வணக்கம். வலைப்பதிவர்விழாவின் வரவுசெலவு அறிக்கையை, நிதிப்பொறுப்பாளர் சகோதரி மு.கீதா தயாரித்து விழாக்குழுவின் சார்பாக வெளியிட்டுள்ளார். அதனை இங்கு நானும் பகிர்கிறேன். அவரது உழைப்பும், ஈடுபாடும் விழா வெற்றிக்கு அடிப்படையாக நின்றதை அனைவரும் அறிவர்.
விழாக்குழுவினர் அனைவரும் போட்டிபோட்டு உழைத்தாலும், இந்த விழாவின் வெற்றி முகத்திற்கு இரண்டு கண்கள் உண்டெனில் அவை இரண்டும் நிதிப்பொறுப்பாளர் மு.கீதா, உணவுக்குழுத் தலைவர் இரா.ஜெயலட்சுமி இருவருமே ஆவர். இவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
விழாக்குழுவின் ஏனைய பொறுப்பாளர்களின் கால நேரம்பாராத கடும் உழைப்பு சொல்லில் விவரிக்க இயலாது. அதன் அடிப்படையாக சமூக உணர்வுடன் கூடிய அன்பும், நமது மரபார்ந்த பண்பும் இருந்தது.
பதிவர்விழா-நம் குடும்பவிழா!
எங்கெங்கோ இருந்துகொண்டு, இந்த விழாவைத் தம்வீட்டு விழாவைப் போலெண்ணி, எழுதி-பணம் அனுப்பி-மற்றவர் ஈடுபாட்டை உசுப்பிவிட்டு எங்களை மறைமுகமாக ஆட்டுவித்த நம் பதிவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல? அவர்களை யெல்லாம் வணங்கி இந்த வரவுசெலவு அறிக்கையை சமர்ப்பணம் செய்கிறோம்.
நன்றி - http://velunatchiyar.blogspot.com/2015/10/2015_18.html
விழாச்சிறக்க முதல்நாளே வந்து ஆலோசனைகள் தந்து ஒருநாள் முழுவதும் இருந்து சிறப்பித்த எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள், சிறப்பு விருந்தினராக வந்து சிறப்புச் செய்த துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா அவர்கள், தஇக உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப் பரிதி அவர்கள், விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பெரிய பொறுப்பில் இருந்தாலும் உறவுபோல நட்புப் பாராட்டிய திரு அ.இரவிசங்கர் அவர்களை உள்ளிட்ட பெருமக்களுக்கு இதய நன்றி தவிர வேறென்ன சொல்ல?
இந்த விழா, பெரும் வீச்சுக்குச் செல்லக் காரணமான போட்டிகளை நடத்த முன்வந்து பொருளுதவி செய்த த.இ.க இயக்குநர் அய்யா த.உதயச்சந்திரன் அவர்கள், அவர்களுடன் தொடர்பு ஏற்படக் காரணமான நண்பர் நீச்சல்காரன் ராஜாராமன் அவர்கள் தந்த ஊக்கத்தால் சிறுவிழா பெருவிழா ஆனதென்பது மிகையன்று.
வரும் முன்னரே “இவரா வருகிறார்?” என்று மகிழ வைத்து, வந்து உரையாற்றிய பின்னர், “இவர்தான் இப்படிப் பேசமுடியும்!” என உலகத்தமிழ் வலைப்பதிவர் அனைவரையும் கவர்ந்துசென்ற தமிழகத்தின் தலைசிறந்த படிப்பாளியும் படைப்பாளியுமான எழுத்தாளர் எஸ்.ரா.அவர்களைத் தவிர வேறுயார் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்? அவருக்கு நன்றி சொல்லும்போதே, அவரை அழைத்துவருவதில் பெரும்பங்காற்றிய, விழாக்குழுவின் நண்பர் தங்கம்.மூர்த்திக்கும் நன்றி சொல்லவேண்டும்.
போட்டிகளுக்கு நடுவர்களாகப் பொறுப்பேற்று மிகச்சிறப்பாகப் பங்களித்த சான்றோர்ளான நடுவர்கள், உற்சாகமிகுதியோடு 260படைப்புகளைத் தந்த போட்டியாளர்களின் பங்களிப்பே விழா நேர்த்திக்கு அடிப்படையானது.
இவர்களின் உற்சாகம் மேலும் தொடர ஏதாவது செய்தாக வேண்டும், பார்க்கலாம்.
விழாவுக்கு வந்த பதிவர் அனைவர்க்கும் மனமுவந்து தரப்பட்ட சுமார் 300 நூல்கள் உள்பட அவரவர் கைக்காசு போட்டு அலைந்து திரிந்த நண்பர்களின் உழைப்பும் ஈடுபாடும் மதிப்பிட முடியாதது.
விழாக்குழுக் கூடியபோதெல்லாம் மணப்பாறையிலிருந்து வந்த அ.பாண்டியன் போலவும் ஆலங்குடியிலிருந்துகொண்டே ஓவியங்களை வரைந்து தந்த ஓவியர்களைப் போலவும், அவர்களை ஒருங்கிணைத்த நீலா, ஸ்டாலின், எஸ்.ஏ.கருப்பையா போலவும், கவிதைகளைத் தொகுத்துத் தந்த தங்கை மைதிலி(அவரது மழலைகள் நிறை-மகி)போலவும், திருச்சிமாவட்டம் முழுவதும் அலைந்து விழாவின் உணவில் ருசிக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்த இரா.ஜெயலட்சுமி போலவும், நேரலை நிகழ்வுக்காக உழைத்த UK Infotech தம்பிகள், வழிகாட்டிய மது கஸ்தூரிரெங்கன், கையேட்டுக்காக வேர்வை சிந்திய ஸ்ரீமலையப்பன், நாக.பாலாஜி உள்ளிட்ட “விதை-கலாம்” தம்பிகள் முகுந்தன், காசி பாண்டி, இரவு-பகல் பாராமல் உழைத்த கவிஞர்கள் வைகறை, மீரா.செல்வக்குமார், பாவலர் பொன்.க, தமிழாசிரியர்கள் கு.ம.திருப்பதி, குரு, மகா.சுந்தர் மற்றும் விளம்பரம் வாங்க, நிதி திரட்ட விழாவன்று அத்தனை நிகழ்வின் துளிகளிலும் தமது வேர்வைத் துளிகளை இழைத்து விழாவை மணக்கச் செய்த மாலதி ரேவதி, வேணி, சுமதி, நாகநாதன், சோலச்சி, திருமதி வைகறை, தமிழ்அமிர்தா (அவர்தம் குழந்தைகள்) இன்ஃபோடெக் லீலா, புனிதா, உள்ளிட்ட நம் சகோதர - சகோதரிகளின் அன்பின் விளைவே இந்த விழா! (கையேட்டின் எனது முன்னுரையிலும் இதனைப் பதிவு செய்திருக்கிறேன்)
விழாவில் நன்றியுரை - நிதிப்பொறுப்பாளர் மு.கீதா -------------------------------------------------------------- |
விழாக்குழுவின் ஏனைய பொறுப்பாளர்களின் கால நேரம்பாராத கடும் உழைப்பு சொல்லில் விவரிக்க இயலாது. அதன் அடிப்படையாக சமூக உணர்வுடன் கூடிய அன்பும், நமது மரபார்ந்த பண்பும் இருந்தது.
