பெங்களுரு – இன்னா செய்தாரை ஒறுத்தல்…?

'பெங்களுர் பற்றி எரிகிறது ! 
தமிழா! கன்னடரை அடி !' 
இதுதான் பெரும்பாலான காண்செவி(whatsaap)குழுக்களில் இப்போது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செய்தி!
இதுபோலும் செய்திகள் உணர்ச்சிவசப்படுத்தவே செய்யும்..

நானும் நண்பர்களும் “அப்படி இல்லை. அங்கு ஒருசிலரும் இங்குச் சில ஊடகர்களும் “ஊதிப்பெருக்கும்” செய்தியிது” என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறோம். எனினும் இன்னும் பகிரத் தேவையுள்ளது!

A scene from D’Souza Nagar in Bengaluru where protesters burnt more than 30 buses of  KPN on Monday | JITHENDRA M  (13th September 2016 - THE NEW INDIAN EXPRESS)
---------------------------------------------------------------------------------------- 

Angry mob reportedly set on fire a depot on Monday in Bengaluru amid the Cauvery water sharing row. (Photo: Twitter/ANI) DECCAN CHRONICLE, 2016,Sep 13, 2016
-------------------------------------------------------------------- 
நம்மவர்களும் சுத்த சுயம்புகள் இல்லை!
“நாம் தமிழர் கட்சி” இளைஞர்கள் சிலர், 
செந்தமிழன் சீமானை, தமிழ்நாட்டு வாட்டாள்  நாகராஜாக்க முயற்சிசெய்கிறார்கள் என்று தெரிகிறது...
அது நடக்காது என்பது அவர்களுக்குத் தெரியாது!
-----------------------------------------------------------------------
இதுபற்றி நம் மதுரை வலைப்பதிவர் திரு செந்தில்குமார் அவர்கள், பிரபல வலைப்பதிவர் வா.மணிகண்டன் அவர்கள் எழுதிய பதிவை இட்டு எழுதிய கட்டுரை மிகவும் தெளிவானது மட்டுமல்ல, இப்போது தேவையானதும் ஆகும். எனவே அதை இங்குத் தருகிறேன். 
பெங்களுரின் உண்மை நிலை என்ன? – வலைப்பதிவு -

இதேபோல,
“தமிழா! எழு! விடாதே கன்னட வெறியரை! வீழ்த்த எழு!” என்று எழுதிவரும் “தமில்க்கவிஞர்” பெருமக்களிடையே, உண்மையை உரத்துச் சொல்லும் நெகிழ்வூட்டும் கவிதைகளும் உலாவருகின்றன .
உதவிக் கல்வி அலுவலரும், சிறந்த வலைப்பதிவருமான சகோதரர் தி.ந.முரளிதரன் அவர்களின் நெகிழ்வூட்டும் கவிதை இது
கர்நாடகாவுக்கு காவிரித் தாயின் கண்டனக்  குரல் – கவிதை

இவற்றோடு -
கர்நாடகாவில் நடக்கிற வன்முறை செயல்களுக்கு எவ்வித எதிர்வினையும் புரியாமல் தமிழகம் அமைதியாக இருப்பதா என நம்மவர் சிலர் ஷோல்டரை தூக்குகிறார்கள். இதற்கு ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் அறிவிலித்தனத்துக்கு பதிலடியாக நாமும் அறிவை இழக்க வேண்டியதில்லை !

தமிழ்நாடு பதிலடி தரவேண்டும் என்றால் என்னவென்று புரியவில்லை ! என்ன பன்னனும்? இங்குள்ள கர்நாடகா ரிஜிஸ்ட்ரேஷன் வண்டிகளை அடிச்சு உதைக்கனுமா? இல்லை கர்நாடகா நிறுவனங்களைத் தாக்கவேண்டுமா?

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் மாநிலம் முழுவதற்குமான வளர்ச்சி.

தமிழ்நாட்டில் சென்னையில் ஒருத்தர் எத்தகைய வாழ்க்கைத்தரத்தை அனுபவிக்கிறாரோ அதே தரத்தை கிட்டதட்ட மாநிலம் முழுவதுமே அவருக்கு கிடைக்கும்.                       
சென்னையை போன்றே கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம், திருச்சி என மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சி உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் அப்படி கிடையாது. அவர்களது எல்லா வளர்ச்சியும் பெங்களூரு மட்டுமே. பெங்களூருவில் கிடைக்கும் தரத்தை, அந்த வளர்ச்சியை அவர்களால் மாநிலம் முழுவதும் பெற முடியவில்லை.

