உலகின் மிகப்பெரிய பெரியார் சிலை!

பெரம்பலூரில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, தனது சொந்தச் செலவில் சுமார் 40லட்சம் ரூபாய் மதிப்பில், அழகிய பெரியார் சிலையோடு பெரியார் பூங்காவையும் அமைத்திருக்கிறார் எனில், அந்த மனிதர் எந்த அளவிற்குப் பெரியாரை நேசிப்பவராக இருக்க வேண்டும்! அவரைப் பார்க்கவே எனக்கு வியப்பானது!

தந்தை பெரியாரைத் தமது சொந்த நலனுக்காகப் பேசுவோரும், பெரியாரை எதிர்த்தே அரசியல் செய்வோரும், இன்னொருபக்கம் வணிகமாகவே பெரியாரியத்தை ஆக்கிவிட்டவர்களும் வாழ்ந்து வரும் இன்றைய சூழலில், இது எனக்குப் பெருமகிழ்வையும், அந்த மாமனிதர்பால் மிகப்பெரிய மரியாதையையும் ஏற்படுத்தியது!

அந்தச் சிலை பற்றிய செய்தியை, ஊடகங்களின் வழி அறிந்து, நேரில்போய்ப் பார்க்க விரும்பிக் காத்திருந்தேன். சென்னைக்குச் சாலைவழியாகப் போகும் போதெல்லாம் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே போயிருக்கிறேன்… எப்பொழுது பார்ப்போம் என்று!

எதார்த்தமாக, திருச்சி நண்பன் நந்தலாலா வழியாக அவரே என்னைத் தாம் படித்த அரசுப் பள்ளியின் விழா ஒன்றுக்குப் பேச அழைப்பதாக வந்த தகவல் எனது ஆவல் அதிகரிக்கக் காரணமானது. இம்முறை எப்படியும் போய்ப்பார்த்து விடுவது என்னும் ஆவலுடன் காத்திருந்து போய்ச் சேர்ந்தேன்…

அந்த இனிய நாள் 19-8-2016 வந்தது!

செலவுசெய்து,  சிலையை அமைத்தவரே வாசலில் நின்று வரவேற்று, பூங்காவையும் சுற்றிக்காட்டினால் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? பெரியாரைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன்!
அந்த மாமனிதர் திரு.முகுந்தன் அவர்கள்.
பெரம்பலூர்நகராட்சி மேனாள்தலைவர்.
சிறந்த கொள்கையாளர் மட்டுமல்ல, நிறைந்த பண்பாளரும் கூட!

இதோ அந்த மறக்க முடியாத தருணங்களின் நிழற்படங்கள்…  
காத்திருந்து,  வாசலில் நின்று வரவேற்கும் பண்பாளர் 

கைகொடுத்து வரவேற்கும் தோழமை முகுந்தன் அய்யா
நடுவில் கவிஞர் அகவி

பெரியார் பூங்காவின் நுழைவாயிலில்

பொன்மொழிகளால் அழகுபெற்ற பூங்கா நுழைவாயில்


வெளிப்புறத் தோற்றம் 
(திருச்சி-சென்னை  நெடுஞ்சாலையை ஒட்டி)

32 அடி உயரத்தில் ... பெரியார் சிலையருகில்


நுழைவாயிலை அடுத்த  அழகிய பெரியார் பூங்காவில்..

அழகிய காவிரித்தாய் (!)சிலை
(இன்றைய வழக்கப்படியே தண்ணீரின்றி..)

ஓய்வெடுக்க, உரையாட ஏற்ற இருக்கைகள்..

விடைபெறும் முன் எனது நூலை வழங்கி...

