ஏழு கடல் தாண்டி… ஏழு மலை தாண்டி...

தமிழ் மரபில் சிறுவர்களுக்குக் கதை சொல்லும்போது,   “ஏழு கடல் தாண்டி… ஏழு மலை தாண்டி... ஒரு ராட்சஷன் இருந்தானாம்என்று அந்தக் கதை தொடங்கும்போதே கடலை மலையை முன்பின் பார்த்திராத சிறுவர்களின் கண்களில் கற்பனை உலகம் விரிந்து நிற்கும்.. கண்கள் ஒளிரும்!

புறக்கும் கம்பளங்கள் கதைகளில் வந்தபோதே பறக்கும் தட்டுகள் நம் காவியக் கற்பனைகளில் வந்துகொண்டுதான் இருந்தன.. பழந்தமிழில்,சிலப்பதிகாரத்தில்சிந்தாமணியில்  
கம்ப ராமாயணத்தில் இதுபோலும் எந்திரங்கள் தமிழர்களின் எதார்த்தக் கற்பனையை வளர்த்துக் கொண்டேதான் வந்தன.

இதன் தொடர்ச்சியாக வந்த பாரதி, ‘வானை யளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்று ஆசைப்பட்ட போது அதுவும் அழகிய கற்பனையாகவே பார்க்கப்பட்டது. பாரதி பாடி அறுபதே ஆண்டுகளில் மனிதன் நிலவில் கால் வைத்துவிட்டான்.  ‘சந்திரனைத் தொட்டதின்று மனித சக்தி’ என்று இதனைப்
பாடி மகிழ்ந்தான் பட்டுக்கோட்டை.

ஆனால் இன்று இவ்வளவு அறிவியல் முன்னேறியும் போலிச் சாமியார் கூடாரங்களில் கூட்டம் குறையவில்லையே! எப்படிதமிழர்களின் அறிவியல் மனோபாவம் இடையறுந்து போனது எப்படிஏன்


அறிவுப் பிரிவை ஆறாகப் பிரித்தவர்கள் மனிதனை ஆறாமறிவில் சேர்த்தார்கள்  அந்த ஆறு அறிவு என்னென்ன?மெய்வாய்கண்மூக்கு செவி என்று எதுகை மோனைக்காக வரிசையை மாற்றிப் பொதுவாகச் சொல்லிவிட்டார்கள்! சரியாகச் சொல்வதானால்,  அறிவு வரிசையைமெய் வாய் மூக்குகண்,செவிபகுத்தறிவு என்றுதான் சொல்லவேண்டும் இந்த வரிசையில்தான் உயிரினங்களின் உறுப்புப் பரிணாமமும்அறிவுப் பரிணாமமும் வளர்ந்திருக்க வேண்டும் இது உலக உயிரினங்களின் தோற்றம், பரிணாமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது ஆழ்ந்து பார்த்தால் தெரியும்..

மனிதன் ஆறறிவு உயிர் என்பதை மூவாயிரம் ஆண்டின் முன்னே - இலக்கணம் படைத்த தொல்காப்பியர்அறிவின் கூறுகளை அளந்து சொல்லியிருக்கிறார் -ஒன்றறிவதுவே உற்றறிவதுவே..’ எனத் தொடரும் வரிகள் வெறும் இலக்கணமா?எத்தனை அறிவியல் பார்வை!  உயிரினங்களின் பரிணாம அறிவு வரிசையல்லவா?

தொல்காப்பியத்தை நாம் மக்களிடம் கொண்டு செல்லவில்லை. ஆகவே, ‘தாவரங்களுக்கு உயிர் உண்டு’ என்று கண்டு சொன்ன ஜகதீஸ் சந்திரபோஸ் நோபல் பரிசு வாங்கிவிட்டார். உண்மையில் அந்த நோபல்பரிசுக்குரியவன் நமது தொல்காப்பியனே அல்லவாஅவன் தானே சந்திர போசுக்கு மூவாயிரம் ஆண்டுக்கு முன்னே ‘புல்லும் மரமும் ஓரறிவுயிர்கள்என்று முதலில் சொன்னவன்!?

இன்றைக்குச் சரியாக ஆயிரம் ஆண்டுகளின் முன் சுற்றுவட்டாரத்தில் ஐம்பது கல்தொலைவில் மலையில்லாத தஞ்சையில் அவ்வளவு உயரத்திற்குக் கட்டப்பட்ட கோவிலில் பக்தியை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.. இதில் உள்ள கட்டுமானப் பொறியியலைஎந்திரப் பொறியியலை இன்றுவரை நம் பிள்ளைகள் அறியாமலே பார்த்துக் கொண்டும் வருகிறோம்.

