சொந்தமா கார் வச்சிருக்கிறது தப்பாய்யா?

இப்பல்லாம் சொந்த வீடு இருக்கோ இல்லியோ, சொந்தமா கார் வாங்கி வாடகைக்கு இடம்பிடிச்சி நிப்பாட்டி யிருக்கிறவங்க அதிகமாயிட்டாங்க. எல்லா ஊர்லயும் போக்குவரத்து நிலையம் அல்லாத, ஊருக்குள்ளேயே மாதவாடகை கார்-பார்க்கிங் பெருகியிருப்பதே சாட்சி!
அதே மாதிரி கணவன்-மனைவி இருவருமே வேலைபார்த்தால் இப்ப கார் என்பது ஆடம்பரமில்லை, அத்தியாவசியமானதாக மாறிவிட்டது. (4,5டிக்கட்ட ஏத்திகிட்டு?)
இவ்வளவுக்கும் மேல, 35ஆண்டுகளாக ஒரு நல்ல வேலைபாத்து,  40வருசமா தமிழ்நாடு முழுசுமில்லாம வெளிநாடுகளுக்கும் போயி,  இலக்கியம்(?)பேசி, அலஞ்சி திரிஞ்சு பணிஓய்வுக்குப் பிறகு.. அதுவும்
பாதி வங்கிக் கடன்வாங்கி நான் வாங்கினேன் ஒரு காரு! - இப்ப பரிதாபமா அது என்னைப் பாக்குற பார்வையப் பாரு!
இரு கண்ணு ! நீ ஒன்னும் எந்தத் தப்புப் பண்ணல்ல..இவிங்க பண்ற தப்புக்கு நீ காரணமில்ல.. என் கண்ணுல்ல?
வாங்கிய ஒரே ஆண்டுக்குள்ள 35,000 கி.மீ.சுத்தியிருக்கேன் னா பாத்துக்கோங்க! (அப்ப 40ஆண்டுகளா எத்தனை கிமீ சுத்தியிருப்பேன்...? இத்தனைக்கும் இந்த ஒரே ஆண்டுல மட்டுமே சென்னைக்கு 6,7தடவை போனது கூட ரயில்லதான்! அவ்ளோ ஊர்சுத்திங்க நானு!)
இப்ப என்னடான்னா..!?! 
கார் வச்சிருக்கிறவய்ங்க எல்லாரும் ஏதோ டாடா பிர்லா அதானி அம்பானி லெவலுக்குப் பணக்காரய்ங்க மாதிரி நம்ம மோடி அய்யா ஒரு திட்டம் போட்டுக்கிட்டு இருக்காராம்ல?
அதாவது சொந்தமா கார் வச்சிருந்தா எரிவாயு மானியம் குளோசாம்! அட நாம சொந்தமா வீடுவாங்குனதும் கடன்ல தானே? (அதுக்கு ஏதும் விதி வெலக்கு கிடையாதுங்களா..?) 
எப்போ 16ல 8போகுமானு கேட்டு, “பக்கத்து ஸ்தானத்துல கடன் வாங்கணும்னு மூணாம்ப்பு கிளாரா டீச்சர் சொல்லித் தந்தாங்களோ அப்பலேர்ந்து, கடன் வாங்குறது நமக்கு நல்லா பழகிருச்சிங்க! கட்ட வேகுற வரைக்கும் தொடருமில்ல..!
வேலைக்குச் சேந்த புதுசுல ஒரு கவித எழுதுனேன் -
     ஐந்து வயதில் அடுத்த ஸ்தானத்துல கடன்!
     ஐயைந்து வயதில் அடுத்த வீட்டில் கடன்!
     ஐம்பத்தைந்து வயதில் அரசாங்கத்திடம் கடன்!
     அரசாங்கமோ பாவம், ஐஎம்எஃபிடம் கடன்!
     பாரத நாடு கடன்பெறும் நாடு!
     நீரதன் புதல்வர்! நினைவாக வட்டி கட்டுவீர்!
அப்படித்தான், 1980ல வேலையில சேர்ந்து, 95ல வாங்குன வீட்டுக் கடன் முடிஞ்சு, 2014ல ரிடையராகி இன்னும் வீட்டுப் பத்திரத்தக் கூட கையில வாங்கலய்யா..! 
அதுக்குள்ள -
சொந்தமா வீடு, காரு இருந்தா 
கேசு மானியம் குளோசுனு சொல்றாய்ங்க!
பினாமியில வச்சிக்க நாம என்ன பெரிய தலைருங்களா?
நாம எரிவாயு மானியம் வேணாம்னு சொல்லிட்டா அதை எடுத்துக்கிட்டுப் போயி நம்ம குப்பனுக்கும் சுப்பனுக்கும்  அப்புடியே  குடுத்திடுற மாதிரியில்ல பேசுறாங்க..! தெரியாது... இவுங்க யோக்கித?