மாமனிதரைப் போற்றும் மாமனிதரிடம் விடைபெற்றேன்
படங்களுக்கு நன்றி 
“007-DIGITAL COLOUR LAB”-PERAMBALUR. நண்பர்கள்
----------------------------------------------------------

பெரியார் ஈ.வெ.ராமசாமி பற்றிப் பெரிதும் தெரிந்திராத
இளைய தலைமுறைக்காக...
அய்யா பெரியார் பற்றி ஐந்து குறிப்புகள் –
(1)  பெரியார் சமதர்மக் கருத்துகளைப் பரப்பி, அனைத்துச் சாதியினரும் குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யாதிருந்திருந்தால், அதேநேரத்தில் காமராசர் போலும் ஒரு தலைவர் நாடுமுழுவதும் பள்ளிக்கூடங்களைத் திறக்காமல் இருந்திருந்தால், என்னைப் போலும் பலலட்சம் பேர்கள் இன்று பட்டதாரி முதுகலைப் பட்டதாரிகள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. ஆக இது ஒரு நன்றிக்கடன்...
(2)  பெரியார் பிறந்த மண்ணில்தான், காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்ட போது, கைதைக் கண்டித்து, புது தில்லியில் முன்னாள் பிரதமர்கள் மூவர் உண்ணாவிரதம் இருந்தனர்! ஆனால், கைதான தமிழகத்தில், எந்த ஒரு சமூக-அரசியல் எதிர்ப்பும் எழவில்லை.
(3)  அரசியலுக்கு வந்ததும் அரசாங்கப் பதவிகளைப் பிடிப்பதுதான் பலருக்கும் லட்சியம். ஆனால், பெரியார் அரசியலுக்குள் நுழையும்முன்னரே, தான் வகித்துவந்த பல்வேறு பதவிகளை உதறிவிட்டே வந்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர், இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி, ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஈரோடு நகராட்சித் தலைவர், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி, ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம் இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். கடைசிவரை தேர்தலில் போட்டியிட வில்லை. எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் மறைந்தபோது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
(4)  காந்திய இயக்கம், பொது உடைமை இயக்கம், திராவிட இயக்கம் என்று தமிழ்நாட்டின் மூன்று பெரும் இயக்கங்களிலும் தீவிரப் பங்காற்றிய முதல் பெரும் தலைவர் அவர்தான். காங்கிரஸில் காந்தியின் தலைமையை ஏற்று இருந்தபோது, தமிழகம் முழுவதும் கதர் துணியைப் பரப்பினார். தன் குடும்பம் முழுவதும் கதர் உடுத்தச் செய்தார். மதுவிலக்குப் போராட்டத் துக்காக, தனக்குச் சொந்தமான கள் இறக்கும் தென்னைமரங் களையே வெட்டித் தள்ளினார். ஒத்துழையாமை இயக்கத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து, வழக்குகளின் மூலம் தனக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான சொத்துக்களை இழந்தார்.
(5)  கொள்கையில் உறுதி என்பதை அவர் கடைசிவரை தளர்த்தியதில்லை. ராஜாஜியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால், கொள்கைப் போராட்டத்தை விட்டுக்கொடுத்த தில்லை. ராஜாஜி இறந்தபோது தன் நோயையும் பொருட்படுத்தாமல், சக்கர நாற்காலியில் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ‘சுயநலமற்ற வரான ராஜாஜி, இட ஒதுக்கீடு, சாதி ஒழிப்பு என்ற இரண்டையும் ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சி மூலமாகவே அதைச் செயல்படுத்தியிருந்தால், நான் கடைசிவரை அவர் தொண்டனாகவே மகிழ்ச்சியுடன் என் காலத்தைக் கழித்திருப்பேன்என்று அப்போது பெரியார் எழுதினார்.
“அறிவைத் தடுப்பாரை,
மானம் கெடுப்பாரை,
வேரோடு பெயர்க்க வந்த கடப்பாரை
-என்றார் கவிஞர் காசி ஆனந்தன்
இன்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புவோர் இணையத்தமிழ்விக்கி பார்க்க-
----------------------------------------------------------

46 கருத்துகள்:

 1. அவர்தாம் பெரியார். பார் அவர்தாம் பெரியார். உங்கள் பெரியார் உணர்வுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. எத்தனையோ தடவை அந்த வழியில் சென்றுள்ளேன்... இந்த முறை அவ்வழியே செல்லும் போது காண்கிறேன்... நன்றி அய்யா...

  பதிலளிநீக்கு
 3. தன்னலமற்ற தலைவருக்கு உண்மையான அஞ்சலி !
  அவசியம் நானும் பார்க்கிறேன் !

