வெள்ளக்காடான சென்னை!


சென்னை சத்ய பாமா பல்கலைக் கழக வாயிலில் வெள்ளம்
படகில் மீட்கப்படும் கல்லூரி விடுதி மாணவியர்
----------------------------------------------------- 

கடந்த 5ஆண்டுகளாக இல்லாத மழை 

சென்னையை வெள்ளக்காடாக்கியிருக்கிறது.

படகில் மீட்கப்படும் பரிதாப மக்கள்

புழல்ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, செங்குன்றம் ஏரிகள் எல்லாம் நிரம்பி அவையும் உடைந்து(?) பேரழிவை ஏற்படுத்தும் அச்சத்தை இப்போதே உணர்ந்து உரிய நடவடிக்கைகளை அரசுஉடனடியாகச் செய்யவேண்டும்.

 


மழையை ரசிக்கலாம், ஆனால்

வெள்ளத்தை ரசிப்பது எப்படி?
அதுவும் எமது மக்களை அலைக்கழிக்க
சீறிவரும் வெள்ளத்தை?
இது மழையில் எழுந்த சுனாமியா?

படங்களைப் பாருங்கள் –

ஒன்றும் சொல்வதற்கில்லை.


தான் சென்று தங்குவதற்கான 

குளம், ஏரி, ஆறுகளைத் தூர்வாராத கோபத்தில் மழைநீர் 

சாலைகளைத் தாண்டி குடியிருப்புக்குள்ளும் அடித்துக் கொண்டு போவதைப் பார்க்க உள்ளம் பதறுகிறது. எல்லாவகைத் துன்பங்களில் இருந்தும்,
பணக்காரர்கள் எப்படியும் தப்பிவிடுவார்கள் -  
இந்த ஏழை பாழைகள்தான் 
எப்போதும் சாகிறார்கள்!


மத்திய பேரிடர் மேலாண்மைக்குழுவும் சென்னை மாநகராட்சியும்
எலிகாப்டரில் மீட்கப்படும் சிறுவர்கள்..
பலபாடு பட்டும்(?) சேதம் சிலஆயிரம் கோடியைத் தாண்டும் என்பதுறுதி!

வீட்டுக்குள் புகுந்த நீர், கூவத்தில் வெள்ளம், தாழ்வான பகுதி அனைத்தும் வெள்ளம்! சென்னையே வெள்ளக்காடாகி விட்டது!

 

காவிரியில் ஒட்டகம் விட்டவர்கள்,

இப்போது-

சாலையில் படகு விடுகிறார்கள்!

வேறென்ன சொல்ல?

 

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்“ குறள்.

 


என்றாலும், 

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கையும் நீரால்

தெருவுக்கு வந்து விடும்“ என்றுதான் வள்ளுவரிடம் மன்னிப்பு வேண்டி எழுதவேண்டியுள்ளது.


உரிய நிவாரணத்தைத் தரும் அரசுகள், அதே மூச்சில் இனி இதுபோல்வெள்ளம் வந்தால் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளையும் எல்லா இடங்களிலும் இப்போதே செய்வது தான் அறிவுடமை 

தவறுகளிலிருந்து பாடம் கற்காவிட்டால் 
அந்தத் தவறுகள் மீண்டும் வரும்போது இழப்புப் பலமடங்காகும்!
தமிழ்நாடு முழுவதும் குறிப்பாகக் கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலாவது நிரந்தர ஏற்பாடுகள் அவசியம்.
அரசுகள் பாடம் கற்கவில்லையெனில் மக்கள் கற்பிப்பார்கள்!