பெரிய பெரிய வங்கி அதிகாரிங்கள கையோட கூட்டிட்டுப் போயி, தன்னோட “பிரதமர் பதவிக்கான“ பிரச்சாரத்துக்கு ஓசி விமானம் குடுத்த அதானிக்கு ஆஸ்திரேலியா சுரங்க ஒப்பந்தத்த வாங்கிக் குடுத்ததும்,  
இப்ப 4ஜி ஒப்பந்தத்த பிஎஸ்என்எல் போடப் போனப்ப வேணாம்னுட்டு, அத அப்புடியே ஏர்டெல் காரன் வாயப் பொளந்து எடுத்து உள்ள போட்டதும் இல்லாம குச்சிய வச்சிக் குத்தி கொடலுக்குள்ள போயிருச்சான்னு பாத்து ரசிக்கிறதும் (இப்ப அவுக நம்ம கிட்டயே “சேலஞ்“னு விளம்பரம் பண்றதும்..?)  “சோழியன் குடுமி சும்மா ஆடுமா.... யோக்கியன் வர்ரான் சொம்ப எடுத்து உள்ள வையி"ன்னு நம்ம கிழவிங்க சொல்ற சொலவடைக தான் ஞாவுகத்துக்கு வருது...
இவுங்க போதைக்கு இடைநிலை மக்கள்தான் ஊறுகாயா? 
சொந்தமா கார் வச்சிருக்கிறது தப்பாய்யா?
--------------------------------------------
இந்த செய்தியைப் படிங்க என் புலம்பலுக்குக் காரணம் புரியும்-
சொந்த வீடு.. கார்.. பைக் இருக்கா? அப்போ மத்திய அரசே உங்க கேஸ் மானியத்தை 'கட்' செய்யப் போகுதாம்!
            சொந்த வீடு, கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மானியத்தை தாமாகவே நிறுத்திவிடலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மானியம் இப்போது நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வசதிப்படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதுதொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மானியம் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதே திட்டத்தை முந்திய காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி முன்வைத்தார். ஆனால் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த இதே திட்டத்தை முந்திய காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி முன்வைத்தார். ஆனால் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில் தனி பெரும்பான்மையுடன் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் குறியாக உள்ளது.
---------- நன்றி பாடசலை இணையம்
     படத்துக்கு நன்றி கூகுளார்.
 -------------------------------------------------------------------------------------

25 கருத்துகள்:

 1. ஆகா
  விறகு அடுப்பு வாங்கிவிட வேண்டியதுதான்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா,
   “குவளை உண்கண் குய்ப்புகை கமழ“ என்று சங்க இலக்கியத்தில் வருமே.. அந்த நிலை மீண்டும் வரும்போல.. வரலாறு திரும்பும்?

