தாய்ப்பாசப் பாடலைக் கேட்காத
தமிழர்கள் இருக்க முடியாது.
பாசத்தையும்
பணத்தால் அளக்கநினைக்கும்
இன்றைய நம் பணநாயகச்
சமூகத்தில்,
ஏகாதசி பாடலில்
கரிசல் கருணாநிதி இசையில்,
திருவுடையான் குரலில்
“ஆத்தா ஒன் சேலை”
பாடலைக் கேட்டவர்கள்
தாய்ப்பாசத்தை எண்ணித்
தமக்குள் கசிவதைத் தவிர்க்க
முடியாது!
அந்தக் குரல்,
”ஆத்தா ஒன் சேலை”யை
அனாதையாக்கிவிட்டு
நம்மைப் பிரிந்து போய்விட்டது!
அந்த மக்கள் கலைஞன் திருவுடையான்
நேற்று (28-08-2016) சேலம் நிகழ்ச்சி முடித்து, வரும்போது சாலைவிபத்தொன்றில் அகால
மரணமடைந்தான் என்னும் செய்தி காதுகளைத் தாக்கி என் இதயத்தை நொறுக்கியது! பாடல் கேட்கத் தொடர்க...
நெல்லை சங்கரன்கோவில் அருகில் இருக்கும் திருவேங்கடம் அவரது ஊர். ஒருநாள் என்னை அழைத்த திருவுடையான், “நிலவு, பாவலர் ஓம் முத்துமாரி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அவர் நம் மேடைகளில் துள்ளிக் குதித்து ஆடிப் பாடி நம் மக்களை மகிழ்ச்சிப் படுத்தியவர், அவர் இப்போது தன் ஊரில் நடக்கும் நிகழ்ச்சியில் உங்களைப் பேச அழைக்கிறார் வரமுடியுமா?" என்று கேட்டார். கரிசல் கிருஷ்ணசாமிக்கு வாசித்த அற்புதத் தபலாக் கலைஞரும் பாடகருமான திருவுடையான் அழைக்கும் போது எப்படிப் போகாமல் இருக்கமுடியும்? இருபெரும் கலைஞர்களின் விருப்பத்தைத் தட்டமுடியாமல் அவர்கள் ஊருக்குப் போய் குளித்து, மதிய உணவை அவர் குடும்பத்துடன் சாப்பிட்டு, அவர் வீட்டு மாடியில் துணிக்கட்டுகளின் இடையில் தூங்கி, மாலை நிகழ்ச்சியில்
பாவலர் எதிரில் இருந்து கேட்டு ரசிக்க, நான் பேசிவிட்டு வந்து 10ஆண்டுகள் இருக்கலாம்... மறக்கமுடியாத நிகழ்ச்சி அது! இன்றும் நினைவிலிருக்கிறது. இதை எழுதியிருக்கிறேன்-
நவம்பர்-18, 2013இல் நான்
எழுதிய பதிவு இது-
---------------------------------------------------------------------------
அந்த அற்புதக் கலைஞனின்
குரலிசை மற்றும் தபலா விரலிசை
கேட்கச் சொடுக்குங்கள்-
“ஊருஓரம் தோட்டத்துல” -
பாடல் - கவிஞர் நவகவி
பாடல் - கவிஞர் நவகவி
--------------------------------------------------------------------------------
“ஆத்தா உன் சேலை“
பாடல் - கவிஞர் ஏகாதசி
பாடல் - கவிஞர் ஏகாதசி
-----------------------------------------------------------
நன்றி – அசுணம் வலைப்பக்கம்.
நன்றி – இசையமைத்த மக்கள் கலைஞர்கள் –
நெல்லைக் கரிசல் கிருஷ்ணசாமி (ஊரு ஓரம்..)
முகவை கரிசல் கருணாநிதி (ஆத்தா உன் சேலை..)
படத்திற்கு நன்றி - திருவண்ணாமலை கருணா
முகவை கரிசல் கருணாநிதி (ஆத்தா உன் சேலை..)
படத்திற்கு நன்றி - திருவண்ணாமலை கருணா
---------------------------------------------------------
கரிசல் கிருஷ்ணசாமி! கவிஞன்
ஏகாதசி!
உயிர்த்தோழனை இழந்த உமக்கு,
நான் எவ்விதம் ஆறுதல்
சொல்வேன் தோழா!
என் குரல் நடுங்குகிறதே!
------------------------------------------------------------------------------------
கரிசல் திருவுடையானின்
கானக்குரல் நயம், மற்றும்
தபலா விரல் நடனம்
காண - கேட்க -சொடுக்குக...