பதிவர்விழா-நம் குடும்பவிழா!
எங்கெங்கோ இருந்துகொண்டு, இந்த விழாவைத் தம்வீட்டு விழாவைப் போலெண்ணி, எழுதி-பணம் அனுப்பி-மற்றவர் ஈடுபாட்டை உசுப்பிவிட்டு எங்களை மறைமுகமாக ஆட்டுவித்த நம் பதிவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல? அவர்களை யெல்லாம் வணங்கி இந்த வரவுசெலவு அறிக்கையை சமர்ப்பணம் செய்கிறோம்.
நன்றி - http://velunatchiyar.blogspot.com/2015/10/2015_18.html
--------------------------------------------------
வங்கிக் கணக்கு வழி புரவலர் நிதி
வ.எண்
|
தேதி
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூபாய்
|
1
|
14.9.15
|
இளமதி –ஜெர்மனி
|
5,000
|
2
|
14.9.15
|
பாரதிதாசன் –பிரான்சு
|
5,000
|
3
|
16.9.15
|
மரு.அ.உமர் பாரூக் -தேனி
|
5,000
|
4
|
16.9.15
|
புதுவை வேலு/யாதவன்நம்பி-பிரான்சு ரூ100பிடித்தம்
|
11,010
|
5
|
18.9.15,11.10.15
|
ஜோசப் விஜு-திருச்சி [1,000+5,000]
|
6,000
|
6
|
22.9.15,3.10.15
|
பசி. பரமசிவம் -நாமக்கல் [5,000+5,000]
|
10,000
|
7
|
23.9.15
|
கர்னல். பா. கணேசன் -சென்னை
|
5,000
|
8
|
பெயர் குறிப்பிடாதவர்?
|
11,400
| |
9
|
27.9.15
|
அம்பாளடியாள் -சுவிஸ்
|
10,000
|
10
|
30.9.15
|
இனியா -கனடா[ ரூ108 பிடித்தம்]
|
5,000
|
11
|
8.10.15
|
மதுரைத்தமிழன்[அவர்கள் உண்மைகள்]
|
5,166
|
12
|
13.10.15
|
பரிவை சே.குமார்
|
5,000
|
கூடுதல்
|
83,576
|
* வங்கிக்கணக்கில் வரவாகி உள்ள தேதி வாரியாக விவரம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அதிலும் முன்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள வரிசை புரவலர் நிதி, நன்கொடை, விளம்பரம் என, மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
*வங்கிக்கணக்கில் வங்கிப் பிடித்தமாக ரூ558 பிடிக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------
வங்கிக்கணக்கு வழி-நன்கொடை விவரம்
வரிசை
எண்
|
நாள்
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூ
|
1
|
18.8.15
|
ஞா.கலையரசி-புதுச்சேரி
|
1,000
|
2
|
20.815
|
பழனி.கந்தசாமி-கோயம்புத்தூர்
|
1,000
|
3
|
1.9.15
|
தமிழ்.இளங்கோ-திருச்சி
|
2,000
|
4
|
4.9.15
|
எங்கள் பிளாக் கௌதமன்,ஸ்ரீராம்-சென்னை
|
500
|
5
|
5.9.15
|
பி.எஸ்.டி.பிரசாத்-சென்னை
|
500
|
6
|
9.9.15
|
புலவர்.இராமானுசம்-சென்னை
|
1,000
|
7
|
9.9.15
|
ஜி.எம்.பாலசுப்ரமணியன்-பெங்களூர்
|
1,000
|
8
|
10.9.15
|
வினோத்-கிரேஸ்-அமெரிக்கா
|
1,000
|
9
|
14.9.15
|
யூஜின் ப்ரூஸ்
|
500
|
10
|
14.9.15
|
நடனசபாபதி-சென்னை
|
1,000
|
11
|
14.9.15
|
சென்னை பித்தன்
|
1,000
|
12
|
14.9.15
|
இராய. செல்லப்பா-காஞ்சிபுரம்
|
1,234
|
13
|
14.9.15
|
மருது பாண்டியன்
|
100
|
14
|
14.9.15
|
பொன். தனபாலன்-திண்டுக்கல்
|
1,000
|
15
|
14.9.15
|
செல்வராஜூ துரைராஜூ-குவைத்
|
3,000
|
16
|
15.9.15
|
வை.கோபாலகிருஷ்ணன்-திருச்சி
|
500
|
17
|
15.9.15
|
எஸ்.ஞானசம்பந்தம்-புதுச்சேரி
|
1,000
|
18
|
16.9.15
|
கீதா மதிவாணன் -ஆஸ்திரேலியா
|
1,000
|
19
|
16.9.15
|
சூரியநாராயணன்[சுப்பு தாத்தா]-சென்னை
|
500
|
20
|
18.9.15
|
மணவை ஜேம்ஸ்-திருச்சி
|
1,000
|
21
|
18.9.15
|
S.P. செந்தில் குமார்-மதுரை
|
500
|
22
|
18.9.15
|
கோவிந்தராஜூ -கரூர்
|
1,001
|
23
|
19.9.15
|
துளசிதரன்,கீதா-சென்னை
|
2,000
|
24
|
22.9.15
|
தளிர் சுரேஷ்-திருவள்ளூர்
|
1,000
|
25
|
23.9.15
|
ஆர்.வி.சரவணன்- குடந்தை
|
1,000
|
26
|
23.9.15
|
காமாட்சி மகாலிங்கம் -மும்பை
|
1,000
|
27
|
25.9.15
|
தீபா நாகராணி -மதுரை
|
1,000
|
28
|
25.9.15
|
பி. அனுராதா
|
1,500
|
29
|
29.9.15
|
இ.பு.ஞானபிரகாசன் சென்னை
|
150
|
30
|
30.9.15
|
ஜி.ரமேஷ் உமா-சென்னை
|
1,000
|
31
|
6.10.15
|
சித்தையன் சிவகுமார் -மதுரை
|
501
|
32
|
9.10.15
|
முகம்மது நிஜாமுதீன்-
|
1,000
|
33
|
15.10.15
|
ராஜ்குமார் ரவி -கோவை
|
500
|
34
|
15.10.15
|
ஜம்புலிங்கம்-தஞ்சாவூர்
|
1,000
|
35
|
17.10.15
|
சுஜீத்[வெங்கட் நாகராஜ்]
|
1,000