கர்நாடகாவின் தொழில் வளர்ச்சி முழுக்க பெங்களூருவையே மையம் கொண்டுள்ளது.
இதை வேண்டுமானால் எழுதி வைத்துக்கொள்ளவும். பெங்களூருவிலோ, கர்நாடகாவிலோ இதேபோல தொடர்ந்து வன்முறை நீடித்தால் கர்நாடகம் என்ன பெங்களூருவே கூட தொழில் துறையில் பின்தங்கிப்போகும் !
பெங்களூரு நகரத்தில் நிலவும் சீதோஷ்ணம் காரணமாக அங்கு குவிந்த ஐடி கம்பெனிகளுக்கு, பெங்களூருவில் இனி புதிதாக யாரும் வரமாட்டார்கள்.இருப்பவர்களும் அங்கிருந்து விலகவே செய்வார்கள் 

சில கன்னடர்களின் முட்டாள்தனமான செயல்களால் ஒட்டுமொத்த பெங்களூருவின் வளர்ச்சியும் பின்னுக்கு போக போகிறது. தமிழ்நாட்டையும் சரி தமிழ் மக்களும் சரி நம்முடைய சமயோசித சாதுர்ய நடவடிக்கைகளால் மட்டுமே நாம் தொடர்ந்து முன்னேற முடியும்.
எல்லா மதத்தினரும், எல்லா சாதியினரும், எல்லா இனத்தவரும் வாழ்வதற்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடு என்பது தான் நமக்கு பெருமையும், வளர்ச்சிக்கு காரணமே தவிர கன்னட பேருந்துகளையும், வாகனங்களையும் எரிப்பதோ, நிறுவனங்களை கொளுத்துவதோ அல்ல!
எதிர்வினை வேண்டாம், அமைதி காப்போம்..
எனும் நிதானமான குரல்களும் எழுகின்றன (இதுவும் பகிர்வுதான்)

    எனவே, வள்ளுவனை நாம் துணைக்கழைப்போம்-
         இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
         நன்னயம் செய்து விடல் -குறள்-314.
--------------------------------------------- 

13 கருத்துகள்:

 1. மிகச்சரியான நேரத்தில் சரியான பதிவு

  பதிலளிநீக்கு
 2. மிகத் தெளிவான விளக்கம் ஐயா! வன்முறை தொடருமானால் பாதிப்பு ஓட்டு மொத்த கர்நாடகத்துக்கும் உண்டு என்பதை கன்னட மக்களும் அரசியல் வாதிகளும் உணர வேண்டும்.வா மணிகண்டன் அவர்களின் பதிவைப் படித்து பெங்களூரின் நிலையை உணரமுடிகிறது.. ஊடகங்கள், சமூக வலை தளங்கள் வன்முறை உணர்வுகளை தூண்டி தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையுடன் எழுதி இருக்கிறார்.என் சகோதரரின் மகள் பெங்களூரில் வசிக்கிறார். ஆங்காங்கே பதற்றம் இருந்தாலும் பாதுகாப்பாகவே இருப்பதாகவே தெரிவித்தனர்.
  முத்தாய்ப்பாய்ய் தாங்கள் குறிப்பிட்ட அய்யன் வள்ளுவனின் குறளை கட்டாயம் நினைவில் கொண்டு கடைபிடிக்வேண்டிய தருணம் இது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெளிந்த பார்வை உயர்ந்த மதி,சமூகத்தின் மீதான ஈடுபாடு கொண்ட தாங்கள் எனது கவிதையை அடையாளம் காட்டியமைக்கு மிகக் நன்றி ஐயா

   நீக்கு
 3. யாதும் ஊரே யாவரும் கேளிர்..தமிழகத்தின் வாழ்வுரிமையை நிலைநாட்ட..நெறியோடு போராடுவோம்.வெறி வேண்டவே வேண்டாம்

  பதிலளிநீக்கு
 4. எய்தவனை விட்டு அம்பை நோவது போல உச்ச நீதிமன்ற அவமதிப்பிலிருந்து தப்பிக்க அம்மாநில முதல்வர் தண்ணீர் திறந்து விட்டுள்ளார் ( அதுவும் நதிநீர் ஆணைய ஒப்பந்தத்திற்குக் குறைவாக ) இதை அரசியலாக்க முனைந்த கன்னட வெறியர்கள் இளைஞர்களைத் தூண்டிவிட்டு வன்முறை வெடிக்கச் செய்துள்ளனர். இளைதாக முள்மரம் கொல்லத் தவறியதன் விளைவே இது. இதில் குளிர்காய நினைப்பது அரசியல் வாதிகள். அல்லற்படுவது அடிமட்ட வெகுசனம்.