இந்தக் கோவில் கட்டப்பட்ட போதுஇந்தியாவில் ஆங்கிலம் என்றொரு மொழியே வந்திருக்கவில்லை;! ஆனால்கட்டுமானப் பொறியியலைஎந்திரப் பொறியியலைப் படிக்கும் இன்றைய நம் குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் பாடம் நடத்துவதையே பெருமையாக நினைத்து வருகிறோம். எப்படி இந்த முரண்பாடு வந்தது?

ஆனால்.. கதைகளில் தமிழ்க் காவியங்களில் இலக்கிய இலக்கணங்களில் இருக்கும் அறிவியல் பார்வை, தமிழ்ச்சமூகத்தில் தொடராமலே போனது ஏன் என்றொரு கேள்வியை முன்வைத்தால் அது பெரிய சமூகவியல் ஆய்வில் கொண்டு நிறுத்தும். 

இன்றும் இத்தனை அறிவியல் வளர்ந்தும் நம் சிறுவர்களுக்குக் கற்பனை மட்டும் குறையவே இல்லை. அந்தக் கற்பனைக்கு இடம்தர அவர்களைப் பேசவிட வேண்டும் எழுத வைக்கவேண்டும்.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐந்துநிலத்தில் கிடந்த தமிழ்இப்போது ஆறாம்திணையான இணையத்திலும் வேகமாக வளர்ந்து உலகின் அத்தனை நாடுகளிலும் வலம் வருகிறது. தமிழ் தகுதியானதுதான் என்பதை  நம் தமிழர்கள்தான் அறிந்திருக்கவில்லை!

ஏசு பேசிய ஈபுரு மொழி இன்று அதே நிலையில் வழக்கில் இல்லைபுத்தர் பேசிய பாலி மொழி இப்போது வழக்கிலே இல்லை தமிழுக்கு நிகராகவும் சில நேரம் தமிழைவிட உயர்வாகவும் “சொல்லப்படும்“ சமற்கிருதம் எப்போதுமே வழக்கு மொழியாக இல்லை. ஆனால்சுமார் ஐயாயிரம் ஆண்டுப் பழமையுடன்இன்றைய தமிழர்களும் புரிந்து, பயன்படுத்தக்கூடிய தமிழ் இப்போதும் தன் ‘சீரிளமைத் திறம்’ குறையாதிருப்பது மட்டுமல்லகவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது போல, ‘வயது ஏற ஏற வனப்பேறும் அதிசயம்’ என்பதாக வளர்ந்து கொண்டே வருகிறது! தமிழர்கள் நாம்தான் தமிழின் வளர்ச்சிக்கேற்ப நம்மை வளர்த்துக்கொள்ளப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

அந்தப் பயிற்சிக்கான 
முயற்சியே இது!

இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பப் பத்தாண்டுகளில் முளைத்து வளரத் தொடங்கிய  ‘வலைப்பூஎனும் இணையப்பக்கங்கள்தொடர்ந்துஅடுத்த பத்தாண்டுகளில் நாளொரு முகநூலும்(Face Book), பொழுதொரு சுட்டுரையும் (Twitter) என வளர வளர வலைப்பூக்கள் வாடத் தொடங்கின.


 வாடும் வலைப்பூக்களின் வாட்டம் போக்கவும்தான் எழுதும் படைப்புகளை உலகமே படிக்க வரவேண்டும் எனும் வலைப்பூ எழுத்தாளர்களின் ஆவலாலுமே   ‘வலைப்பதிவர் சந்திப்புகள்’ கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. 
இந்த முறை புதுக்கோட்டையில் அந்தச் சந்திப்பை நிகழ்த்தும் வாய்ப்புக் கிடைக்க ‘கணினித் தமிழ்ச்சங்கநண்பர்கள் புதிதுபுதிதாக யோசித்தோம். ‘வலைப்பதிவர் கையேடு’ அப்படியான சிந்தனையில் உதித்ததுதான். 

இதற்கு முதல் நன்றிக்குரியவர் எங்கள் மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலராக இருந்தபோது, எங்களையெல்லாம் கணினித் தமிழின்பால் ஈர்த்த தமழறிஞர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்தான்.