|
36
|
20.10.15
|
உலகநாதன்
|
500
|
37
|
23.10.15
|
பொன்னுசாமி
|
250
|
37
|
27.10.15
|
கவிசெங்குட்டுவன்
|
250
|
38
|
28.10.15
|
கரூர்பூபகீதன்[அ.பூபாலகிருஷ்ணன்]
|
250
|
கூடுதல்
|
35,236
|
வங்கி வழி வரவு [போட்டி/விளம்பரம்/நூல்வெளியீடு]
வ.எண்
|
தேதி
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூபாய்
|
1
|
4.9.15
|
கரந்தை ஜெயக்குமார் நூல்வெளியீடு
|
5000
|
2
|
ரூபன் மலேசியா (நூல்வெளியீடு) திண்டுக்கல் தனபாலன் வழி
|
5000
| |
3
|
16.9.15
|
விசு ஆசம் -அமெரிக்கா
[துளசி,கீதா, திண்டுக்கல் தனபாலன், வெஸ்டர்ன் யூனியன் வழியாக] பின்அட்டை விளம்பரம், போட்டிகளுக்கு
|
28,781
|
4
|
18.9.15
|
மூன்றாம் சுழி - இணையம்
|
8,125
|
5
|
21.9.15
|
தமிழ்க்களஞ்சியம்-இணையம்
(வெற்றிக் கேடயம் வழங்க) |
15,000
|
6
|
2.10.15
|
ஆல்பர்ட்தியாகராஜன் - நியூயார்க்
|
3,000
|
7
|
9.10.15
|
விஜய் கார்த்திக் அமெரிக்கா
|
3,000
|
8
|
12.10.15
|
தமிழ் இணையக் கல்விக் கழகம்
|
50,000
|
9
|
29.10.15
|
பாரத் கல்விக் குழுமம் -தஞ்சாவூர்
|
10,000
|
கூடுதல்
|
1,27,906
|
வங்கி கணக்குவழி – கையேடு நூலுக்கான வரவு
வ.எண்
|
தேதி
|
பெயர்
|
தொகை
|
1
|
15.10.15
|
கலையரசி
|
3,000
|
2
|
21.10.15
|
எஸ்.பி. செந்தில் குமார்
|
1,000
|
3
|
16.10.15
|
ஜெ.சிவகுரு தஞ்சை
|
500
|
4
|
16.10.15
|
தளிர் சுரேஷ்
|
1,200
|
கூடுதல்
|
5,700
|
வங்கிக்கணக்குவழி மொத்தவரவு
வ.எண்
|
விவரம்
|
தொகை
ரூ
|
வங்கி பிடித்தம்
ரூ
|
மொத்ததொகை
ரூ
|
1
|
புரவலர்
|
83,576
| ||
2
|
விளம்பரம் ,போட்டி
|
1,27,906
| ||
3
|
நன்கொடை
|
35,236
| ||
4
|
புத்தகம்
|
5700
| ||
கூடுதல்
|
2,52,418
|
558
|
2,51,860
|
நேரடியாகக் கையில் வந்த வரவு-புரவலர் நிதி
வ.எண்
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூ
|
1
|
தங்கம் மூர்த்தி
|
12,000
|
2
|
மதுரை ரமணி
|
5000
|
3
|
ஜெயலெட்சுமி
|
5000
|
4
|
கூடுதல்
|
22,000
|
நேரடியாகக் கையில் வந்த வரவு-நன்கொடை நிதி
வ.எண்
|
தேதி
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூ
|
1
|
4.8.15
|
நா.முத்துநிலவன்
|
2000
|
2
|
4.8.15
|
பொன்.கருப்பையா
|
1000
|
3
|
4.8.15
|
மு.கீதா
|
2000
|
4
|
4.8.15
|
கருணைச்செல்வி
|
1000
|
5
|
4.8.15
|
கஸ்தூரிரங்கன்
|
1,000
|
6
|
4.8.15
|
மைதிலி
|
2,001
|
7
|
4.8.15
|
கா.மாலதி
|
1,000
|
8
|
4.8.15
|
சி.குருநாதசுந்தரம்
|
1,000
|
9
|
4.8.15
|
த.கிருஷ்ணவேணி
|
1,000
|
10
|
8.9.15
|
கில்லர்ஜி-அபுதாபி (வெ யூ வழி)
|
2,222
|
11
|
12.09.15
|
தி.ந.முரளிதரன் -சென்னை
|
1000
|
12
|
4.10.15
|
ரேவதி
|
500
|
13
|
1.10.15
|
மகாசுந்தர்
|
1,500
|
14
|
2.10.15
|
சூசைகலாமேரி த.ஆபுதுக்கோட்டை
|
1,000
|
15
|
6.10.15
|
அப்துல்ஜலீல்
|
1,000
|
16
|
6.10.15
|
அ.பாண்டியன் மணப்பாறை
|
1,500
|
17
|
7.10.15
|
பஷீர் அலி கீரமங்கலம்
|
2,000
|
18
|
9.10.15
|
பாலசுப்ரமணியன்-புதுக்கோட்டை
|
1,500
|
19
|
10.10.15
|
அமிர்தா தமிழ்
|
1,000
|
20
|
10.10.15
|
கவியாழிகண்ணதாசன்-சென்னை
|
1,000
|
21
|
10.10.15
|
உமையாள்காயத்ரி-காரைக்குடி
|
500
|
22
|
10.10.15
|
ஜோக்காளி பகவான்ஜி-மதுரை
|
500
|
23
|
10.10.15
|
கு.ம.திருப்பதி
|
1,000
|
24
|
11.10.15
|
சீனா[எ]சிதம்பரம்-மதுரை
|
2,000
|
25
|
11.10.15
|
தமிழ்வாசி பிரகாஷ்-மதுரை
|
500
|
26
|
11.10.15
|
ஸ்டாலின் சரவணன் கறம்பக்குடி
|
1,000
|
27
|
11.10.15
|
எழில்-கோவை
|
1,000
|
28
|
11.10.15
|
நீச்சல்காரன் இராஜாராம்-சென்னை
|
200
|
29
|
13.10.15
|
சுமதி
|
500
|
30
|
13.10.15
|
மீனாட்சிசுந்தரம் புதுக்கோட்டை
|
500
|
31
|
18.10.15
|
மீரா.செல்வக்குமார்
|
1000
|
32
|
19.10.15
|
வைகறை புதுக்கோட்டை
|
1000
|
33
|
19.10.15
|
சோலச்சி
|
1000
|
கூடுதல்
|
36923
|
கையில் வரவு-புத்தக விற்பனை
1
|
விழாவில் விற்பனை
|
ரூ. 5938
|
2
|
வைகறைமூலம்
|
ரூ. 200
|
கூடுதல்
|
ரூ. 6,138
|
கையில் வரவு-விளம்பரம்
வ.எண்
|
நாள்
|
பெயர்
திருமிகு
|
தொகை
ரூ
|
1
|