அழக்கொண்ட எல்லாம் அழப்போம்! - இதுவும் குறள்தான்!
----------------------------------------------------- 
படங்களுக்கு நன்றி - தமிழ்த் தொலைக்காட்சிகள் மற்றும்
கட்செவி வழியாக அனுப்பிய நண்பர் ராஜா, புதுக்கோட்டை

32 கருத்துகள்:

 1. நான் முகநூலில் இட்ட நிலைத்தகவல்:

  இங்கு இடையில் ஓரிரு தினங்கள் தவிர ஒரு மாதமாய் மழை கொட்டியது(டுகிறது). ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன, சாலைகளில் வாகனங்களும் ஓடுகின்றன, பள்ளிக்குப் பிள்ளைகளும் ஓடுகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கையும் இருந்தது, நீர்நிலைகளுக்கு அருகில் மட்டும்!
  என்ன பிழை! எங்கு பிழை! அறியாவிட்டால் பிழை! திருந்தாவிட்டால் பெரும்பிழை! இலவசங்கள் பெற்று உரிமையை விற்றால் பிழை! பிழை! பிழை! சிந்தித்து நீ பிழை! #feelings

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைவிட மிக அருமையாக யாரால் சொல்ல முடியும். பாரட்டுக்கள் சகோ

   நீக்கு
  2. பிழைகளை அடுக்குகிறாயே ம்மா..! அருமை ஆனால் நான்தான் முகநூல்பக்கம் வருவதே இல்லைடா.(அதைவிட நேரக்கொலை வேறில்லை என்பதால்.. எனது பதிவுகளை அதில் போய்ப் போட்டுவிட்டு வந்துவிடுவேன் அவ்வளவே!) நாடுகள்தான் மாறுகின்றனவே அன்றி அரசுகள் ஒன்றுதானே? ஆனால், சுனாமி நேரத்தில் அமெரிக்க அரசு மக்களை எச்சரித்து பெரும் சேதம் விளையாமல் காத்ததாக நினைவு. சரியா? நன்றிம்மா

   நீக்கு
  3. இல்லை அண்ணா, இங்கு ஆக்கிரமிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் சரியாக உள்ளதால் ஆற்றில் நீர் நிறைந்து ஓடுகிறது, மற்றவை சரியாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன் அண்ணா .
   நீங்கள் முகநூலில் அதிகம் இருப்பதில்லை என்று அறிந்ததாலேயே இங்கு பகிர்ந்தேன் அண்ணா.

   ஆமாம் அண்ணா, அதெல்லாம் சரியாகச் செய்துவிடுவார்கள். நம்மூரிலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்த வெள்ளத்தைச் சமாளித்திருக்கலாம் என்று நினைக்கிறேன் , பதிவிடுவேன் அண்ணா .

   நீக்கு
  4. கிரேஸ் தோழி மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள்! நம்மூரிலும் முன்னேற்பாடுகள் மட்டுமில்லை...பல காரணங்கள்தான் இந்த வெள்ளத்திற்குக் காரணம்.

   நீக்கு
 2. மக்கள் கற்பிப்பார்களா அண்ணா ?
  http://thaenmaduratamil.blogspot.com/2015/11/blog-post_15.html?m=1
  பார்க்க அழைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. கன மழை, ஏரி உடைப்பு ஒரு பக்கம். சாக்கடைகளை அடைத்துக் கொள்ளும் நெகிழித் தாள்களும் தண்ணீர் வடியாததற்கு முக்கிய காரணம். முடிந்த வரை நெகிழித் தாள்களை மறு உபயோகப் படுத்த பார்ப்போம்.
  இன்னும் கொடுமையான நிலவரங்களை https://twitter.com/ChennaiRains பக்கத்தில் காணலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன் அய்யோ.. இவ்வளவையும் பார்க்கவே கொடுமையாக இருக்கே...? அங்கே இருக்கும் ஏழைமக்கள் என்னபாடு படுவர்! நமது அலட்சியத்திற்குத் நாமே தரும் விலைதான் இது! இனியாவது அரசும்(?) மக்களும் உணரவேண்டும். உணர்வாரா?

   நீக்கு
 4. கிரேஸ் சொல்வது போல் இந்த மழைக் காலம் முடிந்தவுடன் மக்கள் மறந்துவிடக் கூடாது தங்கள் முக்கியத் தேவை எதுவென்பதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தங்கையே! “பிரசவ வாக்குறுதி“ மாதிரித்தான் மக்கள் தமது மறதியால் அவர்கள் தலையில் அவர்களும் மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதோடு, அரசையும் போட வைக்கிறார்கள்!