இணையத் தமிழில் எழுதுவோர்க்கான பயிற்சியை அவர் தலைமையில்இரு முறை நடத்தினோம். தமிழாசிரியர் கழகம் அதற்குத் துணை நின்றது. கைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவரும் கவிஞருமான ஆர்ஏவி.கதிரேசன் இடம் தந்து பல்வேறு உதவிகளும் செய்தார்.

இவ்வாறாக உருவான சுமார் 40வலைப்பதிவர்களின் இன்றைய முயற்சியே இந்த ‘வலைப்பதிவர் திருவிழா-2015” இதில் உலக வலைப்பதிவர்களை ஈர்த்து ஒன்றிணைக்கும் முயற்சிக்கு ரொக்கப்பரிசுடன் ‘தமிழ்-மின்னிலக்கியப் போட்டிகள்நடத்தலாம் என்று முன்வந்த தமிழ்இணையப் பல்கலைக்கழக இயக்குநர் அய்யா த.உதயச்சந்திரன் அவர்களுக்கும்இணைஇயக்குநர் அய்யா தமிழ்ப்பரிதி அவர்களுக்கும்இந்தத் தொடர்பை நமக்கு ஏற்படுத்தித்தந்த கணித்தமிழ் நிபுணர் நீச்சல்காரன்’ அவர்களுக்கும் நம் விழாக்குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.

வலைப்பதிவர் கையேட்டின்வழிஉலகத் தமிழ் வலைப்பதிவர்கள் யார்யார் என அறியவும்தொடர்பு கொள்ளவும் வழிகிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டு இதில் நம்மை உற்சாகப்படுத்தி ஊக்குவித்த சென்னைப் பதிவர்கள் -குறிப்பாக முன்னோடிப் பதிவர்களும் சென்னைச் சந்திப்புகளைச் சிறப்பாக நடத்திய நண்பர்களுமான புலவர் குரல் அய்யா இராமாநுசம், மதுமதிதி.ந.முரளிதரன்யா.செல்லப்பாதில்லையகத்து கீதா,கவியாழிஆதிரைஇவர்களை உள்ளிட்ட சென்னைப் பதிவர்கள் நமது நன்றிக்கு உரியவர்கள். 

அதுபோலவே மதுரையில் நேரில் சந்தித்தவுடனே நிதியைத் தந்து தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட பதிவுவழி ஆலோசனைகளை வழங்கிய முன்னோடிப் பதிவர் ரமணிஅய்யாதொலைபேசி வழி ஊக்குவித்த மூத்தபதிவரும் வலைச்சரம் வழி உலகத்தமிழ்ப் பதிவர்களை அறிமுகப்படுத்துபவரும்மதுரைச் சந்திப்பைத் தலைமையேற்று நடத்தியவருமான சீனா என்கிற சிதம்பரம் அய்யா,தொழில்நுட்பப் பதிவுகளால் அய்யம் போக்கிவரும் பிரகாசம்,சரவணன் உள்ளிட்ட நண்பர்களின் உதவிகளை மறக்க முடியாது.

கையேடு வெளியிடுகிறோம் என்றவுடனே மட்டுமின்றிப் பிறகு நடத்திய போட்டி அறிவிப்பின்போதும்,  பெயர் சொல்லக் கூடாது என்று அன்புக்கட்டளையிட்டு பேருதவி
செய்திருக்கும் அமெரிக்கா வாழ் தமிழ் வலைப்பதிவர் திரு விசுஆசம் அவர்களின் அன்புக்கு வார்த்தையில் நன்றி சொல்வது எப்படியென்று அறியாமல் நெகிழ்ந்துநிற்கிறோம். இவர்போலும் நண்பர்களின் உதவியின்றி இந்தக் கையேடில்லை!

விழா மொத்தத்திற்கும் தொழில்நுட்ப உதவிகளைச் செய்து விழாக்குழுவோடு இணைந்து செயல்பட்டுவரும் எங்கள் வலைச்சித்தர்’ திண்டுக்கல் பொன்.தனபாலன் அவர்களின் உதவிக்கு உலகத்தமிழ் வலைப்பதிவர் அனைவரும் நன்றிசொல்வர்.

