வெளிநாட்டு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

புதுகை வலைப் பதிவர் திருவிழா-2015  சிறப்பாக நடந்ததில், நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பதிவுகளுடன் அங்கிருந்தே செல்பேசியில் அழைத்து ஊக்கப்படுத்திய நண்பர்களையும் மறக்க முடியுமா என்ன?!

ஆனால், அத்தகைய நண்பர்கள் விழாவில் வெளியிடப்பட்ட தமிழ் வலைப்பதிவர்-கையேடு 
நூலை இன்னும் பார்க்கவில்லையே என்பது அவர்களைப் போலவே எங்கள் குழுவிற்கும் வருத்தமாகவே உள்ளது.

அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, பின்வரும் நமது நண்பர்கள் தொடர்பில் வந்தார்கள். நானும் அவர்கள் கருத்துகளைக் கேட்டேன். அவர்களும் தெரிவித்தார்கள்...அதனால்...


வெளிநாட்டு நண்பர்கள் கையேடு பிரதிகளைப் பெற்றுக் கொள்ள... ஒரு யோசனை-
அருகில் (பக்கத்து நாடுகளில் இருப்போர்) இவர்களிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கிறோம். பெரும்பாலும் அடுத்துள்ள நாட்டுக்கான அஞ்சல் செலவை அவரவரே தரலாம்.  அதிகமிருக்காது. இந்தியாவிலிருந்து பெற்றால் அதிகமாகும். பின்வரும் நண்பர்களும் இதற்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்

யார்யாருக்கு எத்தனை கையேட்டுப் பிரதிகள் தேவை என்பதைப் பின்வரும் என் மின்னஞ்சலுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் இந்த  நமது நண்பர்களுக்குத் தெரிவித்து அவர்களுக்கு இங்கிருந்து மொத்தமாக அனுப்பி அவர்கள் வழியாக நீங்கள் நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

என்ன நண்பர்களே இதற்கு நீங்கள் நிச்சயமாக உதவுவீர்கள் என்று நம்புகிறேன். உதவ வேண்டுமென்று அன்புடன் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த 
நம் அன்புறவானவர்களின் பதிவுகளையும் பாருங்கள்-

அமெரிக்கா -சகோதரர் விசு - http://vishcornelius.blogspot.com/ 
ஜெர்மனி -சகோதரி இளமதி - http://ilayanila16.blogspot.com/

இவர்கள் இருவரும் அவரவருக்கு அருகிலிருக்கும் நாடுகளில் வாழும் நண்பர்கள், கையேட்டுப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள உதவுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

பாரிஸ் சகோதரர் நேசன்- http://www.thanimaram.org/ 
இவர் ஏற்கெனவே 75பிரதிகளை எடுத்து வையுங்கள் அதற்கான இந்தியத் தொகையை வங்கிக் கணக்கில் இப்போதே செலுத்திவிடுகிறேன்எனச் சொன்ன போதிலும், நான்தான் தடுத்து வைத்திருக்கிறேன். யார்யார் பிரதியை வாங்க விரும்புகிறார்கள் என்று தெரிந்து அதன்பின் அதற்குரிய தொகையை அனுப்பலாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

நண்பர்களே! நீங்கள் நினைத்தால் இவர்கள் போலும் நண்பர்களின் பெருந்தன்மைக்கு நம் அன்பைத் தெரிவிக்கும் வழியாக கையேட்டுப் பிரதிக்குப் பணமனுப்பி முகவரியும் தந்து உதவலாம்.