நன்றி
-http://ramaniecuvellore.blogspot.in/
------------------------------------------------------------------------------------
கரிசல் திருவுடையானின்
கானக்குரல் நயம், மற்றும்
தபலா விரல் நடனம்
காண - கேட்க -சொடுக்குக...
-------------------------------------------------------------------
ஒரு பணிவான வேண்டுகோள் –
திருவுடையானுக்கு அஞ்சலி செலுத்துவதுடன்,
பணத்திற்காக அன்றி மக்களுக்காகவே பணியாற்றிய அந்தக் கலைஞனின் இரண்டு பெண்குழந்தைகள், நல்ல மதிப்பெண் பெற்று மேல்நிலை வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறார்கள், ஒரே மகன் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான்.
அவர்களின் மேற்படிப்புக்கும், குடும்பத்துக்கும் உதவுவதே உண்மையான அஞ்சலி... அதற்குத் திட்டமிடுவோம்!
அவர்களைக் காப்பதே நம்மோடிருந்த கலைஞனுக்கு நாம் செய்யவேண்டிய நம்
கடமை! தவறாமல் செய்வோம்!
மக்கள் இயக்கம் தமுஎகச இதில் தவறாது! கைகொடுப்போம்!
------------------------------------------------
------------------------------------------------
பின் செய்தி -
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்த அற்புதக் கலைஞன் குடும்ப நிதி வழங்கக் கோரியுள்ள செய்தி பின்னர் வந்தது, நான் ரூ.10,000 தருவதாகச் சொல்லியுள்ளேன். விரைவில் தந்தும் விடுவேன். நிதி தருவதற்கான விவரம் -
Account Number : 20017963293
Bank of Maharashtra,Pondicherry
Branch
Account in the name of :
“Tamilnadu Progressive Writers and
Artists Association “
IFS Code: MAHB0000458
ZIP code : 605001
MICR Code : 605014002
தமுஎகச மாநிலப்பொருளாளர் முகவரி:
திருமிகு சு.இராமச்சந்திரன்,
கதவு எண்
:6,அடுக்கு 3,முதல் தளம்,
கவிக்குயில் வீதி,அசோக் நகர்,
பாண்டிச்சேரி-605008
செல் எண்: 9443069075
e mail id: revathiramachandran96@gmail.com
---------------------------------------------------------------------
இதனைப் படிக்கும் “நல்ல கலை-இலக்கியத்தின் மீதும் அதன்வழி உருவாக வேண்டிய நல்ல சமூகத்தின் மீதும் நம்பிக்கையுள்ள” நண்பர்கள் தம்மால் இயன்ற நிதியினை நல்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
------------------------------------------------------------------
ஒரு மகத்தான இசைக்கலைஞனை இழந்து தவிக்கிறது முற்போக்குக் கலைஇலக்கியத் தளம்.
பதிலளிநீக்குசெத்தாலும் என்னை பொத்த வேணும் '' என்ற வரிகளைக் கேட்கும் பொது கண்ணீர் பெருக்கெடுக்கிறது
பதிலளிநீக்குவருத்தம் தந்த செய்தி..... அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களும்....
பதிலளிநீக்குஅந்த இசைக் கலைஞனுக்கு எனது கண்ணீர் அஞ்சலி!
பதிலளிநீக்குவருத்தம் தரும் செய்தி.
பதிலளிநீக்குஆம்.ஆவன செய்வோம்
பதிலளிநீக்குவருத்தமான நிகழ்வுகளாக வருகின்றனவே. ஏன் எப்படி? அதிகம் எனக்குத் தெரியாவிட்டாலும் ஒரு உன்னதக் கலைஞர் என்று புரிந்துகொண்டேன். ஆழ்ந்த வருத்தங்கள்.
பதிலளிநீக்குஏதோ ஓர் அதிர்வைக் கேட்போர்க்கு ஏற்படுத்தும் குரல்.
பதிலளிநீக்குகலைஞனின் குடும்பத்திற்கு இயன்றதைச் செய்வது நம் கடமை!
கரிசல் குயிலின் அகால மரணம் நெஞ்சை கனக்கச் செய்தது. அவரின் குரல் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலித்த அந்த ஆன்மா சாந்தியுற இறைவனை இறைஞ்சுகிறேன்.
பதிலளிநீக்குஉழைக்கும் மக்களின் உன்னதக்கலைஞன் கரிசல் குயில் திருவுடையான். அவரது எதிர்பாராத மறைவு சமூகமாற்றத்துக்கான போராளிகளுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு.
பதிலளிநீக்குசிறந்த கலைஞனைப் பற்றிய பகிர்வு எங்களை நெகிழ வைத்துவிட்டது.
பதிலளிநீக்கு