  பதிலளிநீக்கு
 5. மிகச் சரியான பகிர்வுதான் ஐயா...
  நாம் அவர்களை அமைதியால் அடிக்கலாம்... அடிப்போம்....
  ஒரு பெரியவரை அடித்துத் துன்புறுத்துவதில் இருக்கும் அரக்க குணம் எவ்வளவு மோசமானது...
  நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் அது குறித்துக் கூடவா முறையிடல் செய்யக் கூடாது....
  வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலைப் பற்றியும் கேரளத்து ஓணத்தைப் பற்றியும் பேசும் இவர்கள் அடிபடுபவனைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளவில்லையே... தொழில் துறையில் கர்நாடகம் தாழ்ந்து போகட்டும்... அவன் தலையில் அவனே மண்ணள்ளிப் போட்டுக்கட்டும்... பொறுமை... பொறுமை என்பது எதுவரை.... ஒவ்வொருவரையும் அடிக்கும் போதும்... ஒருவரின் 50, 60 பேருந்துகளைக் கொளுத்துவதையும் எப்படி பொறுமையோடு பார்க்கமுடியும்...

  நாம் அவர்களை அடிக்க வேண்டாம்... ஆனால் நிறுத்தச் செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அரசும், எதிர்க்கட்சியும் இருந்தால் என்ன... தொலைந்தால் என்ன...

  பதிலளிநீக்கு
 6. மிகவும் சரியானக் கருத்துகள். குறிப்பாக பங்களூரு அதன் அந்தஸ்தை இழக்கும் இப்படியே நீண்டு போனால். பங்களூருமட்டுமல்ல கர்நாடகம் முழுவதுமே தத்தளிக்கும். மிக அழகான கருத்து!! ப்னகளூரில் எங்கள் உறவினர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் எதுவும் ஊடகங்கள் ஊதுவது போல் ஊதவில்லை. வா மணிகண்டன் சொல்லியிருப்பது போல் தான் சொன்னார்கள். நீங்கள் சுட்டிய பதிவுகளையும் வாசித்துவிட்டோம்...

  பதிலளிநீக்கு
 7. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். பெங்களூரு கலவரம் குறித்து நன்றாகவே சொன்னீர்கள். இனி பெங்களூருவில் மற்றவர்கள் தொழில் முதலீடு, வாழ்க்கை என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

  வலைப்பதிவர் வா.மணிகண்டன் பெங்களூரு கலவரம் பற்றி முழுமையாக பதிவிடாமைக்கு, அவர் சூழ்நிலை, அங்கேயே ‘செட்டில்’ ஆகி விட்டதும் காரணம் எனலாம். இத்தனை லாரிகள், பஸ்கள் எரிக்கப்பட்டும், தமிழர்கள் அகதிகளாக வெளியேறியும் அங்கே ஒன்றுமே நடக்கவில்லை என்றால் எப்படி? தமிழன் தமிழில் பேசவே பயப்படும் சூழ்நிலைதான் இப்போது அங்கு நிலவுகிறது. நாளை (16.09.16) தமிழ்நாட்டில் நடக்கும் கடையடைப்பு எதிரொலியாகவும் பெங்களூரில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் உண்டு.

  டீவி சேனல்கள் ஒரு மணிக்கு ஒருதரம் செய்திகள் வாசிப்பதால், அவைகள் பெங்களூரு கலவரத்தை திரும்பத் திரும்ப ஒளிபரப்புவது போன்று தோன்றுகிறது. உண்மையில் அவைகள் செய்தியைச் சொன்ன பிறகுதான் பெங்களூரு உண்மை நிலவரமே தெரிய வந்தது. கலவரத்திற்கு முக்கிய காரணம் கன்னட தீவிர அமைப்பு குழுக்களின் நெட் ஒர்க் செய்தி பரிமாற்றம்தான்.

  அங்கே நடப்பது ‘கவுடா’ அரசியல். அவர்களைத் தவிர வேறு யார் முதல்வராக இருந்தாலும், இந்த தீவிர கன்னட அமைப்பினர், காவிரியை சாக்கிட்டு கலவரம் செய்வது வரலாறு. மத்திய மந்திரி சதானந்த கவுடாவின் தமிழர்களுக்கு எதிரான பேச்சை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 8. தன் வினைத் தன்னைச்சுடும் என்பதை
  விரைவில் உணர்வார்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 9. நல்லதொரு பகிர்வு. அவர்கள் செய்கிறார்கள் என நாமும் செய்தால் நமக்குள் வித்தியாசமேது......

  பதிலளிநீக்கு