கணக்குப் போட்டுப் பார்த்தால் வெளிநாட்டு நண்பர்கள், இந்திய ரூபாயில் ஒரு பிரதி சற்றேறக்குறைய 350ரூபாய் தந்து வாங்கிவிட மாட்டீர்களா
(அமெரிக்கா கனடா நாட்டிலிருப்போர் மட்டும் ஒரு பிரதிக்கு ரூ.450 தர வேண்டியிருக்கும். இதுவே தனியாக ஒன்று அல்லது இரண்டு பிரதிகள் மட்டும் இங்கிருந்தே அனுப்ப குறைந்தது 2000ரூபாய் ஆகிறது, இதுவே 4பிரதிகள் எனில் ரூ.2,500தான் ஆகிறது)
இந்தக் கணக்கைப் பாருங்கள்

அமெரிக்கா,கனடா நாடுகளுக்கு 4பிரதிரூ.2,500,
     40பிரதிரூ.16,000 60பிரதி-ரூ.20,000
(இதில் கவனியுங்கள் நேரடியாக இங்கிருந்து தனியாக அனுப்பினால் ஒரு பிரதியே ரூ.625ஆகிறது, ஆயினும் ஒருபிரதி அனுப்ப இயலாது காரணம் குறைந்தபட்ச கட்டணமே ஆயிரத்திற்குமேல்! ஆனால், அதிகமான பிரதிகளை அனுப்ப நேரும்போதுதான் சராசரியாக ஒரு பிரதி முறையே ரூ.400, ரூ.335 என்று  குறைகிறது. ஆக மொத்தமாக அனுப்பி திரு விசு வழியே பெறுவதே சிக்கனமானது. என்ன? அங்குள்ளவர் அனைவருமாகக் குறைந்தது 40பிரதியாவது வாங்க உறுதி தர வேண்டும். அப்போது தான் திரு விசு அவர்கள் முகவரிக்கு அனுப்ப முடியும். தமிழ்ப்பதிவர் நண்பர்கள் தமக்கு மட்டுமல்ல, அங்குள்ள தமிழ்ப்பதிவர், இலக்கிய அமைப்புகள், தமிழறிஞர்கள், இதழ்கள் என உரியவர்க்கு  5,10பிரதிகளை வாங்கித் தரலாமே?)

ஜெர்மன்,பிரான்சு,சுவிஸ் நாடுகளுக்கு 4க்குரூ.2,000,
40பிரதிரூ.13,000 60பிரதி-ரூ.18,000
(இங்கும் அவ்வாறே, இங்கிருந்து 4பிரதி அனுப்பினால், ஒரு பிரதி ரூ.500ஆகிறது ஆனால் ஒரு பிரதிக்கான கட்டணமே அதிகமாகிறது. மொத்தமாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் சுமார் 40பேர் அல்லது 2,4 பிரதிகள் என ஒரு15 -20பேராவது வாங்கிக் கொள்ள உறுதி தந்தால் சகோதரி இளமதிக்கு அனுப்பி வைக்கலாம். அவர்கள் அவரிடம் ரூ.325 (அல்லது அதிகமானோர் கேட்டால் ஒருபிரதிக்கு 300ரூ.வீதம்) தந்து பெற்றுக் கொள்ளலாம். இதுவே சிக்கனமாகும்.

எனவே, வெளிநாடு வாழ் தமிழ் வலைப்பதிவர்கள்-ஒவ்வொருவரும் 4அல்லது 8கையேடுகளை வாங்கிடப் பொறுப்பேற்றுக்கொண்டால் புதுக்கோட்டையில் அடுத்த கணினித் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவை இன்னும் தெம்பாக சிறப்பாக நடத்துவோம். 

அப்போது ஒரு வலை-இலக்கிய மலர் வெளியிடுவதாக இருக்கிறோம்... இப்போதே சொல்லிவைக்கிறோம்... தொழில் நுட்ப விளக்கங்கள், கட்டுரை-கவிதை, கவிதை ஓவியங்களுடன் கூடிய வலைப்படைப்புகள் என, சிறப்பான மலராகக் கொண்டு வர ஆசைப்படுகிறோம்! படைப்புகள் அனுப்ப தயாராகிக் கொள்ளுங்கள்...!   