11.10.15
|
வி.சி.வில்வம்திருச்சி
|
1,500
|
2
|
11.10.15
|
அம்சப்பிரியாகோவை
|
500
|
3
|
11.10.15
|
பூபாலன் கோவை
|
500
|
4
|
11.10.15
|
குறிப்பேடு-பேனா [கு.ம.திருப்பதி]
|
2,250
|
5
|
29.10.15
|
இராஜ்குமார்[பதாகை ]
|
2,000
|
6
|
29.10.15
|
பாரதி புத்தகாலயம்
|
1,000
|
கூடுதல்
|
7,750
|
கையில் வந்த மொத்த தொகை
வ.எண்
|
விவரம்
|
தொகை
ரூ
|
1
|
நன்கொடை
|
36,923
|
2
|
புரவலர்
|
22,000
|
3
|
விளம்பரம்+
|
7750
|
4
|
புத்தகவிற்பனை
|
6138
|
கூடுதல்
|
72,811
|
மொத்த வரவு விவரம்
வ.எண்
|
விவரம்
|
தொகை
ரூ
|
வங்கிப் பிடித்தம்
|
தொகை
|
1
|
வங்கிக்கணக்கு வரவு
|
2,52,418
|
558
|
2,51,860
|
2
|
நேரடியாக கையில் வரவு
|
72,811
|
-
|
72,811
|
மொத்தவரவு
|
3,24,671
|
மொத்த செலவு விவரம்
வ.எண்
|
விவரம்
|
தொகை
ரூ
|
கூடுதல்
| |
1
|
மண்டபச்செலவுகள்
|
1]மண்டபம்,(மின்செலவு,உட்பட)
|
11,610
| |
2]மேடைஅலங்காரம்,கார்ப்பெட்,
|
8880
| |||
3]ஒலி,ஒளி தலையணை பெட்ஷீட்
|
10,000
| |||
4]இசைக்குழு
|
2,400
| |||
5]ஒளிப்படம்[ஃபோட்டோ]
|
3,000
| |||
6]ஓவியக்கண்காட்சி
|
3,000
| |||
7]உணவு[மளிகை,கூலி,பாத்திரவாடகை]
|
75,000
| |||
8]நெகிழிப்பதாக(விளம்பரம், அரங்கம்)
|
7,100
|
1,20,990
| ||
2]
|
பரிசுப்பொருள்கள்
|
1]தோள்பை
|
41,000
| |
2]கையேடு
|
30,000
| |||
3]போட்டிப்பரிசு தொகை[த.இ.க]
|
50,000
| |||
4]விமர்சனப்போட்டி[பரிசு தராத வரவு]
|
5,000
| |||
5]கேடயங்கள் ,பேட்ஜ், குறிப்பேடுகள்
|
30,000
|
1,56,000
| ||
3]
|
நிகழ்ச்சிக்கானசெலவு
|
1]அழைப்பிதழ் [அச்சிட அனுப்ப]
|
5,000
| |
2]சிறப்பு அழைப்பாளர்கள் தங்குமிடம்
|
4,383
| |||
3]சிறப்புப் பேச்சாளர்
[போக்குவரத்து,அறைவாடகையுடன்]
|
27,000
| |||
நேரலை ஒளிபரப்பு மற்றும் நினைவுப் பரிசுப் புத்தகங்களுக்கான செலவுகள்
|
8,469
|
44,852
| ||
மொத்த செலவு
|
3,21,842
|
மொத்த வரவு செலவு
மொத்த வரவு
|
ரூ. 3,24,671
|
மொத்த செலவு
|
ரூ. 3,21,842
|
வங்கி இருப்பு
| ரூ. 2,829 |
வரும் முன்னரே “இவரா வருகிறார்?” என்று மகிழ வைத்து, வந்து உரையாற்றிய பின்னர், “இவர்தான் இப்படிப் பேசமுடியும்!” என உலகத்தமிழ் வலைப்பதிவர் அனைவரையும் கவர்ந்துசென்ற தமிழகத்தின் தலைசிறந்த படிப்பாளியும் படைப்பாளியுமான எழுத்தாளர் எஸ்.ரா.அவர்களைத் தவிர வேறுயார் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்? அவருக்கு நன்றி சொல்லும்போதே, அவரை அழைத்துவருவதில் பெரும்பங்காற்றிய, விழாக்குழுவின் நண்பர் தங்கம்.மூர்த்திக்கும் நன்றி சொல்லவேண்டும்.
போட்டிகளுக்கு நடுவர்களாகப் பொறுப்பேற்று மிகச்சிறப்பாகப் பங்களித்த சான்றோர்ளான நடுவர்கள், உற்சாகமிகுதியோடு 260படைப்புகளைத் தந்த போட்டியாளர்களின் பங்களிப்பே விழா நேர்த்திக்கு அடிப்படையானது.
இவர்களின் உற்சாகம் மேலும் தொடர ஏதாவது செய்தாக வேண்டும், பார்க்கலாம்.
விளம்பரம் தந்தோர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிதிஉதவிசெய்து விழாப் புரவலராகவும், நன்கொடையாளராகவும் நெஞ்சில் இடம்பிடித்த நல்லோரின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்திசெய்திருக்கிறோம் என்றே நம்புகிறோம்.
சொல்லமுடியாத நெருக்கடிகளில் எல்லாம் கைகொடுத்த கவிஞர் தங்கம்.மூர்த்தி மற்றும் நண்பர் எஸ்.டி.பஷீர்அலியின் உதவிகளுக்கெல்லாம கைம்மாறில்லை!
இந்த நட்பும் ஈடுபாடும் அடுத்தவர் திறமையை மதிக்கும் ஜனநாயக உணர்வுடன் கூடிய உழைப்பும், இன்னும் பல விழாக்களை நடத்த அடிப்படையாகும். அடுத்த பதிவர் விழா எங்கு வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், அடுத்தடுத்துப் பயிற்சிவகுப்புகளும் கணினித் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவும் புதுக்கோட்டையில் தொடரும். தொடர வேண்டும்.
தமிழ்ப் பதிவர் குடும்ப அன்பின் தொடர்ச்சியை இப்போது போலவே இனியும் எப்போதும் வேண்டுகிறோம்.
வழிகாட்டிய முன்னோடி-மூத்தோரின் வாழ்த்துகளை, வலைச்சித்தரின் அன்பை, உலகத் தமிழ்வலைப்பதிவர் அனைவரின் உளப்பூர்வமான ஆதரவை இன்றுபோல் என்றும் தொடர வேண்டுகிறோம்.
