந்தமிழின் பரம்பரை வரவு எனில், மீதி அவனது அனுபவ நெருக்குதல்!//

    மிகையற்ற உண்மை! எப்பேர்பட்ட கவிஞர்! அவரது தத்துவப்பாடல்களை இப்போதும் கூட நாம் மேற்கோள்காட்டிப் பேசி ஆறுதல் சொல்லுவது உண்டு..."உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்று....."உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.........அவர் எழுதிய அவர் பாடலே அவருக்குந்த் தகும்....ஆம் நம் எல்லோரது உள்ளத்திலும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். எப்போதுமே வாழ்ந்து கொண்டிருப்பார்!

    அருமையான கட்டுரை!

    பதிலளிநீக்கு