இந்தப் பக்கம் -இலங்கை,சிங்கை,மலேசிய நாடுகளில் வாழும் வலைநண்பர்கள் நூல்பெற இவ்வாறு யாரும் பொறுப்பேற்றுக் கொள்வதாக இருந்தால் அன்புடன் தெரிவியுங்கள். அனுப்பும் செலவைக் கேட்டுச் சொல்வேன். அதன்பின் உங்கள் பகுதிக்கும் வருவோம்.


எல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் அல்லது பின்னூட்டம் எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.


எனது மின்னஞ்சல்  muthunilavanpdk@gmail.com 
(E.mail   Subject பகுதியில் பதிவர் கையேடு தேவைஎன்று குறிப்பிட்டால் அவற்றைத் தனியே எடுத்து, பதில் அனுப்ப, நண்பர்களுக்கும் தெரிவிக்க உதவியாகும்)

எதிர்பார்ப்புடன்,
நா.முத்துநிலவன்,
பதிவர் விழாக்குழு-2015,
கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை.
எனது செல்பேசி எண்  +91 9443193293
--------------------------
-ஒரு முக்கியமான பின் குறிப்பு-
இந்த நமது வேண்டுகோளை
சகோதரி இளமதி அவர்கள்
தமது தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்
பார்க்க - 
http://ilayanila16.blogspot.com/2015/11/blog-post_6.html#more 
இதுபோல், நம் வெளிநாட்டிலிருக்கும்
 தமிழ்ப்பதிவர் நண்பர்கள்
தமதுதளத்திலும் இதனைப் பகிர்ந்து,
பலரின் பார்வைக்கு 
இந்த வேண்டுகோளைக் கொண்டுசெல்லக் 
கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
---------------------- 

24 கருத்துகள்:

 1. முடிந்தவரை நானும் முயல்கிறேன் கவிஞரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே, அடுத்த மாதம் அங்கு வரவிருக்கும் என் மருமகனிடம் தந்தனுப்பினால் எத்தனை பிரதிகளை அங்குள்ளவர்களுக்குக் கொடுக்க முடியும் என்று தெரிவியுங்கள் அனுப்பிவிடுகிறேன். (ஆக, அபுதாபி-அமீரக நண்பர்களுக்கு கூரியர் செலவு மிச்சம்!)

   நீக்கு
 2. பதில்கள்
  1. கில்லர்ஜிக்குச் சொன்ன பதிலேதான் உங்களுக்கும் நண்பரே!
   (ஆனால் அதில் என் மருமகள் என்பது மருமகனாகிவிட்டது!)
   அந்தச் சுற்றுவட்டாரத் தமிழ் அமைப்புகள், தமிழ்இலக்கிய நண்பர்களிடம் தர முடியுமா பாருங்கள். எத்தனை கொடுக்கலாம் என்று கூறுங்கள்..(ஆனால், நீங்கள் ஏற்கெனவே ரூ.5000 தந்து விட்டீர்கள், இனி இதுதொடர்பாகச் செலவுசெய்ய வேண்டாம். ஆனால் கில்லர்ஜி ஐயாயிரத்தில் 2222 ஐக் கழித்துக்கொள்ளலாம்.)