விழா வெற்றியில் மகிழ்ந்து, என் ஒருவன் கழுத்துக்கு மாலைகட்டி வந்த நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் - அடுத்தமுறை மாலை கட்டும்போது, இவ்வளவு பெரிய மாலையாகக் கட்டிவராமல், கழுத்தளவுக்கே அளவெடுத்து சில நூறு மாலைகளைக் கட்டச் சொல்லுங்கள்.
ஏனெனில், மேற்காணும் ஒவ்வொருவரின் கைகளையும் குலுக்கி, மாலை அணிவிக்க வேண்டும். அதோடு, விழாவன்று தனது வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, சிரமம் பாராமல் டெல்லி, மும்பை, பெங்களுரு, பாலக்காடு, சென்னை, மதுரை, பழனி என்று தூரதூரமான ஊர்களிலிருந்தும் வந்து சிறப்பித்தார்களே அந்த நமது மூத்த-முன்னோடி-மற்றும் இளைய பதிவர்களின் வருகைக்கு முதலில் மாலை போட்டுவிட்டு அப்புறம் விழாக்குழுவின் கழுத்துக்கு வாருங்கள்! அவர்தம் அலைச்சலுக்கும் சிரமம் பாராத அன்பிற்கும் நன்றி கூறுவோம்.
இனி, மீதமுள்ள வலைப்பதிவர் கையேடு விற்பனை, அடுத்த விழாவுக்கான முன்பணமாக ஏற்கப்படும். கணினித் தமிழ்ச்சங்கப் பணிகள் தொடரும்.
அனைவர்க்கும் நன்றி வணக்கம்.
விடை பெறும் முன் ஒரு சொல்கேளீர் -
நன்கொடையாக சுமார் ரூ.28,781 தந்திருக்கும் அமெரிக்கத் தமிழ்ப் பதிவர் திரு விசு அவர்களின் வேண்டுகோளை ஏற்கமுடியாமல், அவர் செய்த உதவியைச் சொல்லிக்காட்டக் காரணம் உண்டு. உதவி இருக்கட்டும்.. அவர் சொன்ன ரகசிய வாரத்தைகள்...விழாக்குழுவுக்கே தெரியாது(!) - “நல்லா நடத்துகங்க அய்யா, கைப்பிடித்தம் வந்தா நா பாத்துக்கிறேன்” இதைவிட வேறென்ன உதவி செய்ய முடியும்! உங்களது நல்ல மனசுக்கேற்ப கைப்பிடித்தம் ஏதும் வரவில்லை விசு அவர்களே! தங்களின் உற்சாக வார்த்தைகளின் மந்திரம் விழாவைச் சிறக்கச் செய்ய எங்களை உசுப்பிவிட்டது என்பதே உண்மை! நன்றி நண்பா!
வழிகாட்டிய முன்னோடி-மூத்தோரின் வாழ்த்துகளை, வலைச்சித்தரின் அன்பை, உலகத் தமிழ்வலைப்பதிவர் அனைவரின் உளப்பூர்வமான ஆதரவை இன்றுபோல் என்றும் தொடர வேண்டுகிறோம்.
விழா வெற்றியில் மகிழ்ந்து, என் ஒருவன் கழுத்துக்கு மாலைகட்டி வந்த நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் - அடுத்தமுறை மாலை கட்டும்போது, இவ்வளவு பெரிய மாலையாகக் கட்டிவராமல், கழுத்தளவுக்கே அளவெடுத்து சில நூறு மாலைகளைக் கட்டச் சொல்லுங்கள்.
ஏனெனில், மேற்காணும் ஒவ்வொருவரின் கைகளையும் குலுக்கி, மாலை அணிவிக்க வேண்டும். அதோடு, விழாவன்று தனது வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, சிரமம் பாராமல் டெல்லி, மும்பை, பெங்களுரு, பாலக்காடு, சென்னை, மதுரை, பழனி என்று தூரதூரமான ஊர்களிலிருந்தும் வந்து சிறப்பித்தார்களே அந்த நமது மூத்த-முன்னோடி-மற்றும் இளைய பதிவர்களின் வருகைக்கு முதலில் மாலை போட்டுவிட்டு அப்புறம் விழாக்குழுவின் கழுத்துக்கு வாருங்கள்! அவர்தம் அலைச்சலுக்கும் சிரமம் பாராத அன்பிற்கும் நன்றி கூறுவோம்.
இனி, மீதமுள்ள வலைப்பதிவர் கையேடு விற்பனை, அடுத்த விழாவுக்கான முன்பணமாக ஏற்கப்படும். கணினித் தமிழ்ச்சங்கப் பணிகள் தொடரும்.
அனைவர்க்கும் நன்றி வணக்கம்.
விடை பெறும் முன் ஒரு சொல்கேளீர் -
நன்கொடையாக சுமார் ரூ.28,781 தந்திருக்கும் அமெரிக்கத் தமிழ்ப் பதிவர் திரு விசு அவர்களின் வேண்டுகோளை ஏற்கமுடியாமல், அவர் செய்த உதவியைச் சொல்லிக்காட்டக் காரணம் உண்டு. உதவி இருக்கட்டும்.. அவர் சொன்ன ரகசிய வாரத்தைகள்...விழாக்குழுவுக்கே தெரியாது(!) - “நல்லா நடத்துகங்க அய்யா, கைப்பிடித்தம் வந்தா நா பாத்துக்கிறேன்” இதைவிட வேறென்ன உதவி செய்ய முடியும்! உங்களது நல்ல மனசுக்கேற்ப கைப்பிடித்தம் ஏதும் வரவில்லை விசு அவர்களே! தங்களின் உற்சாக வார்த்தைகளின் மந்திரம் விழாவைச் சிறக்கச் செய்ய எங்களை உசுப்பிவிட்டது என்பதே உண்மை! நன்றி நண்பா!
சரி.. நமது அன்பின் பணிகளை
வலைச்சித்தரின் தொடர் உதவிகளோடு
பதிவுகளில் தொடர்வோம். தொடருங்கள்...
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர் - பதிவர் திருவிழாக்குழு-2015,,
மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை
மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை
01-11-2015 காலை மணி10.00
----------------------------------------------------------------
ஆகா
பதிலளிநீக்குஇந்த வரவும் செலவும்
புதுகையினால் மட்டுமே சாத்தியம்
தங்களின் தலைமையில், வழிகாட்டுதலில்
செயலாற்றிய புதுகைத் தோழர்கள்
பாராட்டிற்கு உரியவர்கள்
போற்றுதலுக்கு உரியவர்கள்
பாராட்டுவோம், போற்றுவோம்
நன்றி ஐயா
வினைவலிமையும் தன்வலிமையும், துணைவலிமையும்தானே நம் பலம்? நன்றி கரந்தையாரே? தொடக்கத்திலிருந்தே தங்களின உற்சாக மொழிகளும், நேரடி வருகையும் மறக்க இயலாதவை மிக்க நன்றி அய்யா.