  பதிலளிநீக்கு
 4. பெரியாரின் கருத்துக்களை ஆங்கிலத்தில் உலக அளவில் எடுத்துச்சென்று அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உலக சமுதாயத்தை நிறுத்தக்கூடிய ஒரு மாமனிதன் 'சங்கமித்ரா".பெரியாரின் விசுவாசிகள் எல்லோருக்கும் இது தெரியும்.
  ஆனால் காலம் அவனை வாழவிடவில்லை.
  பெரியாரின் விசுவாசியான திரு.முகுந்தன் அவர்கள் தனது ஆசையைப் பூர்த்தி செய்துகொண்டது அறிந்து மகிழ்கிறேன்.
  அவருக்கும் இந்த அற்புதமான செய்தியைத்தெரிவித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்,

  பதிலளிநீக்கு
 5. இந்தச்சிலையைப்பார்க்கும் ஆவல் ஒருபுறம் இத்தனை பற்றுக்கொண்ட மாமனிதரையும் சந்திக்கும் ஆவல் பிறந்தது உங்களின் பகிர்வு மூலம் ஐயா!

  பதிலளிநீக்கு
 6. நேரில் செல்லத் தூண்டியமைக்கு மிக்கநன்றி.

  பதிலளிநீக்கு
 7. அய்யா..புகைப்பட கரங்கள் பிடித்து பூங்காவுக்குள் அழைத்துப்போய்விட்டீர்கள்..
  வழக்கம் போல தண்ணீரில்லா காவிரித்தாய்..போன்ற குறும்புக்குறிப்புகள்..பெரியாரைப்போற்றியும்,பெரியாரைப்போற்றுவோரைப்போற்றியும் விரிந்த உங்கள் எழுத்தும் அற்புதம்..அழகு..

  பதிலளிநீக்கு
 8. பகுத்தறிவுப் பகலவனை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் கருதாமல் மாட்சிமையோடு சிலையமைத்து அவரது கருத்துகளைப் பொன்மொழிகளாகப் பூங்காவெங்கும் பொதித்துப் பெருமைப் படுத்திய அய்யா முகுந்தன் அவர்கள் என்றும் போற்றுதலுக்குரியவர்தான்.

  பதிலளிநீக்கு
 9. பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டு விட்டீர்கள் அய்யா!
  த ம 4

  பதிலளிநீக்கு
 10. உலகின் பெரிய பெரியார் சிலை அமைத்த மாமனித முகுந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மதுரையில் தமிழ்த்தாய்க்கு உலகிலேயே உயரமான சிலை அமைப்பேன் என்று மிக உரத்துமுழங்கினார் ஒருவர். இன்று மதுரையில் அந்தச்சிலையைப் பார்க்க முடியவில்லையே!

  பதிலளிநீக்கு
 11. பத்தாம் வகுப்பு படிக்கும்போது அய்யா பெரியார் அவர்கள் பற்றி கவிதை எழுதி பரிசு பெற்றவன் நான். நானும் தலைநிமிர்ந்து வாழ வழி அமைத்துக் கொடுத்தவர்.

  பதிலளிநீக்கு
 12. புதிய ஆச்சரியமான தகவல். படங்களை பார்க்கும் போது, அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவராக தெரிகிறது. அந்தக் கட்சியில் இப்படி ஒரு மாமனிதரா ?

  பதிலளிநீக்கு
 13. அடடா. அருமை பெரியார் அய்யா சிலை கண்டேன்.

  பதிலளிநீக்கு
 14. உண்மையிலேயே பிரதிபலன் பாராத அந்த மாபெரும் தொண்டருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் - குறிஞ்சிவேலன்

  பதிலளிநீக்கு
 15. படித்து மகிழ்ந்தேன் .. முகநூல் பக்கம் மிக மிக நன்று.. தொழில் நுட்ப முன்னேற்றத்தை எப்படி நம் தேவைக்கு ஏற்பவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை காட்டுகிறது.. வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 16. நானும் அவ்வழியே செல்லும் போதெல்லாம் அப்பூங்காவிற்குள் சென்று வரவேண்டும் என்று எண்ணியும் நிறைவேறாத அக்கடமையை விரைவில் நிறைவேற்றவுள்ளேன். நாமனைவரும் இணைந்திருப்பதற்கு அடிப்படை ஆதாரமே அய்யா தானே!நன்றி!