   நீக்கு
 3. ஆஹா....வலையில் ஒரு புத்தகக்கண்காட்சி....
  அய்யா...ஒரு தாழ்வான கருத்து..
  இன்னும் நம் வெளிநாடுவாழ் நண்பர்களை சிரமப்படுத்துகிறோமோ எனத்தோன்றுகிறது..வெளிநாட்டுப்பணி என்பது எனக்கு நேரடியாகவும்..தங்களுக்கு பிள்ளைகள் மூலமும் நிறையவே கிட்டியிருக்கும்...
  அவ்வளவு பணிச்சுமைகள் இருக்கலாம்...தமிழ் மீதும் நம் மீதும் கொண்ட அளவற்ற காதலால்(?) அவர்கள் காட்டும் ஈடுபாட்டை..இன்னும் வேறு வழிகளில் பயன்படுத்தலாமே...
  புத்தகங்கள் தானே..அதை எப்போதேனும் இங்கேயே விற்றுவிட முடியாதா?
  அனுப்புதல்..அங்கு பிரித்தல்..மீண்டும் அனுப்புதல் என நம் நண்பர்களுக்கு ...?
  தவறேதேனுமிருந்தால் ...
  மன்னியுங்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி நண்பா. சுமையென்று நினைத்தால் சுமைதான். சுவையான சுமைகள்ஈ, சுகமான சுமைகளும் வாழ்க்கையில் உண்டு நண்பா! (முறையே குழந்தைகளும், மனைவியும்தான்!)
   என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்குச் செய்யும் செலவும் புத்தகங்களுக்குச் செய்யும் செலவும் செலவே அல்ல.. ஆங்கிலத்தில் சொன்னால், It is not Expenditure, but Invesment!.
   அதோடு, இங்குள்ளவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதைப்போலவே, வெளிநாட்டில் உள்ளவர்களின் பார்வைக்கும் இந்தக் கையேடு போகவேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர, விற்பனை மட்டுமல்ல நண்பா! காசுப்பிரச்சினை கூட அல்ல இது! புரிகிறதா? இப்ப நான் சொன்னது சரிதானா என்று சொல்லுங்கள்..

   நீக்கு
  2. “அனுப்புதல்..அங்கு பிரித்தல்..மீண்டும் அனுப்புதல் என நம் நண்பர்களுக்கு?“ நாமும் சிரமப்பட்டு, அடுத்தவர்களுக்கும் முடிந்தவரை சிரமம் தருவதுதானே நம் வேலையே! அப்புறம் சகோதரி இளமதிதான் இந்த யோசனையை என்னை அழைத்துச் சொன்னார். சகோ. விசு மின்னஞ்சலில் சொன்னார்.. (ஆமாம்.. “அரசருக்கே விளங்கிவிட்டது..இடையில் நீர் என்ன? மன்னா நீங்கள் பரிசைத் தாருங்கள்..இந்தப் பால்காரன் கணக்கை முதலில் அடைக்க வேண்டும்“ என்ற திருவிளையாடல் தருமி வசனம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல சாமியோவ்..!

   நீக்கு
  3. அடடா...நான் தான்....மாட்டிக்கொண்டேனா?
   எல்லாம் தாங்கள் கொடுத்த கருத்து சுதந்திரம்.....ஒரு பதிவுக்கு நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் எனத் தெரிந்தும்.....
   நேரம் சரியில்ல சாமியோவ்...நான் எனக்கு சொன்னேன்...

   நீக்கு
 4. நல்ல வேண்டுகோள். நல்லதே நடக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா. நல்லது நடக்கத்தான் ஏதாவது செய்துபார்க்கிறோம். தாங்கள் விழாவுக்குப் பின்னரும் பணம் அனுப்பி நூல்பிரதிகளைப் பெற்ற அன்பிற்கு எங்கள் நன்றி அய்யா. நூல்கள் வந்தனவா?

   நீக்கு
 5. நம் வெளிநாட்டு பதிவர்களையும் இணைக்கும் அருமையான முயற்சி. பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆங்.. இதுதான் சரியான புரிதல். (அடுத்த பதிப்பில் இப்போதைய குறைகளிலலாமல் இன்னும் சிலநூறு பதிவர்களை இணைத்து..)

   நீக்கு
 6. வணக்கம் ஐயா!

  தங்களின் பதிவு கண்டு மட்டற்ற மகிழ்வெய்துகின்றேன்!
  உங்களின் இப்பதிவினை எனது வலைப்பதிவுக்கு வரும் உறவுகளுக்குச்
  சுட்டியுள்ளேன்!