   நீக்கு
 2. கவலைப்படாதீர்கள்! இன்னும் சில நாட்களில் கேஸ் மானியத்தையே எடுத்து விடுவார்கள். “உங்களுக்கும் இல்லை; அவருக்கும் இல்லை; எனக்கும் இல்லை; யாருக்குமே இல்லை” என்று ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதச் சொல்லுங்க.. யாருக்குமே இல்லயின்னா யாருக்கு யாரு கேக்கப்போறாங்கிற நினைப்புத்தான் .. “இப்போது என்னைக் காப்பாற்ற யாருமே வரவில்லை“ எனும் புகழ்பெற்ற தொழிற்சங்கக் கவிதை நினைவிற்கு வருகிறது. நன்றி அய்யா

   நீக்கு
 3. அன்புள்ள அய்யா,

  தங்களின் கார் புதிதாக எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. பீகார் தேர்தல் முடிவு ... மோடியை, சொந்தமா கார் வச்சிருக்கிறது தப்புன்னு சொன்னது தப்புன்னு அவசியம் யோசிக்க வைக்கும். இல்லையெனில் வரும் தேர்தலில்....?!

  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தப்பைத் தப்புத்தப்பா பண்ணியதை மாற்றி,
   தப்பைச் “சரியாகப் பண்ண“ கற்றுக்கொண்டாலும் சிக்கல்தான்! நன்றி

   நீக்கு
 4. ஐயோ... அய்யய்யோ...! பொழைப்பு இனி மேலும் சிரமம் தான்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம பொழப்பே இப்படின்னா..அன்னாடங்காய்ச்சிகள் பொழப்பு அதோகதிதான்.. அப்பறம்தான் புத்திவரும்போல..நன்றி வலைச்சித்தரே.

   நீக்கு
 5. அடடா..நான் காரைக்கொடுத்துவிட்டேன்...ஒருவேளை யாரேனும் மூன்றுவேளை சாப்பிட்டால் ஏதேனும் வரி போடுவார்களோ?
  விடுங்கள்...ஒன்றும் செய்யமாட்டார்கள்...பீகார் பீதி கொஞ்சம் இருக்கும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'குனிஞ்சு நிமிந்தா வரி குப்புறப்படுத்தா வரி,
   கோயிலுக்குப் போனா வரியாம் - மனுசன்
   கோயிலுக்குப் போனா வரியாம்“ எனும் ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது..“விநாச காலே விபரீத புத்தி“தான்!

   நீக்கு
 6. குச்சி கீழே கிடைக்குதேன்னு கையில எடுத்து...
  சும்மாதானே இருக்குன்னு கண்ணைக் குத்திக்கிட்டாராம் மோடி!
  இதுதான் நிலை.

  பதிலளிநீக்கு
 7. ..அன்னாடங்காய்ச்சிகள் பொழப்பு அதோகதிதான்.. உண்மைதான். அய்யா...

  பதிலளிநீக்கு
 8. இப்படிப் புலம்ப வச்சுட்டாங்களே அண்ணா ...
  எனக்கு வீட்டுக்கடன் இன்னும் முடியலையே :-(
  குடி நலம் ஆய்ந்து பேணும் அரசு!

  பதிலளிநீக்கு
 9. பெராரி, லம்போகினி, ஆஸ்டன் மார்டின் என்ற வகையில் கார் வைத்திருக்காதது தான் குற்றம் அண்ணா..

  பதிலளிநீக்கு
 10. பாருங்கல் கொஞ்சநாட்கள்தான் மான்யமே ரத்து செய்யப்படும் ...கார் இருக்கலாம்...இருசக்கரம் இருக்கலாம். வீடும் இருக்கலாம் எல்லாம் லோனில் என்றால்...??????

  பதிலளிநீக்கு
 11. கார் பெட்ரோலா, டீசலா? நீங்களே ஓட்டறீங்களா, இல்லை டிரைவர் வச்சா? நானும்தான் ஒரு வருடத்துக்கு முன்னால ஒரு கார் வாங்கினேன். முக்கி முக்கி 2000 கி.மீ. ஓட்டியிருக்கேன். ஏதாச்சும் ஊர்ல பெட்ரோல் பங்க் வச்சிருக்கீங்களா? உங்களுக்கெல்லாம் கட்டாயம் மான்யம் கட் பண்ணவேண்டும். நானே மோடிக்கு எழுதிப்போடறேன்.

  பதிலளிநீக்கு
 12. //ஐந்து வயதில் அடுத்த ஸ்தானத்துல கடன்!
  ஐயைந்து வயதில் அடுத்த வீட்டில் கடன்!
  ஐம்பத்தைந்து வயதில் அரசாங்கத்திடம் கடன்!
  அரசாங்கமோ பாவம், ஐஎம்எஃபிடம் கடன்!
  பாரத நாடு கடன்பெறும் நாடு!
  நீரதன் புதல்வர்! நினைவாக வட்டி கட்டுவீர்!//
  ஆஹா அட்டகாசம்
  நானும் வீட்டுக் கடன் வாங்க போறேன் இல்ல

  பதிலளிநீக்கு
 13. ஐயா..கார் வாங்கணும் ..னு நினைச்சேன்...அப்பா..தப்பிச்சேன்..
  நினச்சதுக்கே வரி போடுவாங்களோ...

  பதிலளிநீக்கு
 14. பீகார் மக்கள் மோடிக்கு ஆப்பு வைச்சிருக்காங்க! அதனால இதுக்குள்ள இந்த திட்டம் வராது! கவலைப்படாதீங்க! உங்களின் கவிதை அசத்தல்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. மானியங்களை வங்கி மூலம் கொடுப்பதன் காரணமே மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்யும் உத்திதான். மானியத்தை விட்டுக்கொடுப்பது ஒரு பிரச்சனையே இல்லை. நமது அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாக இருந்தால் நாட்டுக்காக விட்டுத்தரலாம். ஆனால் இவர்கள் கோடி கோடியாய் கொள்ளையடிப்பார்கள். அதை நிறுத்த மாட்டார்கள். நாம் மட்டும் எல்லாவற்றையும் விட்டுத்தரவேண்டும்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
  இனிய தீபாவளி வாழ்த்துகள்! அய்யா!

  பதிலளிநீக்கு
 16. கடப்பாரை முழுங்கிகளைக் கண்டுக்க வக்கில்லே. குண்டூசி உருளுறது குத்தமுன்னு சொன்னானாம். - பாட்டிமொழி.

  பதிலளிநீக்கு
 17. கவிதை அருமை ஐயா.மானியங்களை வழங்கி மக்களை விற்பது புது உத்தி அரசியல்வாதிகளுக்கு.

  பதிலளிநீக்கு
 18. மானியத்தை நேரடியாக உங்கள் கணக்கில் போடுகிறோம் என்று சொல்லி வங்கிக்கணக்கு விவரங்களை வாங்கி இப்போது உனக்கு வீடு இருக்கு, வாகனம் இருக்குன்னு தானாகவே மானியத்தை நிறுத்த காரணத்தைத் தேடுகிறார்கள். சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் கை வைத்தால் அடுத்த தேர்தலில் பதிலடி நிச்சயம் கிடைக்கும் ஐயா!

  பதிலளிநீக்கு
 19. அண்ணா கடனெல்லாம் அடச்சாத்தானே சொந்தவீடு ..இதக்கேட்டா பேங்க் காரன்னெல்லாம் ஓடியாரப்போறாக..பரவால்ல கடன எல்லாம் அடச்சிட்டா நாம விட்டுக்கொடுத்துடலாம்..ஆமா இந்தியாவையே பாதி வித்தாச்சே அண்ணா நம்ம வீடும் அதுல அடங்குமோ...அண்ணா கடவுளைக்கண்டேன் -2 என் தொடரில் உங்களை இணைத்துள்ளேன் பார்க்கவும்.http://velunatchiyar.blogspot.com/2015/11/2.html

  பதிலளிநீக்கு