நீக்குஅடுத்து கணினிச்சங்க ஆண்டுவிழாவா அண்ணா..நாங்கள் தயார்....விழா வெற்றி பெற உங்களின் உழைப்பை,வெற்றியையே நோக்கமாகக்கொண்டு நாங்க பண்ண சேட்டையெல்லாம் பொறுத்துக்கொண்டு...விடாமல் பாடுபட்ட நீங்கள் தான் அண்ணா இவ்விழா சிறக்க முக்கியக்காரணம்...
பதிலளிநீக்குசேட்டை(?)யின் பின்னால் புத்திசாலித்தனம் இருந்தால் நான் எப்போதும் ரசிப்பேன். அந்த ரசனையோடுதானே நமது பணிகள் தொடர்ந்தன தங்கையே? நம் வலிமையை நாம் உணர இந்த விழா உதவியது என்றுதான் நான் நினைக்கிறேன்.
நீக்குபுதுகை என்றாலே பிரம்மாண்டம் என்பது தெரியும். இது மகா பிரம்மாண்டம். உழைத்த அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குகவிஞரே! அப்படியெல்லாம் மண்டையில் ஏற்றிக்கொள்ளாமல் எங்களால் முடிந்தவரை பார்த்துக்கொண்டே இருந்தோம். சென்னை வந்தபோது நீங்களெல்லாம் துணைநின்றதையும் சேர்த்துத்தானே இந்த மகிழ்ச்சி? நன்றி சகோதரி.
நீக்குதெளிவான வரவு செலவு கணக்கு.சிறந்த முன் உதாரணம் அடுத்த பதிவர் சந்திப்பை எப்படி சிறப்பாக நடத்துவது என்று யோசிக்க வைத்து விட்டீர்கள் . அரும்பாடுபட்ட அனைவருக்கும் நன்றி
பதிலளிநீக்குஅதற்காகத்தான் அய்யா இந்த உழைப்பை விழா முடிந்தும் தொடர வேண்டியிருந்தது. கண்ணுக்குத் தெரியாத உழைப்பு என்பதுதான் இந்தக் கணக்கெழுதுவது. நண்பர்கள் பலரும் சேர்ந்து பார்த்ததை மு.கீதா தான் இரவுபகலாகப் பார்த்து, “அண்ணா இந்த ரசீது எங்க? வாங்கிட்டீங்களா?“ என்று நினைவூட்டுவது முதல் சிலவற்றைத் தானே முன்னின்று செலவழித்ததை நாங்கள் நினைவூட்டியபின் “ஆமா..ல்ல?“ என்று தான் செலவழித்ததையே மறந்துவிடுமளவு ஈடுபாடு காட்டியதுமாக, கீதாவின் பொறுப்பு மிகப் பெரிது. அவரும் சகோதரி ஜெயாவும் சேர்ந்து இன்னும் பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பதற்கான முன்னுரையே இந்த விழா!
நீக்குதுல்லியமான வரவு செலவு கணக்கு. கீதா அவர்களின் கடின உழைப்பும், விழாக் குழுவினரின் அசராத உழைப்பும் சிலிர்க்க வைக்கிறது. சிறப்பான வைபவத்தை எங்களுக்கு தந்த தங்களுக்கு நன்றி அய்யா!
பதிலளிநீக்குத ம 2
நன்றி நண்பர் செந்தில் அவர்களே! உங்களைப் போன்றோர் முதலில் தொகை தந்ததும், பதிவுகள் இட்டதும், போட்டிகளில் உற்சாகமாகப் பங்கேற்றதும், விழாவுக்கு வந்ததும், மீண்டும் விழாச் செலவுக்கு உதவும்பொருட்டே கையேடு வாங்க முன்னர் அனுப்பியதை விடக் கூடுதல் தொகை அனுப்பியதுமாக இதன் பரிணாம வளர்ச்சியே மகிழ்ச்சியளிக்கிறது சகோ.ஞா.கலையரசி அவரக்ளின் செயல்களும் இப்படியே மகிழ்வளித்தன.நன்றி நண்பா
நீக்குதிருமதி. கீதா அவர்களின் தளத்தில் காலையிலேயே பார்த்துவிட்டேன். சிறப்பான கணக்கு வழக்குகள். மனமார்ந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅய்யா, தங்களைப் போன்றோர் வயது, உடல்தளர்ச்சி யெல்லாம் பாராமல், முதல்நாளே வந்து நின்றது போலும் உற்சாக டானிக் தந்தபின் நாங்கள் இப்படி வேலைபார்க்காமல் இருக்க முடியுமா? தங்களின் நகைச்சுவை கலந்த டானிக் வேலைசெய்திருக்கிறது!
நீக்குமகத்தான் முன் உதாரணம் இது. முழுக்க முழுக்க உங்களின் தலைமைப் பண்புக்கு கிடைத்த வெற்றியிது. உங்கள் விழாவில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம்.
பதிலளிநீக்குஇதுதான் “பணியுமாம் என்றும் பெருமை” எனும் திருக்குறளுக்கு விளக்கமா நண்பரே? பெரிய எழுத்தாளரான தாங்களே அவ்வளவு நேரம் விழாவில் இருந்ததும், தங்களுடன் பேசி மகிழ நினைத்தும் இயலாத எங்கள் நிலை உணர்ந்து, எங்களைத் தவறாக எண்ணாமல் இப்படி ஒரு பின்னூட்டம் இடும் பெருந்தன்மையில் நாங்கள் அல்லவா நிறையக் கற்றுக் கொள்கிறோம். நன்றி அய்யா.
நீக்குவரவு செலவை கண்காணிக்கும் பணி என்பது எவ்வளவு சிரமமானது என்பதை பலரும் அறிவோம். வரவுக்குள் செலவு செய்து, செலவைக் கட்டுக்குள் வைப்பதும், எது தேவை எது தேவையில்லை என்பதை முடிவுசெய்வதும், வரவுக்கு மீறி செலவு அதிகப்படியானால் அடுத்தென்ன செய்வது என்று ஆலோசிப்பதும், அதற்கான மாற்றுத்திட்டங்களை மனத்தில் வகுப்பதும் என ஒவ்வொன்றும்... மலைக்கவைக்கும் பணி....அதை மிகச்சிறப்பாக செய்து முடித்ததோடு எவ்வளவு நேர்த்தியாகவும் சிரத்தையாகவும் வரவு செலவு விவரத்தைத் தொகுத்து அளித்துள்ளீர்கள்! தோழி கீதாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். புதுக்கோட்டை விழாக்குழுவினரை எண்ணி பெருமிதமாயுள்ளது. அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு“புதுக்கோட்டை விழாக்குழுவினரை எண்ணி பெருமிதமாயுள்ளது“ -ஆமாம் சகோதரீ! அதிலென்ன சந்தேகம்? எங்களுக்கு நீங்கள் மற்றும் உங்களைப் போன்றோர் உலகம் முழுவதும் அல்லவா உறுதுணையாக இருந்தீர்கள்? நன்றி சகோதரி.வணக்கம்.