  அங்கு தாங்கள் வந்து பின்னூட்டம் தரும்போது அதற்கான ஆயத்தப் பணியைச் செய்துகொண்டு இருந்மையால் இங்கு கருத்திடத் தாமதம் ஆனேன். பொறுத்திடுங்கள் ஐயா!..

  யாவும் நல்லபடியாக நடக்கும் என நம்புகின்றேன்!
  எங்களின் முயற்சிகள் வெற்றிபெறும் ஐயா!

  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த இந்த இந்த அன்பு ததும்பும் சொற்கள்தாம் எங்களைச் செயற்படுத்துகிறது சகோதரி. மிக்க நன்றி. இதோ சகோதரி அருணா அவர்கள் பத்துப் புத்தகங்கள் வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். இன்னும் 30புத்தகங்கள்தான் (உங்கள் பகுதிக்கு) யாரும் கேட்டு எழுதிவிட்டால் 40புத்தகங்களைத் தங்களுக்கு -மின்னஞ்சல் செய்து தங்களின் பதில் தெரிந்து- விரைவில் அனுப்பிவைப்பேன்.

   நீக்கு
  2. சகோதரிக்கு வணக்கம். தங்கள் தளத்தில் இந்த வேண்டுகோளைப் பகிர்ந்துள்ளதையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, இந்தப் பதிவின் பின்குறிப்பை இணைத்தேன் சகோதரி நல்ல யோசனை. பார்க்கலாம். என்ன நடக்கிறதென்று. நன்றிம்மா

   நீக்கு
  3. வணக்கம் ஐயா! முதற்கண் மிக்க நன்றிகள்,பாராட்டுக்கள் ஐயா. விழாவினை மிகச் சிறப்பாக நடாத்தியமைக்கு.
   நானும் கவிஞர் இளமதி அவர்களிடமிருந்து புத்தகத்தினை பெற்றுக்கொள்கிறேன் ஐயா. 4 பிரதிகள் வாங்கிக்கொள்கிறேன். இளமதி இளையநிலா தனது தளத்தில் தங்களது தளத்தினை இணைத்திருப்பதை பார்த்து இங்கு வந்து என் விருப்பத்தினை தெரிவித்தேன்.
   நன்றிகள்.

   நீக்கு
  4. மிக்க நன்றி சகோதரி. தங்களைப் போன்றோரின் அன்பான சொற்களாலும், ஆதரவான நட்பாலும் புதிய நம்பிக்கை வந்திருக்கிறது, நல்லவற்றை நம்பித் தொடரலாம் என.
   முடிந்தவரை தொடர்வோம் நன்றியும் வணக்கமும்.

   நீக்கு
 7. வணக்கம் முத்து நிலவன் அய்யா.

  நான் இளமதி அம்மாவிடம் பத்து புத்தகங்களை வாங்கி வரவழித்துக் கொள்கிறேன். எங்களுக்கும் புத்தகம் கிடைக்க எளிய வழி அமைத்துக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
  ஆனால்.....
  அந்த பத்து புத்தகத்தில் இரண்டு புத்தகத்தை நானும் கவிஞர் அவர்களும்
  நிச்சயம் படிப்போம் என்று உறுதியாகச் சொல்ல என்னால் சொல்ல முடியும். மீதி இருக்கும் எட்டு புத்தகத்தை மற்ற தமிழர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அதை அவர்கள் படிப்பார்களா என்பது சந்தேகம் தான். இதை அவர்களின் தவறு என்று சொல்ல மாட்டேன். இது அவர்களின் நேரமின்மை, மற்றபடி தமிழ் அறியாமை என்றும் கொள்ளலாம்.
  அதற்காக அவர்கள் பிரென்சு புத்தகங்களை வாங்கி படிக்கிறதர்கள் என்று நினைத்து விடாதீர்கள். வாசிப்பதில் விருப்பம் இன்மை என்று கொள்ளலாம்.
  நான் பலரிடம் நல்ல புத்தகங்களைக் கொடுத்தும், அதை அவர்கள் திறந்து கூட பார்க்கமல் வைத்திருப்பதைக் கண்டு...... இருக்கிறேன்.
  தவிர ஒரு சிலருக்குத் தமிழ் புத்தகங்கள் படிக்க ஆசை இருந்தாலும் அதை விலை கொடுத்து வாங்கிப் படிக்க விரும்புவது இல்லை!
  இருப்பினும் நீங்கள் இளமதி அவர்களுக்குப் புத்தகம் அனுப்பினால் நான் நிச்சயம் பத்து புத்தகங்களை வாங்கிக்கொள்வேன்.

