“அறிவிலே தெளிவு” என்று
பாரதி பாடியதன் பொருளென்ன?
அறிவு என்பது வெறும்
தகவல் அறிவல்ல, அது தரும் சிந்தனை என்பதே பொருளாகும்!
ஆனால், நம்ம கல்வி முறையில்
மெத்தப் படித்த மேதாவிகள் பலரும் “வரவரமாமியா” பழமொழி ஆன காரணம் தெரியும்தானே!
“ஓடிவா ஓடிவா வெறும்
50ரூவா தான்… இந்தத் தகட்டை வாங்கி உன் வீட்டுக் கதவுல கட்டிவச்சிட்டா உன்னைப்
பிடிச்ச பீடை ஓடிரும் ஒரே வாரத்துல நீ கோடீஸ்வரன் ஆகிவிடலாம்” என்று மட்டுமல்ல,
“இதக் கேட்டுட்டும்
வாங்காமப் போனியின்னா.. இன்னும் ஒரேவாரம் உன் மக ஓடிப்போயிருவா, நீ ரத்தம் கக்கிச்
செத்துப் போகப்போறே”
என்றும் சந்தையில் கூப்பாடுபோடும்
தகட்டு விற்பனைக்காரன் போல
“ஓடிவா ஓடிவா வெறும்
அம்பது ரூபாதான். மூனு மாசத்துக்கு நீ பேச பாக்க கேக்க எல்லாம் ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ”
அப்படின்னு ஷாருக்கான் விளம்பரம் பண்ணும் ஜியோ விளம்பரமும் ஒன்றுதான்…!
இது ஒருபுறமிருக்க
“அண்ணாமலையார்,பச்சையப்பர், அழகப்பர் இன்ன பிற சான்றோரும், கிறித்துவ மிஷினரியினரும் கல்வியை மக்கள் சேவையாகவும் மக்களோடு தொடர்புகொள்ளும் அறவழியாகவும் பார்த்த காலம் இப்போது இல்லையே! கல்வியை சேவையாகக் கருதிய காலம் மலையேறிவிட்டது. இப்போது, “கல்வி வள்ளல்” என்றால் நிச்சயமாக கல்வி வணிகர் என்பதே பொருள்!”
இந்த வரிகள் கடந்த மாதம்
நான் எழுதிய பதிவில் வருகின்றன.
இதோ இப்போது இந்த செய்தி -மாறிமாறி-
வருகிறது-
”எஸ்.ஆர்.எம்.கல்விக்குழுமத்
தலைவர் பச்சமுத்து (எ) பாரிவேந்தர் கைதுசெய்யப்பட்டார்…! ஜாமீன் மறுப்பு, சிறையில்
அடைப்பு”
சரிதான்...!
இந்தக்
கல்வி வள்ளலின் கதை என்ன?
இதைப்
பாருங்கள்-
(இவரின்
“பொருளீடடும் வியூகத் தாத்தா” ஜியோ அம்பானி மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில்
முதலிடம் பிடித்திருப்பதையும் இதோடு இணைத்துப் பார்க்கவே முந்திய பத்திகள்..)
பச்சமுத்து எப்படிப் பாரிவேந்தர் ஆனார்…
இதைப் பாருங்கள் -
பச்ச முத்து (எ) பாரிவேந்தர் கைது செய்தி பார்க்க -
பார்த்தாச்சா,
சரி இப்ப
பட்டுக்கோட்டையின்
பாட்டையும் கேளுங்கள் பாருங்கள் –
இது, 'மகாதேவி' திரைப்படப் பாடல் -
(மற்ற பாடல்களில் துள்ளிக்குதித்து
ஆடிப்பாடி நடிக்கும் எம்.ஜி.ஆர். இது போலும் மிகச்சில வரிகள் கனமான பாடல்களில்தான்
ஓரிடத்தில் இருந்தே நடித்திருப்பார், கவனிங்க சாமி!)
இனி
பாடல் வரிகள் - (இதிலும் எம்.ஜி.ஆர். கைவண்ணமுண்டு! என்னவென்று கண்டுபிடித்தால்
உங்கள் அறிவு தெளிவுதான்! இல்லன்னா நீங்களும் இந்நாட்டு மன்னர்தான் வேறென்ன?)