நீக்குவிழா நடத்துவது என்பதே பெரிது. அதனையும் சிறப்பாக நடத்தி, வரவு செலவுக்கணக்கினை அளித்துள்ளவிதம் புதுக்கோட்டை விழாக்குழுவினரிடமிருந்து நாங்கள் அதிகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை உணர்த்துகிறது. உடன் உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நன்றி.
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html
“உழைப்பால் வாரா உறுதிகள் உளவோ?” “தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” “துணைவலியும் தூக்கிச் செயல்“ தான் அய்யா! நன்றி
நீக்குபுதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு – 2015 மாநாட்டின் பொருளாளர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து, தனக்கு கொடுக்கப்பட்ட பணியினைத் திறம்படச் செய்திட்ட சகோதரி எம்.கீதா அவர்களுக்கு நன்றியும் பாராட்டும். மேலும் காலம் தாழ்த்தாது இதன் வரவு – செலவு கணக்குப் பட்டியலை உடனே வெளியிட்டமைக்கு மீண்டும் ஒரு பாராட்டு.
பதிலளிநீக்குஇதுவே கால தாமதம் என்று இரண்டு நாளாகத் தங்கை மு.கீதா என்னிடம் புலம்பித் தள்ளிவிட்டார்கள். நான் கூர்மையாக இருக்க வேண்டும் என்றதும், அவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றதும் -முன்னர் வெளியிடுவதாகச் சொன்னதில் ஒருவாரம்- தாமதமாக வெளியிட நேர்ந்துவிட்டது அய்யா. நன்றி வணக்கம்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா அடுத்து என்ன... நாங்க ரெடி
பதிலளிநீக்கும் அது...நானும் ரெடி..
நீக்குஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தானே ... ?
நீக்குஆமா மாமனும் மாப்ளயுமா கலக்குறீங்க (சித்தர்கள் பாடல் சூப்பர்!) விரைவில் பயிற்சி வகுப்பு வருதுல்ல..ஸ்ரீ?
சிறந்த பணி
பதிலளிநீக்குவாழ்த்துகள்
இதேபோன்று "வலைப்பதிவு கையேடு-2015"
வலைப் பதிவாளர் இணைய முகவரி அடங்கிய நூலினை
தங்களது பதிவில் வெளியிடுங்கள் அய்யா!
என்போன்ற பல்லாயிரக் கணக்கான பதிவர்களுக்கு
அது பயனுள்ளதாக இருக்கும் அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கொஞ்சம் வணிக நோக்குடன் இருக்க வேண்டியுள்ளது அய்யா.
நீக்குகையேட்டுக்குப் போட்ட தொகையளவிற்கு நூல்பிரதிகள் இன்னும் விற்கவில்லையே? விற்றுவிட்டால் அடுத்த பதிப்புடன் வலையேற்றுவதை அடுத்த கட்டமாகச் செய்யலாம். (வேறு வழி? ஓராண்டாவது ஆகுமோ?) விரைவில் விற்றுவிட்டால் விரைவில் செய்யலாம்தான். புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி. வெளிநாடு வாழ் பதிவர்கள் ஒரு கூட்டணியாக மாறி ஐரோப்பிய நாடுகளில் யாராவது ஒருவருக்கு 50 அல்லது 100 என அனுப்பச் செய்து, அங்கிருந்து மற்றவர்கள் பெற்றுக்கொள்ள முடிந்தால் 4X50=200 பிரதிகள் என விரைவில் விற்கலாம். எங்களுக்கும் அடுத்த வேலையைப் பார்க்கலாம்..என்ன செய்வதென்று யோசிப்போம்
இதற்கான மற்ற (சொந்த) செலவுகள் பற்றி...?
பதிலளிநீக்குஏன் ஐயா... அதையும் சேர்க்க வேண்டும்... அதுவே நியாயம்...
பேச வேண்டும்... பேசுவோம்...
அதுபற்றிப் பேசினால் இன்னும் சில ஆயிரம் சேரும் அய்யா. சுமார் 15பேர் தினமும் பெட்ரோல் போட்டு சுமார் 15நாளைக்கு மேலாகத் திரிந்திருக்கிறோம். அதையெல்லாம் சேர்த்தால் என்ன ஆகும்? அப்புறம் சுமார் 30பேர் சொந்தக் காசில் சீருடையெடுத்து அணிந்து விழாவை வித்தியாசப்படுத்தினோம்! (நான் இருமுறை இதற்காகவே சென்னைக்கும் ஒருமுறை மதுரைக்கும் சென்றுவந்தேன்..எனவே அதெல்லாம் வேண்டாம் என்று விட்டு விட்டோம். நீங்கள் இரண்டு பகல் மூன்று இரவை எங்களுடனே கழித்தீர்கள்.. இதற்கெல்லாம் எங்கே கணக்கெழுதுவது?
நீக்குவணக்கம் இந்தச் செயலுக்கான உழைப்பை வார்த்தைகளில் பாராட்டி அடக்கி விடமுடியாது உங்கள் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் – கில்லர்ஜி
பதிலளிநீக்குதமிழ் மணம் 8
ஆனால் நீஙகள் அவ்வப்போது அலைபேசியில் அழைத்து விசாரித்துக் கொண்டே இருந்த அன்பின் தூண்டுதல் தந்த பலன் தான் இது நண்பா! (சில முறை நான் கூட கொஞ்சம் அவசர வேலையா இருக்கேன்..கில்லர்ஜி அப்பறம் பேசுவமா?” என்று கேட்டு உங்களைக் காயப்படுத்தி விட்டோமோ என்றுகூட வருந்துமளவுக்கு நீங்கள் விழா நிகழ்வுகளை விசாரித்துக் கொண்டே இருந்தது எவ்வளவு மகிழ்ச்சிதந்தது தெரியுமா நண்பா? அதனால் சல்யூட்டில் ஒரு பகுதியை உங்களுக்கே திருப்புகிறோம் அட்டே...ன் ஷன்! சல்யூ....ட்! ஓ கே. நன்றி (ஆமா அது எதுக்கு? ஒரு நாள் “என்னைத் தப்பா புரிஞ்சிக்கலயே னு கேட்டீங்க.. யாராவது உளறினாலும் நண்பர்களிடம் நேரடியாகக் கேட்போமே அன்றி உங்கள் அன்பில் எங்களுக்குச் சந்தேகம் வரும் என்று நீங்கள் எப்படிக் கேட்கலாம்? “தேரான் தெளிவும்..“ குறள் படித்து சாய்சில் விட்டுட்டீங்களா? அட போங்க நண்பா! சிலத கேக்கும் போதுதான் ரெண்டு காதையும் பயன்படுத்தணும். ஒன்று நுழைய மற்றொன்று வெளியேற்ற.. வேலையப் பாப்பீங்களா... நன்றி.