   நீக்கு
 5. சிறுவயதில் 3 நாட்கள் அல்ல... 3 மாதங்கள் பெய்யும்...!

  பதில் என்ன ஐயா..?

  பதிலளிநீக்கு
 6. தொடர்ந்து இதே கவனிப்பற்ற நிலைதான் நீடிக்கிறது. அரசுகள் மாறினாலும், மாநகரத்தந்தைகள் மாறினாலும், சாலை அமைப்பதிலும், நீராதாரங்களைப் பராமரிப்பதிலும், அவற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகளை மேற்பார்வையிடுவதிலும் மேலிடத்தார் அக்கறை கொள்வதே இல்லை. விமான நிலையத்தில் கண்ணாடிக்கதவுகளை ஒழுங்காக அமைக்கவே தெரியாத நகரத்தில் எதைச் சொல்வது, யாரிடம் அழுவது? - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அய்யா, கண்ணாடி உடைந்ததின் 50ஆம் (முறை)விழா நடத்தலாம் என்று தினசரிக் கருத்துப் படங்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. எதற்கு எப்போது முக்கியத்துவம் தருவது என்று எவருக்கு எப்போது புரியப்போகிறதோ தெரியவில்லையே!

   நீக்கு
 7. வணக்கம்

  வேதனையான விடயம் தெய்வம் துணை...ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெய்வம் துணையா? கோவில்கள் இடிந்துகிடந்ததை நான் படம்போட்டுக் காட்ட விரும்பவில்லை ரூபன். கந்தர்வனின் “கூழுப்பிள்ளை“ கதை படித்திருக்கிறீர்களா?

   நீக்கு
 8. அண்ணா அடுத்த வருடமும் இதே பதிவுத்தேவைப்படும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் மா சோகத்தில் பெரிய சோகம். பாடத்தில் அறிவைத் தேடும் உலகம், பட்டறிவில் தேடினால் முன்னேறலாம்.

   நீக்கு
 9. ஒவ்வொரு மழைக்காலங்களில் இது தொடர் பிரச்சனை எனும் போது மழைகாலங்களில் மட்டுமே இவை குறித்து விவாதிப்பதும் மழை ஓய்ந்த பின் அமைதலாகி விடுவதும் கூட இத்தனை பாதிப்புக்கள் தொடர காரணி ஆகின்றது. இப்பாதிப்புக்களை சரிப்படுத்த ஒவ்வொரு வருடமும் செலவு செய்யும் தொகையோடு ஒப்பிடும் போது
  மழை நீர் செல்ல சரியான வடிகான் அமைப்புக்களை அமைப்பதும், இப்படி கொட்டி வீணாகும் மழை நீரை ஒரிடத்தில் சேகரித்து சுத்தப்படுத்தி அடுத்து வரும் கோடைகாலத்தேவைக்கு பயன் படுத்தும் படியாய் நீண்ட கூரிய நோக்குத்திட்டத்தினை இட்டு செலவு செய்தலும் இலகு தான் .

  இயற்கையை நாம் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நம் தேவைகளை அதன் கட்டுக்குள் வரையறுக்க இயலுமே!

  இலவசங்களுக்காக உரிமையை விலை பேசும் முன் ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டிய விடய்ம் இவை. ஆனால் யார் யாருக்கு சொல்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் உண்மைதான். அண்மையில் காலஞ்சென்ற சென்னைப் பேராசிரியர் அய்யா இரா.இளவரசு அவர்களின் கவிதைதான் நினைவிற்கு வருகிறது -
   தூங்குவோர் தம்மை எழுப்பிடக் கூடும்,
   தூங்குவோர் போல நடிப்பவர் தம்மை,
   ஓங்கி அறைந்து செவிப்பறை கிழித்து
   ஒவ்வொரு பல்லையும் எண்ணிக் கொடுத்து
   உதைத்துத் திருத்த ஒருபடை வேண்டும்
   தமிழ்க்காளையே - அதில்
   உன்னையும் உறுப்பின னாக்கிக்கொள்வாய்
   இந்த வேளையே!