  பதிலளிநீக்கு
 17. படித்தும் பார்த்தும் மகிழ்ந்ததோடு, கருத்துகளையும் தெரிவித்து மகிழ்வித்த நண்பர்கள் அனைவர்க்கும் என் இதய நன்றியும் வணக்கமும். இப்பதிவின் விளைவாக, நண்பர்கள்பெரம்பலூர் செல்லும்போது, பெரியார் சிலையைப் பார்க்க குடும்பத்தோடு வரவேண்டும் என்பதே அய்யா முகுந்தன் அவர்களின் எதிர்பார்ப்பு.

  பதிலளிநீக்கு
 18. பதில்கள்
  1. உங்கள் நெகிழ்ச்சியில், எனது மகிழ்ச்சியும்!

   நீக்கு
 19. உங்களது நெகிழ்ச்சியில், எனது மகிழ்ச்சியும் கூட!. பேராசான் பெரியார் சிலையை, பூங்காவை காண, ஆர்வம் மேலிடுகிறது. தொண்டு செய்து பழுத்த பழம், துாய தாடி மார்பில் விழும், அவன் மண்டைச்சுரப்பை உலகு தொழும்... எனும் பாவேந்தரின் பரபரப்போடு காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 20. அரிய பணியை செய்துள்ளார். இதன் மூலம் இன்றைய தலைமுறையினரை பெரியார் நோக்கி ஈர்க்க முடியும

  பதிலளிநீக்கு
 21. பெரியார் குறித்த செய்திகளை விட உங்கள் இளமை என் கண்களை உறுத்துகிறதே. நாளுக்கு நாள் வயசு குறைந்தது போல இருக்குதே? என்ன ரகசியம்?

  பதிலளிநீக்கு
 22. பார்த்தே ஆகவேண்டிய இடம் போல ...
  ஒரு நாள் பார்த்துவிடுவேன் ....

  பதிலளிநீக்கு
 23. தமிழை காட்டு மிராண்டி மொழி எனக் கூறயவர், கன்னடர், தெலுங்கர், தமிழின துரோகி என ஒருவர் கூடவா மறுமொழி இடவில்லை? நாகரிகமான எதிர் தரப்பு பின்னூட்டங்களையும் பதிவிடுங்கள்.
  நான் பெரியாரை அறிந்தவன் இல்லை. ஆனால் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே அரசியல் ஒன்று திராவிடம் இல்லாவிட்டால் பெரியார் மறுப்பு என்பதை அறிந்திருக்கிறேன். அவரைப் புறந்தள்ளி இங்கு அரசியல் சாத்தியமில்லை. இரண்டு திராவிடக் கட்சிகள் அடித்த கொள்ளைகளால் இவரது கொள்கைகள் மறக்கப்பட்டன.

  எங்கள் கட்செவி குழுமத்தில் (whatsapp group தமிழர் ஒளிபெற்றோர்) இக்கட்டுரையை பகிர்ந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 24. எதிர்த்தரப்பு வாதங்களை நான் வரவேற்பவன்தான். அதற்காக, வரம்புமீறிய வார்த்தைகள் மற்றும் வெற்று வசைச்சொற்களை எப்படி வெளியிட?

  பதிலளிநீக்கு
 25. நண்பர் சிவக்குமாரனின் கேள்வி எனக்கும் எழுந்தது.
  அந்தந்தக் கட்சியில் இருப்பவர்கள் அந்தக் கட்சியை மீறியும் சில நல்லவற்றைச் செய்வதும் உண்டுதானே? (அதை அனுமதிக்கும் அளவுக்காவது ஜனநாயகம் இருப்பதை எண்ணி மகிழ்ந்துகொள்ள வேண்டியதுதான்)

  பதிலளிநீக்கு
 26. நல்ல செயல்தான்....
  பூங்கா, பெரியார் சிலை எனச் செய்திருக்கும் அவரை வாழ்த்துவோம்....
  40 லட்சத்தில் சிலை தேவையா என்பதையும் யோசிப்போம்...
  இதே பெரியார் கொள்கைகளைப் பின்பற்றி படிப்பு, பசி போன்றவற்றை போக்கும் செயல்களை அவர் செய்வாரே என்றால் அவர் கரம் பிடித்து வாழ்த்தலாம்...

  இளமைத் துள்ளலாய் ஒரு பகிர்வு...