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குவலைப்பதிவர் விழாவின் முதல்வர் கவிஞர் அவர்களே... தங்கள் தலைமையின் கீழ் நிதிஅமைச்சராகப் பணியாற்றிய சகோதரி திருமதி.மு.கீதா அவர்கள்
ஒரு குறையும் இல்லாத (பற்றாக் குறையில்லாத) உபரியாக தொகையுடன் வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்து இருப்பது
கண்டு மிகுந்த மகிழ்ச்சி. இதற்குப் பின்னால தங்கள் அனைவரின் உழைப்பும் மறைந்திருக்கிறது.
இதற்காகக் கூட்டு முயற்சியுடன் உழைத்திட்ட புதுகை வலைப்பதிவுக் குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
விழா சிறக்க வேண்டுமென்று சீருடை முதல் விருந்தோம்பல்... எதுவென்றாலும் எல்லாம் அருமை. இந்த நிகழ்வு தங்கள் வாழ்வில் ‘ஒரு மைல்கல்’ என்றால் அது மிகையில்லை என்றே எண்ணுகிறேன்.
தங்களுக்கு ஒரு கவலையும் இல்லை அய்யா. ‘வெட்டி வா என்றால் கட்டிவர’ வலையுலக உறவுகள் (வலைச்சித்தர் உட்பட) இருக்கையில்... எதையும் சாதிப்பீர்!
பாராட்டுகள்... வாழ்த்துகள்.
நன்றி.
த.ம.8
இதுதான் சரியான புரிதல் -”கூட்டு முயற்சியுடன் உழைத்திட்ட புதுகை வலைப்பதிவுக் குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றி”
நீக்குநன்றி மணவையாரே! அவரவர் குழுக்களில் கொஞ்சம் கூடுதல் கவனமும், மற்ற குழுக்களின் பணிகளிலும் அக்கறையுமாக இருந்த எமது விழாக்குழுவினர் அனைவரின் வெற்றி இது! நன்றி
.
பதிலளிநீக்குநிதி பொறுப்பாளர் என்கிற முறையில் சகோதரி கீதா அவர்கள் தந்துள்ள
வரவு - செலவு அறிக்கை, குழப்பத்திற்கிடமின்றி, துல்லியமாக கண்ணாடிபோல் உள்ளது. தனது பொறுப்பினை திறம்பட செய்து முடித்திட்ட சகோதரி கீதா அவர்களுக்கு மிக்க நன்றி!
அதோடு விழாவில் தொடர்புடைய அனைவருக்கும் மற்றும் ஒருங்கிணைப்பாளாராய் வழி நடத்திய தங்களுக்கும் நன்றிகள்!!!
!
!
!
தனது பொறுப்பினை திறம்பட செய்து முடித்திட்ட சகோதரி கீதா அவர்களுக்கு மிக்க நன்றி! -- அதே அதே நானும் வழிமொழிகிறேன்.
நீக்குவிழா நடத்துவதைவிட அதிக சிரமம் தருவது அதற்கான வரவு - செலவு அறிக்கையை செவ்வனே தயாரித்து அளிப்பது. இதை திறம்பட செய்துள்ளமைக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஎனக்கு இன்னும் இதழ் கிடைக்கவில்லை ஆவன செய்யவும்.
எல்லாவற்றிலும் முன்மாதிரியாக விளங்குகிறது புதுகை வலைப்பதிவர் திருவிழா
பதிலளிநீக்குஅய்யா வணக்கம். நீங்கள் தான் ஒருநாள் (2011-பிப்ரவரி) நம் எம்.எஸ். ஆர் அச்சகத்தில் சந்தித்தபோது எனக்கு வலைப்பக்கம் தொடங்கி வைத்தீர்கள்.நீங்கள் மறந்தும் நான் மறக்கமாட்டேன். அந்த நன்றியில் எனது “வலை குரு”வுக்கு வணக்கம் செலுத்த என்றும் மறக்க மாட்டேன். தங்களின் பொறுப்பான நடுவர் பணியை எமது விழாக்குழு என்றும் மறவாது. பல்வேறு தமிழ்ப் பணிகளிடையிலும் தாங்கள் செய்த பணிகள் என்றும் மறவா! தாங்கள் தாமதமாக வந்தும் சிறிய குளறுபடியால் தங்களுக்கு அந்த நேரதம் கேடயம் வழங்க இயலாது போனது எங்களுக்கு மிகவும் வருத்தமளித்தது. ஆனாலும் சிலநாள் கழித்துத் தங்களிடம் அதனைச் சேர்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. தங்களின் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா. பணிகள் தொடர்வோம். (ஏற்கெனவே இருமுறையும் “இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்“ சிறக்க வருகை தந்தது போல இனியும் வரவேண்டும் அய்யா.
நீக்குவெளிப்படையான நடைமுறையாக வரவு செலவு கணக்குகளை முறையாக வெளியிட்டிருக்கிறீர்கள். அடுத்து வரும் பதிவர் சந்திப்பு குழுவினர் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துவிட்டீர்கள். தங்களுக்கும் தங்கள் அணுக்கத் தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் ! - இராய செல்லப்பா
பதிலளிநீக்குவணக்கம் அங்கிள்....( நான் உங்க ஃப்ரண்டு நு அம்மாட்ட சொன்னீங்களாமே,,, அதான் ஃப்ரண்டைப் பார்க்க வந்தேன்....என் வலை தளம் வாங்க....வருவீங்கல்ல....) http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html
பதிலளிநீக்குவரவு செலவு கணக்கு சமர்ப்பிப்புக்குப் பாராட்டுக்கள் பற்றாக்குறைஎன்று கணிக்கப்பட்ட பட்ஜெட் உபரி பட்ஜெட்டாக மாறியதற்கு மேலும் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஉடல் நலம் சற்று பாதிப்பு! அதனால் உடன் வர இயலவில்லை! சொந்தக் கணக்கே எழுதத் தெரியாதவன்! பொதுக் கணக்கே இவ்வளவு தெளிவாக தந்த அன்பு மகள் கீதாவிற்கும் தலைமை ஏற்று வழி நடத்திய தங்களுக்கும் குழுவுக்கும் நன்றி !வணக்கம் வாழ்த்து! இன்றும் என்றும்!
பதிலளிநீக்குமிக்கநன்றி அய்யா...
நீக்கு