(சூழ்ச்சியிலே சுவரமைத்து
சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று
சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று
சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா
புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா - இந்த வரிகள் படத்தில் இடம் பெறவில்லை)
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா - இந்த வரிகள் படத்தில் இடம் பெறவில்லை)
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
பாடலுக்கு நன்றி –
மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இணையதளம்
Super Post
பதிலளிநீக்குதிருச்சியில் பழனி என்பர் இதே போல் கல்வி வணிகத்தால் பற்பல கோடிகள் பணம் பெருக்கி இன்றும் கல்வி தந்தையாக வாழ்பவர். ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்தி அதை விற்று வேறு இடம் வாங்கி , அதை அடுக்கு மாடி வியாபாரிக்கு விற்று, இப்படியே வளர்ந்து எங்கோ போய் உள்ளார்கள். குடும்பமே கல்வியை மக்களுக்கு தந்து வருகிறது. அதிகார வர்க்க தொடர்பு இருப்பதால் அமோக வாழ்வு.
பதிலளிநீக்குGood
பதிலளிநீக்குஅண்ணா..உங்களுக்குன்னு பாட்டு எப்படி டக்குடக்குன்னு வருதோ..
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குஅருமையான பதிவு ஐய
பதிலளிநீக்குஜியோ சிம் கார்டு வாங்க படித்தவர்கள்தான் இன்று போட்டி போடகிறார்கள்
இதயம் திருந்த மருந்து தேவை
வணக்கம்
பதிலளிநீக்குபச்சைமுத்து கைதை கொண்டாடும் ஊடகங்கள் இவ்வளவு நாளா என்ன செய்துகொண்டிருந்தன எனும் கேள்வி எனக்கு உண்டு.
இது நெடுநாள் நடந்தது.
அப்போது குறல் எழுப்ப முடியா ஊடகங்கள் இப்போ என்ன செய்கின்றன என்று பார்த்தல்
ஊடக அரசியல் புரியும்.
வேறு காரணங்கள் இல்லாமல் இவ்வளவு அழுத்தமான நடவடிக்கைகள் இருக்காது.
பாப்போம் உண்மையான காரணங்கள் வெளிவரும் வரை பொறுத்திருப்போம்.
இதே கதைதான் பி.ஆர்.பி விசயத்திலும் பலமுறை அரசு விருதுகள் பெற்றவர் ...இப்போ ?
இன்னொரு உதா வி வி மினரல்ஸ் வைகுண்ட ராஜன் ..
இன்னும் மாட்ல..
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்ன செய்யக் கூடியவர்கள் என்பது உங்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தின்
தொடர்ச்சி
பதிலளிநீக்குசரிபாதி மக்களுக்கு தெரியும்.
இந்தக் கோணத்தில் பார்க்கும் பொழுது அடியேனும் குற்றவாளியே!
அப்படி இருக்கும் பொழுது இந்த மாதிரிக் கைதுகளை கொண்டாட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ?
உண்மையான காரணங்களை நோக்கி நகர்வதே நல்லது.
வைகுண்டராஜனின் * தாதுமணல்*
நீக்குஎன்ன தாது? இந்திய அரசுதான் விளக்கம் தரவேண்டும்.
பல வியாபாரிகளின் கோபத்துக்கு உள்ளாகுகின்றீர்கள். கவனம். சரிதானே ஐயா?
பதிலளிநீக்குAha arumai Ayya. Padalodu oppitu sariyaga sutti katti irukireergal.
பதிலளிநீக்குஆகா ,நீங்களும் தமிழ் ஊடே ஆங்கிலம் கலப்பது கவலையளிக்கிறது .SRM,JIO என்பதை எஸ்.ஆர் .எம் .,ஜியோ என்று எழுதலாமே ! என் ஆதங்கம் இதோ இந்த பதிவில் .https://plus.google.com/106448747522998599078/posts/2J5nrehHxGY
பதிலளிநீக்கு