  மீண்டும் நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி. மிக்க நன்றி. வாங்குவோர் எல்லாரும் படித்து விட்டால் நாம் தொடர்ந்து எழுத வேலையில்லாமல் போய்விடும் அல்லவா? ஆக, தொடர்ந்து எழுதும் நம் மீது வைத்த கருணையின் காரணமாகவே பலரும் படிப்பதை நிறுத்திவிட்டனர் இந்த நோய் தமிழ்நாட்டில்தான் இருக்குமோ என்று எனக்கு ரொம்ப நாளாச் சந்தேகமிருந்தது. நல்லவேளை தமிழர்கள் எங்கெலலாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தனது இந்த நோயைப் பரப்பியே வந்திருக்கிறார்கள் என்பதறிந்து பெருமை(?)ப் படுகிறேன். என்ன செய்ய சகோதரி. நம் பணி கடன் செய்து கிடப்பதே! சே மாற்றிச் சொல்லிட்டேன் ல? நம் கடன் பணிசெய்து கிடப்பதே! நன்றி.

   நீக்கு
  2. கையேட்டினை முற்பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
   சகோதரி அருணா செல்வம் அவர்களே!

   நீக்கு
 8. நல்ல யோசனை! இளமதி சகோவுக்குப் பாராட்டுகள் விசுவும் வந்துட்டாரு பாருங்க...அவருக்கும் தான்...அடுத்து கில்லர்ஜி, சே குமார் அப்பபா என்னமா நம்ம நண்பர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு வராங்க பாருங்க....பறக்கட்டும் கையேடுகள்! வலை நட்பு ஒற்றுமை ஓங்கட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமைதி அமைதி.. அன்புத்தங்கை கீதா அவர்களே!
   பறக்கட்டும் கையேடுகளா?
   தங்கையே! எவ்வளவு சிரமப்பட்டுத் தயாரித்த கையேடுகள்..
   ஓ! விரைவாக விற்பனையாகட்டும் என்கிறீர்களா? அது சரி.
   அது யாருங்க அங்க “ஒற்றுமை ஓங்கட்டும்“னு கோஷம் போடுறது.. தேசப்பாதுகாப்புச் சட்டம் எதுவும் பாஞ்சிராம..
   உங்க உற்சாகத்துக்கு அளவில்லை போல! நன்றிம்மா

   நீக்கு
 9. கொஞ்சம்... கொஞ்சூண்டு... மனதிற்கு நிம்மதி (நம்ம புதுக்கோட்டை வலைச்சித்தர் மனதிற்கும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் அணில் சேவையா? அப்படி ஒரு சோகப் பாட்டுப்போட்டு, எல்லாருடைய மனசிலும் இடம்பிடித்தது மட்டுமின்றி, கையேட்டு விற்பனையின் தேவையை அழகாகச் சொல்லிவிட்டு இப்ப.. “கொஞ்சூண்டு“ நிம்மதியா? மாமன் மருமகன் பாட்டுக்கு நல்ல வரவேற்பு என்பதைவிட உணரவைத்தீர் உண்மை! நன்றி வலைச்சித்தரே (எங்கள் சித்தர் அடுத்த வேலை என்ன என்கிறார்)

   நீக்கு