நல்லாத்தான் சொன்னாங்க...


நீ ஒருவனுக்கு உதவ நினைத்தால்,
அவனுக்கு மீன்பிடித்துக் கொடுக்காதே!
மீன் பிடிக்கக் கற்றுக்கொடு!
       -சீனப்பழமொழி
 ------------------------- 

மரம் ஓய்வெடுக்க 
நினைத்தாலும்
காற்று விடுவதில்லை
       -மாசே துங்
 ---------------------------------------------------- 

வாழ்கையில் 
வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும் 
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
             - அ.ப.ஜெ.அப்துல்கலாம்
 ------------------------------------------------------

ஜெயிப்பது எப்படி என்று 
யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று 
யோசித்துப் பார்
நீ ஜெயித்து விடுவாய்   
             -ஹிட்லர்
 ------------------------------------------------------

அவமானங்களைச் சேகரித்து வை
வெற்றி உன்னைத் தேடி வரும்
             -ஏ.ஆர். ரகுமான்
 ------------------------------------------------------ 

தோல்வி 
உன்னைத் துரத்துகிறது என்றால்
வெற்றியை 
நீ நெருங்குகிறாய் 
என்று அர்த்தம்
             -நெப்போலியன்
  ------------------------------------------------------

கோவம் என்பது 
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே  
கொடுத்துக் கொள்ளும் 
தண்டனை
             -புத்தர்
 ------------------------------------------------------












விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்  உறங்குவது இல்லை.
             -காரல் மாக்ஸ்
  ---------------------------------------------

வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
            -பில்கேட்ஸ்
  ------------------------------------------------------

வெற்றிகளைச் சந்தித்தவன் இதயம்
பூவைப் போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது

நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
          -விவேகானந்தர்
 ------------------------------------------------------ 

தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று - 
யோசிக்காமல் செய்வது
இரண்டு - 
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது
        
சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்றுக் கொண்டவர்கள்
          -சார்லி சாப்ளின்
 ------------------------------------------------------  

உன்னைக் குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு

வெற்றியை விட 
தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்
                                                            
பூக்களாக இருக்காதே 
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான் 
பூத்துக் கொண்டே இருப்பாய்

எல்லோருக்கும் அன்பைக் கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பைப் பெற்று
ஏமாற்றி விடாதே
            -விவேகானந்தர்
--------------------------------------------------- 

எப்போதோ எங்கோ படித்தவை...
சொன்னவர் பெயர்கள் சரிதானா என்பதைப் 
படித்தவர்கள் சொல்லலாம்...

இப்போது நினைவுக்கு வரக்காரணம்,
இந்த நாள்களின் சூழல் 
என்றும் சொல்லலாம்..
புதிதாகப் பதிவு எழுதி 
வலையேற்ற இயலாத 
ஆற்றாமை என்றும் சொல்லலாம்..  
(மேலே இருப்பது என் முகத்தின் வெளிப்பாடுதான்)
----------------------------------நா.மு.--02-07-2015 -------------

23 கருத்துகள்:

  1. எல்லாவற்றிலுமே (90% ) தோல்வியே அனைத்திற்கும் முதன்மை காரணம்...!

    ஹெல்மெட் போட்டு பார்க்கிற மாதிரியே இருக்கு படம்...! ஹிஹி...

    பதிலளிநீக்கு
  2. வலைச்சித்தரே ஹெல்மெட் வாங்கியாச்சா? (படத்தைப் போடுங்களேன்..?)

    பதிலளிநீக்கு
  3. நல்லாத்தான் சொன்னாங்க...
    எல்லாந்தான் படித்தாங்க...
    மெல்லத்தான் முன்னேற
    எல்லோரும் முயன்றாங்களா?
    முடியுமா உறவுகளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தரோடு ஏசுவும் உததமர் காந்தியும்
      எல்லாம்தான் சொன்னாங்க ...எழுதி எழுதி வச்சாங்க
      எல்லாம்தான் படிச்சீங்க என்ன பண்ணிக் கிழிச்சீங்க“ - ம.க.ப.கோ.

      நீக்கு
  4. அருமை ஐயா! அனைத்துமே......உங்கள் அனுமதியுடன் பொன் மொழிகளை எடுத்துக் கொள்கின்றோம்....கொள்ளலாம் இல்லையா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா இருக்கே கேள்வி..? இது என்ன என் சொத்தா? எடுத்துக் கொள்ள அனுமதி கேட்க... ஏற்கெனவே மக்கள் சொத்தாகிவிட்ட பெரும் அறிஞர்களின் மொழிகள்...தாராளமா எடுத்துக்கோங்க.

      நீக்கு
  5. அருமையான வாசகங்கள் எனது சூழலுக்கும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வள்ளுவர் குறளும் அப்படித்தான் அவ்வப்போது நம் சூழலுக்காக அவர் சொன்னதுபோலத் தோன்றும்... இல்லயா?

      நீக்கு
  6. நல்லாத்தான் சொல்லிருக்காங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேற எதையும் உட்கார்ந்து யோசித்து எழுத முடியாத நிலைமைடா.. அந்த நிலைமைக்கும் சேர்த்து அவர்கள் சொன்னதை நினைவுக்கு வந்தது அதுதான்... (எல்லாம் ஒரு சமாளிபிகேஷன்தான்...)

      நீக்கு
  7. அனைத்துப் பொன்மொழிகளும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. தங்களின் வருகைக்காகவே தீபாவளிக்குக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  8. சிறப்பான பொன்மொழிகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான பொன்மொழிகள் .ஆங்காங்கே எழுதி வைக்கலாம். இவற்றில் சீனப் பழமொழி,மற்றும் மாசே துங், சொன்னவை தவிர மற்றவை எங்கும் படித்ததாக நினவு இல்லை.அவ்வப்போது இதே போல் அரிய பொன்மொழிகளை வெளியிடுங்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில புத்தகங்களில் வந்தவை. சில நண்பர்களிடம் கேட்டவை. சில நண்பர்களின் குறுஞ்செய்தி, வாட்சப்பில் வந்தவை..மனதைப் பாதித்தவை அவ்வளவு எளிதில் மறக்காதில்லையா? அதுதான்.

      நீக்கு
  10. எழுத்துக்கள் "large: அளவில் இருக்கின்றன. அதனை normal Size க்கு மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாத்திவிட்டுத்தான் பதில் எழுத உட்கார்ந்தேன்.
      நன்றி முரளி.

      நீக்கு
  11. ரேடியோவில் கேப் கிடைத்தால் நிலைய வித்துவான் வாசிக்கக் கேட்கலாம் என்பதை போல இருக்கிறது >>>புதிதாகப் பதிவு எழுதி
    வலையேற்ற இயலாத ஆற்றாமை என்றும் சொல்லலாம்..

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    ஐயா
    எல்லாச் சிந்தனைகளும் மிக அரமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. அருமையான தொகுப்பு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு