வியாபம் - இந்தியாவின் ஆபத்தான ஊழல்!

3ஆம் வகுப்பே 
படித்த ஒருவர் மருத்துவராகி(?) 
கடந்த 13ஆண்டுகளாக 
மக்கள் சேவை செய்கிறார் என்றால்? 
இப்படி...ஒருவர்  இருவரல்லர்!  பலஆயிரம்பேர்!

இப்படி போலி மருத்துவர்களை மட்டுமல்ல தகுதியற்ற போலீஸ் டிஎஸ்பிக்களாகப் பத்தாண்டுக்கு முன் பணியேற்ற பலநூறுபேர் இப்ப எஸ்பி ஆகிவிட்டார்களாம்!
தமிழ்நாட்டு ஊழல் எல்லாம் “ச்சும்மா...ஜூஜூபி“ என்பது போல இந்த மத்தியப்பிரதேச அரசியல்-அதிகாரிகள் கூட்டு நாட்டையே புரட்டிப்போடுகிறது!
(VYAPAM- VYAVSAYIK PAREEKSHA MANDAL) நம் TNPSC போல-நா.மு)
நமது இந்தியத் தலைவர்கள் நமக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, தமக்கு வேண்டியதைச் செய்துகொள்ள நம் தலையில் நெருப்புவைக்கிறார்களே என்பதைப் பற்றி இந்த வியாபம் ஊழல் நினைக்க வைக்கிறது!
வியாபம் ஊழல்
இதுவரை நடந்தது என்ன?
(நமக்கு கூகுள் பொறியில நூறுரூபா கட்டுதான்
கிடைச்சுது! இப்பத்தான் ஒருலட்சரூபா நோட்டு
வந்திருச்சாமே? இல்லன்னா இந்த அவதார
புருஷர்கள் பெட்டிக்கு எங்கே போவார்கள்?)
--------------------------------------------------- 
1982ம் ஆண்டு வியவசாயிக் பரீக்சா மண்டல் (வியாபம்) அமைக்கப்பட்டது. (VYAPAM- VYAVSAYIK PAREEKSHA MANDAL ) 
மத்தியப் பிரதேச மாநில தொழில்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே இது நடத்தியது.
2008ம் ஆண்டில் அரசு ஊழியர்களை தேர்வுசெய்வதற்கான தேர்வுகளை நடத்தும் பொறுப்பும் இதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
2009 ஜூலை 5 அன்று வியாபம் நபர்களை தேர்வு செய்ததில் விரிவான அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
2009ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்தது. இது தொடர்பாக முதல் புகார் பதிவு செய்யப்பட்டது.
2009 டிசம்பரில் இந்த ஊழலை விசாரிப்பதற்காக முதல்வர் ஒரு குழுவை நியமித்தார்.
2013 ஜூலை 7 அன்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 20 பேரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதற்காக கைது செய்தனர்.
2013 ஜூலை 16 அன்று இந்த ஊழலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜகதீஷ் சாகர் கைது செய்யப்பட்டார். 2013 ஆகஸ்ட் 26 அன்று சிறப்பு அதிரடிப்படை விசாரணையை எடுத்துக்கொண்டது. 55 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
2013 அக்டோபர் 9 அன்று தேர்வு எழுதிய 345 பேரின் அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன.
2013 டிசம்பர் 18 அன்று உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா (பாஜக) வழக்கில் பதிவு செய்யப்பட்டார்.
2014 நவம்பர் 5 அன்று ம.பி., உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவை சிறப்பு அதிரடிப்படையின் விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக நியமித்தது.
2015 ஜூன் 29 அன்று சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட 23 பேர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அசாதாரணமான காரணங்களால்’’ மரணம் அடைந்திருக்கிறார்கள் என்று கூறினர்.
2015 ஜூலை 7 அன்று முதல்வர் சவுகான் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.
இவ்வூழலில் இதுவரை--
140 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன
3800 பேர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்
800 பேர் தலைமறைவாக இருக்கிறார்கள்
2000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; 68 தேர்வுகளை வியாபம் நடத்தி இருக்கிறது
1,087 மாணவர்களுடைய அனுமதி ரத்து;   
76 லட்சத்து 76ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்;
ஒருகோடியே 40லட்சம்பேர் வியாபம் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் ; ‘வியாபம்மூலம் வேலைக்குச் சேர்ந்த ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் 25 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

---------தகவலுக்கு நன்றி தீக்கதிர்-15-07-2015-நாளிதழ் ------------ 

நாட்டை உலுக்கி வரும் மத்திய பிரதேச மாநிலத்தின் வியாபம் முறைகேடு தொடர்பாக சிபிஐ 3 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது.  2012-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்த மருத்துவ மாணவி நம்ரதா டேமர் வழக்கு உட்பட 3 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது சிபிஐ.

இதன் மூலம் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ 8 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மத்திய பிரதேச பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கமிஷன் உறுப்பினர் மற்றும் அவரது மகன் தொடர்பான வழக்கு உட்பட முன்னதாக 5 வழக்குகளை தொடுத்துள்ளது சிபிஐ.ஆனால் மருத்துவ மாணவி  விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கொலை செய்யப்பட்டதாக அறிவுறுத்திய நிலையில், ம.பி.காவல்துறையோ அவர் மன அமைதி குலைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறிவருகிறது.  சட்டவிரோதமான முறையில் நம்ரதா மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததால் அவர் இதில் ஒரு முக்கிய சாட்சி. அதனால் அவரது மரணமும் கடும் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் சிபிஐ அதையும் புதிய வழக்கில் சேர்த்துள்ளது.
2010-ம் ஆண்டு மருத்துவ முன் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டது இரண்டாவது வழக்காகும்.

மூன்றாவது வழக்கு 2010-ஆம் ஆண்டு வியாபம் நடத்திய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பானது, இதில் 4 பேரை குற்றம்சாட்டியுள்ளது மத்திய பிரதேச போலீஸ். இதில் 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நிகழ்ந்த 5 மர்ம மரணங்கள் குறித்தும் சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. -- நன்றி- http://tamil.thehindu.com/india/ july 17, 2015

இதில் தொடர்புடையவர்கள் ம.பியில் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் மருத்துவர், காவல்துறை அதிகாரி, பொறியாளர், என பெரிய பெரிய அரசுப் பொறுப்புகளில் இருக்கின்றனர், இது மற்ற மாநிலங்களையும் பாதிக்காதா என்ன? இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் இன்னும் எத்தனையாண்டுகள் இவர்கள் இந்திய மண்ணில் ஊடுருவி யிருக்கப் போகிறார்களோ இது எத்தனை பெரிய ஆபத்து?

------------- வேறென்ன சொல்ல?
காங்கிரஸ் ஊழல் செய்ததை அம்பலப்படுத்தி, அதை 30விழுக்காடு மக்களிடம் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வந்த மோடியார் இதுபற்றி இன்றுவரை வாய்திறக்க வில்லை! ஏனெனில், கடந்த 13ஆண்டாக  மத்தியப் பிரதேசத்திலும் தற்போது மத்தியிலும் ஆளும் கட்சியாக இருப்பது இவரது பாரதிய ஜனதாக் கட்சியே!
ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை! ------
வேறென்ன சொல்ல?-------
நல்லது செய்தல் ஆற்றீர்; ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்! அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே
என்னும் புறநானூற்றுப் பாடலைத்தான் சொல்லத் தோன்றுகிறது!
நல்லவழி ஒன்று சொல்கிறேன், கேளுங்கள். நல்லதைச் செய்ய இயலவில்லை என்றாலும், நல்லது அல்லாததைச் (தீயதை) செய்யாமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனால் புகழ் பெறலாம். மற்றவர்களை நல்ல வழியில் செலுத்தலாம் நரிவெரூஉத் தலையார் என்ற புலவர் சொன்ன பொன்மொழிகள் இவை. (நன்றி-தமிழ் இணையக் கல்விக்கழகம் - http://www.tamilvu.org/ )

17 கருத்துகள்:

  1. வியாபம் ஒரு பெரிய பிரச்சினையே அல்ல - ஹச். ராஜா!!!

    விளங்கிடும்!!!

    பதிலளிநீக்கு
  2. ஊழலை பொறுத்த மட்டில் இந்திய அரசியல்வாதிகள் அனைவருக்கும் ஒரே நிறம் தான் !...

    " சுத்தமானவர் முதல் கல் எறியுங்கள் ! "

    என்ற ஏசுவின் வார்த்தைதான் ஞாபகம் வருகிறது ! எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் !

    என்பதுகளில், அஸ்ஸாமில் ஊழலுக்கு எதிராய் எழுந்து வளர்ந்த அஸ்ஸாம் மாணவர் கட்சியின் ஊழல் முடிவை நினைத்தால், ஊழலுக்கு எதிராய் இனி ஒரு இயக்கம் பிறந்தால்தான் உண்டு என்ற எண்ணம் அவநம்பிக்கையையே தரும் !