   நீக்கு
  2. எங்கோ எவருக்கோ எனும் போது நாம் தூங்குவோராய் தானிருக்கின்றோம். நாம் நேரடியாக பாதிப்புக்குள்ளாகத வரை பத்தோடு பதினொன்றாய் இதுபும் போகும்.

   மழைக்காலம் என்பது தீடீரென வருவதில்லை. பொழுது விடிதலும் மறைதலும் போல் வெயிலும் மழையும் வந்து கொண்டே தானிருக்கும் .

   கவிதை சொல்லும் கருத்து அசத்தல். யார் ஆரம்பிப்பார்கள்?

   நீக்கு
 10. அரசு எப்போதும் மக்களுக்கு வழிகாட்டியாய் இருக்கவேண்டும். ஆனால், இங்கு அரசாங்கம்தான் ஏரிகளிலும் குளங்களிலும் வீட்டுவசதி குடியிருப்பை ஒவ்வொரு நகரங்களிலும் ஏற்படுத்தியது. பேருந்து நிலையத்தைக் கட்டியது. அரசு அலுவலகங்களை எல்லாம் இடம் மாற்றியது. இப்படி நீர் வந்து போகும் இடத்தையெல்லாம் அடைத்துவிட்டால் எங்குதான் போகும். அதனால்தான் தெருவில் தேங்கி நிற்கிறது. அரசு மனது வைத்தால் எதையும் மாற்றலாம். ஆனால், சொகுசு வேனைவிட்டு இறங்காதா ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஏழைகள்தான் பாவம் அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா இப்பத்தான் ஆர்.கே.நகர் (அவரது தொகுதி) வந்து பார்த்து, “வெள்ளத்தை அரசியலாக்கப் பார்க்கிறார்கள் எதிர்க்கட்சிகள்“ என்று சொல்லிவிட்டு 500கோடி அறிவித்திருக்கிறார். ஆனால் இழப்பு சில ஆயிரம் கோடியைத் தாண்டும் என்கிறார்களே! இதிலும் இடைக்கொள்ளை போக எத்தனை ஏழைகள் இதை வாங்கச் சாகப்போகிறார்களோ! என்ன வாழ்க்கை அய்யா இது!

   நீக்கு
 11. இயற்கையை சாகடித்தோம்! பதிலுக்கு இயற்கை நம்மை நோகடிக்கிறது! முன்னெச்சரிக்கை துளியும் இல்லாத அரசு! இப்போது கோடிகளை இரைக்கிறது! ஒரு சிறிய கோடித் துணியாவது ஏழைகளுக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிடைக்காது அய்யா..நீங்கள் இருக்கும் (திருவள்ளுர்?) பகுதியிலும் வெள்ளம் புகுந்திருப்பதாக இன்றைய செய்தியில் பார்த்தேன். சென்னை நண்பர்களை நினைத்தால் கவலையாக உள்ளது. சென்னை மக்களை நினைத்தால் அச்சமாக உள்ளதய்யா..

   நீக்கு
 12. அண்ணா, மூல காரணங்களை ஆராயத் தொடங்கினால் அது பூமராங்க போல அவர்களையே தாக்கும். அதனால் அவர்கள் ஆராயமாட்டார்கள். "அவர்கள்" என்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமே! ஆம்! அவர்களேதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 13. அனறையப் பொழுதை நினைத்தாலே இன்னும் கூட எனக்கு பயம் வருகிறது. நான்கு நாட்கள் மின்சாரம் தடைபட்டு, பின்னால் உள்ள வீடுகள் இடிந்து, கலக்கமுற்றுக் கிடந்தேன்..வருத்தத்தைப் பதிவு செய்த குரல்...வாழ்க

  பதிலளிநீக்கு