எமது புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்க நண்பர்களின் பெயர்கள் தனி ‘விழாக்குழுப் பதிவர்கள்’ எனும் பட்டியலில் இணைந்துள்ளது. 
அவர்கள் அனைவரும் பல உதவிகளைத் தத்தம் நிலையிலிருந்து –எந்தப்பலனும் எதிர்பாராமல்- இயன்றதைச் செய்துகொண்டே இருப்பவர்கள். எனவே தனித்தனியாகச் சொன்னால் என்னையே நான் புகழ்ந்துகொள்வது போலாகிவிடும் ஏனெனில் என்பெயரில் வந்த அறிக்கைஅறிவிப்புவிழாத் தொடர்பான பதிவுகள் அனைத்திற்கும் அவர்களே மூலக்கரு! அவர்களின்றி இந்த விழா இல்லை. 
இந்தக் கையேடு மற்றும் விழா நிகழ்வு மொத்ததிலும் ஒரு வாசம் தெரிந்தால் அது, எமது விழாக்குழுத் தோழர்கள் உழைத்த வியர்வையின் வாசம்தான்...
     அதேபோல எனது இலக்கிய சமூகப் பணிகளில் எல்லாம் இணைந்துபெரும்பங்காற்றி அவரது பேருக்கேற்ப நேர்த்தி யாய்ச் செய்பவர் என் சகோதரர் தங்கம்மூர்த்தி. அவரது உதவி எப்போதும் போலவே இந்த விழா மற்றும் கையேடு தயாரிப்பில் இருந்ததை என்றும் நினைவு கூர்வேன்.

குறிப்பாக இந்த வலைப்பதிவர் கையேடு தயாராக,  உண்மையிலேயே இரவு பகலாகப் பாடுபட்ட இளைஞர் ‘விதை-கலாம்’ அமைப்பின் நிறுவுநர் ஸ்ரீமலையப்பன்யூகே இன்ஃபோடெக் நிறுவனர் யூகே கார்த்தி,  முகுந்தன் லீலாபுனிதா மற்றும் இவர்களை கணினித் தமிழ்ச்சங்கத்தின்பால் ஆற்றுப்படுத்திய நண்பர் மது கஸ்தூரி ஆகியவர்க்கும் பிழைத்திருத்தத்தில் ஈடுபட்டு உதவிய நண்பர்கள் நந்தலாலா இணைய இதழின் ஆசிரியர் கவிஞர் வைகறைபாவலர் பொன்.கருப்பையாவிழா மொத்தமும் சிறக்க அசராமல் பணியாற்றி    நிதிநிர்வாகத்தையும் திறம்படச் செய்த தங்கை மு.கீதா,   உணவுக்குழுவின் பொறுப்பாளராக இருந்தாலும் அனைவர்க்குமான உணர்வுக் குழுவுக்கும் உற்சாக மூட்டிவந்த சகோதரி இரா.ஜெயலட்சுமி, விழாப்பணிகள் தொடங்கியது முதலே அனேகமாக தினசரிப்பணிகளில் பங்கேற்ற கவிஞர் சோலச்சி, சகோதரி மாலதி, அன்புமகள் ரேவதி  இவர்களின் பணிதொடர வாழ்த்துவதன்றி வார்த்தையில் நன்றி சொல்ல இயலாது.


கடைசியாகதத்தம் குறிப்புகளை இந்த நூல்வெளியீட்டிற்காக அனுப்பிய பதிவர்கள் அனைவர்க்கும் நன்றி சொல்லிக்கொண்டே ஒரு வேண்டு கோளையும் வைக்கிறேன். இந்தக் கையேடு எந்த வகையில் வரப்போகிறது என்பதை அறிந்துகொள்ள இயலாத நிலையில் இவர்கள் அனுப்பிய குறிப்புகளை வெகுவாகச் சுருக்கியே போட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். எனினும்இதைவிட இன்னும் சிறப்பாக வெளியிட இந்த வெளியீடு உதவும் என்பதால் அடுத்த பதிப்பிற்காகக் காத்திருக்கும் வேளையில் இன்னும் சிறக்க இப்போதே உழைக்கத் தொடங்குவோம்.

மீண்டும் -
     ஏழுகடல் தாண்டி… ஏழு மலைதாண்டி..
     நம் சிந்தனை-செயல்பாடுகள் இணையட்டும்.
     தமிழ்ச்சமூகம் தமிழின் அருமையை உணர்ந்து
     அறிவியல் மனோபாவத்துடன் முன்னேறட்டும்.
           இணையத் தமிழால் இணைவோம்.

