என் ஆசைகளை நிறைவேற்ற, கடவுளால் முடியாது!

1.     என்பேத்தி “செம்மொழி“யை, என்பேரன்களைப் பார்க்க, என்அப்பா வரவேண்டும்.

2.     நட்பை உறவை நானும், என்னை அவர்களும் புரிந்து செயல்பட வேண்டும்.

3.     சாதி போலும் ஏற்றத்தாழ்வுச் சொற்கள் பொருளற்றதாக வேண்டும்.

4.     “தமிழ்எனும் சொல்லையே பயன்படுத்தாத வள்ளுவரைப் பார்க்க வேண்டும்.

5.     நினைப்பதை எழுதித்தரும் கணினி மென்பொருள் வேண்டும்.

6.     பெண்-ஆண் சமத்துவம் வீடுமுதல் உலகமுழுதும் நடைமுறையாக வேண்டும்.

7.     அன்பை அறிவோடு தரும் கல்வி, மாணவர் விரும்பும்படி வேண்டும்.

8.     கடவுளைப் படைத்தவன் மனிதன்தான் என்பதை மனிதர் உணர வேண்டும்.

9. இந்தியர் அனைவரும் இந்தியப் பொருளுக்கே முன்னுரிமை தரவேண்டும்.

10.சக்தி-திறமைக்கேற்ற வேலை, தேவைக்கேற்ற வசதிஎனும் சமூகம் வேண்டும்


கடைசியாக எனது சுயநல ஆசை ஒன்றும் உள்ளது-

“கவிதையின் கதை“ (1,200பக்க தமிழ்க்கவிதை வரலாறு) நூலை 

எழுதி வெளியிடும் நாள்வரை நான் உயிரோடு இருக்க வேண்டும். 

இத்தொடரைத் தொடங்கிய 

நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கும், 

என்பால் கொண்ட அன்பால் என்னை 

இதன்பால் இழுத்துவிட்ட 

கவித்தங்கையர் 

மு.கீதா, மைதிலிக்கு 

எனது அன்பு கலந்த நன்றியும் வணக்கமும். 

------------------------ 

18 கருத்துகள்:

  1. வணக்கம் அண்ணா.
    முத்தான ஆசைகள்..
    குறிப்பாகப் பத்தாவது நிறைவேற என் வாழ்த்துகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  2. ///எனது “கவிதையின் கதை“ 1,200பக்க நூலை எழுதி வெளியிடும் நாள்வரை
    நான் உயிரோடு இருக்க வேண்டும். /

    நிச்சயம் இருப்பீர்கள், ஆனால் கவிதையை எல்லாம் படித்துவிட்டு நான் உயிரோட இருப்பேனா என்பதுமட்டும் இங்கு கேள்வி குறி.....ஹீஹீ

    பதிலளிநீக்கு
  3. கடவுளைப் படைத்தவன் மனிதன்தான் என்பதை மனிதர் உணர வேண்டும்.

    உணரப்பட வேண்டிய உண்மை உணரப்படாமலே போய்விடுகின்றது!

    நன்றி ஐயா!


    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    கடைசி ஆசை கண்டிப்பாக நிறைவேறும்; அதில் சந்தேகம் இல்லை. ஏனைய ஆசைகளை நிறைவேற கடவுள் என்கிற பெரியார் வரவேண்டும்... வந்தால் நிறைவேறலாம்...! அவ(ள்)ன் வருவா(ளா)னா? எந்தப் பாலினித்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை... மூன்றாம் பாலினித்தில் சேர்த்துக் கொள்ளலாமா?

    தந்தை பெரியாரிடம் ‘கடவுள் இல்லை’ என்று சொல்கிறீர்களே கடவுள் உங்கள் முன்னால் தோன்றினால் என்ன சொல்வீர்கள்? என்று கேட்ட பொழுது, “நான் ஏன் இல்லைன்னு சொல்றேன்... இருக்காருன்னு சொல்லிட்டுப் போறேன்” என்றாராம்.

    நன்றி.
    த.ம.1

    பதிலளிநீக்கு
  5. அண்ணா
    இத்தனை அலுவல்களுக்கு இடையே இந்த தங்கைகளின் ஆசையை நிறைவேற்றியமைக்கு நன்றி. சுயநலம் என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பத்தாவது ஆசை தான் ஆகச்சிறந்த பொதுநலம் என தோன்றுகிறது. தமிழன்னைக்கு நீங்கள் சூட்டபோகும் மணியாரம்:) இல்லாத கடவுள் மற்றவற்றை கவனிக்கட்டும்.பத்தாவது ஆசையை தமிழன்னை நிறைவேற்றுவாள். அப்புறம் ஒரு விஷயம் இப்படீல்லாம் பேசாதீர்கள். மனம் மிகுந்த வேதனை அடைக்கிறது,

    பதிலளிநீக்கு
  6. 1,200 பக்கம் என்ன
    12,000 பக்கம் எழுதுவீர்கள்
    அதன் வெளியீட்டு விழாவில் நானும்
    கலந்து கொள்ள வேண்டும்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  7. அண்ணா உங்கள் ஆசை நிறைவேற நீண்ட நாள் வாழவேண்டும்...

    பதிலளிநீக்கு
  8. தமிழ்க்கவிதை வரலாறு அடுத்த ஆண்டு "ஆண்டு விழாவில்".... நினைப்பதை எழுதித்தரும் மென்பொருள் எதற்கு...? உங்களால் முடியும் ஐயா...

    பதிலளிநீக்கு
  9. தமிழ் என்னும் சொல் இடைப்பட்டு தான் வந்திருக்கவேண்டும் என்ற ப.அருளி அய்யாவின் உரை கேட்ட பின் வள்ளுவர் காலத்தால் முற்பட்டவர் எனும் கருத்து மேலிடுகிறது...அய்யா மொழி எனும் வார்த்தைகள் அதிகம் வருகிறதா அய்யா... அப்படியெனில் மொழியே தமிழாய் கொள்ளலாமா?
    உங்கள் ஆசைகள் அருமை..

    பதிலளிநீக்கு
  10. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் அய்யா.

    கடவுள் எங்கும் இருக்கிறார்-ஆனா
    எங்கே இருக்கிறார் என்பதை தவிர...
    கடவுள் எங்கும் இருக்கிறார்
    மனித வடிவில்-ஆனா
    மனிதன் எங்கே இருக்கிறான்
    கடவுளை விட்டு....
    இக்கட்டான சமயத்தில் உதவுவது கடவுள்
    எந்த சமயத்தினருக்கும் உதவும் மனசே! கடவுள்
    கல்லை கடவுள் ஆக்கினான் மனிதன்-அதனால்
    என்னவோ! மனிதனும் கல்லே! ஆனான்
    கடவுளை போல் உணர்சியற்றவனாகவே....
    நிறைய பேச வேண்டும் என்று ஆசை-ஆனால்
    பேச வேண்டியதோ குறை என்பதால்
    "நிறையை" குறைவாகவே பேசுகிறேன்!

    பதிலளிநீக்கு
  11. உங்களின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் கவிஞரே கடவுளால் நிறைவேற்ற முடியாது என்று நீங்களே சொல்லி விட்டீர்கள் கண்டிப்பாக முடியாத ஆசைகளே...
    ஐந்தாவது ஆசை கொஞ்சம் ஓவராத்தான் தெரிகிறது..
    பத்தாவது மிகவும் சிறப்பு முழுக்க முழுக்க பொதுநலம் அருமை.
    பகிர்வுக்கு நன்றி என்னையும் குறிப்பிட்டமைக்கு மீண்டும் நன்றி
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  13. //நினைப்பதை எழுதித்தரும் கணினி மென்பொருள் வேண்டும்//

    நினைப்பதை எழுதி தருவது மட்டுமல்ல நினைத்ததை மிக அழகாக எழுதி தரும் ஒரு மென்பொருள் உண்டு. அதற்கு பெயர்தான் முத்துநிலவன்.

    பதிலளிநீக்கு
  14. தமிழ்க்கவிதை வரலாற்றைக் கண்டிப்பாக எழுதி வெளியிடுவீர்கள். அதற்கான ஆயுளும் உடல்நலமும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல ஆசைகள்...

    உங்கள் கடைசி ஆசை நிச்சயம் நிறைவேறும்.

    பதிலளிநீக்கு
  16. ஆஹா! உங்கள் ஆசைகள்! உங்களது கடைசி ஆசை உறுதியாக நிறைவேறும் ஐயா..தாமதமாகிவிட்டது வந்து படித்திட..

    பதிலளிநீக்கு
  17. அப்பா, உங்களது 5-ஆவது ஆசை கூகுளாண்டவர் காதில் விழுந்துவிட்டது. அதற்கான யாகத்தில் கூகுலகோடிகள் இறங்கிவிட்டனர். விரைவில் வரம் கிடைக்கும் என பிராப்பிரஸ்து!

    பதிலளிநீக்கு