    அந்த ஊழலுக்கு துணையாய் மத பிரிவினையும் எந்த காலத்திலும் இருந்திராத அளவுக்கு இன்று திட்டமிட்டு பரப்பப்படுகிறது !

    வாழ்க பாரதம் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    எல்லாம் அதிகார வர்க்கத்திடமே குவிந்துள்ளது ஏழைகளிடம் இல்லை.. அழகாக வகைப்படுத்தி எழுதியமைக்கு நன்றி ஐயா. 3வகுப்பு படித்தவன் வைத்தியரா??????? பார்த்தவுடன் அசந்து போய் விட்டேன்..த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. இங்கு ஊழலற்ற ஆட்சி என்றால்தான் அதிசயப்படணும்....புரையோடிப் போயுள்ளது ஐயா...இறுதியில் சொன்ன புறநானூறு பாடல் அருமை...

    பதிலளிநீக்கு
  5. எல்லோரும் ஒரே குட்டை, ஒரே மட்டை. அரசியல்வியாதிகள் ஊழல்கள் செய்தாலும் அவர்களைச் செய்ய வைப்பது, கற்றுக் கொடுப்பது ஆட்சிகள் மாறினாலும் மாறாமல் அங்கு அமர்ந்திருக்கும் அந்தந்தத் துறை அதிகாரிகள்தான். முன்னர் காங்கிரஸ் அரசாங்கத்தில் எதை எல்லாம் தவறு, வீண் என்று கூறியதோ (உதாரணம் ஆதார் கார்ட்) அவற்றை எல்லாம் பா ஜ க இன்று செய்து வருகிறது - சில சமயங்களில் சற்றே பெயர் மாற்றி.

    //காங்கிரஸ் ஊழல் செய்ததாகப் பெருவாரியான 30விழுக்காடு மக்களை நம்பவைத்து//
    என்றால் அவர்கள் ஒன்றும் ஊழல் செய்யவில்லை என்று அர்த்தமா!

    பதிலளிநீக்கு
  6. நம்ம ஆளுங்களை மிஞ்சிட்டாங்க போலிருக்கே! அப்புறம் எப்படி இந்தியா முன்னேறும்! அவர்களை சொல்லியும் குற்றமில்லை! மாற்றம் முதலில் இருந்தே வரவேண்டும்!

    பதிலளிநீக்கு
  7. செவ்வாய்க்கு கழிப்பறை கட்ட மங்கள்யான் அனுப்பியவர்களின் ஒரு கண்டுபிடிப்பு..ஆகா இந்தியாவை வெல்ல எவாரால் முடியும்......

    பதிலளிநீக்கு
  8. இதெல்லாம் எனக்கு தெரியாம போச்சே தெரிஞ்சு இருந்தா நானும் ஒரு டாக்டர் ஆகி இருப்பேன் அல்லது போலீஸ் ஆபிஸர் ஆகி இருப்பேனே

    பதிலளிநீக்கு
  9. இதைவிடவும் ஊழல்கள் வரும் வரை இந்த ஊழல் பெரிதாக இருக்கும். பிறகு இது சிறிதாகிவிடும், மறைக்கப்பட்டு விடும் அல்லது மறக்கப்பட்டு விடும். நம் நாட்டில் இவையெல்லாம் தொடர் நிகழ்வுகளே.

    பதிலளிநீக்கு
  10. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  11. ஊழல் செய்வது எப்படி என்பதை உலகிற்கேக் கற்றுக் கொடுக்கும் நிலையில் நமக்கே முதலிடம்

    பதிலளிநீக்கு
  12. என்னத்தை சொல்றது... வியாபம்... அடுத்த ஊழல் வரும்வரை வலம் அப்புறம்... 2ஜி, 3ஜி, கதைதானே ஐயா...
    இதை வெளிக்கொணர்ந்த அந்த மனிதனுக்கு ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம்... ஆனா அவனையும் போட்டுத் தள்ள குறியா இருக்கானுங்களே...

    பதிலளிநீக்கு
  13. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஊழல் பெருகி விட்டது. அரசியல் வாதிகள் சிறிதும் குற்ற உணர்வின்றி ஊழலில் ஈடுபடுகின்றனர்.
    இதில் எந்தக் கட்சிகளும் விதிவிலக்கல்ல.
    மக்களின் பேராசையும் சுயநலமும் பொது நலத்தை சிறிதும் நினைக்காத மனமும் நேர்மையின்மையும் விதிகளை மீற தயங்காத குணமும் ஊழல் பெருகக் காரணம்
    மனம் பதறத் தான் செய்கிறது

    பதிலளிநீக்கு