  40 லட்சத்தில் சிலை தேவையா அப்படின்னு சொன்னதும் நான் பெரியாரை எதிர்ப்பவன் என்று நினைத்துவிடாதீர்கள்... எனக்கு பெரியாரைப் பிடிக்கும் லட்சங்களை தேவையில்லாது செலவு செய்பவர்களைப் பிடிப்பதில்லை....

  பதிலளிநீக்கு
 27. அருமையான தகவல்! நிச்சயமாகப் போய் பார்க்க வேண்டிய இடம். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா/அண்ணா

  பதிலளிநீக்கு
 28. ஜோதிஜி அய்யா!
  அடடா..
  “இன்னொரு முறை சொல்லுங்க..”
  இந்த மாதிரி உண்மை சொல்லும் நண்பர்களால்தான் என் ஓட்டமே நடக்குது! நல்லவரே! வல்லவரே!
  (உங்கள விடவா நா இளமையாத் தெரியிறேன்?...??? வாழ்க சர்க்கரை!??!!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார் உங்கள் இளமை என் கண்களை உறுத்துகிறதே.
   இந்த பதிவில் என்னை கவர்ந்ததே அது மட்டுமே தான்.
   வாழ்த்துக்கள் ஐயா.

   நீக்கு
 29. சிலை வைத்ததைப் பாராட்டலாம்; பெரியாரின் கடவுள் மறுப்பு ஒழிந்த சீர்திருத்தக் கருத்துகள் எக்காலத்துக்கும் ஏற்றவை. பெரியாரை நினைக்க வைத்தப் பதிவு.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம்
  மடிக் கணினி கொஞ்சம் மாப் கம்பியூட்டர் வரை போய்விட்டு வந்தது எனவே

  தாமதம்
  இந்த பூங்காவை நானுமே பார்த்தேன் பேருந்துப் பயணத்தின் பொழுது

  புதிய தலைமுறையில் ஒருமுறை வந்திருந்ததாக நினைவு

  அவசியம் பார்க்க வேண்டிய பூங்கா

  வாழ்த்துகள்
  தம +

  பதிலளிநீக்கு
 31. பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகக் கொண்டு எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. அங்கு செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 32. வணக்கம்
  ஐயா
  சொல்லிய தகவல் யாவும் நேரில் பார்த்தது போல உணர்வு ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 33. பெரியார் அவர்களுக்கு சிலையும் பூங்காவும் அருமை.
  அவர்கள் பொன்மொழிகள் இடம் பெற்று இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

  ஐந்து கருத்துக்கள் அருமை.

  இன்று உங்கள் பேச்சை கலைஞ்ர் தொலைகாட்சியில் கேட்டேன். நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 34. Arumai!!!


  appadiye oru poojariyai
  niyamithu,
  thengai udithu,
  nithya anustaana poojai
  seidhu
  vananginaal
  mmm..
  arumaiyaaga pudumiyaaga irukkum

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் முகமூடியே! (எங்க காணோமேன்னு நினைச்சேன் வந்துட்டீங்க... ! நன்றி)
   பெரியார் கடவுளுக்கு மட்டுமல்ல, எந்த மனிதருக்கும் பூஜை நடத்தும் கெடுமதியாளரும் அல்லர், நாங்களும் அவருக்குப் பூஜை செய்யும் அளவுக்குச் சுயநல வாதிகளும் அல்லர்.
   நாங்கள் சுயமரியாதைக் காரர்கள்! அப்படித்தான் பெரியாரும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். மனிதனை மதி! இதைச் சொல்லக்கூட உங்களுக்கு முகமூடி தேவைப்படுகிறதென்றால், பெரியாரின் தாக்கம் சரியாகவே இருக்கிறது என்றுதான் பொருள்!

   நீக்கு
 35. kattayam Oorukku varumboadhu paarka vendiya idam... :-) Vaazhga periyaar pughazh; Valarga avar nerigal. B-)

  பதிலளிநீக்கு
 36. பெரியாரின் நினைவுநாளில் பதிய தகவலை அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 37. மிக அருமை.... அவருடைய வணிக வளாகத்தின் பெயரும் பெரியார் வணிக வளாகம் தான்....

  பதிலளிநீக்கு