அன்புடன்,
நா.முத்துநிலவன்,
05-10-2015
ஒருங்கிணைப்பாளர் - விழாக்குழு
வலைப்பதிவர் திருவிழா-2015
மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம்,
புதுக்கோட்டை  
செல்பேசி - 94431 93293
மின்னஞ்சல் -muthunilavanpdk@gmail.com

 ------------------------------------------------------- 
“உலகத்தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015”
நூலுக்கு நான் எழுதிய முன்னுரை
----------------------------------------------------------- 

14 கருத்துகள்:

  1. அனைவரையும் நினைவு கூர்ந்து பாராட்டி வாழ்த்திய தங்கள் பாங்கு சிறப்பு ஐயா....

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் நன்றிகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. ஒரு சிறிய உதவி செய்திருந்தாலும் மறக்காமல் நினவு கூர்ந்தமைக்கு நன்றி ஐயா. வலைத் தமிழ் வளர்க்க போடப்பட்ட விதைகள் நிச்சயம் வனங்களாய் வளரும்.

    பதிலளிநீக்கு
  4. ஏழு மலை அல்ல ஏழு கடல் அல்ல
    எழுநூறு கடல் தாண்டியும்,எழுநூறு மலை தாண்டியும்
    தமிழர்களின் சிந்தனைகள் செயல்பாடுகள் இணையும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு அலசல் நன்றிக்குறியவர்கள் அனைவரும்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  6. கையேட்டில் ஏற்கெனவே வாசித்தேன். விழா சிறக்க உழைத்த அனைவருக்கும் வாழ்த்துடன் கூடிய நன்றி.

    பதிலளிநீக்கு
  7. 'கதைகளின் கதை' என்று ஒரு கட்டுரையைப் படிக்க தாயாராகி விட்டேன்.
    ஆனால், கட்டுரை வேரு திசையில் சென்று பதிவர் சந்திப்பில் வந்து முடிகிறதே என்று வியந்தேன். கடைசியில் புரிந்தது, இது தங்கள் முன்னுரை என்று.

    நன்றி!

    பதிவர் கையேடு இதழ் எனக்கு கிடைத்துவிட்டாலும்...
    இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை! (ஊரில் தாய்நாட்டில் இதழ்
    இருக்கின்றது)

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் கையேட்டை எடுக்கும் போதெல்லாம், புதுக்கோட்டையில் நடைபெற்ற அந்த வலைப்பதிவர் திருவிழா – 2015 , நிகழ்ச்சிகள் மலரும் நினைவுகளாய் வந்து செல்கின்றன அய்யா! காரணமாய் இருந்த நல்லிதயங்களுக்கு நன்றிகள் பல.

    (நீங்கள் அந்த சாமியார் படத்தை விடவே மாட்டீர்களா? ஏற்கனவே ஒருமுறை இந்த படத்தை உங்கள் பதிவில் பார்த்ததாக நினைவு. அழகான இந்த பதிவில் அந்த படம் எதற்கு அய்யா? )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “சரி அவர்களையும் விடச் சொல்லுங்கள். நான் விட்டுவிடுகிறேன்“ என்று சொல்ல நான் கமல் அல்ல..இதோ விட்டுவிட்டேன் அய்யா.

      நீக்கு
  9. அருமையான நினைவுகள்.எல்லோருக்கும் நன்றி சொன்ன பாங்கு போற்றுதலுக்குரியது. என் படமும் வந்திருப்பதற்கு மிக்க நன்றி. வாழ்க உங்கள் தொண்டு.

    பதிலளிநீக்கு
  10. தமிழ் என்றும் வாழும் இன்னும் இணையத்தில் புதுமை படைகும் என்று நம்புவோம் .விழாக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. Dear Muthunilavan sir,
    The pukkottai meet was certainly landmark achievement.Enenthough I am not a versatile blogger I attended to meet great writers and interact with them.While we unite in the name of Tamil writers there should have been one more day.That could have been the next day only because we come to know them on the first day and those who are interested to interact can stay put next day.I came to give my views to such an elite crowd about developing a strong patriotic youth force.(though it is out of cotext of the meet-that is why next day)But that did not happen.However the meet was great success and I cogratulate all those who had put in sleepless efforts.

    பதிலளிநீக்கு
  12. படித்துக்கொண்டிருக்கும்போது முன்னரே படித்த நினைவு என யோசித்தேன். பின்னர் அறிந்தேன். இதுவரை கையேடு கிடைக்காத நண்பர்களுக்கு இது உதவியாக இருக்கும். அனைவரும் ஒருங்கிணைத்து பணியாற்றுவதிலும், அன்போடு நன்றி பரிமாறுவதிலும் தங்களுக்கு நிகர் தாங்களே. தங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை அதிகம் இருக்கின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு